Tuesday, June 9, 2009

நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...


விருகம்பாக் கம், வளசரவாக் கம், கொட்டிவாக் கம்... கொஞ்சம் கூர்ந்து கவனிச்சிட்டீங்களா? இந்த 'கம்' எல்லாம் எந்த கம் னு நெனைக்கிறீங்க? அவசரப்பட்டு தப்பா யோசிச்சிராதீங்க. இது வேற கம். "படப்பிடிப்புக்கு பங்களா இருக்கு. வர்றீங்களா"ன்னு அழைக்கிற வணக் கம்!

முன்னொரு காலத்திலே 'மேய்ச்சல்' நிலமா இருந்த இடத்தையெல்லாம் வளைச்சு போட்டு, நீச்சல் குளத்ததோட வீட்டை கட்டியிருக்காய்ங்க பல பேரு. அதிலே பல பங்களாக்களில் நடக்கிற இரண்டாவது விஷயம் ஷ¨ட்டிங். (முதல் விஷயம் என்னாங்கறது நமக்கெதுக்கு?) அப்படி ஒரு பங்களாவை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிற ஒரு நடிகையை பற்றிய விஷயம்தான் நான் சொல்லப் போறது. டிவிலே பேசுற பல பேரோட தமிழை கேட்டா அது உச்சரிப்பா, நச்சரிப்பான்னே தெரியாதளவுக்கு நசுங்கிப் போவுது லாங்குவேஜ். அப்படிப்பட்ட 'வரட்டு வால்' தொகுப்பாளினிகளுக்கு நடுவே, நம்ம நடிகை பேசுற தமிழ் இருக்கே... அது தித்திப்பான திரட்டுப்பால்! இப்பவும் தொலைக்காட்சியிலே அவங்க வந்தா, காதிலே ஒரு டிசம்பர் கச்சேரியே நடக்கும்.

போன வாரம் கூட ஒரு நிகழ்ச்சியிலே பார்த்தேன். மைக்குக்கு வலிக்காம, மனசுக்கு சுளுக்காம, குளுக்கோச காதிலே கொட்டின மாதிரி அப்படி ஒரு அழகான தொகுப்புரை. மொத்த சனமும் குத்த வச்சு உட்கார்ந்து குளுகுளுன்னு ரசிச்சிட்டு போச்சு. இவ்வளவு ரசனையும் எதுவரைக்கும்?

முகம் வரைக்கும்தான். அப்படியே கேமிராவை கீழே இறக்கினால், வைட் லென்ஸ்லேதான் அடங்குவாங்க. அப்படி ஒரு சைஸ்! ஃபங்ஷன்லே பி-ரோவில் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, பின்ன்ன்ன்ன்ன்ன்னாடி ரோவில் இருந்து பார்த்தாலும் சரி. பளிச்சென்னு தெரிகிற பீரோ அவங்க! அம்மா, அக்கா கேரக்டர்னு சின்னத்திரையிலேயும், பெரிய திரையிலேயும் வூடு கட்டி அடிக்கிறாங்க.

இவ்வளவு சொல்லியும் யூகிக்க முடியலைன்னா, தெரிஞ்சிட்டுதான் போங்களேன். நம்ம ஃபாத்திமா பாபு. தேவாரத்தையும் திருக்குறளையும் சொல்ற விபூதி வாத்தியாரு, சமயத்திலே பிரம்பெடுத்து பின்னுற மாதிரி, இவங்களுக்குள்ளேயும் ஒரு காட்ஸில்லா வந்து கர்புர்னுச்சு. சும்மாவா பின்னே? வயித்தை கட்டி, வாய கட்டி(?) சேர்த்து வச்ச காசிலே ஒரு வூட்டை கட்டினா, ஓசியிலே உப்புமா கிண்டுறேன். கொஞ்சம் சட்டி தர்றீங்களான்னு கேட்டா சாமி வந்து ஆடாது? ஆடுச்சுய்யா ஒரு நாளு...

ஒரு சீரியலுக்காக தனது பங்களா வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாங்க ஃபாத்திமா. சீரியல் தயாரிப்பாளர் யாரு தெரியுமா? ஒரே நேரத்திலே பத்து படத்துக்கு பூஜைய போட்டு இன்டஸ்ட்ரியவே கிலி பிடிக்க வச்ச பெரிய்ய்ய்ய்ய்ய கம்பெனி. புரடக்ஷன் மேனேஜரு வீட்ட சுத்தி சுத்தி வந்தாரு. "இங்கே இது இருந்திருக்கணும். அங்கே அது இருந்திருக்கணும். ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ரேட் எவ்வளவு?"ன்னாரு மொத்த வீட்டுக்கும். ஏதோ விலைக்கே வாங்குற மாதிரி கேட்டாலும், நாலே நாளு ஷ§ட்டிங்கிற்குதான் இத்தனை கேள்வி மற்றும் ஆலோசனைகள்! ஒருவழியா நாலு நாளைக்கும் சேர்த்து இருபத்தஞ்சாயிரம் பேசி ஒரு சிறு தொகையை அட்வான்சா வாங்கிட்டு ஏதோ ஒரு சேனலுக்கு 'நியூஸ் வாசிக்க' போயிட்டாங்க ஃபாத்திமா. வீட்டுக்கு மேலேயே அவங்க குடியிருக்காங்க. கீழ் போர்ஷனைதான் வாடகைக்கு விட்டிருந்தாங்க.

கடைசி நாளு ஷ§ட்டிங் முடியுற நேரத்திலேயாவது பணம் வந்திரும்னு காத்திருந்தா, லைட்டு, செட் பிராப்பர்ட்டின்னு எல்லாத்தையும் எடுத்து வேன்லே ஏத்திட்டு இருக்காய்ங்க. போட்டிருந்த நைட்டியோடு கீழே வந்த ஃபாத்திமா "நம்ம பேமென்ட் வரலே. அதுக்குள்ளே எல்லாத்தையும் ஏத்துறீங்களே"ன்னாரு. "வரும், வந்திரும்"னு ரெண்டே வார்த்தை பேசிட்டு, ஏத்துறதிலேயே குறியா இருந்தா பு.மே!

சரி வந்திரும்னு பொறுமையா இருந்த ஃபாத்திமாவுக்கு அடுத்து நடந்ததுதான் சுர்ர்ர்ர்ர்... மெல்ல தனது காரிலே ஏறிக்கிட்ட புரடக்ஷன் மேனேஜரு, "நாளைக்கு யாருகிட்டேயாவது குடுத்தனுப்புறேன். இப்போ கையிலே பணம் இல்லே"ன்னுட்டு வேகமா வண்டிய கிளப்பிட்டாரு. தன்னோட பதிலை கூட கேட்காம இப்படி விருட்டுன்னு வண்டிய கிளப்பிட்டு போனதிலே பயங்கர அப்செட் ஆன ஃபாத்திமா, போட்டிருந்த நைட்டியோடு தனது காரை கிளப்பிகிட்டு புரடக்ஷன் மேனேஜரு வண்டிய விரட்ட, வளசரவாக்கத்திலே ஆரம்பிச்சிது அந்த சேசிங்!

பின்னாடி இவங்க விரட்டுறதை பார்த்திட்ட மேனேஜரு, மாட்னா நாம மேனேஜரு இல்லே, டேமேஜருதான்னு நினைச்சிட்டாரு. ஆக்சிலேட்டர அழுத்தி டிராபிக்கை கதி கலங்க அடிச்சாரு. இவங்க மட்டும் லேசுபட்டவங்களா என்ன? சோழவரம் ரேசுல, மூணு தடவ கப்பு வாங்குன ரேஞ்சுக்கு வண்டிய விரட்ட, போற வர்றவன்லாம் பொம்பளையா இது?ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க. ஃபார்த்தும்மான்னு சொன்னாலும் கேட்கிற நிலைமையிலா இருக்காங்க ஃபாத்திமா? சர்ருபுர்ருன்னு பறக்குது வண்டி.

ஒரு வழியா ராம் தியேட்டருகிட்டே மடக்கிட்டாங்க புரடக்ஷன் மேனேஜரு வண்டிய. முன்னாடி போயி சடர்ன் பிரேக் அடிச்சு குறுக்கால வண்டிய நிறுத்த, முகமெல்லாம் வேர்க்க விறுவிறுக்க இறங்கினாரு புரடக்ஷன் மேனேஜரு. அவரு சர்வீஸ்லே இப்படி ஒரு அவமானத்தை பார்த்தே இருக்க மாட்டாரு. "ஏம்மா, நான்தானே தர்றேன்னு சொன்னேன்ல. இப்படி வண்டிய குறுக்க விட்டுட்டீங்களே, மொதல்ல வண்டிய எடுங்க"ன்னாரு. "ஓஹோ, தரமாட்டேன்னு வேற சொல்லுவியா"ன்னு கீழே இறங்கிய ஃபாத்திமாவ பார்த்திட்டு ஒரே கூட்டம். அவ்வளவு கூட்டத்திலேயும் ஆட்டோகிராப் ப்ளீஸ்னு ஒரு அசமஞ்சம், தாளு ஒன்னை எடுத்து நீட்ட, "அட போய்யா அந்தப்பக்கம்"னு தள்ளிவிட்டாங்க பாத்திமா. "பணத்தை எண்ணி வச்சுட்டு வண்டிய எடு"ன்னு ஒரே கெரகம். நைட்டியோட நின்ன இவங்களை பார்த்திட்டு ஷ¨ட்டிங் போலிருக்குன்னு இன்னும் கூட்டம் கூட, தன்னை ஜகதல பிரதாபன்னு நினைச்சு வண்டிய விரட்டிட்டு வந்தவரு தர்மசங்கடலிங்கமாயிட்டாரு.

அங்கிருந்தபடியே யார் யாருக்கோ போன் போட்டு பணத்தை வரவழைச்சாரு. நட்ட நடுரோட்டில் பட்டுவாடா ஆச்சு பணம். மறக்காம வவுச்சர்லே கையெழுத்தும் வாங்கினாரு ஸ்பாட்லேயே வச்சு! அன்னைக்கு நைட் அவங்க சேனல்லே செய்தி வாசிக்கும் போது இந்த செய்தியும் சொல்லுவாங்களோங்கிற அச்சம் அந்த புரடக்ஷன் மேனேஜருக்கு இருந்திருக்குமோ என்னவோ? நேர்லே பார்த்தா கேட்கணும்!

18 comments:

கலையரசன் said...

சும்மா இருந்த சி...யே!
பரன மேலிருந்து குதியே ன்னு..
சும்மாயிருந்த ஃபாத்திமாவ சீன்டுனா?
அதான், அம்மா வச்சாங்க அல்டிமேல் ஆப்பு!!

கலையரசன் said...

லாரன்ச பத்தியும் எழுதல..
சினேகா பத்தியும் எழுதல...
வர வர நீங்க ரசிகருங்க வேண்டுகோளை..
வேணாமுன்னே பாக்குறீங்க!
பாத்து செய்யுங்க...

RAJESH. V said...

ha ha ha.........

rombathan........

செந்தில்குமார் said...

//ஃபார்த்தும்மான்னு சொன்னாலும் கேட்கிற நிலைமையிலா இருக்காங்க ஃபாத்திமா?//

அந்தணன் சார்,
சென்னை வந்த பிறகு உங்ககிட்டையும் உதய் சார் கிட்டயும் தமிழ் டியூஷன் படிக்கணும்... :)

Anonymous said...

fathima sema figure ma.....
selli velai illai vapa.........

Anonymous said...

anthana sir
vara vara pathivukal kuraiyute?

evalavu ethirparpoda daily unga blogai open panuran. but 2 or 3 days ku 1ka tan update ahutu.
pls post more and more daily.

ungal rasigan
pirana

butterfly Surya said...

அவங்க சேஸிங்க விட உங்க கைவிரல்ல தட்டுற தமிழ் சேஸிங் தான் சூப்பரண்ணே..


யம்மா கோவம் வந்தாலும் இப்படியா..??

அந்த கம்பெனியை பத்தி தெரிஞ்சும் வாடகைக்கு விடலாமா..??

முன்னரே தெரிய வேண்டாமா.??

நம்க்கு எதுக்கு அதெல்லாம்...

சுவாமி மலை முருகனுக்கு அரோகரா.. அரோகரா...


அண்ணே... சரியா ..??

ரொம்ப நல்லவன் said...

சே.. இந்த சஸ்பென்ஸ் சமாச்சாரம் தொட்டு தொடர்ந்துகிட்டேயிருக்கு...

இந்த பதிவு மூலமா பாத்திமாவும் நம்ம ஊரு பொண்ணுதான்னு கன்பார்ம் ஆயிடுச்சு.

ஜெட்லி... said...

//அவ்வளவு கூட்டத்திலேயும் ஆட்டோகிராப் ப்ளீஸ்னு ஒரு அசமஞ்சம், தாளு ஒன்னை எடுத்து நீட்ட//

அவன்தான் சார் தமிழன்.

நான் தான் உங்க 91 வது follower.......

biskothupayal said...

ஃபாத்திமாக்கே
பல்பா!
சும்மா விடுவாங்களா

எப்புடி ரோட்லயே எரிய வச்சி கண்பிச்சங்கள

सुREஷ் कुMAர் said...

//
ஃபங்ஷன்லே பி-ரோவில் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, பின்ன்ன்ன்ன்ன்ன்னாடி ரோவில் இருந்து பார்த்தாலும் சரி. பளிச்சென்னு தெரிகிற பீரோ அவங்க!
//
யப்பா சாமி..
எப்படிப்பா இப்படி எல்லாம் முடியுது..?
கலக்கல்..

Sridhar said...

//அப்படிப்பட்ட 'வரட்டு வால்' தொகுப்பாளினிகளுக்கு நடுவே, நம்ம நடிகை பேசுற தமிழ் இருக்கே //

அருமை சார் உங்கள் தமிழ் விளையாட்டு

Anonymous said...

neenga cinema vasanam ezhuthunga... pattya kelapuveenga....Epppallam enna vasanam ezuthranunga...

selva

Indian said...

///தர்மசங்கடலிங்கமாயிட்டாரு//

:)

sowri said...

சேசிங் ஸ்பீடாவிட உங்க speed ரொம்ப ஜாஸ்தி ! பெட்ரோல ஸ்பீட் பெட்ரோல் இருக்கு .. தமில கூடவா இருக்கு!

ganeshguruji said...

''அப்படியே கேமிராவை கீழே இறக்கினால், வைட் லென்ஸ்லேதான் அடங்குவாங்க. அப்படி ஒரு சைஸ்! ஃபங்ஷன்லே பி-ரோவில் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, பின்ன்ன்ன்ன்ன்ன்னாடி ரோவில் இருந்து பார்த்தாலும் சரி. பளிச்சென்னு தெரிகிற பீரோ அவங்க'!

anthananji
sema varnanai..
asathunga

♫சோம்பேறி♫ said...

ரஜினி ரசிகர்களோட பின்னூட்டங்களைப் பார்த்து, கோபத்தில் பதிவெழுதுவதை நிறுத்தி விடுவீர்களோ என்று பயந்தேன்..

நல்ல வேளை நிறுத்தவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, இப்படி பதிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டீர்களே அந்தனன்.

என் வருத்தங்கள் :-(

உண்மைத்தமிழன் said...

ஐ..

இது எப்படி எனக்குத் தெரியாம போச்சு..?!!!