Sunday, March 22, 2009

விதி ஆர்மோனியத்தில, வில்லங்கம் தோள்பட்டையிலே!

சிம்மம் குமாரு சிம்மம் குமாருன்னு ஒரு மியூசிக் டைரக்டரு. என்னது, இப்படியெல்லாம் சொல்றதுக்கு படத்திலே மியூசிக் போட்ருக்கணுமா? எல்லாம் போட்ருக்காரு. படத்து பேருதான் ஞாபகத்தில இல்ல.

உ.சூ பெரிய பத்திரிகை ஒன்னுல எடிட்டரா இருந்த நேரம். "மாப்ளே, நான் ஒரு வி.வி.ஐ.பி கிட்டே கூட்டிட்டு போறேன். ஒரு பேட்டி எடுத்து போட்டேன்னா ஒன்னய கூட்டிட்டு வந்த என்னை மதிச்சு ஒரு படத்தையே எடுத்திடுவாரு. அதிலே நானே மியூசிக் போட்டு படத்தையும் டைரக்ட் பண்ணின மாதிரி இருக்கும்"னாரு சிம்மம் குமாரு. (எப்டீல்லாம் வழி கண்டுபிடிக்கிறாய்ங்க?) சரி, அதுக்கென்னா செஞ்சுட்டா போச்சுன்னு ரெண்டு பேரும் கிளம்பி போனாங்க. கொளுத்துற வெயிலா இருந்தாலும் கோட்டை கழற்றவே மாட்டாரு அந்த விவிஐபி. கடலோரத்திலே தொழில்! அந்த காத்து மாதிரியே சிலுசிலுன்னு பேசுவாரு. என்ன கொடுமைன்னா, "இப்போதான் தம்பி. நீங்க கதவை திறந்துட்டு உள்ளே வரும்போது ஒரு கவிதை எழுதுனேன்னு போட்டு தாளிச்சுருவாரு"

"யேய் மாப்ளே, அங்க வந்து கவிதை கிவிதைன்னு அந்தாளு வாசிச்சா நான் சும்மாயிருக்க மாட்டேன்"ங்கிற கண்டிஷனோடுதான் போனாரு உ.சூ. ஈசிஆர் ரோட்டு பக்கம் வண்டிய திருப்பினாங்க ரெண்டு பேரும்.

வாங்க வாங்கன்னு ஏகப்பட்ட வரவேற்பு. "முதல்ல டீ சாப்பிடுங்க தம்பி. நமக்குன்னு ஸ்பெஷலா இலங்கையிலேர்ந்து வந்த டீ!" இலங்கையிலேயே போட்டு வந்திச்சான்னு உதடு வரைக்கும் வந்த குசும்பை கழுத்தோட நெரிச்சு உள்ளே தள்ளிட்டு, டீ யை ருசிக்க தயாரானார் உ.சூ. என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். கடவுளே, இந்தாளு கவிதை கிவிதை பாடிட கூடாதுன்னு உதயசூரியன் நினைச்சிட்டு இருக்கிற நேரத்திலேதான், விதி என்ட்ரி!

"தம்பி, காலையிலே எழுந்து எத்தனையோ வேலைகள் பார்த்தாலும், சங்கீத ஆலாபனைய பண்றதை மட்டும் நான் நிறுத்தவே மாட்டேன். இப்போ பாருங்க, இன்னிக்கு காலையிலே ஒரு ஆலாபனை வந்திச்சு" என்று ஏதோ கொட்டாவி வந்தது போல சாதாரணமாக சொல்லிவிட்டு பாட ஆரம்பித்தார் விவிஐபி. தொண்டையை கனைத்துக் கொண்டு, ஆஆஆஆஆஆஆஆ.....ஆ! என்று ராகம் பாட ஆரம்பிக்க, உதட்டில் வைத்திருந்த டீ கப்பை அப்படியே து£க்கி ஓரமாக வைத்துவிட்டு "கெக்க்கக்ககக்கேன்ன்"னு சிரிச்சுகிட்டே வெளியே ஓடி வந்தாரு உதய சூரியன். சம்பந்தப்பட்டவரோட அறையிலே இருந்து மெயின் ரோடு வரைக்கும் சிரிச்சுகிட்டே ஓடி வந்தவர், அப்படியே பஸ் பிடித்து சென்னைக்கே வந்துவிட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து ஆபிசுக்கு வந்தார் சிம்மம். "டேய், மாப்ளே, இப்படி பண்ணிட்டியேடா"ன்னு விழுந்து விழுந்து சிரிக்க, "மன்னிச்சுக்கோடா"ன்னு இவரும் சிரிக்க,

இப்போதெல்லாம் கண்ட நேரத்திலே பாடுறதில்லையாம் விவிஐபி. குறிப்பா பத்திரிகைகாரங்க வந்தா....!

6 comments:

King Viswa said...

அந்தணன் சார்,

யார் அந்த விவிஐபி என்று கேட்கவில்லையென்றாலும், சிரிப்பை அடக்க கஷ்டப் பட்டேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

கிங் விஸ்வா.

R. said...

Ippovum appadiyethan irukiraru sollama odarathile

akisamy said...

sir romba arumai unga pathivu

இப்னு said...

கடற்கரையை தங்கமா மாத்திக்காட்னாரே, கார் பயணத்துலயே 300 கவித எழுதிடுவாரே, அவரு தானே.. அந்த வி ஐ.பி

rajesh.v said...

excellent...

ilayadhasan said...

அந்த விஐபி ... ஐ கு பதிலா ஜி போட்டா வாரவுகளா?
உங்க பதிவு அருமை ...கடைசியில் எங்களையெல்லாம் உ.சூ ரேஞ்சுக்கு கொண்டு வந்துடுவீங்க போல !