"எந்த நடிகன் கட்சி ஆரம்புச்சாலும் நான் எதிர்த்து எழுதுவேன்"னாரு விக்கி. ஜக்கி வாசுதேவ் குரல் கொடுத்தாலே, சாப்ட்டுட்டு வந்து கேக்கிறேன்னு எந்திருச்சு போறவனுங்க மத்தியிலே, விக்கியோட பேச்சு எவன கொக்கி போட்டு இழுக்கப் போவுது? "வுடுங்க சார். நம்ம அடிக்கிற நானு£று காப்பியிலே இருநு£று காப்பி ஓசியிலே பூடும். மிச்ச காப்பிய எரிய விட்டு, அந்த நெருப்பிலே ஒரு வாய் காப்பி கூட போட முடியாது. போவீங்களா"ன்னு சொல்லிட்டு எந்திரிச்சேன். "ஏங்க.. அவனுங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதுங்க. யாரோ எழுதிக் கொடுக்கற டயலாக்கை இவய்ங்க படிக்கிறாங்க. அப்புடி படிக்கறதை வச்சு புத்திசாலின்னு ஊரு நினைக்குது. ஆனா நான் அப்பிடி நினைக்க மாட்டேன்னு அவரு ஆவேசப்பட, "சரி, விடுங்க. கரையான் அரிக்குதுன்னு வீட்டையா சொறிஞ்சூட முடியும்"னேன் இன்னும் எடக்காக. "இப்படியெல்லாம் அவனுங்களுக்கு சாதகமா பேசுறதுக்கு எங்காவது நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி ஆவப்போவுது பாருங்க"ன்னு சாபம் கொடுத்தாரு விக்கி.
கண்ணகியே குரூப் டான்ஸ் ஆட வந்திருச்சு. இதில சாபத்தை கொண்டு போய் சட்டம் போட்டு மாட்ட வேண்டியதுதான்னு நான் மேலும் எடக்காக பேச, அடுத்தடுத்த வாரத்திலேயே விக்கியோட சாபம் சங்கு ஊதிட்டு வந்ததுதான் வேதனை!
எனக்கு ரொம்ப நெருக்கமான ஹீரோ அவரு. நடையா நடந்து அவர சந்திச்ச ஒரு விழா குழுவினர், சார்... நாங்க ஒரு ஃபங்ஷன் நடத்துறோம். அதிலே கண் பார்வை இல்லாதவங்களுக்கு உதவி செய்யுறோம். நீங்க அவசியம் வரணும். இன்விடேஷன்லே பேரை போட்டுர்றோம். காரு வேணும்னா வீட்டுக்கு அனுப்புறோம். ஒரு மணி நேரம். வந்திட்டு போனா போதும்னு சொல்ல, எப்போ? என்னிக்கு?ன்னு ஏராளமான கேள்வி கேட்ட ஹீரோ, "அன்னிக்கு எனக்கு ஃபேசியல் பண்ணிக்கிற வேல இருக்கு. இருந்தாலும், உங்க சோசியல் சர்வீசுக்கு முன்னாடி ஃபேசியல் மேட்டரு பெரிசு இல்லே"ன்னு சம்மதிச்சாரு.
ஃபங்ஷன் நடக்கிற நாளும் வந்திச்சு. "சார், வந்திருங்களேன் போயிட்டு உடனே வந்திரலாம். நீங்களும் வந்தா ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு சட்டுனு கிளம்பிரலாம்"னு என்னையும் கூப்பிட்டாரு ஹீரோ. இதுவரைக்கும் போன அரசியல் மீட்டிங்குக்கெல்லாம் சும்மா போனதில்லே. கைநிறைய கடலை. காது நெறய ருசின்னு ரசிக்கிறவன் நான். கலைஞரு, வைகோன்னு நான் போன மீட்டிங்கிலேயெல்லாம் கைத்தட்டலுக்கொரு கடலை. கர்ஜனைக்கு ஒரு பொட்டலம்னு ஒரே நேரத்திலே ரெண்டு ருசிய அனுபவிச்சிருக்கேன். ஹீரோவோட போன இந்த விழாவுல இவிய்ங்க பேசுன சொற்பொழிவ கேட்டுட்டு, கற்பிழந்த தெருநாயி மாதிரி ஓ...ன்ன்னு கதறிட்டேன்னா பாருங்க.
விக்கி... உங்களோட பேனா புத்தி, சாணை புடிச்ச கத்தின்னு சத்தம் போட்டு பாராட்ட தோணுச்சு. அப்படி என்னதான் நடந்திச்சு அங்கே?
காமராஜர் ஹால். அந்த விழா ரொம்ப நெகிழ்ச்சியா இருந்திச்சு. கண் பார்வையில்லாத சில இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைச்சிருந்தாங்க. அவங்களை பெற்றெடுத்த அப்பா அம்மாவும் அந்த விழாவுக்கு வந்திருந்தாங்க. தங்கள் பிள்ளைகள் இறைவனோட சாபத்தையும் மீறி ஜெயித்ததை அவங்க அழுத கண்ணீரோடு பார்க்க, பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்த விழா அது. இந்த பார்வைற்றவங்களை பாராட்டவும், அவங்களுக்கு உதவி தொகை வழங்கி இரண்டொரு வார்த்தைகள் பேசவும்தான் இந்த மாதிரி நடிகருங்களையும் அழைச்சிருந்தாங்க. டைரக்டர் சேரன் போன்ற அறிவுலக மேதைகளும் அங்கே வந்திருந்ததால், விழா நன்றாக நடக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு நெறய இருந்திச்சு. ஆனா எல்லாத்தையும் கெடுத்தது, நான் போனேனே ஒரு ஹீரோவுடன். அவரேதான்.
இப்போ இவரு பேசுவாருன்னு ஸ்டேஜ்ல அறிவிக்க, பலத்த கைத்தட்டலுடன் மைக்கை பிடிச்சாரு நம்மாளு. வேதனை என்னான்னா இவரு என்ன பேச போறாரு என்றே தெரியாம, அந்த பார்வையில்லாதவங்களும் கைதட்டியதுதான்.
"இங்க இவங்களையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்கள்ளாம் இந்த வியாதி (?) வந்ததுக்காக பெருமைப் படணும். ஏன்னா, சில பேருக்கு மெட்ராஸ் ஐ வரும். அதை பார்த்தா நமக்கும் அது தொத்திக்கும். உங்களுக்கு வந்திருக்கிற வியாதி அப்படிப்பட்டது இல்ல. அதனால் நீங்க பெருமைப்படணும்"னு ஹீரோ பேசிக்கொண்டே போக, எனக்கு நாக்க பிடுங்கிகிட்டு சாகலாமான்னு ஆயிருச்சு. இவரு கூட வந்தவன் நான்தாங்கிறதால, மேடையிலே உட்கார்ந்துகிட்டு என்னைய கேவலமா பார்க்கிறாரு சேரன்.
அந்த விழாவை ஏற்பாடு செஞ்சவங்க எறும்புக்கு கூட தீங்கிழைக்கணும்னு நினைக்காதவங்க போலிருக்கு. மைக்க பாதியிலே பிடுங்காம இவரு பேச்சை தொடர்ந்து அனுமதிச்சாங்க.
நீரோ மன்னனை குப்புற போட்டு கொள்ளி கட்டையால சொறிஞ்சிருந்தா, அடுத்த தீ விபத்துக்கு வயலின் வாசிச்சிருப்பானா? ஆனால், விழா குழுவினர் பெருந்தன்மையா நம்மாளுக்கு மாலையெல்லாம் போட்டாங்க.
இவரு கார்லே ஏறி போறதுக்கு பதிலா, நம்ம செருப்பை எடுத்து மேல் பாக்கெட்ல சொருகிகிட்டு வெறுங்காலோட நடக்கலாம்னு மனசுக்கு தோணுச்சு. விருட்டுன்னு கிளம்பி வெளியே வந்தேன்.
அப்போ பார்த்து விக்கியோட குரல் காதுல கேட்டுச்சு. "இப்படியெல்லாம் பேசுறதுக்கு எங்காவது நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி ஆவப்போவுது பாருங்க"
ஐயா விக்கி, இனிமே நீங்க வெறும் விக்கி இல்லே. முக்காலும் உணர்ந்த ஜக்கி வாசுதேவ் மாதிரி, முட்டாளுகளை உணர்ந்த விக்கி வாசுதேவ்!
(பின் குறிப்பு- விக்கியோ நானோ எல்லா நடிகர்களையும் குறை சொல்லவில்லை. கலைஞானி கமல், சத்யராஜ், சரத் போன்ற அறிவுஜீவிகளும் இங்கே இருக்கிறார்கள்)

52 comments:
Super Anthanan after a long time. You could have given a clue about who he is though.
Super thala.
உங்க ஸ்டைல் எழுத்துகள் என்றுமே கிக் தான்.
தேவையில்லாத பின் குறிப்பு என்று கருதுகிறேன்.
ஆஹா!!! அண்ணே ஜஸ்ட் எஸ்கேப் ஆயிட்டீங்களே.....
பின் குறிப்பிற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறன். மற்றபடி பதிவு அருமை.
enna sir rompa naalaiku piragu??
ippo thaan blog irukunu ninaivu vanthicho?
adikkadi eluthunga sir..
aavalaa ullom
கலைஞானி கமல் பேசுவது புரிந்த ஒரே ஆள் நீங்க தான்.
கலைஞானி கமல், சத்யராஜ், சரத் போன்ற அறிவுஜீவிகளும் இங்கே இருக்கிறார்கள்
--
அப்போ இது வேற ஸ்டாரா ?
ரஜனி பத்தி எழுதறேன்னு சொன்னீங்களே? எழுதிடீங்களா இல்லை இனிமேல் தானா?
தலைவர் வாழ்க !!! :-) :-) :-)
நமிதா வாந்தி எடுத்ததுக்கப்புறம் இப்போதான் கொள்ளி கட்டையில சொறிய வைக்க வர்ரீங்க போலிருக்கு.
அப்படியே அந்த புண்ணிய ஆத்மா யாருன்னு ஒரு "குளு" கொடுத்தா நாங்களும் செருப்ப தூக்கி பாக்கெட்டுல போட்டுட்டு நடைய கட்டுவோம்.
Athan ivaroda nerungiya Nadugar nu sollittarae,Ada Avarthan ya.
Oru velay Vijay-ah irukkumo?
என்னண்ணே... ஹீரோவோட பேரை போடாம எழுதுறீங்க? அட்லீஸ்ட் குளூவாவது குடுக்கலாம்.. ம்ம், நிறைய ஏழுதுங்க.. பல மொக்கை பதிவுக்கு பதிலா உங்கள் எழுத்துக்கள் படித்தால் சுவாரசியமா இருக்கும்!
I think you are the first one (after his party members) to have called Sarath an "ARIVU JEEVI" ;-)
அண்ணே.....
சரத்குமார எல்லாம் அறிவு ஜீவின்னு எப்படின்னே கூசாம சொல்றீங்க?
அருமையான 'சுளீர்' பதிவு சார்.
நடிகர்கள் பிறர் எழுதிய வசனத்தை பேசி நடிப்பதால் மட்டுமே அவர்களை எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று நினைக்கும் மனோபாவம் தவறு என்று நினைக்கிறேன். காரணம் நடிப்பது என்பது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. அவ்வளவே.
அதே சமயம், கும்மிடிப்பூண்டியில் கொண்டு போய் தனியாக விட்டாலும் திரும்ப ஒண்டியாக சென்னைக்கு வர வழி தெரியாத நவநாகரீக நடிகர்களும் நம்மிடையே உண்டு.
நடிகர்களின் Geographical Knowledge மற்றும் அயல்நாட்டு பயண அனுபவம் பற்றி ஏதாவது சுவையான தகவல் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
- சுந்தர்
Thaliva,
What happened to you? Why there is no update for 3 weeks? Are you busy with producing of new movie this time as well?
It is very easy to identify the hero if you read all of Andanan's previous postings in this blog.
Jackie is correct, the society, press and media should change towards hero/heroines.
kr_kumar@yahoo.com
நல்ல பதிவு வாத்யாரே...
கவுண்டமணி ஒரு படத்துல இந்த தொழில் அதிபருங்க தொல்லை தாங்க முடியலம்பாரே அதுபோல இந்த வருங்கால முதல்வருங்க தொல்லையும் தாங்க முடியல....
ஈ ரா
There are bundle of examples...The same will answer the question, why actors are not fit for politics? Illusions never fetch anything you deserve. Any way, this is your first step aiyarre.... Still a lot ahead...
Regards,
VIKKI
Andha Hero Mr.Shri ????????????
Immm,
Antha Hero Vijayakanth or Karthick
correct ?
இதையும் எழுதிட்டு நாளைக்கு எப்படி அவரை நேர்ல பார்ப்பிங்க ??
yaar andha actor?
என்ன தல, அடிக்கடி ப்ளோக்-ஐ அப்பப்ப ப்ளோக்-ஆ மாத்தனும் போல இருக்கு :-). ரொம்ப நாள் ஆச்சு. அப்படியே உங்க நண்பரையும் எழுத சொல்லுங்க.
- ஆனந்த்
sarath kumar oru arivu jeevi?
ha ha ha ha ha ha.............
------------------------------------
mr.andhanan,
dont mix your personal things in this blog.
Once in DMK meeting sarathkumar told that if he dies only dmk flag will be laid on his body. But, surprisingly he switched over to admk within few months. After than he quit admk and started new party.
Sarathkumar may be your friend. But, you should understand that friendship is different and journalism is different. Please dont mix the both.
Rajesh. V
பிரபலம் என்பதாலேயே ஒருவனை அறிவாளி என்று நம்பி விடும் சமூகம் நமது.
ஏற்கனவே சிலர் குறிப்பிட்டபடி பின்குறிப்பு அவசியமற்றது.
//சரத் போன்ற அறிவுஜீவிகளும் //
நீங்க நாடாரா? சரத்குமாரை போயி அறிவுஜீவி-ன்னு சொல்றீங்களே, கொடுமை.
எங்க தலைவர பத்தி தப்ப எழுதும் உங்களுக்கு என் கண்டனங்கள்.
l
அண்ணா என்ன இது . சத்திய ராஜ் எப்ப அறிவு ஜீவி ஆனாரு. அடுத்த படம் எதாவது பலான படம்னு முடிவு பண்ணிட்டிங்களா .
\\
(பின் குறிப்பு- விக்கியோ நானோ எல்லா நடிகர்களையும் குறை சொல்லவில்லை. கலைஞானி கமல், சத்யராஜ், சரத் போன்ற அறிவுஜீவிகளும் இங்கே இருக்கிறார்கள்)
\\
தேவையில்லை என்று நினைக்கிறேன் ஒரு வேளை,காமெடிக்குதான் அப்படியென்றால் இருக்கட்டும்.
:)
dear anthanan,
what happened? no new post for a long time. swine flu? or kuppura pottu yaaravathu kolli kattayila sorinjittangala?
jigopi
anthanan sir,
nalla irukeengala? romba naala unga pathivukalai (Puthiya) kaanavillai.. 1 month aaki vittathu. think u r busy with ur works.. We are expecting more interesting blogs soon..
It should be the "supera Star"
waiting for ur next blog
still waiting for ur blog
Anantha, why no articles for long time! I am eager to read your article
நீங்கள் பதிவு எழுதவில்லை என்றால்,உங்கள் வீட்டின் முன்பு , ஒரு மூன்று மணிநேர உண்ணாவிரதம்(அதாவது காலயில் டிபென் சாப்டுவிட்டு , மதியம் உணவு இடைவேளை வரை ) இருக்க போகின்றேன் .
still waiting
still waiting
still waiting.wat happnd.if any other schedule pls do inform us
still waiting.pls inform us
still waiting boss......
again waiting
wat appenwaiing
waiting boss
என்ன அநியாயம்!
பிறர் மனதை சிறிதும் புண் படுத்தாமல்.மிக சுவாரசியமாக பதிவு இட்டு வந்த அந்தணன் ஆறு மாதமாக எங்குள்ளார் என்று கூட தெரியவில்லை.
திரு அந்தணன், ஒரு நண்பன் என்ற முறையில்
கேட்கிறேன் .ஒரு முறை வந்து எங்களிடம் விடை பெற்று செல்லுங்கள் .அதுதான் நாகரீகம்
நன்றி வணக்கம்
hello still waiting
hm where are u
still waiting
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
still waiting............
still waiting boss
Post a Comment