Tuesday, July 21, 2009

நமீதா எடுத்த வாந்தி...


"இந்திரவிழா பார்த்ததிலேர்ந்து கண்ணுக்கு வெளியே பன்னு வச்சு கட்ன மாதிரியே இருக்கு"ன்னாரு செந்திலு. (பன்னுன்னா என்னன்னு தெரியாத ஃபாரின் தோழருங்களுக்கு ஒரு விளக்கம். இது பர்கரோட பெரியப்பா) "இருட்டு கடை அல்வாவிலே திரட்டு பாலை கலந்த மாதிரி செக்க செவேர்னு நமீதாவை காட்னாய்ங்க. ஆனா எல்லாமே வொய்டு ஆங்கிளா போச்சுரா"ன்னாரு அவரே! "ப்ளே கிரவுண்டு மாதிரி இருக்கிற பேக் ரவுண்டை, குளோஸ் அப்புல காட்டனும்னா ஸ்கிரீன் முழுக்க 'ஸ்கின்' தானேய்யா தெரிஞ்சிருக்கும்? அதனால இருக்குமோ?"ன்னு அவரே சமாதானமாகி விட, "நமீதாவை பற்றி உனக்கென்ன தெரியும்? பாக்கறதுக்கு பால்கோவா டின்னா இருந்தாலும், பழகறதுக்கு பச்ச மண்ணு தெரியுமா?"ன்னேன்.

"அதனாலதான் நம்ம பயபுள்ளங்களுக்கு மண்ண கவ்வுறதுல அவ்வளவு ஆச போலருக்கு"ன்னு செந்திலு சொன்னதை நான் ரசிக்கலே. ஏன்னா, நமீதாவோட இளகிய மனசை எதிர்லே நின்னு ரசிச்சவன் நானு. போன வாரம் கூட அவங்ககிட்டே போன்லே பேசினப்போ, "வீட்ல சிஸ்டர கேட்டதா சொல்லுங்கன்னு சொன்னுச்சே, அந்த பாசத்திலே பல்சரை விட்டா ஏத்துற?"ன்னு செந்திலு மேல கோவமே வந்திருச்சு.

பொய்ய நிஜம் மாதிரியும், நிஜத்தை பொய் மாதிரியும் எடுக்கிற ஏரியாவுல, தத்ரூபமா எடுக்கிறேன்னு ஒருத்தனோட தாவாங்க ட்டைய பொளந்திட்டாரு ஒரு அறிமுக இயக்குனர். பீரோவுல ஒளிஞ்சிகிட்ட திருடனை அப்படியே பீரோவோட நாலைஞ்சு பேரு து£க்கிட்டு போற மாதிரி ஷாட். திருடனா நடிக்கிறவரு, ஒரமா பீடிய ருசிச்சிட்டு இருந்தாரு. புகைக்கு நடுவிலே தன்னோட பந்தாவை நுழைச்சு அந்த இன்பத்தை துண்டிச்ச இயக்குனரு, "யோவ். அந்த பூரோவுக்குள்ளே போய் பூந்துக்கோ"ன்னாரு. டைரக்டரு சொன்னா சரிதான்னு பணியுற நல்லவங்கதானே ஜூனியர் ஆர்ட்டிஸ்டுங்க. அவரு சொன்ன மாதிரியே உள்ளே பூந்துட்டாரு நடிகரு. ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்னு குரல் கொடுத்துகிட்டே, "யோவ் து£க்குங்கய்யா பீரோவ"ன்னாரு டைரக்டரு. உள்ளே மாட்டிகிட்ட துணை நடிகரு ஓன்ன்னு அலற, மற்றவங்க து£க்க முடியாம திணற, ஷாட் ஓக்கே ஆகி கதவை திறக்கும்போது, மவுத்தை பொளந்திட்டாரு துணை நடிகரு. அப்புறம் அந்தாளை து£க்கிட்டு ஐயோ குய்யோன்னு அலறிகிட்டே ஓடினாய்ங்க ஆஸ்பத்திரிக்கு.

"அந்தாளு பீரோவுக்குள்ளே போற மாதிரி ஒரு ஷாட்டு. பிறகு அவன வெளியிலே அனுப்பிட்டு நாலு பேரு அந்த பூரோவ கஷ்டப்பட்டு து£க்குற மாதிரி ஒரு ஷாட். இப்பிடி எடுக்கறதை விட்டுட்டு இந்த கஸ்மாலம் இன்னா பண்ணுச்சு பாரு"ன்னு ஓரமா நின்ன ஸ்டுடியோ வாட்ச்மேன் வெறிபிடிச்ச மாதிரி விமர்சனம் பண்ண, அதானே?ன்னாங்க சுத்தி நின்ன அத்தனை பேரும். அந்த டைரக்டரு இப்போ என்னா பண்றாரு? ம், எங்காவது மிலிட்டிரி ஹோட்டல்ல கோழிக்கு இறக்கை புடிங்கிட்டு இருப்பாரு! அந்த படமும் வரவேயில்லை. டைரக்டரும் வெளங்கவே இல்லை.

ஆன்மாவுல ராகத்தை கலந்தா இனிக்கும். டிராமாவுல நிஜத்தை கலந்தா? உரைக்கும்! இதுக்கு நான் சொல்லப் போற உதாரணம்தான் இந்த சம்பவம்.

பம்பரக் கண்ணாலே படப்பிடிப்பு. பிரசாத் ஸ்டுடியோவுல ஒரு பாடல் காட்சிக்காக செட்டு போட்டிருந்தாங்க. பொணமா நடிச்சா கூட மூக்குல பஞ்ச சொருவிட்டு, "இப்பவே மூச்ச பிடிச்சிராதய்யா. ஷாட்ல மட்டும் இழுத்துப்பிடி"ன்னு சொல்ற கேமிராமேனுங்க வாழுற பூமி இது. ஆனா, கேமிராமேன் சரவணனுக்கு நமீதா மேல கோவமோ? அல்லது ஆட்டத் தோழிங்க மேலே ஆத்திரமோ தெரியலே. செட்டுல மூட்டை மூட்டையா கொண்டாந்து மிளகாயை கொட்ட வச்சிட்டாரு. சின்ன சின்னதா வட்ட வட்டமா கூரை செட் போட்டுருந்தாங்க. அது மேலே மிளகாயை சொட்டிட்டாய்ங்க. காரமான செவப்பு மிளகா, கண்ணை கசக்க வைக்கும் பச்ச மிளகான்னு இதுல கலர் மிக்சிங் வேற.

லட்ஸ் ஆன் ன்னு சொல்லி நாலாவது நொடி... நாகராவுல பாட்டு ஒலிக்குது. பம்பரக்கண்ணாலேன்னு பாடி ஆட வேண்டிய அத்தன பேரும், "பம்பர கண்ணாலே... பஞ்சராச்சு உன்னாலே"ன்னு பாட வேண்டிய நெலமைக்கு ஆளாயிட்டாங்க. அச்சோ குச்சோன்னு ஒரே தும்மல். கண் எரிச்சல். செட்டுக்கு வெளியே ஓடி வந்து ஆசுவாசப்படுத்திகிட்டாங்க. சாராய கடையிலே சைட் டிஷ்ஷா வைக்க வேண்டியதை, சந்தடி சாக்குல மெயின் டிஷ்ஷா ஆக்கி, அதை மூக்கு மேலேயே படைச்சிட்டாய்ங்களேன்னு புலம்பி திரியுது ஆட்ட கோஷ்டி. "எவ்வளவு கஷ்டமா இருந்தாலும், இங்கதான் ஷ§ட்டிங். ரிகர்சலை வேணா செட்டுக்கு வெளியே வச்சுக்கோங்க"ன்னு சொல்லிட்டாரு சரவணன்.

அப்பப்போ வெளியிலே வந்து எல்லாரும் வாந்தியெடுக்கிறாங்க. கூட்டத்தோடு கூட்டமா நமீதாவும் உவ்வேவ்... இவரோட முல்லைப்பூ மூக்கு மேலே சுள்ளிப்பூ பூத்த மாதிரி ஒரே எரிச்சல். கையோட பத்து பதினைஞ்சு கர்சீப்பை வச்சு துடைச்சுகிட்டே இருந்திச்சே தவிர, நான் வீட்டுக்கு போறேன்னோ, முடியாதுன்னோ ஒரு வார்த்தை சொல்லணுமே?

"குடிச்சிட்டு கொழுப்புக்கு வாந்தியெடுக்கிறவங்களுக்கு மத்தியிலே, பொழப்புக்கு வாந்தியெடுக்கிற எங்கள் குல தெய்வமே"ன்னு எவனாவது போஸ்டர் ஒட்டிட போறானோங்கிற பயமே வந்திருச்சு எனக்கு. ஏன்னா காலையிலேர்ந்து சாயுங்காலம் வரைக்கும் நமீதா எடுத்த வாந்திய பார்த்திருந்தா கார்ப்பரேஷன் காரங்க வாய்க்கால் வெட்டுறத்துக்கு ஒரு டென்ட்டரே விட்ருப்பாய்ங்க. ஒரு 'சாந்தி நிலையம்' மாதிரி சுத்தமா இருந்த பிரசாத் ஸ்டியோ, அன்னைக்கு மட்டும் 'வாந்தி நிலையம்' ஆயிருச்சு.

ஒருவழியா சாயங்காலம் பேக்கப். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தனை நடன கலைஞர்களையும் கூப்பிட்ட நமீதா, எல்லார் கையிலேயும் ரெண்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டினார். "போய் டாக்டரை பார்த்திட்டு போங்க"ன்னு நமீதா சொல்ல, அத்தனை பேரு கண்ணிலேயும் அருவி மாதிரி கண்ணீர். "இன்னைக்கு வரைக்கும் அந்த படம் சம்பந்தப்பட்ட யாரையும் குறையே சொல்லலே நமீ. இப்போ சொல்லு செந்திலு"ன்னேன்.

அவரு வள்ளுவர் கோட்டம் பக்கம் திரும்பி 'மன்னிச்சுரும்மா'ன்னு மானசீகமா கும்பிட்டாரு. ஏன்னா அங்கதானே இருக்கு நமீதா வீடு...

25 comments:

உண்மைத்தமிழன் said...

தலைப்பை பார்த்தவுடனே.. நான் என்னவோ ஏதோன்னு பயந்து போய் வேகமா ஓடியாந்தேண்ணே..

வயித்துல பாலை லிட்டர் கணக்கா வார்த்துட்டீங்க..!

உண்மைத்தமிழன் said...

ஆஹா.. இன்னிக்கு நான்தான் பர்ஸ்ட்டா..?

உண்மைத்தமிழன் said...

வள்ளுவர் கோட்டம் பக்கத்துல எந்த வீடுண்ணே நம்ம நமீதா வூடு..?

குழலி / Kuzhali said...

//வயித்துல பாலை லிட்டர் கணக்கா வார்த்துட்டீங்க..!
//
உண்மை தமிழன் அண்ணே, நமீதா வாந்தியெடுத்தா உங்களுக்கு என்னண்ணே பெரச்சினை?

Anonymous said...

என் மதிப்பிலே நமீதா எங்கேயோ போயிட்டாங்க.

Anonymous said...

என்ன தலைவா...
ரொம்ப நாள் ஆச்சு...''தல' மேட்டர் ஒன்னும் இல்லையா?????

பித்தன் said...

சரி இன்னொரு சிண்டு ரெடின்னு பார்த்தா...... மொக்கையாப் பூடுச்சே......

Ashok D said...

நமிதா... நமிதா... நமிதா... ம்ஹும்......

biskothupayal said...
This comment has been removed by the author.
biskothupayal said...

"குடிச்சிட்டு கொழுப்புக்கு வாந்தியெடுக்கிறவங்களுக்கு மத்தியிலே, பொழப்புக்கு வாந்தியெடுக்கிற எங்கள் குல தெய்வமே"

poster addika arambichutom

மின்னுது மின்னல் said...

தலைப்பை பார்த்தவுடனே.. நான் என்னவோ ஏதோன்னு பயந்து போய் வேகமா ஓடியாந்தேண்ணே.
//


உங்க மேல நாங்க சந்தேக படுவோமா உனா தானா :)

குசும்பன் said...

//எந்த வீடுண்ணே நம்ம நமீதா வூடு..?//

உனா தானா கேட்டு என்ன செய்ய போகிறீர்? பேசாம கட்டிலில் குப்பற படுத்து தூங்கும்!

sowri said...

ennatha sollaradhu.

கலையரசன் said...

உங்க தலைப்பை மிக்ஸ் பன்னாலே ஒரு கதை வரும் போல தலைவா...

அப்பாவி கிளி ஜோசியனும் + பிரபுதேவா வீட்டு மாடியும் = நமீதா எடுத்த வாந்தி!

Sridhar said...

//"குடிச்சிட்டு கொழுப்புக்கு வாந்தியெடுக்கிறவங்களுக்கு மத்தியிலே, பொழப்புக்கு வாந்தியெடுக்கிற எங்கள் குல தெய்வமே//

அருவிபோல் வார்த்தை அருமை

valaignan said...

நமீதாவின் வெளியில் தெரியும் "தாராளமான " இடங்களை ரசித்துக்கொண்டிருக்கும் எங்களை, உள்ளே இருக்கும்
"தாராளமான " மனதையும்
பார்த்து சொக்க வைத்த உங்களுக்கு நன்றி!

பொன் மாலை பொழுது said...

கிண்டலும், நகைசுவையும் , நையாண்டியும் கலந்த விதம் அருமை. கடைசியில் அந்த நமீதா தன் சக ஊழியர்களிடம் காட்டிய மனிதாபிமான உணர்வை பாராட்டப்படவேண்டிய ஒன்று. Satire நன்றாக வரும் போலும் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

முதலில் Sorry. லேட்டா வந்ததற்கு.

வார்த்தை கொட்டுது.. வழக்கப்படி கலக்கல்.

ஆமாம். இப்படியெல்லாம் தலைப்பை வெச்சு நம்ப Bachelor Party உண்மை தமிழனை பயமுடுத்தணுமா..??


நானும் இந்த இடைதேர்தல் நேரத்துல ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.


தலைப்பு:

”தமிழக அரசியலில்” ஆர்.எஸ். அந்தணன்..

அதாண்ணே... அஜீத் மேட்டரை சொன்னேன்.

நா.இரமேஷ் குமார் said...

டெம்ளேட் மாத்துற நேரத்துல எதையாவது டைப் செய்து போஸ்ட் பண்ணுங்க பாஸு...! ஊர் உலகம் காத்துக்கிட்டிருக்கில்ல...

nrispot said...

do you provide RSS/Feeds...we would like to put your feeds on nrispot.com/tamil

Anonymous said...

very interesting blogging in tamiz.with most of the words are in chennai tamiz.
thhanks & regards,
krishh

bahrainbaba said...

innaa boss idhu.. evvalavu naaldhaan namidhaave vaandhi eduppaanga..
matha nadigaingalukkellaam vaandhiye varaadhaa

expecting more vomitted actress

மனம் திறந்து..! said...

எழுத்து நடை நகைச்சுவை மிகுந்து உள்ளது. நமீதா மீது மரியாதையை கொடுக்கிறது .

Anonymous said...

எழுத்து நடை நகைச்சுவை மிகுந்து உள்ளது. நமீதா மீது மரியாதையை கொடுக்கிறது .

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா...

:))