Saturday, May 15, 2010

ஹீரோக்களே விரும்பும் ஹீரோ?


'துன்பம் வரும் வேளையில சிரிங்க. என்று சொல்லி வச்சார் வள்ளுவரும் சரிங்க...' இப்படி துன்பம் வரும் வேளையில் சிரிப்பதற்கென்றே ஹீரோ ஒருத்தரு ஒரு உபாயம் வச்சிருந்தாரு. அது உபாயமா? அபாயமா? படிச்சிட்டு நீங்களே சொல்லுங்களேன்.

ஊர சொன்னாலும் பேர சொல்லாதீங்கன்னு சொல்லுது ஒரு புத்தி. பேர சொன்னாலும் ஊர சொல்லாதீங்கன்னு சொல்லுது இன்னொரு புத்தி. அட, ஒன்னுமே சொல்லாதய்யான்னு வேறொரு புத்தி குறுக்கே வராத வரைக்கும் ஓகே.

ஹீரோ பெயரை எழுதினா நிஜமாகவே அவருக்கு சிக்கல். அதனால பெயரை மட்டும் விட்டுடலாம். ஆறடி உயரம். காபித்து£ள் கருப்பு. இதுதான் ஹீரோவோட அவுட் லுக். (க்ளு போதும்னு நினைக்கிறேன்) இவருக்கு எப்பவாவது மனசு விட்டேத்தியா இருந்திச்சுன்னா இரண்டு படங்களை உடனே பார்த்து மனசுக்கு மருதாணி போட்டுப்பாரு. இதுக்காகவே அவருடைய காரில் காஸ்ட்லியான டி.வி ஒன்றையும் ஃபிக்ஸ் பண்ணியிருந்தாரு. தன்னம்பிக்கையூட்டுற எந்த படத்தையாவது போட்டு பார்த்திருப்பாரு. அது எதுவா இருக்கும்னு நீங்க மண்டையை பிய்ச்சு, மனக்கணக்கு போட வேண்டாம். அவரு பார்க்கிற அந்த படங்கள் வேறு டைப். கெக்கேபிக்கேன்னு வாய்விட்டு சிரிக்க வைக்கிற ஹீரோக்களின் படங்கள்தான் அவை. ஒன்று ஏழிசை ஏந்தல், அஷ்டாவதானி, அடுக்கு மொழி பாவலன் விஜய டி.ஆர் நடித்த வீராசாமி. மற்றொன்று வீரத்தளபதி, விருந்தோம்பலரசன் ஜே.கே.ரித்தீஷ் நடித்த கானல் நீர்!

இந்த ரெண்டு படங்களையும் ஒரு சீன் விடாமல் பார்த்துட்டு காரில் இருந்து கீழே இறங்கும்போது ஈஷா, கல்கி, நித்தி, இன்னும் சாருநிவேதிதா 'பின்னாடி' அர்ச்சனை பண்ணப்போற அத்தனை சாமியார்களிடமும் யோகா படிச்ச புத்துணர்ச்சி கிடைத்திருக்கும் அவருக்கு. அவ்வளவுதான், இந்த நாள் இனிய நாள் என்று அன்றைய தினத்தை அரட்டையிலேயே கழிப்பார்.

விதிக்கு வேலி போட்டு தடுத்தாலும், புடுங்கி வச்சுட்டு புகுந்திரும் அல்லவா? அது மாதிரி ஒரு இன்சிடென்ட். ஒரு நாள் செம மூட் அவுட் ஆன கருப்பு ஹீரோ, தனது ஃபிரண்ட்ஸ் பட்டாளத்தையும் இழுத்துக்கொண்டு ஒரு பிரிவியூ தியேட்டருக்கு போனார். இத்தனை நாளும் காருக்குள்ளேயே இருந்து இந்த சூப்பர் ஸ்டாருங்களை ரசிச்சோம். அகன்ற வெண் திரையில் இவங்களை ரசிச்சா என்ன? இப்படி ஒரு 'தாட்' வந்ததுதான் தாமதம். தாட் பூட்டென்று செயலில் இறங்கிவிட்டார் ஹீரோ.

தி நகரில் இருக்கும் பிரிவியூ தியேட்டர் அது. நண்பர்களோடு காரைவிட்டு இறங்கும் போது கூடவே ஒரு டாஸ்மாக் கடையையும் கீழே இறக்கினார் ஹீரோ. மருந்தில்லா மருத்துவத்தை சித்தர்கள் சொல்லிக் கொடுத்தாலும், 'மருந்து' இல்லா வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியுமா தமிழனால்? நண்டு, நத்தை, காடை, கவுதாரி ஃபிரைகளுடன் கனஜோராக இறங்கியது மேற்படி டிவிடி இரண்டும். தியேட்டரில் உள்ள புரஜக்டர் உதவியுடன் படத்தை பார்த்து பரவசப்படுறதுதான் ஹீரோவின் திட்டம்.

பெரிய ஹீரோ, சும்மா கிடக்கிற தியேட்டர். வாடகைக்கு வாடகை ஆச்சு. பெரிய ஹீரோவின் பிரண்ட்ஷிப்பும் ஆச்சு. இப்படியெல்லாம் கணக்கு போட்ட தியேட்டர் மேனேஜர் கதவை அகல திறந்து அராத்து பார்ட்டிகளை உள்ளே அனுமதிச்சார். முதல் ஷோ கானல் நீர். ரித்தீஷ் ஸ்கிரீனில் தோன்றும்போதெல்லாம் உற்சாகமாக விசில் அடித்து கொண்டாடினார் ஹீரோ. வந்த வேலையை பார்ப்போம் என்று 'உள்ளே' தள்ளிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்.

அதற்குள் விஷயம் எப்படியோ ரித்தீஷ் காதுக்கு போய்விட்டது. அவ்வளவு பெரிய நடிகர் தியேட்டரை வாடகைக்கு எடுத்து நம்ம படத்தை பார்க்கிறார்னா எவ்வளவு பெரிய விஷயம். அந்த ஹீரோவுக்கு நாம மரியாதை செய்ய வேணாமா? பாண்டி பஜார்ல சொல்லி பெரிய மாலையா கட்டுங்கப்பா என்று தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டார் ரித்தீஷ். இந்த நேரத்தில் இவரை பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும்.

நீங்க புட்டிப்பாலுக்கு ஆசைப்பட்டால், புலிப்பாலே கொடுக்கிற அளவுக்கு வள்ளல். எம்ஜிஆருக்கு பிறகு, சினிமா தொழிலாளிங்களுக்கு பரவசத்தை கொடுக்கிற ஒரே நபர், இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் ரித்திஷ் மட்டும்தான். ஒண்ணுமில்லாத புல்லுங்க கூட, சும்மா வில்லுங்க மாதிரி விடைச்சுகிட்டு நிக்குதுன்னா இவரு தர்ற உற்சாகம்தான் அதுக்கு காரணம். அப்படிப்பட்ட மனுஷனுக்கு தன்னை நேசிக்கிற(?) ஹீரோவை சும்மா விட்டுவிட தோணுமா. தனது படை பரிவாரங்களுடன் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கே வந்திட்டாரு.

மழையடிக்கிற நேரத்தில மடையும் புட்டுகிட்டா என்னாகும்? ஆடிப்போயிட்டாரு தியேட்டர் மேனேஜரு. அவசரமா உள்ளே போக வந்த ரித்தீஷை, "சார் ஒரு நிமிஷம் உட்காருங்களேன்" என்று நைசாக ஆபிஸ் ரூமில் உட்கார வச்சுட்டு உள்ளே ஓடினார். காதோடு காதாக விஷயத்தை சொல்ல, ஆடிப்போனார் ஹீரோ.

அவசரம் அவசரமாக குடி மடத்தை மூடினாங்க அத்தனை பேரும். சீட்டுக்கு அடியில் சிறைபட்டன முனியாண்டி விலாஸ் ஐட்டங்கள். வாய், முகத்தையெல்லாம் துடைச்சுகிட்டு சைலண்ட்டா படத்தை ரசிக்க ஆரம்பிச்சாரு ஹீரோ. வெளியே ஓடிய மேனேஜர், சார் இப்போ உள்ளே போங்கன்னு சொன்னதும் கம்பீரமாக உள்ளே வந்தார் ரித்தீஷ். கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க ரெண்டு பேரும். கொண்டு வந்த பெரிய மாலையை போட்டு போட்டோவும் எடுத்துகிட்டாங்க. (ஹ§ம், இது வேறயா)

அந்த ஷாட்ல உங்க பர்ஃபார்மென்ஸ் அற்புதம்னு பாராட்டுனாரு ஹீரோ. என் நடிப்புக்கு நீங்கதான் டிப்ஸ் கொடுக்கணும்னாரு ரித்திஷ். இத்தனை நேரம் அங்க நடந்த கலவரத்தை பார்த்த பிரண்ட்ஸ், இந்த பரஸ்பர பாராட்டுதல்களில் அதுவரை அடித்த அத்தனை திரவியங்களின் பெருமையையும் மறந்தே போனாங்க.

அன்னைக்கு காமெடியா இருந்த ரித்தீஷ், இன்னைக்கு முக்கியமான எம்.பி!

ஒரு காலத்தில இவரை ஸ்கிரீன்ல பார்த்து எம்பி எம்பி குதிச்சு சிரிச்ச ஹீரோ, இன்னிக்கு எம்.பி சார்னு சொல்ற அளவுக்கு கொண்டு வந்திருச்சு காலம். அதுக்கு காரணம் வெறும் ரித்தீஷ் மட்டுமில்ல, அவருக்கே தெரியாம அவரு மனசுக்குள்ளேயிருந்து அள்ளிக் கொடுக்க வைக்கிற அந்த மகா பெரிய கர்ண மவராசன்தான்.

12 comments:

kumaru said...

ivlo solreenga...riteesh Ivlo panam yepdi vanthuchinu sonna nalla irukkum :)

Jaleel said...

Andha hero perai kadhoduu sollunga sar

King Viswa said...

மீ த தேர்ட்.

அந்தணன் சார் பேக் இன் பார்ம்.

theep said...

good.

sanjai said...

nalla iruku. anaal antha hero yaarendu maddum puriyala sir

Anonymous said...

vishal thana adhu?

Anonymous said...

Who is that actor???

Suresh Pillai said...

sirrrrrrr enga poniga ithana naal. daily unga blog vandhu padhudu yethana naal yemadhurukan theriuma.
sir ungaloda post-a en loverkita solli yethana naal sirichurukan theriuma.nirya yezhudhuga sir...

வெடிகுண்டு வெங்கட் said...

அந்தணன் சார்,

சுறாவை பற்றி ஏதாவது சொல்லுங்க சார்.

தமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?

Ashok D said...

உங்க ஸ்டையிலே தனி... நடத்துங்க...

'பரிவை' சே.குமார் said...

Arumai....

antha hero sellameyyaaaaaaaaaaaa?

Reichert said...

vishal thana adhu?