Wednesday, July 8, 2009

அப்பாவி கிளி ஜோசியனும், அடங்காத டிஆரும்!


போன பிறவியிலே புலிப்பாணி சித்தரா பொறந்திருப்பாரோங்கிற சந்தேகம் டிஆரை பார்க்கும்போதெல்லாம் வரும் எனக்கு. "பாரப்பா பகலவனும் 10 ல் நின்று"ன்னு அவரு சித்தர் பாடலை சத்தம் போட்டு பாடும்போதெல்லாம், நாங்க வெளியிலே நின்னு மிரட்சியா கேட்போம். நாலு வரி பாடி முடிக்கறதுக்குள்ளே, "யோவ்... நான் சோதிடத்தை பதினைஞ்சு வருஷமா ஆராய்ச்சி பண்றவன்யா, எங்கிட்டயேவா?"ன்னு யாரோ ஒரு கிளி ஜோசியனை வளைச்சு வச்சுகிட்டு அவனை 'கிலி' ஜோசியனாக்குவாரு.

நெல்ல போட்டு பசியாத்துவாய்ங்கன்னு பார்த்தா, இப்பிடி 'இடி' மாதிரி சொல்ல போட்டு வெறியேத்துறாய்ங்களேன்னு நினைச்ச அப்பாவி கிளி, கீச் கீச்சுன்னு கத்தும். உடனே நம்ம தலைவரு, "வெள்ள ரோஜாவை கிளி ஒன்ணு லவ் பண்ணுச்சாம்..."னு கிளி ஜோசியன்கிட்ட ஒரு கதைய எடுத்துவிட்டு, அவன காசு கூட கேட்க விடாதளவுக்கு பீதிய கிளப்பி பிகில் ஊதுன நாளெல்லாம் உண்டு.

"பத்தாமிடத்திலேர்ந்து குரு பார்க்கிறனே, இந்த நேரத்திலே பாத்ரூம் போவலாமா?"ன்னு ஆஸ்தான ஜோசியருகிட்டே கேட்டு, அவரையே டெரர் ஆக்குவாரு. ஜோசியரும், "அவன் பார்த்தா என்ன? நீங்க கதவ சாத்திட்டு போக வேண்டியதுதானே"ன்னு ஒரு பதில சொல்லி சமாளிப்பாரு. இப்படி நடமாடும் சென்ட்டிமென்ட் ஸ்டோராக உலா வரும் நம்ம தலைவருக்கு இக்கட்டான நேரம் ஒன்ணு வந்திச்சு. அந்த நேரத்திலே போயி சொக்காட்டான் ஆட்டம் ஆடி சூழ்நிலைய பாழாக்குன சில விசுக்கட்டான்கள் பற்றிய செய்திதான் நான் சொல்லப் போறது...

சலீம் சலீம்னு ஒரு வேலைக்காரர் இருந்தாரு அங்கே. அண்ணன் எள்ளுன்னு சொல்றதுக்கு முன்னாடி வில்லு மாதிரி வெடச்சுக்கிட்டு வேலை செய்யுறதுல கில்லாடி. ஒரு படத்திலே நம்ம தலைவருக்கு வழக்கறிஞர் வேடம். இன்விடேஷனுக்கும் பத்திரிகை விளம்பரத்துக்கும் போட்டோ எடுக்கணும். எப்பவோ ஆரம்பிச்ச பிளான், ராகு காலம் முடியறதுக்குள்ளே எடுக்கணுமேங்கிற பரபரப்பான கட்டத்துக்கு வந்திருச்சு. வக்கீல் கோட்டு, வாரியும் படியாத தலைன்னு தலைவன் வந்து நிக்கிறாரு. அப்பதான் போட்டோகிராபர் லென்சை நோண்டிக் கொண்டிருக்க, "டேய், ங்கொ..., ராகு வர இன்னும் அஞ்சு நிமிசம்தான் இருக்கு. அதுக்குள்ளே எட்றா"ன்னு அதிரி புதிரி கௌப்புறாரு தலைவரு. "ந்தா வந்திட்டேண்ணே..."ன்னு சொன்ன போட்டோகிராபர், லென்சை சரி செய்ய, திடீர்னு யுத்த களத்திலே தலைய விட்ட சலீம், "அண்ணே வக்கிலுங்கோல்லாம் கையிலே ஒண்ணு வச்சிருப்பாங்களே, அது எங்கே?"ன்னாரு.

ஆமாண்டா, கேஸ் ஷீட்டு! டேய் எவனாவது ஓடிப்போயி ஒரு கேஷ் ஷீட்டு எடுத்திட்டு வாங்களேண்டான்னாரு டி.ஆர். தொண்டர்களும், தளபதிகளும் நாலா திசைக்கும் ஓட, வாட்சை பார்த்துக் கொண்டே "குயிக் குயிக்"குன்னு கத்திகிட்டே இருந்தாரு தலைவரு. சரியா அஞ்சாவது நிமிசம், அத்தனை பேரும் திரும்பி வந்தாய்ங்க. சொல்லி வச்ச மாதிரி எல்லார் கையிலேயும்.... கேஸ் ஷீட்டா? அட, பாழா போன கொழாப்புட்டு மண்டையனுங்க! அத்தனை பேரும் எடுத்திட்டு வந்தது கேஸ் ஷீட் இல்லை. ஆளுக்கொரு ஆடியோ கேசட்...!

அதுக்குள்ளே ராகு காலம் என்ட்ரி. பிறகென்ன, வழக்காடு மன்றம் கசாப்பு கடையானது. ஆடியோ கேசட் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் ராக ஆலாபனையோடு கொஞ்சம் பிரசாதமும் கொடுத்தனுப்பினாரு தலைவரு.

17 comments:

Baski.. said...

எஸ்ரா மூலமாக உங்கள் வலைப்பூவை அறிந்தேன். மொத பதிவுகளையும் இன்று ஒரே நாளில் படித்துவிட்டேன். யப்பா சிரித்து முடியல.... நல்ல பதிவுகள்....

அன்புடன்,
பாஸ்கர்

anthanan said...

பா‌ஸ்‌கி‌ சா‌ர்‌, ஊரு ஒலகத்‌தை‌யு‌ம்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌ற நீ‌ங்‌களே‌ பா‌ரா‌ட்‌டுறீ‌ங்‌க. மகி‌ழ்‌ச்‌சி‌. வி‌ஸ்‌கி‌ய ரா‌வா‌ அடி‌ச்‌ச மா‌தி‌ரி‌ இருக்‌கு

அந்‌தணன்‌

பிரகாஷ் said...

ANNE T R PATTHI EZUDUNA MATTUM KUDUGALAM KONJAM TOOKALA IRUKKE AEN ANNE

தினேஷ் said...

ஹி ஹி ஹி ..

நம்ம டிஆரு விரல சொடுக்கியே உல்க சாதனை பன்னுருவரு .. இதெல்லாம் அசால்ட் அவருக்கு ..

butterfly Surya said...

வழக்கப்படி கலக்கல்..

Sridhar said...

அருமை சார். அதுவும் // நீங்க கதவ சாத்திட்டு போக வேண்டியதுதானே // சூப்பர் பதில்

சென்ஷி said...

வழக்கப்படி கலக்கல்..

பிரபாகர் said...

அந்தனன்,

டி.ஆருக்கு சாரி விஜய டி.ஆருக்கு ரொம்பவும் தான் துணிச்சல். சாதாரணமா பேசும்போதுகூட அடுக்கு மொழியில தான் பேசராரு.

எங்க ஊருக்கு இந்த எலெக்சன்ல ஓட்டு கேட்க வந்தப்போ, என் பையன் பேரு சிம்பு, தண்ணி குடிக்கிறது சொம்பு, என்கிட்ட வெச்ச்க்காதீங்க வம்பு, நிறைய இருக்கு தெம்புன்ற ரேஞ்சுல 3 மணி நேரத்துக்கு மேல பேசினாராம்.

எளவட்டமெல்லம் மிரண்டுட்டு வீட்ட விட்டே வரலயாம்...

நல்லாருக்கு அந்தனன், கலக்கல்.

பிரபாகர்.

Baski.. said...

//பா‌ஸ்‌கி‌ சா‌ர்‌, ஊரு ஒலகத்‌தை‌யு‌ம்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌ற நீ‌ங்‌களே‌ பா‌ரா‌ட்‌டுறீ‌ங்‌க. மகி‌ழ்‌ச்‌சி‌. வி‌ஸ்‌கி‌ய ரா‌வா‌ அடி‌ச்‌ச மா‌தி‌ரி‌ இருக்‌கு//

மன்னிக்கணும் அந்தணன் சார்..... நான் அவர் இல்லை...நான் ஒரு சாதாரண வாசகன் மட்டுமே... சொல்லிக்கொள்ளும்படி எந்த அடையாளமும் இல்லை...

அன்புடன்,
பாஸ்கர்
http://baskibaski.blogspot.com/

Rajan said...

came here after S.Ra's remarks. very happy to read July, june, may , april articles in one sitting.
now visiting everyday to check updates.keep it up.remain unbiased and with out any prejudice.

ALIF AHAMED said...

interesting !!

Arun said...

anthanan sir.. vazhakkam pola sara vedi.. sirichi sirichi vavure valikudhu :P superngo :D

Jaleela Kamal said...

ரொம்ப கலக்கலா இருக்கு மெதுவா உட்கார்ந்து படிக்கனும்.

www.tips-jaleela.blogspot.com
வாங்க என் பக்கத்துக்கு டிப்ஸ்கள் ஏராளம்.

தமிழன்-கறுப்பி... said...

:))

Toto said...

Super Sir. When you write about TR, it becomes really interesting. Keep going.

Regards,
Toto

vigna said...

உங்கள் பதிவு நல்ல இருக்கின்றது.

vigna said...

உங்கள் பதிவு நல்ல இருக்கின்றது.