'ஒப்பாரும் மிக்காருமில்லாத...'ன்னு மீட்டிங்ல பேசும்போதெல்லாம் அடிக்கடி சொல்வாரு ராதாரவி. அவங்க அப்பாரு இல்லன்னா இவரு எதுக்கு இப்படி கவலைப்படுறாருன்னு அரைகுறையா கேட்பவங்க அதிர்ந்துதான் போவாங்க. அப்படி ஒரு புகழ் மொழியோடுதான் பேசுவாரு எல்லாரையும். நான் சொல்லப் போற நடிகை இருக்காங்களே, அவங்களும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நல்ல நடிகைதான்.
வட்ட முகம், கருப்புக்கே மெருகேத்துற கலர், டயர் சைஸ் இடுப்பு என்றாலும் அதில் ஃபயர் வரவழைக்கும் கவர்ச்சி! நடிப்பில் இவங்க இன்னொரு சிவாஜி. பொம்பளை சிவாஜி என்றே வர்ணிப்பார்கள் பலரும். ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருப்பார்கள். பல காட்சிகளில் சிவாஜிக்கே 'தண்ணி' காட்டியிருப்பார் நடிகை. அட என்ன ஒரு ஒற்றுமை? இந்த வாரம் நாம் சொல்லப்போவதும் ஒரு 'தண்ணி' மேட்டர்தான்!
கஞ்சா தோட்டத்துக்கு நடுவிலே விளைஞ்ச சவுக்கு மரம், சாய்ஞ்சு சாய்ஞ்சு வளர்ந்த மாதிரி, புகழுக்கு நடுவிலேயே வளர்ந்தவராச்சா? பொசுக்குன்னு கோவம் வரும் எதுக்கெடுத்தாலும். அதாவது வேணும்னா வேணும். வேணாம்னா வேணாம். ஷ¨ட்டிங் ஸ்பாட்ல இவங்க கொடுக்கிற அலப்பறைக்கு அளவில்லாம போனாலும், நடிப்புக்காக பொறுத்துக்க வேண்டியதா இருந்திச்சு எல்லாத்தையும்.
பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில நடிச்சிட்டு இருந்தாங்க இந்த நடிகை. இவங்களுக்கு ஜோடியா நடிச்சது டாப் மோஸ்ட் ஹீரோக்கள் ரெண்டு பேர். அதில் ஒருத்தருக்குதான் அன்றைய தினம் ஷாட். சாயங்காலம் ஆறு மணிக்கு பேக் அப் என்றாலும், ஷாட்ல இருந்தாதான் நடிகருங்களுக்கு பிடிக்கும். அப்படியில்லாம மேக்கப்பை போட்டு உட்கார வச்சிருந்தா குள்ளமணிக்கே கூட கோவம் வரும். அன்னைக்கு பார்த்து நடிகையோட அலப்பறையில் ஒரு மணி நேரம் உட்கார வேண்டியதாப் போச்சு ஹீரோவுக்கு. எப்படி?
நடிகை குளிக்கிற மாதிரி காட்சி. திடீர்னு அங்கு வரும் ஹீரோ, அவரு குளிப்பதை பார்க்காம அப்படியே திரும்பி நின்று சில டயலாக்குகள் பேசணும். அதை குளிச்சுக்கிட்டே நடிகை கேட்கணும். மச மசன்னு நிக்காம மாராப்பை ஏத்தி கட்டிக்கிட்டு வந்து உட்கார்ந்திட்டாரு நடிகை. தண்ணி தொட்டி, தலைசொம்பு என்று அத்தனையும் ரெடி. நடிகரும் வந்து நின்னுட்டாரு. தலைக்கு தண்ணிய ஊத்த வேண்டிய நம்ம நடிகை, அப்படியே கையை தொட்டிக்குள்ளே விட்டுட்டு குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. "ஏங்க, இப்படி குளிருது. ஒருத்தராவது வென்னீர் வைக்கணும்னு நினைக்க மாட்டீங்களா, எப்படிங்க இதில குளிக்கறது?" என்றார் அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம் வள்ளுன்னு விழாத குறையாக. இதை டைரக்டரிடம் கேட்க முடியாது. ஏன்னா அது சிங்கம். இப்பவே சிங்கம்னா பீக் ல இருக்கும்போது யோசிச்சுக்கோங்க. ஆனாலும் பிரச்சனையை காதில் வாங்கிகிட்ட சிங்கம், அசிஸ்டென்டுகளை கூப்பிட்டு "யோவ், அவங்களுக்கு வென்னீர் வச்சுட்டு கூப்பிடுங்கய்யா" என்று தனக்கான சேரில் போய் உட்காந்துவிட்டார்.
உலக்கையே விழுந்தா கூட, வலக்கையால வளைச்சு ஒடிக்கிற ஹீரோ, கேவலம் ஹீரோயினோட குய்யோ முறையோவுக்கு யூனிட்டே அலறுதேன்னு செம கோவமாயிட்டாரு. குளிர்ச்சியான தண்ணி மேல விழுந்தா செத்தா போயிருவான்னு மனசுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே தனது சீட்ல போய் உட்கார்ந்திட்டாரு. "தம்பி, எல்லாம் ஆனதும் சொல்லுங்க"ன்னு கட்டிய மாராப்போட தனது நாற்காலிக்கு போயிருச்சு நடிகை.
இந்த இடத்தில் அந்த ஷாட்டுக்கான வரைபடத்தை சொல்லியே ஆக வேண்டும்.
சுற்றிலும் கீற்று தடுப்பு. நடுவில் தொட்டி. நடிகை குளிக்கிற ஷாட் என்பதால் அது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று அந்த இடத்தையே ஷாமியானா கொண்டு தடுத்திருந்தாங்க. இந்த இடத்தில்தான் தேமே என்று விறகுகளை எரியவிட்டு அந்த தொட்டியை சூடாக்கிக் கொண்டிருந்தாரு அந்த அசிஸ்டென்ட் டைரக்டர். என்ன நினைத்தாரோ, சரக்கென்று சீட்டை விட்டு எழுந்தார் ஹீரோ. நேராக வென்னீர் போடுகிற இடத்துக்கு போனார். தண்ணி சூடாயிருச்சான்னு பார்க்க வந்திருப்பாரோன்னு அசிஸ்டென்ட் நினைக்க, உஷ் என்று அவர் வாயை பொத்தினார்.
"யாரும் வராங்களான்னு பார்த்துக்கோ" என்று அந்த தடுப்புக்குள் போய்விட்டார். வென்னீர் பானை. வெளியாளுங்க கவனிக்க முடியாத தடுப்பு. உள்ள போயி ஹீரோ என்ன பண்ண போறாருன்னு லேசா எட்டிப்பார்த்த உதவி இயக்குனருக்கு உதறல் எடுத்திருச்சு. அவரு மட்டுமில்ல, ஒருத்தரும் நினைச்சுப்பார்க்க முடியாத காரியம் 'ஒன்றை' செய்து கொண்டிருந்தார் ஹீரோ. அதுவும் நடிகை குளிக்கப் போற தண்ணீர் தொட்டியில்!
சைலண்ட்டாக ரெண்டே நிமிடத்தில் காரியத்தை முடிச்சுட்டு தனது சீட்டுக்கு வந்த உட்கார்ந்தவரோட முகத்தில நிம்மதியோ நிம்மதி. கொஞ்ச நேரத்தில ஷாட். நடிகை ஆசையா தண்ணிய எடுத்து மேல ஊத்திக்கிட்டாங்க. முகம், கன்னமெல்லாம் வழிஞ்சுது ஹாட் வாட்டர். அதுக்குள்ளே இருந்த ஹாட் மேட்டர் அந்த ஹீரோவுக்கும், வென்னீர் வச்ச அசிஸ்டென்ட்டுக்கும் மட்டுமே தெரிந்த பரம ரகசியம்! உதறலோடு இந்த காட்சி எடுக்கப்படுறதை அசிஸ்டென்ட் கவனிக்க, உற்சாகமாக டயலாக் பேசிக் கொண்டிருந்தார் ஹீரோ.
நமக்கெப்படி தெரிஞ்சுது இந்த மேட்டர்? ஒரு 'ஹாட்' சந்திப்புல நம்பகிட்ட இதை பகிர்ந்துகிட்ட அந்த அசிஸ்டென்ட் டைரக்டரு இப்பவும் அசிஸ்டென்டாதான்யா இருக்காரு!
பின்குறிப்பு- இன்னுமா அந்த நடிகை யாருன்னு தெரியல? சரிதான் போங்க!