Thursday, May 21, 2009

"தம்பி உசுரோடதான்யா இருக்காரு"


'தம்பி' இருக்காருன்னு 'நம்பி' இருந்த ஜனங்க மனசிலே கம்பிய பழுக்க வச்சு காயப்பட வைச்சிட்டாய்ங்க! நாலு நாளா ஊருபட்ட ரிப்போட்டர்கள் கிட்டே நாக்கு உலர விசாரிச்சதிலே நறுக்குன்னு சொல்லிட்டாங்க, "தம்பி உசுரோடதான்யா இருக்காரு"ன்னு! அதிலும் நக்கீரன்ல அவரே அந்த நியூசை படிக்கிற மாதிரி ஸ்டில்லு! இது போட்டோ ஷாப் வேலைன்னு தெரிஞ்சாலும், அத பார்த்ததிலேர்ந்து நரம்பெல்லாம் 'பிரம்பு' மாதிரி நட்டுகிட்டு நிக்குது, நன்றி கோபாலண்ணே...!

மீசையிலேர்ந்து ஒத்த முடிய புடுங்கி காவலுக்கு போட்டு வச்சிட்டு, காட்டுலே 'உடும்பு சூப்பு' குடிச்சிட்டு இருந்தப்போ ஒரு அமீபா கூட உள்ளே வரலே. அதே வீரப்பன் செத்துட்டாருன்னு தெரிஞ்சதும், ஒகேனக்கல் வரைக்கும் வந்து நக்கலடிச்சுட்டு போறாரு கன்னட எடியூரப்பா. இதே கதைதானாம் இப்போ கொழும்பிலேயும். தமிழருங்க கடையெல்லாம் சூறையாடுறதா செய்தி வருது. இருமறதுக்கே பயப்படுற பசங்கள்ளாம் உறுமுராய்ங்களாம்... தம்பி, சீக்கிரம் வெளியே வா!

ஒரு விடுதலைப்படை தலைவன் அவ்வளவு எளிதாக சிக்கிக் கொள்வாரா? தலையிலே ஊறுகிற ரெண்டு பேனுங்க சந்திச்சிக்கிட்டா கூட இப்படி கேள்வியா கேட்டு கிளியர் பண்ணிக்குதுங்களாம்.

நாலைந்து வருஷத்துக்கு முன்னாடி படிச்ச பேட்டி இது. அந்த போலீஸ் அதிகாரியோட பேரு மறந்து போச்சு. அவரே முன்னணி இதழ் ஒன்றில் இந்த பேட்டிய கொடுத்திருந்தாரு. பிரபாகரன் சென்னையில் தங்கியிருந்த நேரமாம் அது. ஒரு புல்லட் வச்சிருந்தாராம் தம்பி. (அந்த புல்லட் இல்லே, இரு சக்கர வாகனம்) அதிலேதான் சென்னையை சுற்றி வருவதெல்லாம். தம்பியை கண்காணிக்க சொல்லி, இந்த போலீஸ் அதிகாரிக்கு அசைன்மென்ட் கொடுத்திருந்தாங்களாம் உளவுத்துறையில்.

மூணு நாளா பிரபாகரன் போற இடமெல்லாம் போயிருக்காரு அதிகாரி. சரியா மூணாவது நாள். புல்லட்டில் போயிட்டு இருந்த பிரபாகரன், சோழா ஓட்டல் அருகில் போனதும் வண்டிய நிறுத்திட்டாரு. பின்னாடியே போன அதிகாரியும், கிட்டதட்ட 100 அடி து£ரத்திலே வண்டிய நிறுத்திட்டு அவரு போகட்டும். ஃபாலோ பண்ணலாம்னு வெயிட் பண்ணுறாரு. இப்படியே பத்து நிமிஷம் போச்சு. இரண்டு பேருமே நகர்றதா இல்லை. பையிலே இருந்து ஒரு தம்மை பத்த வச்சுட்டு வேற பக்கம் திரும்பி குப் குப்புன்னு புகையை விட்ட அதிகாரி, ஒரு சிகரெட்டை முழுசா இழுத்திட்டு திரும்பினா...? பக்கத்திலே பிரபாகரன். "என்ன சார்?"னு தோளில் கையை போட்டு அதிகாரியோட பேர சொல்லி பேச ஆரம்பிச்சாராம். "நான் உங்களை மூணு நாளா கவனிச்சுட்டு வர்றேன். என்னை ஃபாலோ பண்றீங்க. வேணாம். இனிமேலும் ஃபாலோ பண்ணினா வேற மாதிரி விளைவுகளை சந்திப்பீங்க"ன்னாராம். அந்த சம்பவத்தை பல வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த அந்த அதிகாரி "அந்தாளுக்கு உடம்பு முழுக்க கண்" என்று வியந்திருந்தார். எப்பவுமே அலர்ட்டா இருக்கிற ஒரு போர்ப்படை தலைவன், எப்படி கடைசி நேரத்தில் இப்படிப் போய் மாட்டிக் கொள்வான்? லாஜிக் இடிக்குதே!

விடுங்க, ஃபாலோ பண்ற விஷயத்தை பேச ஆரம்பிச்சதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. நாம சிரிச்சு ரொம்ப நாளாச்சுங்கிறதால, இந்த சிரிப்பு ஸ்பெஷல்.

ராஜீவ் கொலைக்கு சில வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம் இது. நான் தராசு புலனாய்வு இதழில் வொர்க் பண்ணிட்டு இருந்த நேரம்.... ஒரு க்ரைம் சீரியல் எழுத ஆரம்பிச்சிருந்தாரு ஆசிரியர் ஷ்யாம். அங்கே சுகுமார்னு ஒரு நபர். ஆபிஸ் பாய், அக்கவுன்டன்ட், பில் கலெக்டர், மானேஜர்னு எல்லா வேலைகளையும் கலந்து கட்டி செய்யுற ஆல் இன் அழகுராஜா இவரு. இன்பிரியாரிடி காம்ப்ளக்ஸ், சுப்பிரியாரிடி காம்ப்ளக்ஸ்னு கேள்விப்பட்டிருப்பீங்க. இவரு, சின்சியாரிடி காம்ப்ளக்ஸ்(?) உள்ள ஆளு. ஷ்யாம் 'ம்' ன்னு சொன்னா, அதுக்கும் ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சு ஒரு வேலையை செஞ்சுட்டு வந்து நிக்கிற தங்க தளபதி.

இவரிடம்தான் ஒரு வேலை சொன்னார் ஷ்யாம். "யோவ், போயி வித விதமா துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் ஏதாவது இருந்தா வாங்கிட்டு வா. லே-அவுட் பண்ணும்போது யூஸ் ஆவும்"னாரு. சின்சியரா மவுண்ட்ரோட்லே இருக்கும் புக் ஸ்டால் ஒன்றுக்கு போன சுகுமார், "துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் எங்கே கிடைக்கும்? எந்த ரேக்லே வச்சிருக்கீங்க?" என்று கேட்டாரு. ஆளு ஒரு மாதிரி இருக்காரு. துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் கேட்கிறார். விடுதலைப்புலியா இருப்பாரோன்னு நினைச்ச கடை ஆளுங்க, "இன்னைக்கு ஸ்டாக் இல்லே. நாளைக்கு வாங்க. கலெக்ட் பண்ணி வச்சுருக்கோம்"னு சொல்லிட்டு, விஷயத்தை போலீஸ் காதிலே போட்டுட்டாங்க. சரியா, சுகுமார் வர்ற நேரமா மஃப்ட்டியிலே வந்திருச்சு போலீஸ். உடனே பிடிச்சா இவரு மட்டும்தான் மாட்டுவாரு. இவரை ஃபாலோ பண்ணினா, ஒரு கூட்டத்தையே பிடிக்கலாமேன்னு அவங்க நினைப்பு.

நைசா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. வெயிலு ஓவரா இருக்கு. ஓரு பீர் போட்டுட்டு போனா சுகமா இருக்குமேன்னு கடைக்குள்ளே பூந்திட்டாரு சுகுமார். போலீசும் நைசா பின்னாடியே போச்சு. பீர் அடிச்சிட்டு அப்படியே எழுந்து வெளியே போன சுகுமார், பக்கத்திலேதானே மோட்சம் தியேட்டர் இருக்கு. ஒரு 'பிட்' படம் பார்க்கலாமேன்னு உள்ளே போயிட்டாரு. இப்போதான் போலீசுக்கே பெரும் குழப்பம். என்னடா, போராளின்னு நினைச்சா இவன் சோக்காலியா இருப்பாம் போலிருக்கேன்னு நினைச்சுது. ஆனாலும், நம்ம ஃபாலோ பண்ணுறதை தெரிஞ்சுகிட்டு வித்தை காட்டுறானோன்னும் டவுட். விடாம இரண்டு நாளா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரே குழப்பம் அவங்களுக்கு.

தராசு ஆபிசுக்கு போறான். செக்ஸ் படம் பார்க்குறான். தண்ணியடிக்கிறான். மறுபடியும் துப்பாக்கி சம்பந்தமாக புத்தகங்களை பிளாட் பார்ம் கடையிலே தேடி திரியுறான். யாராக இருக்கும்?னு பயங்கர கன்பியூஷன். கடைசியா தராசு ஆசிரியரிடமே சொல்லி எச்சரிச்சுடுவோம். அவரும் அலர்ட்டா இருப்பாரேங்கிற நோக்கத்திலே ஒரு நாள் ஆபிசுக்கே வந்திட்டாங்க. விஷயத்தை முதல் நாளில் இருந்தே ஆரம்பிச்சு விபரமாக சொல்ல சொல்ல, விழுந்து விழுந்து சிரிச்சாரு ஷ்யாம். "இவரா பாருங்க"ன்னு பெல் அடிச்சு சுகுமாரை உள்ளே கூப்பிட்டாரு. அவங்களும் இவருதான்னு அடையாளம் காட்டினாங்க.

"இவரு எங்க ஆபிஸ்லே வொர்க் பண்றவர். நான்தான் துப்பாக்கி சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கிட்டு வரச்சொன்னேன்" என்று விளக்கிய ஷ்யாம், "இவரு பிட்டு படம் பார்க்கறதை போட்டு கொடுத்திட்டீங்க. நன்றி"ன்னாரு. அப்போ சுகுமார் முகத்தை பார்க்கணுமே?!

18 comments:

vicki said...

தலைப்பை மாத்துங்க தலைவா

அவர் படத்தை போட்டு இந்த தலைப்பு ...என்னதான் அவர் சம்மந்தம் இல்லாத சமாச்சரமுன்னாலும்...இடிக்குது

அவர் சம்மந்தப்பட்ட...அருமையான செய்தி எதாவது இருந்தால் தட்டி விடுங்கள்

அன்புச்செல்வன் said...

//தலைப்பை மாத்துங்க தலைவா

அவர் படத்தை போட்டு இந்த தலைப்பு ...என்னதான் அவர் சம்மந்தம் இல்லாத சமாச்சரமுன்னாலும்...இடிக்குது//

ஆமாங்க தலைவா...

anthanan said...

மாத்திட்டேங்ணா.... ஒன்ணுமில்லே, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்!

அந்தணன்

அன்புச்செல்வன் said...

//தம்பி உசுரோடதான்யா இருக்காரு//

சரியாத்தான் சொன்னீங்க தலைவா!

தலைப்பை மாத்தினதுக்கு ரொம்ப நன்றிங்க!

Joe said...

Welcome back Anthanan!

Agilan said...

nalla comedy...
indha posta rendu parta potrundha nalla irukkum... Avara pathi padichutu sirikka mudiyale

butterfly Surya said...

எந்த சூழ்நிலையிலும் உங்க ஸ்டைலுக்கு இழுத்து கொண்டு வந்து விடுகிறீர்கள் தலை..

என்ன நடை.. வாவ்...


மெய்யாலுமே சிரிச்சு 3 நாளு ஆச்சு..

வெந்து செத்த மனதுக்கு காலையில நக்கீரன் நியூஸும் இரவு உங்க பதிவும்...


பி.கு: நீங்க ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன..??


சினிமா எடுத்த மாதிரின்னு கேட்கலை தலை.. கோவிக்காதீர்கள். மெய்யாலுமே கேட்கிறேன்.

அதுக்கு ஏதாவது உள் குத்து இருந்தால் அதுக்கும் ஒரு பதிவை போட்டு விடுங்கள்

வினோத் கெளதம் said...

தல

நல்ல காமெடி..

கிரி said...

//ஒரு விடுதலைப்படை தலைவன் அவ்வளவு எளிதாக சிக்கிக் கொள்வாரா? தலையிலே ஊறுகிற ரெண்டு பேனுங்க சந்திச்சிக்கிட்டா கூட இப்படி கேள்வியா கேட்டு கிளியர் பண்ணிக்குதுங்களாம்.//

இது தான் உண்மை..நாமே இவ்வளோ யோசிக்கும் போது......

Sridhar said...

Welcome back Anthanan!

நல்ல நகைசுவை.வண்ணத்து பூச்சியார் சொல்வதை கவனிக்கவும்

Joe said...

தலைவரை பற்றி எழுதும் கட்டுரையில், சுகுமார் விஷயத்தை தவிர்த்திருக்கலாம்.

வீடு, நிலம், உறவுகளை இழந்து நம் சகோதரர்கள் கஷ்டப்படும்போது, அதற்கு தேவையான நிவாரண நிதியை சேர்த்து கொடுக்க யாரும் முன்வருவார்களா?

இப்போதைக்கு நாம் அனுப்பும் பணம், சிங்கள அரசியல்வாதிகள் கைகளில் சிக்கி துஷ்ப்ரயோகம் செய்யப்படும் என்பதால் தயங்குகிறேன். நம்மூரு அரசியல்வியாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை.

racmike said...

thalaiva oru anbu vendugol

1. vairamuthu kkum ilayarajavukkum appadi inna thaan prachanai?

2. aboorva sagodarargal padathil kullamaga eppadi nadithen endru kamal anda padathin velli vizhavil koorugiren endru solli sollamal vittare? avar eppadi appadi nadithar?

inda irandil edavadu ondru patri viraivil ezhudinaal sandosham.

irundai pathiyume ezhudinaal romba sandosham.

selvibabu said...

நன்றி அண்ணா. மக்களின் எழுச்சியை ஒடுக்கும் முகமாக புலம்பெயர்ந்த நாடுகளிலும் நிறைய பணம் விளையாடிக்கொண்டு இருக்கிறது. இந்திய நடந்துமுடிந்த நேர்மையான தேர்தல் போல
எனக்கு என்ன சிரிப்பு என்றால் அமெரிக்க கனடாவில் கூட நம் பேப்பர் நம்பி ஓட்டு குத்த இந்தியாவில் மின்வாக்கு இயந்திரமம்.
சீமான் அண்ணா சொன்னது போல வன்னியில் உள்ள புலிகளை அளிதுவிடதாக கொட்டம் போடும் கூட்டம் உலகம் முழுதுமுள்ள தமிழரை வீறுகொண்டு புலிகளாக எழ வைத்துள்ளது.
joe நீங்கள் கொடுக்கும் பணம் நல்லபடிக்கு போய் சேர இந்தியாவில் உள்ள அகதிமுகாம் குழந்தைகளுக்கு செயுங்கள்.
நன்றி.

racmike said...

sorry thalaiva.

nakkeran has once again tried to make cheap money / publicity out of this issue.

see the following image to know the truth.

http://img268.imageshack.us/img268/7114/image001w.jpg

Anonymous said...

//பையிலே இருந்து ஒரு தம்மை பத்த வச்சுட்டு வேற பக்கம் திரும்பி குப் குப்புன்னு புகையை விட்ட அதிகாரி, ஒரு சிகரெட்டை முழுசா இழுத்திட்டு திரும்பினா...? பக்கத்திலே பிரபாகரன். "என்ன சார்?"னு தோளில் கையை போட்டு அதிகாரியோட பேர சொல்லி பேச ஆரம்பிச்சாராம். "நான் உங்களை மூணு நாளா கவனிச்சுட்டு வர்றேன். என்னை ஃபாலோ பண்றீங்க. வேணாம். இனிமேலும் ஃபாலோ பண்ணினா வேற மாதிரி விளைவுகளை சந்திப்பீங்க"ன்னாராம். அந்த சம்பவத்தை பல வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த அந்த அதிகாரி "அந்தாளுக்கு உடம்பு முழுக்க கண்" என்று வியந்திருந்தார். எப்பவுமே அலர்ட்டா இருக்கிற ஒரு போர்ப்படை தலைவன், எப்படி கடைசி நேரத்தில் இப்படிப் போய் மாட்டிக் கொள்வான்? லாஜிக் இடிக்குதே!//
தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டு போலிஸை மிரட்டும் அளவிற்க்கு கொழுப்பு எடுத்து போய் இருக்கிறது.

Anonymous said...

அவரு ஆளுங்க அவருக்கு கருமாதி பண்ண விடுங்கய்யா சும்மா சாவலைன்னு வெட்டியா கதை எழுதிகிட்டு.

கலையரசன் said...

தலைவரை பற்றி புதிய விஷயங்கள் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

Unknown said...

முட்டாள்