Wednesday, May 6, 2009

பாவனா கண்டுபிடிச்ச புரப்பல்லர் ஃபேன்!

இன்னைக்கு உலக சிரிப்பு தினமாம். வண்ணத்துப்பூச்சியார் சொன்னதா உதயசூரியன் சொன்னாரு. கொஞ்ச நாளாகவே இதையெல்லாம் கவனிக்க முடியாதபடி லெமூரியா கண்டத்திலே இருந்தோம் ரெண்டு பேரும்! (வீட்லே ஊருக்கு போயிருக்காங்கடோய்...)

சிரிக்கிற மாதிரி ஏதாவது சொல்லணுமேன்னு நினைச்சிட்டு இருக்கும்போதுதான் பாவனாவோட ஸ்டில்லை யதார்த்தமா பார்த்தேன். ஊரெல்லாம் 'கோல்கேட்' போட்டு பல்லு வெளக்குனா, பாவனா மட்டும் சொட்டு நீலம் போட்டு வாய் கொப்பளிக்கும் போல. "லைட்ஸ்ச பவுன்ஸ் பண்ணு"ன்னு கேமிராமேன் சொல்லும்போது, "கொஞ்சம் சிரிங்களேன் பாவனான்"னு சைடுலே கிச்சு கிச்சு மூட்டுவேன். ஏதோ ஒரு படம் எடுத்து நான் கண்ட பலன் அதுதான்! மை டியர் மக்களுகளா, அதுவரைக்கும்தான்யா நம்ம லிமிட்! அதுக்கு மேல யாரு லிமிட்டு?ன்னு கேட்டு, சந்தில சைக்கிள் ஓட்டாதீங்க. நம்மள பொறுத்தவரைக்கும் பொண்ணு தங்கம்!

அப்படியிருந்தும் ஒரு ஆளு திரும்ப திரும்ப ட்ரை பண்ணுனப்போ, 'போடாங்...'னு சொல்லிடுச்சு பொண்ணு. "நேத்து முழுக்க அந்த 'புரப்பல்லர்' போன் பண்ணிகிட்டே இருந்திச்சு தெரியுமா?"ன்னு சொல்லிட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்கும். (புரப்பல்லர்?-சினிமாவிலே புயல் அடிக்கும் சீன்களில் எல்லாம் இதை கொண்டுதான் காற்றடிக்க வைப்பார்கள். அதாவது பெரிய ஃபேன்) அவரு என்னோட 'பெரிய புரப்பல்லர்'னு சொல்லி கிண்டலடிக்கும் பாவ்ஸ். (சரி...சரி...)

படத்திலே இவரு கல்லு£ரி மாணவிங்கிறதால இவருக்கு பிரண்ட்ஸ்சா நடிக்க வைக்க நிறைய ரிச் கேர்ள்சை வரவழைச்சிருந்தோம். (கிட்டதட்ட 100 பேரு) அதுலே ஏதாவது ஒரு பட்சி சிக்காதான்னு உதவி ஒளிப்பதிவாளர் ஒருத்தருக்கு ஒரே ஏக்கம். நடிக்கும்போதே இதையும் 'நோட்' பண்ணியிருப்பாரு போல பாவனா. அந்த அசிஸ்டென்டோட பேரை இப்போதைக்கு மணான்னு வச்சுப்போம். (நிஜ பேரை சொன்னா வீட்லே வெள்ளாவி வச்சுர மாட்டாங்களா?) மதியம் மூணு மணி இருக்கும். கொஞ்சம் து£ரமா தள்ளி வந்து தன்னோட செல்போன்லேந்து மணாவுக்கு போன் போட்டுச்சு.

கேமிராமேன் பன்னீர்செல்வம், ஸ்ரீகாந்த், மற்றும் நான். எங்க மூணு பேருகிட்டேயும் "அவனை நான் சுத்தல்ல விடப்போறேன். கண்டுக்காதீங்க" என்று கூறிவிட்டு, எங்கள் கண்ணெதிரிலேயே டிராமாவ ஆரம்பிச்சுது. குரலை ஏக்கமா வச்சுக்கிட்டு, "நானும் எத்தனையோ படத்திலே நடிச்சிருக்கேன். ஆனா, உங்களை பார்த்ததும் எனக்கு என்னவோ பண்ணுது. எங்காவது போகலாமா? ஃப்ரியா பேசணுமே"ன்னு சொல்ல, இந்த நு£று பொண்ணுல எதுவா இருக்கும்ங்கிற சந்தேகத்திலேயே எல்லா பொண்ணுகளையும் பார்த்துகிட்டே லவ்வை வளர்க்க ஆரம்பிச்சாரு மணா. எங்கே பார்க்கலாம்? எப்போ பார்க்கலாம்? இந்த கூட்டத்திலே நீ யாரு? எங்கேயிருக்கே?ன்னு அடுக்கடுக்கா கேள்வி கேட்டு, படபடப்பா பார்வையை ஓட விட்டாரு.

"ஆங், அஸ்கு புஸ்கு... நீ என்னை பார்க்கணும்னா அவ்வளவு ஈசியா கிடைச்சிருவேனா? நீ நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு ஸ்பென்சர் பிளாசா வா. நான் உனக்காக காத்திருப்பேன்"னு சொல்லிட்டு போனை கட் பண்ணுச்சு பாவனா. "இப்போ அவனை பாருங்களேன். அந்த ரிச் கேள்ர்ஸ் ஏரியாவை விட்டு வரமாட்டான். நீங்க நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு உங்களோட வரணும்னு வேற இடத்துக்கு கூப்பிடுங்க. என்ன பண்ணுறான், பாப்போம்"னு சொல்லுச்சு.

அங்கிருந்தபடியே மணாவை தன் அருகில் அழைத்தார் பன்னீர்செல்வம். பக்கத்திலே பாவனாவும், நாங்களும் செம த்ரில்லோடு காத்திருக்க உரையாடலை ஆரம்பித்தார் கேமிராமேன். "தம்பி, இப்போ ஷ§ட்டிங்கை முடிச்சுட்டு சீக்கிரம் வீட்டுக்கு போயிரு. நாளைக்கு நமக்கு ஷ§ட்டிங் இல்லை. அதனால் காலையிலே பத்து மணிக்கு என் வீட்டுக்கு வந்திரு. நாம முக்கிய வேலையா வெளியே போகணும்"னு சொல்ல, "அது வந்து... நாளைக்... வந்து... பேமிலியோட வெளியே போறதா சொல்லியிருக்கேனே"ன்னு மணா சொல்ல, "என்னய்யா, முக்கியமான வேலைங்கிறேன். பேமிலி அது இதுங்கிறே. சரி, உன் வீட்டுக்கு போனை போடு நான் பேசுறேன்"னாரு பன்னீர்.

இவ்வளவு ஆழத்துக்கு பள்ளம் தோண்டிவிட்டு, கள்ளம் கபடம் இல்லாம கவனிச்சுட்டு இருந்திச்சு பாவ்ஸ். மணா மழுப்ப, பன்னீர் செல்வம் நெருக்க, ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பாவனா 'கெக்கேக்ககே'ன்னு சிரிக்க, லேசா அந்த குரலை உள்வாங்கிக்கிட்ட மணா, அட... இவ்வளவு நேரம் உசர ஊசலாட வச்சது நீங்கதானான்னு பார்க்க, எல்லாரும் சிரியோ சிரின்னு சிரிச்சோம்.

அப்புறம் படம் வெளி வந்து நான் மட்டும் சிரிப்பா சிரிச்சேன். அது தனிக்கதை! (நேரம் வரும்போது சொல்றேன்)

படக்குறிப்பு- நடுவாப்ல நிக்கிற அந்த கருப்பு சட்டைக்காரன் நானேதான்!

13 comments:

Sridhar said...

உங்க பதிவுக்கு நான் ஒரு புரப்பல்லர் சார். ஆனா புயலா இல்ல தென்றலா.

செந்தில்குமார் said...

படிச்சேன்... சிரிச்சேன்...

இந்த மாதிரி ஒருத்தனை சுத்தல்-ல விட்டு பாக்கறதுளையும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்யுது இல்ல ?

பீர் | Peer said...

:)

eeramsudum.blogspot.com said...

bhavanava neenga love pannaliya? enga antha probeller utta thane?

கிரி said...

ஃபிகர் கிடைக்காதவன் சாபம் பாவணாவ சும்மா விடாது ;-)

முரளிகண்ணன் said...

உங்க பதிவுகளுக்கும் நகைச்சுவையான நடைக்கும் நான் ஒரு புரப்பல்லர்

Raj said...

இந்த மாதிரி எவ்ளோ மேட்டர் வச்சுருக்கீங்க........தினம் ஒன்னு போட்டு தாக்கறீங்களே!!!!!!!!!

பட்டாம்பூச்சி said...

:)

Anonymous said...

Thaliva,

It's interesting to know that you are the producer of the move ESR. Hope that you write about the movie productions pain and fun soon.

butterfly Surya said...

பாவனா மட்டும் சொட்டு நீலம் போட்டு வாய் கொப்பளிக்கும் /////

ஏ யப்பா... என்ன வார்த்தை ஜாலம்.. பாவ்னா சிரிப்பு மிக மிக அழகு..

பதிவும் கலக்கல்.

தனிக்கதைக்காக காத்திருக்கிறோம்...

butterfly Surya said...

நன்றி... உலக சிரிப்பு தினம்... இல்ல்லைன்னா இந்த புரப்பல்லர் பதிவு கிடைச்சிருக்குமா..???

butterfly Surya said...

அப்புறம் படம் வெளி வந்து நான் மட்டும் சிரிப்பா சிரிச்சேன். அது தனிக்கதை /////////

அதுக்கு தான் கருப்பு சட்டையா சார்..????

நமிதா.. said...

அந்த பாவணா பொண்ணு உங்களையே குறு குறு னு பாக்குதே.. :)