Saturday, March 28, 2009

தொப்புளுக்கு குளோஸ் அப்.... துரத்தியடித்த ப்ரிவியூ

எல்லா படத்தையும் ஓசியிலேயே பார்த்திடுறீங்க. கொடுத்து வச்ச ஆளுய்யா நீங்கன்னு வாயிலே புகை வரும்படி வாழ்த்தினார் நண்பர். (அவருக்கு சிகரெட் குடிக்கிற பழக்கம் இல்லை என்பதை அறிக) இன்பமோ, துன்பமோ யாம் பெற்றதை நீங்களும் பெறுக என்று அழைத்துப்போனேன் ஒரு படத்திற்கு. நாலு ரீல் முடிவதற்கு முன்பே "பாவம் சார் நீங்க"ன்னாரு... சில வருடத்திற்கு முன்பே நண்பர் அறிமுகம் ஆகியிருந்தால், ஒரு வியத்தகு அனுபவத்திற்கு இட்டுச் சென்றிருக்கலாம்.

தி நகர் ஏரியாவில் இருக்கிறது மேனா தியேட்டர். ப்ரிவியூ தியேட்டராக இருந்த இதில், இப்போது தனியார் தொலைக்காட்சிகளுக்காக செட்டுகள் போடப்பட்டு நிகழ்ச்சிகள் படமாகி வருகின்றன. இங்குதான் அந்த பயங்கரம் அரங்கேறியது.

படத்தின் பெயரோ, இயக்குனர் பெயரோ நினைவில் இல்லை. டைட்டில் போட்டு சில நிமிடங்கள் ஆனபின் போயிருந்தேன். வழக்கமாக பிரஸ் நண்பர்கள் மட்டுமே அமர்ந்திருப்பார்கள் என்று நம்பி, ஒரு சீட்டில் அமர்ந்தேன். படம் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு கருத்த ஆசாமி (அவர்தான் ஹீரோ) அடிக்கடி ஸ்கீரினுக்கு இரு முனைக்கும் இடையில் நடந்து கொண்டேயிருந்தார். அவரது காஸ்ட்யூம் வெறும் கோவணம் மட்டுமே! கேமிராவும் அவரது கருத்த பின்புறத்தை அடிக்கடி காண்பித்துக் கொண்டேயிருந்தது. இவர் நகர்ந்து கொண்டிருந்தாரே தவிர கதை நகர்ந்த மாதிரி தெரியவில்லை. படத்தின் கதாநாயகி என்று ஒரு பெரியம்மாவை காண்பித்தார்கள். என்னவொரு நம்பிக்கை, அவரது தொப்புளுக்கு அடிக்கடி குளோஸ் அப் வேறு. "அம்மா நடிச்சுட்டு வந்திர்றேன், வீட்ல பத்திரமா இருக்கணும் என்னா?" என்று குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வந்திருப்பார் போலும். இடுப்பை சுற்றி ஒரே வரி வரியாக ரேகைகள்! (அதன் மேல் கொஞ்சம் ஏஆர்ஆர் சுண்ணாம்பை தேய்த்திருந்தாலாவது பரவாயில்லை, வரிகள் மறைந்திருக்கும்)

தாங்க முடியாமல், "கொலையா கொல்றானுங்களேப்பா" என்று பக்கத்து சீட் நண்பரிடம் சொல்லிவிட்டு, அவரது பதிலுக்காக திரும்பினேன். பயங்கர அதிர்ச்சி. திரையில் வரும் அந்த கோவண ஆசாமிதான்! ம்ஹ§ம், கமென்ட் அடிக்கக் கூடாது. இன்டர்வெல் விட்டதும் எஸ்கேப் என்ற முடிவோடு அமர்ந்திருக்க, எனது மன நிலையிலேயே மொத்த தியேட்டரும் அமர்ந்திருந்தது போலும். இன்டர்வெல் என்ற ஒரு தேவ வார்த்தை திரையில் தோன்ற, ஒட்டுமொத்த பிரஸ்சும் அப்படியே சந்தோஷத்தோடு எழுந்தது. ஆனால் அந்த நம்பிக்கையில் விட்டார்கள் ஒரு அறை. ஒரு வினாடிக்குள் இன்டர்வெல் என்ற டைட்டில் மறைந்து படம் ஓட ஆரம்பித்தது.

'போட்டா போட்டுக்கோ' என்ற மன நிலையோடு கதவை திறக்க போனால், அங்குதான் இன்னும் சோதனை. இவனுங்க இப்படியெல்லாம் பண்ணுவானுங்கன்னு நினைச்சாய்ங்களோ என்னவோ, வெளியே பூட்டியிருந்தாய்ங்க. "ஹலோ, கதவ திறங்க" என்ற சாஃப்ட்டாக ஆரம்பித்த வார்த்தைகள், "கதவை திறங்கடா கம்னாட்டிகளா" என்று அலறும்படி ஆனது. ஆனால் எதற்கும் மசிவதாக இல்லை அவர்கள். இத்தனை சுதந்திர வேட்கையையும் உள்ளேயிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் அந்த கோவண ஹீரோ.

வேறு வழியில்லாமல் (இந்த முறை வேறு இடத்தில் அமர்ந்து) மிச்ச படத்தையும் பார்த்து முடித்தேன். வணக்கம் போட்டபின்தான் கதவை திறந்தார்கள். நம்பிக்கையோடு பிரஸ் தோழர்களுக்கு கை கொடுக்கவும் முன் வந்தார் கோவண ஹீரோ. அவர்தான் படத்தின் இயக்குனர் என்பதும் வெளியே வந்தபின்தான் தெரிந்தது. நம்பினால் நம்புங்கள், இதற்கு முன்பு யாரிடமும் எந்த பத்திரிகையாளர்களும் இப்படி நடந்து கொண்டதில்லை. அவரின் கையை, "விடுய்யா..." என்று ஓங்கி தட்டிவிட்டு வேக வேகமாக நடக்க ஆரம்பித்தோம் தியேட்டருக்கு வெளியே!

இன்று வரை அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை என்பது உங்களுக்கு கூடுதல் தகவல். எங்களுக்கு ஆறுதல் தகவல். இப்போது சொல்லுங்கள், முதல் பாராவில் நண்பர் சொன்னது சரியா?

18 comments:

ஹாலிவுட் பாலா said...

ஹா..ஹா. ஹா... நீங்க ரொம்ப நல்லவருங்க...! :-)

அறிவே தெய்வம் said...

தொடர்ந்து எழுதுங்கள்..
மனிதர்களில் பலவிதம் பற்றி
நகைச்சுவையாய் எழுதுகிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்

kindly remove word verification

Anonymous said...

இப்பவும் நிறைய படம் அப்படித்தானே...

என்ன... ஹீரோ கைய்ய தட்டி விட்டுட்டுப் போறதில்ல இப்ப. அந்த அளவு பக்குவமாயிடுச்சி நம்ம பேனா மன்னர்கள் மனசு!

-ஷங்கர்

முரளிகண்ணன் said...

அய்யோ பாவம். நாங்கள்ளாம் தப்பிச்சோம்

வண்ணத்துபூச்சியார் said...

உங்களது பலதரப்பட்ட சினிமா செய்திகளை பல இணைய தளங்களில் வாசித்துள்ளேன். வாழ்த்துகள்.

உங்க பிளாக்கிற்கு இது தான் முதல் முறை.

உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும். நிறை / குறை கூறவும்.

நன்றி.

நேரில் சந்திக்கவும் விருப்பம்.

R. said...

antha kathila pugaivitta nanbar naan illaye???????????????

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அந்தணன் ஸார்..

உங்களுடைய பதிவுகள் அனைத்துமே மிக சுவாரஸ்யமானவையாக உள்ளன.

தயவு செய்து தமிழ்மணம், தமிழ்வெளி இன்ன பிற திரட்டிகளில் இணைந்தீர்களானால் இன்னும் நிறைய பேரை உங்களுடைய படைப்புகள் சென்றடையும்.

இந்த Word Verification-ஐ தயவு செய்து எடுத்துவிடவும்..

anthanan said...

test

Anonymous said...

dgdfgdefgdsfg

Anonymous said...

abishek

superrrrrr!

vanni said...

semma tittle

வெடிகுண்டு வெங்கட் said...

பயந்தே போயிட்டேன். நான் கூட சமீபத்தில் Gaja - A Lovely Idiot என்ற படத்தை பார்த்து தொலைத்தேன், ஒரு வேளை இந்த படமோ என்று.

ஊர் சுற்றி said...

என்ன கொடுமை சார்!!!!!!

ஷண்முகப்ரியன் said...

வரிக்கு வரி சிரித்தேன்.நல்ல நகைச்சுவை.நன்றி அந்தணன்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அப்போ தெணர, தெணர படம் பார்த்துட்டு வந்தேங்கனு சொல்லுங்க ... :)

கிரி said...

//போட்டா போட்டுக்கோ' என்ற மன நிலையோடு கதவை திறக்க போனால், அங்குதான் இன்னும் சோதனை.//

:-)))))))

Rajan said...

i am not able to look at the key board properly. i have tears in my eyes. laughed uproariously at office.man, u made my day!