Saturday, March 21, 2009

கொலுசு வடிவ இதயமும்....கோபித்துக் கொண்ட டி.ஆரும்!


மனைவி கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு போவது போல காட்சி. (படத்தின் பெயர் நினைவில் இல்லை) தடுக்க வேண்டிய கணவர் இடத்தில் நம்ம டி.ராஜேந்தர்! வேறு ஹீரோவாக இருந்தால் கட்டிப்பிடித்து ஒரு இச்! அல்லது சேலை தலைப்பை பிடிச்சு இழுத்து, ÔபோவாதேÕ என்று ஒரு கெஞ்சல்! ஆனால் நம்ம ஆளு எப்பவுமே மூணாவது ரகம் ஆச்சே? இரண்டு கைகளையும் விரித்து, மறித்துக் கொண்டு ஒரு கபடி டோர்னமென்ட்டே நடத்துவார். அதையும் மீறி கை இடுக்கில் நுழைந்து(?) ஹீரோயின் வெளியேற, ஒரு நீண்ட அழுகாச்சி பாடலோடு துவங்கும் அந்த காட்சி...

யோவ்... கதாநாயகிய தொடக் கூடாதுங்கறதை நான் என்னோட பாலிசியா வச்சிருக்கேன். வேற எவனுக்காவது சினிமாவுலே இந்த தில் இருக்கா, சொல்ல சொல்லு பார்ப்பம்Õ என்பார் அடிக்கடி! இந்த யோவ்... நீங்களும் நானும் அல்ல. ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரி!

மும்தாஜோடு இவர் நடிக்கும் காட்சியை வீட்டிலேயே படமாக்கிக் கொண்டிருந்தார். (வீடே ஏவிஎம் ஃபுளோர் மாதிரிதான் இருக்கும். அவ்வளவு பெரிசு) வேடிக்கை என்னவென்றால் (தனியாக ஒன்று இருக்கிறதா என்ன, ஒட்டுமொத்தமும் வேடிக்கைதான்!) இவர் ஊரிலுள்ள கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி அசிஸ்டென்டுகளை திட்டிக் கொண்டிருப்பார். லாங்குவேஜ் புரியாத காரணத்தாலேயே டைரக்டரின் அங்க அசைவுகளை ரசித்துக் கொண்டிருப்பார் மும்தாஜ். பல நேரங்களில் இவர் நேரடியாக மும்தாஜையே திட்டி தீர்க்கும்போதும், அந்த புன்னகை மாறாமல் நிற்கும் பொண்ணு!

அன்றைய காட்சி என்ன என்பது தெரியவில்லை. அதுவும் அவருக்கு மட்டும்தான் தெரியும். இதய வடிவில் ஒரு கொலுசு படம் வரைந்து அதை மும்தாஜின் முந்தானையில் ஸ்டாப்ளர் அடிக்க நினைத்திருப்பார் போலிருக்கிறது. என்னிடம் திரும்பி, Ôகொலுசு வடிவத்தில் ஒரு இதயத்தை பேப்பரில் நறுக்கிக் கொடுங்கÕ என்றார். எடிட்டோரியல் வேலையை விட்டுவிட்டு ஷ§ட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதால் இந்த வேலை கொடுக்கப்பட்டது எனக்கு! நானும் அவர் சொன்னபடியே (ஊரிலுள்ள கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு) நறுக்கிக் கொடுத்தேன்.

சட்டென்று திரும்பி அவரது அசிஸ்டென்ட் ஒருவரிடம், அத எட்றா என்றார். எது என்று சொன்னால்தானே அவர் எடுப்பார், பாவம்! அவர் கீழே குனிந்து பேந்த பேந்த முழிக்க, பொட்டேர் என்று விழுந்தது அவரது பிடறியில்! அறைந்தது டி.ஆர்தான்! மிக சமீபமாக நின்று கொண்டிருந்த மும்தாஜ் இதற்கு ஒரு சின்ன அதிர்ச்சியாவது காட்ட வேண்டுமே? தினமும் இதுபோல நிறைய பார்த்திருப்பார் போலும்! அப்படியே நின்று கொண்டிருந்தார். அந்த முந்தானையை எட்றா. ஒரு பொண்ணு முந்தானைய தொடக் கூடாதுன்னு பார்க்கிறேன். புரிஞ்சுக்க மாட்றீங்களே என்றார் டி.ஆர்.

அந்த அசிஸ்டென்ட் ஒரு கையால் பிடறியை தடவிக் கொண்டே இன்னொரு கையால் மும்தாஜின் முந்தானையை பிடித்து டி.ஆரிடம் நீட்ட, நான் கொடுத்த அந்த கொலுசு வடிவ இதயத்தை (என்ன கற்பனைடா சாமி...) அந்த முந்தானையில் ஸ்டாப்ளர் அடித்தார். படம் ரிலீஸ் ஆனது. நாம் நறுக்கிக் கொடுத்த இதயம் குளோஸ்-அப்பில் வரும் என்ற கற்பனையோடு தியேட்டருக்கு போனால், கொலுசு வடிவ இதயமும் இல்லை, அந்த காட்சியும் இல்லை. படத்தில் இடம் பெறாத அந்த காட்சியால் நான் அறிந்து கொண்ட ஒரே விஷயம்,

டி.ஆர், பெண்களின் முந்தானையை பிடிப்பவரல்ல என்பதைதான்...!

12 comments:

டக்ளஸ்....... said...

வித்தியாசமான கோணமாக்கும்....

டக்ளஸ்....... said...

நல்ல ஆராய்ச்சி...

டக்ளஸ்....... said...

சே.. நல்ல சீனு படத்துல இல்லாம போச்சே....(வட போச்சே)

Mohan said...

No body entertained like TR

R. said...

innum varumnu ninaikiren

R.Gopi said...

தங்க தமிழ்நாட்டு திரை உலகின் மிகப்பெரிய காமெடியன் "தல" தி.ராஜேந்தரின் பலப்பல அராஜகங்களை பற்றி நிறைய எழுதவும்.

Vijay said...

இந்த மாதிரி சீன் எடுக்க மட்டுமல்ல... யோசிக்கவும் ஒரு “தெறம” வேணுமுங்கோ..அது யாரு.. எங்க டி. ஆரு.
ஏஏஏஏ... டண்ணணக்கா

Vaanathin Keezhe... said...

வாவ்... அருமை அந்தணன்...இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்....

எஸ்.ஷங்கர்
தட்ஸ்தமிழ்

selvibabu said...

enna kodumai sir ithu nanum oru blog open panniden..but a blank one:)
thanks to tamilcinema ennai unga blog parka vachathuku...keep us laugh

Anonymous said...

:)

Anonymous said...

அவரு டீயாறு ... அவர மிஞ்ச வேராரு ? :)

Anonymous said...

இவரு பொம்பிலங்கள தொட்டு நடிக்க மாட்டாரு, ஆனா இவரு படத்துல ஒரு சின்னப் பயனும், பொன்னும் வருவாங்க அவங்க பூந்து விளையாடுற சீன் எல்லாம் தாராளமா இருக்கும். இது பழைய கதை, இப்போ மும்தாஜ் கூட நடிச்சப்போ இவரு போட்டாரே குத்தாட்டம், அதுல மும்தாஜ் மேல இவரு கையை வக்கில என்பது நிசம்தான், ஆனா இவரு போட்ட ஆட்டம் நடன அசைவுகள் எல்லாம் இவரோட உடலமைப்புக்கும் வயசுக்கும் கொஞ்சம் கூட ஒத்து வராத விரசமான முறையில் எடுத்திருந்தார். கொடுமை தாங்கமுடியல. நான் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டேன், ரொம்ப நேர்மையானவன், நீங்களாவே என் பாக்கட்டுல பணத்த போட்டுட்டு போயிடுன்னு ஒருத்தன் சொன்னா, அவன் யோக்யன் என்று ஒப்புக் கொள்ள முடியுமா? நம்ம அச்சி மச்சியும் அப்படியேதான். தொட மாட்டேன், ஆனால் அதே டப்பங்குத்து, அதே விரசம் என்னத்துக்கு பிரயோஜனம்? K. ஜெயதேவா தாஸ்.