Friday, July 2, 2010

படுத்‌துட்‌டு போ‌ங்‌களே‌ன்‌ -பகீ‌ர்‌ நயன்‌தா‌ரா‌


பத்துல சனி. பக்கத்திலேயே சந்திரன். எதுத்தாப்ல ராகு. ஏழு வீடு தள்ளி புதன்னு நம்மள சுத்தி எப்பவும் கெரகங்களோட செக்யூரிடிதான்! சில நேரங்கள்ல இந்திராகாந்தியை போட்டு தள்ளின மாதிரி அதுல சிலது நம்மளை போட்டு தள்ற கொடுமையும் நடக்கும். முன்னெல்லாம் கிராம புறங்களில் ஆர்ஐஎம்பி ன்னு ஒரு ராஜ வைத்தியர் சைக்கிள்ல கிளம்புவாரு. 'ஜுரம் வாந்தி பேதிக்கு வைத்தியம் பாக்குறது'ன்னு சத்தம் போட்டு கூவாத குறைதான். மற்றபடி அவரு அடிக்கிற சைக்கிள் பெல்லை காதால கேட்டே 'அதோ டாக்டரே வந்திட்டாரேன்'னு சந்தோஷப்பட்டவங்களும், குணமாகி குத்த வச்சவங்களும் உண்டு. இப்படி குப்புற கிடந்த சமுதாயம் இன்னைக்கு லேசா நிமிர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரைக்கும் வந்திருச்சு.

ஆனா சில ராஜ வைத்தியருங்க சாமர்த்தியத்துல இன்னும் குப்புறதான் கிடக்கு கோடம்பாக்கம். இந்த வைத்தியருங்க செய்யுறது வைத்தியம் இல்ல. கிரகங்களை சொல்லி கிறுக்கு பிடிக்க வைக்கிற பைத்தியம்! ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஒரு ஆஸ்தான ஜோசியரு இருப்பாரு. பூஜையில ஆரம்பிச்சு, ரிலீஸ் டேட் வரைக்கும் இவங்க சொல்றதுதான் டைம். 'தேங்காய் உடைச்சேன். பூ வந்திச்சு. நல்ல சகுனம்'னு ஆனந்த கூத்தாட வைப்பாங்க. படம் ரிலீஸ் ஆகி நாலாவது வாரத்துல அதே புரட்யூசர், எங்காவது கோயில்ல தேங்கா பொறுக்கிட்டு இருப்பாரு. "பூ வந்திச்சே... பொருள் வந்திச்சா?"ன்னு கேட்கறதுக்கோ, நாரை உறிச்சு நடு மண்டைய பொளக்கறதுக்கோ ஒருத்தரும் தயாரா இல்லாததால இதே ஜோசியரு அடுத்த கம்பெனியில தேங்கா உடைப்பாரு. அங்கேயும் தேங்காய்க்குள்ளே பூ இருக்கும்! ஃப்பூ... இதுக்கெல்லாம் மயங்குறமே நினைச்சு ஒதுங்கின ஒரு தயாரிப்பாளரும் இங்க இல்லாததுதான் இவங்க ஆட்டத்துக்கு காரணம். இந்த ஆட்டத்துக்கெல்லாம் ஒரு ஆட்டம் பாம் வைக்க மாட்டியான்னு நினைச்சுட்டு இருந்த நேரத்திலதான் ஒரு ஜோசியரு மண்டையில நச்சு நச்சுன்னு கேள்வியால அடிச்சு, கிறுக்கு பிடிக்க வச்சுச்சு நயன்தாரா.

அய்யால... அது எப்போ?

மன்மதன் பட ஷ§ட்டிங்லதான்! அப்பல்லாம் நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல் அடிச்சிட்டு இருந்த நேரம். (இப்ப மட்டும் என்னவாம்? ஆளுதான் வேற. காதல் ஒண்ணுதான்!) சீமெண்ணை விளக்கு மேல ட்யூப்லைட்டை வச்ச மாதிரி, சிம்பு மேல காதலா திரிஞ்சாரு நயன்தாரா. உதிரிப்பூவை உதறி தள்ளுனா மாதிரி எப்ப பார்த்தாலும் சிரிப்பு. எங்க விழுந்தாலும் இனிப்புங்கிற மாதிரியே போச்சு ஒவ்வொரு நாளும். 'வானத்துல பறக்கிறேன், வவ்வால புடிக்கிறேன்'னு சிம்பு ஒருபக்கம் பேட்டியா கொடுத்து தள்ளுறாரு. 'மேட் ஃபார் ஈச். மேல் முழுக்க இச்' ன்னு திரியுது ஜோடி.

இந்த நேரத்துலதான் ஈரத்துணிய இடுப்புல கட்டிக்கிட்டு, மாரு தெரிய வந்து நின்னாரு அந்த ஜோசியரு. 'இங்கே நோட்டீஸ் ஒட்டாதே'ன்னு எவனாவது எழுதிட்டு போற அளவுக்கு நெத்தி முழுக்க வெள்ளையா விபூதி. அது மத்தியில சிக்னல் மாதிரி சிவப்பு குங்குமம். கழுத்தில கிடக்கிற உத்திராட்சம் ஒவ்வொண்ணும் செங்கல்லு சைசு. பார்த்தாலே படக்குன்னு எழுந்து படீர்னு கால்ல விழுற அளவுக்கு ஒரு நடமாடும் திருக்கோயிலா இருந்தாரு மனுசன்.

'நடக்கறத சொல்லுவாரு. சொல்றதுதான் நடக்கும். இவரு வாய தொறந்தா சத்தியம். வயிறு வலிச்சா பத்தியம்'னு என்னென்னவோ சொல்லி நயன்தாரா ரூமுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. "சில பர்சனல் கேள்விங்க இருக்கும். நாங்க எதுக்கு இங்க?" வெளியே நிக்குறோம் என்றபடி விடை பெற்றுக் கொண்டார்கள் ஜோசியரை கொண்டு வந்து விட்ட புண்ணியவான்கள்.

ரூமிற்குள் இவரை கையெடுத்து கும்பிட்ட நயன்தாரா, கால்ல விழுறத பிறகு வச்சுப்போம்னு நினைச்சுது போலிருக்கு. "ஐயா, உட்காருங்க. சாப்பிடுறதுக்கு..."ன்னு இழுக்க, 'கோக்' இருந்தா கொடுங்களேன்னாரு ஜோசியரு. கொண்டு வந்த கோக்கை திருவோட்ல ஊற்றி அவரு குடிக்கிற அழகை ரசிச்ச நயன்தாரா, "சாமி கோக்கு குடிக்கறதே தப்பு. அதை திருவோட்ல ஊத்தி குடிக்கறது அதவிட தப்பில்லையா"ன்னுச்சு. சாதாரண நடிகைன்னு நினைச்சா பொண்ணு விவரமான பார்ட்டியா இருக்குதேன்னு நினைச்ச ஜோசியரு, நான் ரெண்டு மூணு கேள்வி கேட்பேன். சரியா சொல்லணும்னு சொல்லிட்டு, "உங்களுக்கு என்னா பூ பிடிக்கும்?"னாரு முதல் கேள்வியாக.

என்னவோ சொல்லப் போறாருன்னு நினைச்ச நயன்தாரா, 'ரோஸ்'னு ஆங்கிலத்தில் பதில் சொல்லிட்டு அவரு வாயையே பாத்திட்டு இருந்திச்சு ஆர்வமா! கண்ணை மூடி, கதவிடுக்கில விரல விட்ட மாதிரி வாய்க்குள்ளேயே குய்முய்னு முணுமுணுத்த ஜோதிடர், வாயை திறந்த போது அப்படி ஒரு அபஸ்வரம் கேட்கும்னு நயன்தாரா நினைச்சுக்கூட பார்க்கல. "என்னங்கம்மா இது? தப்பான ரூட்ல போறிங்களே? உங்க காதல் கரையேறாதே"ன்னாரு முதல் ரீலிலேயே க்ளைமாக்சை போட்ட மாதிரி.

பொசுக்குன்னு வந்த கோவத்தை அடக்கிக்கிட்ட நயன்தாரா, மெல்ல சிரிச்சுகிட்டே எப்படி சொல்றீங்கன்னாரு. "உங்க வீடு எந்த திசையில இருக்குங்கம்மா?" ஜோசியரு தான் சொல்ல வந்ததை இன்னும் ருசு படுத்த நினைச்சாரு போல. அடுத்த கேள்வியை ராக்கெட் வேகத்தில வீசுனாரு.

முதலில் அவர் ஜோசிய பலன் கேட்டே எரிச்சலில் இருந்த நயன், இந்த கேள்விக்கு பதில் சொல்லணுமான்னு நினைச்சு, கொஞ்சம் ஏடா கூடமாவே பேச ஆரம்பிச்சுச்சு. "நார்த் கேட், சவுட் என்ட்ரன்ஸ்!"

இப்படி ஒருத்தன் வீடு கட்டுவானான்னு கூட யோசிக்காத ஜோஸ், நெத்தியில இருக்கிற வெள்ளை சுவத்தை சுரண்டிக் கொண்டே, கண்களை மூடி மூணு காத து£ர யோசனைக்கு போனார். "சந்தேகமே இல்ல. அவன் மூலம் நீங்க இப்போ சுமந்துகிட்டு இருக்கீங்க" என்று அடுத்த ராக்கெட்டை வீச, நயன்தாரா கண்களுக்குள்ளே இப்போ காளியாத்தா என்ட்ரி. இருந்தாலும் இவர கூப்பிட்டு வந்த நபருக்காகவும், பெரிசோட தோற்றத்துக்கும் மதிப்பு கொடுத்து உதட்டுக்கு 'லாக்' போட்டார். அப்படியெல்லாம் இல்லீயே என்று சிம்ப்ளாக ஒரு பதிலை சொன்னார். இருந்தாலும் அடுத்த கேள்விய இந்தாளு கேட்கும்போது நாம சொல்ற பதிலில் இந்தாளு இந்த ரூமுக்குள்ளேயே இருக்கக் கூடாது என்று மட்டும் தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

ஆட்டுக்கு வாலு அரையடி. அனகோண்டாவுக்கு அத்தனையுமே வாலுதான்ங்கிற மாதிரி பொருத்தமா வாயக்கொடுத்தாரு ஜோசியரு. இந்த ஒரு கேள்விதான். அப்புறம் நம்ம 'பிரசன்னம்' போட்டு பார்த்திரலாம். எல்லாம் நல்லபடியா நடக்கணும் தாயேன்னு மேலே தொங்குற சீலிங் பேனுக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்த கேள்விய கேட்டாரு. "ஏம்மா, உங்க பெட்ரூம்ல என்ன கலர் பல்ப் எரியுது?"

"ஏன் சாமி, இதெல்லாம் ஒரு கேள்வியா? இத வச்செல்லாம் ஜோசியம் சொல்லிட முடியுமா? ஏதோ பிரசன்னமோ என்னமோ சொன்னீங்களே, அத பார்த்து சொல்லிடுங்க சாமி"ன்னு சொல்லியும் கேட்காத ஜோசியரு, "இல்லங்கம்மா நல்லா யோசிச்சு சொல்லுங்க. அதுல ஒரு விஷயம் இருக்கு"ன்னாரு விடாப்பிடியாக!

இன்னும் கொஞ்ச நேரம் இந்தாளு இங்க இருந்தா, பெட்டிகோட்ல இருந்து, பெட்ஷீட் வரைக்கும் என்ன கலர்னு கேட்பானோங்கிற பயமும், காதலுக்கு கல்லறை கட்டிருவானேங்கிற அச்சமும் மாறி மாறி தாக்க, வேணாம் விடுங்க சாமின்னாரு உறுதியா! "இல்லங்கம்மா, நீங்க சொன்னா ஒங்க எதிர்காலத்துக்கு நல்லது. எனக்கு பணமெல்லாம் கூட வேணாம். வந்ததுக்கு சரியா சொல்லணுமில்லயா?"ன்னாரு ஜோசியரு. கோவத்துக்கு அதுவரைக்கும் போட்டு வச்சிருந்த தாழ்ப்பாளை நைசாக திறந்துவிட்ட நயன்தாரா, பெட்ரூம்ல என்ன பல்பு எரியுதுன்னு கேட்டாரே, அந்த கேள்விக்கு படார்னு ஒரு பதில சொல்ல, ஜோசியரு எடுத்தாரே ஓட்டம்....! வெளியே நின்ன ஆளுங்களுக்கு ஒண்ணுமே புரியல. அவரை விரட்டிகிட்டே போயி "நயன்தாரா என்ன சொன்னாங்க?"ன்னு கேட்க, அவரு சொன்னதை அப்படியே சொல்லிட்டு ஓடிப்போனாரு ஜோசியரு. அதுல ஒருத்தரு சொன்னதுதான் காத்து வழியா கசிஞ்சு நம்ம காது வரைக்கும் வந்திச்சு.

அப்படி என்ன பொல்லாத பதில சொன்னாரு நயன்தாரா?

"வேணும்னா வீட்டுக்கு வந்து என் பெட்ரூம்ல படுத்துட்டு போங்களேன். தெரியும்!"

16 comments:

King Viswa said...

Me the First.

Welcome back.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

// நாரை உறிச்சு நடு மண்டைய பொளக்கறதுக்கோ,
சீமெண்ணை விளக்கு மேல ட்யூப்லைட்டை வச்ச மாதிரி,
எப்ப பார்த்தாலும் சிரிப்பு. எங்க விழுந்தாலும் இனிப்பு,
வானத்துல பறக்கிறேன், வவ்வால புடிக்கிறேன்,
மேட் ஃபார் ஈச். மேல் முழுக்க இச்,
இவரு வாய தொறந்தா சத்தியம். வயிறு வலிச்சா பத்தியம்,
நெத்தியில இருக்கிற வெள்ளை சுவத்தை சுரண்டிக் கொண்டே,
ஆட்டுக்கு வாலு அரையடி. அனகோண்டாவுக்கு அத்தனையுமே வாலுதான்,
மேலே தொங்குற சீலிங் பேனுக்கு வணக்கம் சொல்லிட்டு //

சான்சே இல்ல... எப்பிடி சார் இதெல்லாம்...? நக்கல் நையாண்டிக்கு உதாரணமே நீங்கள்தான்! தொடரட்டும் உங்கள் பணி.

Unknown said...

sooooooooooooopper, sooooopper, soooooooppero soooopper.
continue to contribute more posts regularly, in ur free time.u have the gift for writing.

முரளிகண்ணன் said...

\\மன்மதன் பட ஷூட்டிங்லதான்! அப்பல்லாம் நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல் அடிச்சிட்டு இருந்த நேரம்.\\

நிகழ்ச்சி நடந்தது வல்லவன் பட ஷூட்டிங் என்று நினைக்கிறேன்.

மன்மதனில் ஜோதிகாவும், சிந்து துலானியும் தானே ஹீரோயின்ஸ்?

rajesh said...

please write something about your experiences on your home production "kilakku kadarkarai salai" (ECR).

Rajesh.v

Anonymous said...

http://raininmoon.blogspot.com/
my first blog

ராம்ஜி_யாஹூ said...

do u want me to believe that Nayandara allowed this astrologer in is room and allowed him to ask 3 questions.

butterfly Surya said...

ஆட்டுக்கு வாலு அரையடி. அனகோண்டாவுக்கு அத்தனையுமே வாலுதான்ங்கிற மாதிரி/////

எப்படிண்ணே..??

butterfly Surya said...

கலக்குங்க..

வெடிகுண்டு வெங்கட் said...

வழக்கம் போல கலக்கல்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

"உளவாளியும், கத்துக்குட்டியும் From Paris With Love 2010 - சினிமா விமர்சனம்

வெடிகுண்டு வெங்கட் said...

தல,

இந்த போஸ்டரை பார்த்தீங்களா?

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

Anonymous said...

இது தான் பஞ்ச்...

சரவணன் said...

படுத்‌தி‌ட்‌டு போ‌ங்‌களே‌ன்
--> படுத்துட்டு போங்களேன்

ஈஸ்வரி said...

(பத்துல சனி. பக்கத்திலேயே சந்திரன். எதுத்தாப்ல ராகு. ஏழு வீடு தள்ளி புதன்னு நம்மள சுத்தி எப்பவும் கெரகங்களோட செக்யூரிடிதான்!)
எப்படி இப்படியெல்லாம்......ஒவ்வொரு வார்த்தையிலும் கிண்டலும் கேலியும் கொட்டிக் கிடக்குது, அள்ளத்தான் முடியல போங்க,,,,,,,,Fantastic.

www.puthiyaulakam.com said...

உங்க பதிவு பிரமாதம். வாழ்த்துக்கள் பல....ஆமா இது கதையா இல்ல உண்மையா?
news.puthiyaulakam@Gmail.com

Anonymous said...

to think that you are a
contemporary journalist..,
ugh..,