ஒட்டுமொத்த சனத்தையும் ஒன்னா நிக்க வச்சி, "எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறீயே, உம் பேரு கட்டப்புள்ளையா"ன்னு கேளுங்க! "ஆமா"ன்னு சொல்ற கெட்டப்புள்ள வர்கம்யா இது...! ஒரு படத்தோட ப்ரீவியூவுக்கு வந்திருந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், "இப்பிடி ஒரு மூஞ்சை ஹீரோவா போட்டிருக்காங்களே, இதுக்கு ஒரு கோடி ரூவாய்க்கு பிலிம்மை வாங்கி பிரிச்சு பிரிச்சு போட்டு வெளையாடியிருக்கலாமே"ன்னாரு வேதனையோட.
எம்ஜிஆரு, சிவாஜி, எஸ்எஸ்ஆரு, முத்துராமன்னு அழகனுங்களா பார்த்த அவரு கண்ணுக்கு இப்போ வர்ற மூஞ்சுங்க எல்லாம், மூஞ்சூறு மாதிரி தெரிஞ்சாலும் ஆச்சர்யமில்லே. எனக்கு தெரிஞ்சு, கண்ணுக்குள்ளே இரண்டு 'டாஸ்மாக்' கடையையே தெறந்து வச்சுகிட்டு இருக்கிற நடுவயசு ஆளுங்க சிலர், "நேத்து கூட ஒரு கம்பெனியில பேசிட்டு வந்திருக்கேன். இந்த ஜப்ஜெட்டுக்கு(?) நீதான்யா பொருத்தமான ஹீரோன்னு சொன்னாங்க"ன்னு மனசாட்சி மேல மண்ணெண்ணைய ஊத்திக்கிட்டு பேசுவாய்ங்க. ஒனக்கென்னடா ராசா, கொஞ்சம் முன்னாடி மெட்ராசுக்கு வந்திருந்தா இந்நேரம் ஒனக்கும் ஆயிரம் மன்றம் திறந்திருப்பானுங்கல்ல...ன்னு அதிலே நெருப்புக்குச்சியை கிழிச்சு வைப்பான் உற்ற தோழன். எல்லாம் ஒரு 'சியர்ஸ்' செய்யுற மாயம்.
இன்னும் சில பேரு, மஞ்ச மஞ்சேர்னு சட்டைய போட்டுகிட்டு, மாரு, கையின்னு வெளிச்சம் படுற இடத்திலே எல்லாம் ரோஸ் பவுடரை அப்பிகிட்டு வாய்ப்புக்காக நிக்கிறதையும் பார்த்திருக்கேன். "ஒரு சீன்லே வந்திட்டு போற மாதிரி ஒரு ரோல் இருக்கு. பண்றீங்களா?"ன்னு கேட்டு பாருங்க. இருட்டுற வரைக்கும் வெயிட் பண்ணி நாம போகும் போது சந்திலே இருந்து கல்லை விட்டு எறிஞ்சிருவாய்ங்க! நாகேஷ¨ சிரிப்பு, நம்பியாரு மொரைப்பு மாதிரி, இவங்க கூடவே பொறந்தது இந்த ஹீரோ மிதப்பு.
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், பாடல், இசை, நடிப்புன்னு வரிசை கட்டி அடிக்கிற வெறியோட திரிவாய்ங்க பல பேரு. எல்லாத்தையும் ஒரு பேப்பரில் எழுதி வச்சுகிட்டு வர்ற இவங்களிடம், "இந்த சைக்கிள் டோக்கன், டீ டோக்கன் ரெண்டுத்தையும் விட்டுட்டீங்களே"ன்னு வெறுப்பேத்தி அனுப்புற புரடக்ஷன் மேனேஜருங்களையும் பார்த்திருக்கேன்.
சில வாரங்களுக்கு முன்னாடி நான் பார்த்த போஸ்டரில் இருந்த நபர், ஒருவேளை ஜெயிக்கலாம். வெற்றிகரமான கதையோடு வந்திருக்கலாம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே "எதுக்குய்யா இப்பிடி சோதிக்கிறாரு?"ன்னு கேட்டவங்கதான் அதிகம். 'மாக்கான்'ங்கிற படத்தோட போஸ்டர்தான் அது. கதைக்காகதான் ஹீரோ, ஹீரோவுக்காக கதை இல்லைங்கிற கொள்கையிலே நம்பிக்கை உள்ளவன் நான். ஒருவேளை இந்த கதைக்கு அவரு பொருத்தமா இருப்பாரோ என்னவோ? ஆனா இந்த படம் ஓடிட்டா அவரோட அடுத்த படம் என்னவா இருக்கும்? எப்பிடி இருக்கும்? ஃபாரின்லே போயி டூயட்டெல்லாம் ஆடுவாரோங்கிற பயம் தன்னால வர்றது இயற்கைதானே?
"ஃபாரினுக்கு போயி ஆடுறதுக்கே வெட்கமா இருக்குங்க. அந்த ஊரு சினிமாவிலே இந்த மாதிரி ஆடறதையெல்லாம் அவங்க பார்த்திருக்க மாட்டாங்களா? நம்மளையே உத்து உத்து பார்க்கிறப்போ, ரொம்ப சங்கோஜமா இருக்கும்"னு ஒரு தடவ சொன்னாரு சத்யராஜ். ஒரு படத்திலே ஃபாரின்லே போயி 'போர்ட்டர்'கள் போடுற சிவப்பு கலர் டிரஸ்சோட ஆடுவாரு விஜய். அவர கவனிக்கறதை விட்டுட்டு அங்க வேடிக்கை பார்க்கிற ஜனங்களோட ரீயாக்ஷனை கவனிச்சவங்களுக்கு தெரியும். நம்மள்ளாம் அவங்க கண்ணுக்கு எவ்ளோ பெரிய ஜோக்கர்ஸ் என்று. ஏதுக்குய்யா இந்த கொல வெறின்னு கேட்டா, அந்நிய செலவாணி, அது இதுன்னு புரியாத லாங்குவேஜ்லே சமாளிக்கிறாய்ங்க. இந்த விஷயத்திலே நாமெல்லாம் அன்னிய 'கொலை'வாணிங்கன்னா சரியா இருக்குமோ?!
கவுண்டமணி ஹீரோவா நடிச்ச ஒரு படத்துக்காக வெளிநாட்டுக்கு போயிருந்தாங்க. ஷ¨ட்டிங் எடுக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் ஜனங்க கூடிட்டாங்க. அவங்களுக்கு பயங்கர ஆர்வம். ஹீரோ வந்ததும் அவரை பார்க்கணும். ஆட்டோகிராஃப் வாங்கணும் என்று. அடிக்கடி "ஹீரோ வந்திட்டாரா?"ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம். திடீர்னு வந்து நின்னாரு கவுண்டர். "இவருதான் ஹீரோ"ன்னு ஜனங்களுக்கு அறிமுகப்படுத்த, காத்திருந்தவங்கள்ளாம் இங்கிலீஷ்லேயே காறித்துப்பிட்டு போனதா சொல்லி சிரிச்சாரு அந்த பட கம்பெனிக்கு ரொம்ப வேண்டியவரு ஒருத்தரு.
சரி, மாக்கான் விஷயத்துக்கு வருவோம். ராஜ்கிரணுக்கு ஜோடி மீனாவான்னு கேட்டு முள்ளம்பன்றி சூப்பை குடிச்ச அதே சனங்க, அந்த படத்தை மாங்கு மாங்குன்னு பார்த்து ரசிச்சதை 'மாக்கான்' விஷயத்துக்கு முன்னோடியா சொல்றாங்க. நல்லதாவே நடக்கட்டும். ஒரே வருத்தம்னா அது இதுதான். ரிப்போர்ட்டருங்களை அண்ணான்னு பாசமா கூப்பிடுற கீர்த்தி சாவ்லாதான் திருமதி மாக்கானாம்.
கிளிய வளர்த்து கூண்டுல அடைச்சாலும் பரவால்ல, மிக்சியிலே போட்டு ஆட்டிட்டீங்களேய்யா....?
எம்ஜிஆரு, சிவாஜி, எஸ்எஸ்ஆரு, முத்துராமன்னு அழகனுங்களா பார்த்த அவரு கண்ணுக்கு இப்போ வர்ற மூஞ்சுங்க எல்லாம், மூஞ்சூறு மாதிரி தெரிஞ்சாலும் ஆச்சர்யமில்லே. எனக்கு தெரிஞ்சு, கண்ணுக்குள்ளே இரண்டு 'டாஸ்மாக்' கடையையே தெறந்து வச்சுகிட்டு இருக்கிற நடுவயசு ஆளுங்க சிலர், "நேத்து கூட ஒரு கம்பெனியில பேசிட்டு வந்திருக்கேன். இந்த ஜப்ஜெட்டுக்கு(?) நீதான்யா பொருத்தமான ஹீரோன்னு சொன்னாங்க"ன்னு மனசாட்சி மேல மண்ணெண்ணைய ஊத்திக்கிட்டு பேசுவாய்ங்க. ஒனக்கென்னடா ராசா, கொஞ்சம் முன்னாடி மெட்ராசுக்கு வந்திருந்தா இந்நேரம் ஒனக்கும் ஆயிரம் மன்றம் திறந்திருப்பானுங்கல்ல...ன்னு அதிலே நெருப்புக்குச்சியை கிழிச்சு வைப்பான் உற்ற தோழன். எல்லாம் ஒரு 'சியர்ஸ்' செய்யுற மாயம்.

கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், பாடல், இசை, நடிப்புன்னு வரிசை கட்டி அடிக்கிற வெறியோட திரிவாய்ங்க பல பேரு. எல்லாத்தையும் ஒரு பேப்பரில் எழுதி வச்சுகிட்டு வர்ற இவங்களிடம், "இந்த சைக்கிள் டோக்கன், டீ டோக்கன் ரெண்டுத்தையும் விட்டுட்டீங்களே"ன்னு வெறுப்பேத்தி அனுப்புற புரடக்ஷன் மேனேஜருங்களையும் பார்த்திருக்கேன்.
சில வாரங்களுக்கு முன்னாடி நான் பார்த்த போஸ்டரில் இருந்த நபர், ஒருவேளை ஜெயிக்கலாம். வெற்றிகரமான கதையோடு வந்திருக்கலாம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே "எதுக்குய்யா இப்பிடி சோதிக்கிறாரு?"ன்னு கேட்டவங்கதான் அதிகம். 'மாக்கான்'ங்கிற படத்தோட போஸ்டர்தான் அது. கதைக்காகதான் ஹீரோ, ஹீரோவுக்காக கதை இல்லைங்கிற கொள்கையிலே நம்பிக்கை உள்ளவன் நான். ஒருவேளை இந்த கதைக்கு அவரு பொருத்தமா இருப்பாரோ என்னவோ? ஆனா இந்த படம் ஓடிட்டா அவரோட அடுத்த படம் என்னவா இருக்கும்? எப்பிடி இருக்கும்? ஃபாரின்லே போயி டூயட்டெல்லாம் ஆடுவாரோங்கிற பயம் தன்னால வர்றது இயற்கைதானே?
"ஃபாரினுக்கு போயி ஆடுறதுக்கே வெட்கமா இருக்குங்க. அந்த ஊரு சினிமாவிலே இந்த மாதிரி ஆடறதையெல்லாம் அவங்க பார்த்திருக்க மாட்டாங்களா? நம்மளையே உத்து உத்து பார்க்கிறப்போ, ரொம்ப சங்கோஜமா இருக்கும்"னு ஒரு தடவ சொன்னாரு சத்யராஜ். ஒரு படத்திலே ஃபாரின்லே போயி 'போர்ட்டர்'கள் போடுற சிவப்பு கலர் டிரஸ்சோட ஆடுவாரு விஜய். அவர கவனிக்கறதை விட்டுட்டு அங்க வேடிக்கை பார்க்கிற ஜனங்களோட ரீயாக்ஷனை கவனிச்சவங்களுக்கு தெரியும். நம்மள்ளாம் அவங்க கண்ணுக்கு எவ்ளோ பெரிய ஜோக்கர்ஸ் என்று. ஏதுக்குய்யா இந்த கொல வெறின்னு கேட்டா, அந்நிய செலவாணி, அது இதுன்னு புரியாத லாங்குவேஜ்லே சமாளிக்கிறாய்ங்க. இந்த விஷயத்திலே நாமெல்லாம் அன்னிய 'கொலை'வாணிங்கன்னா சரியா இருக்குமோ?!
கவுண்டமணி ஹீரோவா நடிச்ச ஒரு படத்துக்காக வெளிநாட்டுக்கு போயிருந்தாங்க. ஷ¨ட்டிங் எடுக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் ஜனங்க கூடிட்டாங்க. அவங்களுக்கு பயங்கர ஆர்வம். ஹீரோ வந்ததும் அவரை பார்க்கணும். ஆட்டோகிராஃப் வாங்கணும் என்று. அடிக்கடி "ஹீரோ வந்திட்டாரா?"ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம். திடீர்னு வந்து நின்னாரு கவுண்டர். "இவருதான் ஹீரோ"ன்னு ஜனங்களுக்கு அறிமுகப்படுத்த, காத்திருந்தவங்கள்ளாம் இங்கிலீஷ்லேயே காறித்துப்பிட்டு போனதா சொல்லி சிரிச்சாரு அந்த பட கம்பெனிக்கு ரொம்ப வேண்டியவரு ஒருத்தரு.
சரி, மாக்கான் விஷயத்துக்கு வருவோம். ராஜ்கிரணுக்கு ஜோடி மீனாவான்னு கேட்டு முள்ளம்பன்றி சூப்பை குடிச்ச அதே சனங்க, அந்த படத்தை மாங்கு மாங்குன்னு பார்த்து ரசிச்சதை 'மாக்கான்' விஷயத்துக்கு முன்னோடியா சொல்றாங்க. நல்லதாவே நடக்கட்டும். ஒரே வருத்தம்னா அது இதுதான். ரிப்போர்ட்டருங்களை அண்ணான்னு பாசமா கூப்பிடுற கீர்த்தி சாவ்லாதான் திருமதி மாக்கானாம்.
கிளிய வளர்த்து கூண்டுல அடைச்சாலும் பரவால்ல, மிக்சியிலே போட்டு ஆட்டிட்டீங்களேய்யா....?
12 comments:
இன்றைய காலக்கட்டத்தில் சுமாரான மூஞ்சிகளுக்கு தான் மதிப்பு அதிகம் என்று தோன்றுகிறது. ஆனாலும் "மாக்கான்" ....
கனடாவின் ஸ்டாண்ட் அப் காமெடியன் ரஸ்ஸல் பீட்டர்ஸ் சொன்னார் "ஹிந்திப் படங்களில் வெளித் தோற்றத்துக்கு தான் அதிக மதிப்பு கொடுக்கிறீர்கள், உள்ளே சரக்கு எதுவுமில்லை. இதனால் தான் எனக்கு தமிழ்ப் படங்களைப் பிடிக்கிறது, வெளித் தோற்றத்தைப் பற்றி அதிகம் அவர்கள் கவலைப்படுவதில்லை". அதை நாம் சரக்குள்ளவர்கள் என்று பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம், நம்ம கதாநாயகர்கள் பல பேர் கர்ணகொடூரமாக இருக்கிறார்கள் என்று கேவலப்படுத்த்தியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நான் டிராப்ட்-ல வைச்சிருக்கிற காக்டைல் பதிவு உங்க லிங்க்-ல அதுக்குள்ள வந்திருச்சே எப்படி?
//இதனால் தான் எனக்கு தமிழ்ப் படங்களைப் பிடிக்கிறது, வெளித் தோற்றத்தைப் பற்றி அதிகம் அவர்கள் கவலைப்படுவதில்லை". //
ஆமா தல.., ஸ்ரேயா, த்ரிஷா போன்ற ஆட்களையெல்லாம் நாம நாயகியா ஒத்துக் கொள்ளவில்லையா?
சரியே. தலைப்பே சூப்பர்.
//மனசாட்சி மேல மண்ணெண்ணைய ஊத்திக்கிட்டு பேசுவாய்ங்க//
//அதிலே நெருப்புக்குச்சியை கிழிச்சு வைப்பான் உற்ற தோழன்//
ரெண்டுத்துக்கும், ஸிங்க் ஆகற மாதிரி எழுதுறீங்களே எப்டிணா?
ரஜினி படம் போலதான்.. உங்க பதிவும்! (எக்ஸ்கிலுடட் பாபா, குசேலன்)
எப்டி இருந்தாலும் சூப்பர்!
தங்க தமிழ தண்ணில கலக்கி தாராளமா தடையே இல்லாம தாரை வார்க்கிற அந்தணனுக்கு எங்கள் வந்தனங்கள். இதே எழுதேவே நாக்கு நுரை தப்புதே .. எப்படி சார் நீங்க இப்படி எழுதறிங்க! வாழ்த்த தகுதி இல்ல வணகுகிறேன்
சார், தலைப்பு கலக்கல்.புகுந்து விளையாடறீங்க.
//அவர கவனிக்கறதை விட்டுட்டு அங்க வேடிக்கை பார்க்கிற ஜனங்களோட ரீயாக்ஷனை கவனிச்சவங்களுக்கு தெரியும். நம்மள்ளாம் அவங்க கண்ணுக்கு எவ்ளோ பெரிய ஜோக்கர்ஸ் என்று//
அந்தனன்,
இப்பவெல்லாம் ஷூட்டிங்கை வேடிக்கை பாக்குற ஜனங்களுக்கு மட்டுமல்ல, படம் பார்க்கிறவர்களுக்கும் அப்படி ஆடுபவர்கள் கோக்கர்களாகத்தான் தெரிகிறார்கள்.
yeh its so annoying to watch our heroes dancing in the streets of foreign location in weird costumes.. the worst was in badri like u said in ur article.. they made even the poor foreigners wear the same clothes n make some weird moves in the name of dance.. thaangala da saami..
Joe சொன்ன மேட்டர் நல்லா இருக்கு..
//கிளிய வளர்த்து கூண்டுல அடைச்சாலும் பரவால்ல, மிக்சியிலே போட்டு ஆட்டிட்டீங்களேய்யா....?//
anathananji sema kusumbu. thalaippa nenaichale sirrippa irukku.
விடுங்க.. அவங்க ஆசை..
ஒரு படம்தானே.. அத்தோட விட்டதடா சாமின்னு ஓடப் போறாங்க..
தலைப்பு வைக்க எங்கிட்டாச்சும் ரூம் போட்டு யோசிப்பீங்களோ..?
Post a Comment