Saturday, May 2, 2009

விஜய் போட்ட வில்லங்க பிரியாணி


குழம்புல குரும்பாட்டை போட்டு, நரம்புலே கரகாட்டம் ஆட வைக்கிற பொன்னுசாமி, முனியாண்டி, அஞ்சப்பர் அண்ணனுங்களே அசந்து போற அளவுக்கு இருக்கும் விஜய் வீட்டு பிரியாணி! மஞ்சவாய்கான் பட்டியிலே இருந்து துண்டு பீடி புடிச்சுட்டு வர்ற சாதாரண ரசிகனா இருந்தாலும் சரி, மதராச பட்டணத்து மவராசனா இருந்தாலும் சரி, விஜய் வீட்டு பொட்டலத்திலே விசேஷமான அன்பிருக்கும். அதைவிட பிரமாதமா 'ருசி' இருக்கும்!

அப்பப்போ ஷோபா கல்யாண மண்டபத்தை 'கிராஸ்' பண்ணும்போது 'அறுபத்து மூவர்' திருவிழா மாதிரி, கோலாகல கூட்டம் முண்டியடிக்கும். மூலவரை பார்த்திட்டு வெளியே வரும்போது பிரசாதம் கிடைக்குமே, அதுமாதிரி விஜயை பார்த்திட்டு வெளியே வரும்போது பிரியாணி கிடைக்கும்! எஃக்கை முழுங்கிகிட்டே "இளைழ்ய தளழ்பழ்தி வாழ்ழ்ழ்க"ன்னு கோஷம் போடுற ரசிகன், லெக் பீசை கடிச்சிக்கிட்டே, "தலைவா...."ன்னு சாமியாடுவான். நல்லவேளையாக பக்கத்திலேயே தண்ணீ பாட்டிலை உடைச்சு தாகத்தை தீர்த்து ஆறுதல் படுத்துவாய்ங்க சீனியர் ஆபிசருங்க! ஐ மீன் சீனியர் ரசிகர் மன்ற பொறுப்பாளருங்க. மூணு மாசத்துக்கு ஒருமுறை இந்த ராட்சச ராணுவத்தை மேற்பார்வையிட்டுட்டு காரேரி விர்ர்ர்ராகிவிடுவாரு விஜய். வில்லாகி விடுவாருன்னு கூட மாத்தி படிங்க, தப்பில்லே!

போற வரும்போது ஓரக்கண்ணால இந்த உற்சவத்தை பார்த்தாலும், நின்னு பார்த்தா, "பிடிய்யா ஒரு பிரியாணி பொட்டலத்தை"ன்னு கொடுத்திட்டா என்ன பண்றது? அதனாலயே இண்டு இடுக்கிலே வண்டிய நுழைச்சு சர்ர்ர்ர்ருன்னு போயிடரது நம்ம வழக்கம். இடையிலே என்ன நடந்ததோ, "பிரியாணி திருவிழாவுக்கு வரியா நீ?" ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க 'பிரஸ்'சையும்! ஆனால் இதுல ரொம்ப ரொம்ப நாகரிகம் வெளிப்பட்டுச்சு.

ஒவ்வொரு முறை படம் ரிலீஸ் ஆகும்போதும், "விஜய் அழைக்கிறார்"னு போனில் கூவுவாரு அவரோட பிஆர்ஓ பி.டி.செல்வகுமார். வீட்டு மொட்டை மாடியில் தல வாழ இலை போட்டு குலை குலையா 'பந்தி'ரிக்கா விளையாட்டு நடக்கும்! ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வாங்கன்னு அழைப்பார் விஜய். இவ்வளவு பவ்யமா? இவ்வளவு அன்பான்னு திக்குமுக்காட வைப்பாரு. "இன்னொரு லெக் பீஸ் வச்சுக்கோங்க"ன்னு விஜயே கோழிக் காலோடு வரும்போது, உள் மனசு "கொக்கரக்கோ"ன்னு கூவும். அவரு பரிமாறுவதை அக்கம் பக்கத்து மாடியில் இருந்து வச்சக் கண் வாங்காம பார்க்கிற குடும்பஸ்தர்கள், வெளியே வரும்போது நம்மையும் விஜயை பார்ப்பது போலவே பார்ப்பார்கள். கொஞ்சம் கூச்சமாக கூட இருக்கும். (நல்லவேளையாக மேற்படி நாட்களில் ரசிகர்கள் திரளாதபடி பார்த்துக் கொள்வார்கள்)

சிக்கனையும் மட்டனையும் போட்டு சீராட்டினா, நாமும் பாராட்டிதானே ஆகணும்? ஆனாலும், சில நேரங்களில் குத்திக்காட்டும்போது கோவப்பட மாட்டார்கள் விஜயும் அவரது அப்பாவும். ஆனால் இந்த பிரியாணி திருவிழாவை புறக்கணித்த ஒரு நிருபர் 'மர்ம காய்ச்சல்' வந்து மாற்றலாகி போன சோகத்தைதான் இப்போது பார்க்க போகிறோம்.

'அறம் எனப்படுவது இல்வாழ்க்கை, அன்பு எனப்படுவது பிரியாணி' என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் அடங்கிப் போனது தமிழனின் வாழ்வு. ஒரு ஞாயிற்று கிழமை மதிய பொழுதில், செல்வகுமாரின் செல்போனிலிருந்து வந்தது நமக்கு 'கொக்கரக்கோ' சத்தம். அது ஒரு கிறிஸ்துமஸ் நேரம். "யாரும் சாப்பிட வேண்டாம். வந்துகிட்டே இருக்கேன்"னாரு செல்வகுமாரு. அடுத்தடுத்த அரை மணி நேரத்தில், எல்லா நிருபர்கள் வீட்டுக்கும் போனது சுட சுட பிரியாணி. 'நீங்கள் பெற்ற இன்பம் குடும்பமும் பெறுக' என்ற விஜயின் பெரிய மனசுதான் காரணம். கேரியரில் ஒரு மினி முனியாண்டி விலாசே வந்திருந்தது. ரசித்து ருசித்தவர்களும், ருசித்து ரசித்தவர்களும் குட்டி து£க்கத்தில் ஆழ்ந்திருக்க, நான் சொன்ன நிருபர் மட்டும் காத்திருந்து காத்திருந்து கண் சிவந்து போனார். வழி தெரியாமல் சுற்றிய பிரியாணி வள்ளல்கள், மாலை நாலு மணிக்குதான் அவர் வீட்டு கதவை தட்டினார்கள். கோபத்தில், "போங்கய்யா... நீங்களும் உங்க பிரியாணியும்" என்று சினந்தவர், கதவை 'படீர்' என்று சாத்தினார். அவ்வளவுதான். அடுத்த நான்காம் நாள் அவர் வேலை பார்த்த பத்திரிகையில் ஏதேதோ என்கொயரி.

இந்த புறக்கணிப்புதான் அவருக்கு பிரச்சனையானது. சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடந்தால் ருசி. 'டிஸ்மிஸ்' கிடந்தால்? கிடந்தது அவருக்கு!

இந்த டிஸ்மிஸ்சுக்கு காரணம் 'அவருதான்'னு கை காட்டுறாரு நிருபர். இல்லைன்னு மறுக்குது இன்னொரு டீம். நண்பர் இப்போ வேறொரு மாவட்டத்தில் பெரிய நாளிதழ் ஒன்றில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். போன வாரம் போன் பண்ணி, "ஊருக்கு வர்றேன். சிக்கன் பிரியாணி போடுறீயளா?" என்றேன்! "வில்லங்கத்தை ரயில்லே கூட்டிட்டு வருவீய போலிருக்கே"ன்னாரு. அந்த பதிலுக்குள்ளே இருந்தது ஆயிரமாயிரம் சோகம்!

8 comments:

Anonymous said...

che....ivlo kevalamanavara vijay. ithavida ajith evlo better. thannadakam, thannambikai. really great manusan ajith.

தீப்பெட்டி said...

ஏதோ உள்குத்தோட எழுதுன மாதிரி இருக்கே....

Unknown said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

Anonymous said...

vijay epala iadi comedy yana maritan .... to be honest i was a big fan of him ... but still i like him as a comedian

பிரபாகர் said...

Ippadiyellam senjum patamellem villu mathiri sar-nu Ooti porathu (Thiyettara vittu) konjam aachcharyamathan irukku...

Prabhagar...

டன்மானடமிழன் said...

///நீங்கள் பெற்ற இன்பம் குடும்பமும் பெறுக' என்ற விஜயின் பெரிய மனசுதான் காரணம்.///

விஜயின் பெரிய மனசு????????

விழுந்து விழுந்து சிரித்தோம்
வஞ்சபுகழ்ச்சியை கேள்விபட்டிருக்கேன்
ஆனா இது
வஞ்ச வஞ்ச வஞ்ச வஞ்ச புகழ்ச்சினா......

விஜயின் பெரிய பெரிய பெரிய.... மனசை பற்றி தெரியுனும்னா
சச்சின் பட அசிடெண்டு டைரக்டரிடம் கேட்டுபாருங்கள் சொல்லுவாங்க....

எனக்கு தெரிந்த
பார்த்தவங்க
பழகனவங்க
ப.......வங்க சொன்னாங்க
ஜோசப்புக்கு எல்லாமே சிறுசுங்கண்ணா...

நீரின்றி அமையாது உலகு
கவரின்றி எழுதாது பேனா!!

Prabhu said...

sema comedy.

aana anda reporter pava. idhelam oru mattera.
aduku poya resignu

Sridhar said...

"/சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடந்தால் ருசி. 'டிஸ்மிஸ்' கிடந்தால்?/"

ஏன் இந்த கொலைவெறி? செம உள்குத்து சார்