ஈசிஆர் படத்திலே நீங்க பட்ட கஷ்டங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாமேன்னு பின்னு£ட்டம் போட்ட அந்த முகம் தெரியாத நண்பருக்கு என்னோட நன்றி. ஏன்னா காமெடி சேனல்கள் பெருகிற வரும் நேரத்தில், ஒரு 'அழுகாச்சி' சேனலுக்காக ரிமோட்டை அமுக்குகிற அவரது தைரியத்தை மெச்சுகிறேன். ஆனாலும் அண்ணாச்சி... நான் சொல்லப்போறது இன்னொரு தயாரிப்பாளரோட கஷ்டத்தை! நம்ம சங்கதியை கேட்கணும்னா நீங்க யாரோட வேட்டியையாவது நாலா கிழிச்சு நாலு துண்டா வச்சுக்கிறது நல்லது. துடைக்க வசதியா இருக்குமே!
பாதி ராத்திரியிலே முழிச்சிகிட்டு லைட்டை போட்டுட்டு பார்த்தா நாலைஞ்சு எறும்புங்க 'நைட் ஷிப்ட்' பார்த்திட்டு இருக்கும். அதிகபட்சமா அது தானிய போக்குவரத்தா இருக்கும். நான் செல்வகுமாரை பார்க்கும்போதெல்லாம், போன பிறவியிலே இந்தாளு எறும்பா இருந்திருப்பாரோன்னு தோணும். ஏன்னா எல்லா நேரத்திலும் பரபரப்பா ஓடிட்டே இருப்பாரு மனுஷன். பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் வாங்கி தருகிற ஏஜென்ட் வேலை இவருக்கு. அதிலே கிடைக்கிற கமிஷனை சேர்த்து வச்சிருந்தாரு. இவரு ஓடி ஓடி சேர்த்த பணத்தை கூடி கூடி கும்மியடிச்சாய்ங்க கோடம்பாக்கத்திலே. ஏன்னா இவருக்கும் படம் எடுக்கிற ஆசை வந்தது. பந்தா பரமசிவம்னு ஒரு படத்தை எடுத்தாரு. பூஜை போடுறதுக்கு முன்னாடிதான் பந்தா பரமசிவம். போட்ட நாளில் இருந்தே இவரு 'நொந்தா பரமசிவம்'
ஒரு நாள் இவரு ஏதோ வேலையா ஒரு தெரு வழியா போயிட்டு இருந்தாரு. அந்த தெருவில் ஷ¨ட்டிங்... வழியை அடைத்துக் கொண்டு கார்களும், கேரவேன்களும், பெட் ஃபோர்டுகளுமாக நிற்க, ஏதோ ரஜினி படம் எடுக்கிறாங்க போலிருக்கு. தயாரிப்பாளரை பார்த்து ஏதாவது விளம்பரம் கேட்கலாமேன்னு எட்டி பார்த்தாரு நம்மாளு. அடப்பாவி மனுஷா.... இது உன் படத்து ஷ§ட்டிங்டான்னு இமை கொட்டி சிரிச்சுதாம் இவரு கண்ணு ரெண்டும்! அடுத்தவன் காசிலே மஞ்ச தேய்ச்சு குளிச்சிட்டு அதிலே கொஞ்சத்தை எடுத்து ---ஞ்சிலே தடவி விட்ட கதையா, இவரை பார்த்து "வாங்க..."ன்னாரு வெற்றிலை வாயோடு டைரக்டர். தடுமாறி போயி நின்னாரு நம்ம தயாரிப்பாளர்.
ஏதுக்குய்யா இத்தனை வண்டிகள கொண்டாந்து நிறுத்தியிருக்£ங்க, இன்டீரியர் ஷ§ட்டிங்தானே, நாம ஒன்றும் ரேஸ் கீஸ் எடுக்கலையே?ன்னு கேட்க ஆசைதான். கேட்டா பேக்கப்புன்னு சொல்லிட்டு போயிட்டா என்ன பண்ணுறது? மார புடிச்சிகிட்டு வண்டிய உதைச்சவரு அப்படியே வீட்டுக்கு வந்து விழுந்தாராம். ஆனாலும் பிச்சு பீராஞ்சு அப்பப்போ ஷ§ட்டிங்கிற்கு பணத்தை கொடுத்து படத்தையே முடிச்சிட்டாரு. இனிமே டப்பிங் வேலைதான். இது என் படம். நானே உழைச்சு சம்பாதிச்ச காசிலே எடுத்தது. டப்பிங் எப்படி பண்ணுராங்கன்னு பார்ப்போம்ங்கிற ஆசையிலே டப்பிங் தியேட்டருக்கு போயிட்டாரு.
அதுக்கும் முன்னாலே படத்தோட டைரக்டர் யாருன்னு சொல்லிடுறேன். டி.பி.கஜேந்திரன்! எண்ணெய் சட்டிய குப்புற கவுத்து போட்டா எப்படியிருக்குமோ, அப்படியே இருப்பாரு மனுசன். பல குடும்ப கதைகளை எடுத்தவரு. எல்லாத்துக்கும் மேலே விசுவோட அசிஸ்டென்டா இருந்தவரு. செல்வகுமாரு போயிருந்த நேரத்தில் டைரக்டர் வரலே. வந்தவுடன்தான் வேலை ஆரம்பிக்கும். ஒவ்வொருத்தரும் பேசுறதை கேட்கணும். இன்னைக்கு ஒரு நாளாவது அலையுறதை விட்டுட்டு இங்கேயே இருக்கணும் என்றெல்லாம் ஆசைப்பட்டு செல்வகுமார் காத்திருக்க, சர்ருன்னு வந்து நின்னுது கார். கதவை திறந்து கொண்டு கிட்டதட்ட உருண்டபடியே வெளியே வந்தார் டி.பி.கஜேந்திரன். (யோவ் நின்னுகிட்டு பேசு. எதுக்கு உட்கார்ந்தே பேசுறேன்னு பார்த்திபன் கலாய்ப்பாரே, அதே ஸ்டைலில் இவரு உருண்டு வந்தார்)
வந்தவரை நாலு ஸ்டெப்பு முன்னாடி போய் இரு கரம் கூப்பி வரவேற்றார் செல்வகுமார். "ம்...ம்... இருக்கட்டும்" என்றபடியே உள்ளே போன டி.பி.ஜி, "ஏன்யா புரடக்ஷன், இன்னிக்கு என்னய்யா மெனு?" என்றார். "சார், இன்னிக்கு அமாவாசைங்கறதால...." புரடக்ஷன் மேனேஜர் லேசாக இழுக்க, கடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு, "....தால?" என்றார் கஜேந்திரன். "அமாவாசைங்கிறதால சைவம்தான் சார்!"
"அவ்வளவுதான். பந்து படீரென்று எகிற ஆரம்பித்தது. ஏன்யா, அமாவாசைன்னா எனக்கென்னா வந்திச்சு? மீனு கொழம்பு இல்லைன்னா எனக்கு சாப்பாடு எறங்காதுன்னு தெரியாதா ஒனக்கு. போய்யா நீங்களும், உங்க டப்பிங்"குன்னும் என்று சீறிவிட்டு காரேறி பறந்தே விட்டார். (அட, அவரு கோவிச்சுட்டு போன காருக்கும் சேர்த்துதான் வாடகையை அழுதிட்டு இருந்தாரு செல்வகுமாரு) என்னடா, டப்பிங் நடக்கும்னு ஆசையா வந்தா, இப்படி ஃபைட்டிங் நடந்திருச்சே என்று பதறிப்போன செல்வகுமார், "சார்... சார்..."னு பின்னாடியே ஓட, நிற்காமல் பறந்தது கார்.
இன்னைக்கு டப்பிங் நடக்கலே என்றாலும், தியேட்டர் வாடகையை தண்டமாக அழணும். டப்பிங் கலைஞர்களுக்கு பேட்டா கொடுக்கணும். இப்படி ஏகப்பட்ட சுமைகள் அழுத்த, இந்த நாளை வேஸ்ட் பண்ண வேணாம்னு நினைச்ச செல்வகுமாரு, "ஏன்யா... காடையோ கவுதாரியோ அவரு கேக்கறதை வாங்கி கொடுங்களேன்யா" என்று இந்த பக்கம் ஏசிவிட்டு அந்த பக்கம் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தார். டைரக்டர் வீட்டுக்குதான்.
"சார், எல்லாம் வாங்கிட்டு வரச்சொல்லிட்டேன். நீங்க அவசியம் வரணும்" பணத்தை படத்திலே போட்டுட்டு, பவ்யமாக நின்னார் செல்வகுமார். "ம், சரி... சரி... போங்க வர்றேன்"னு பெரிய மனசு பண்ணினார் டைரக்டர். இப்படி ரிலீஸ் வரைக்கும் செல்வகுமாரை படுக்க வச்சு உடுக்கை அடிச்ச டைரக்டர், இப்படத்தின் பத்திரிகையாளர் ஷோவில் பேசிய பேச்சு இருக்கே, ஆஸ்கார் விருது பர்மா பஜார்லே கிடைச்சா என்ன விலை கொடுத்தாவது வாங்கிக் கொடுக்கலாம் இவருக்கு.
"உங்க முன்னாடி நிக்கிற இந்த தயாரிப்பாளரு படத்தை ரிலீஸ் பண்றதுக்குள்ளே என்ன கஷ்டப்பட்டாருன்னு எனக்குதான் தெரியும். கொஞ்சம் அசந்திருந்தா நேத்து ராத்திரி தொங்கியிருப்பாரு. நல்லவேளை, அவங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம். உசிரோட இருக்காரு" என்று பேச, நாங்கள்ளாம் படத்திலே நடிச்ச பிரபுதான் இவ்வளவு கொடைச்சல் கொடுத்திட்டாரோன்னு நினைச்சோம். வெளியே வரும்போதுதான் பிஸ்மி சொன்னார். "தலைவா, கொஞ்சம் விசாரிங்க. எல்லா பிரச்சனைக்கும் இந்தாளுதான் காரணம்"
விசாரிச்சோம். தண்டோரா அடிச்சி தலைவலிய கொடுத்தவரும் இவரே, மண்டைய சுத்தி மருந்து தடவ சொன்னவரும் இவரேதானாம்! நாங்க தப்பா நினைச்சிட்டு இருந்த பிரபு கடைசி நேரத்திலே தனது சம்பளத்திலே ஐந்து லட்சத்தை விட்டு கொடுத்தாராம். பிறகு மறுபடியும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அந்த பணத்தை வேண்டாம் வேண்டாம்னு பிரபு வாங்க மறுத்தும் பிடிவாதமாக கொடுத்திட்டு வந்தாரு செல்வகுமாருங்குது 'வாழவந்தான் தோட்டத்து வரலாறு!'

10 comments:
கொஞ்சம் ஏமாந்தா குனிய வைச்சு கும்மி அடிச்சிடுவாஙக.
10 வருஷம் வாய்ப்புக்காக கஷ்டபட்ட 1 அண்பர் முதல் படத்தின் பூஜை அன்று ஆப்பிள் ஜுஸ் அவர் மனைவிக்கு கொடுக்கவில்லை என்று செய்த ரப்சரினால் தயாரிப்பாளர் ஒடினவர்தான் இன்று வரை காணவில்லை. படமும் பூஜையோடு நின்றது.
உக்காந்துகிட்டே நான் நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்ன்னு அவரு அடம்புடிச்சப்பவே நெனச்சேன்..... அப்ப பந்தா பரமசிவம்ங்க்றது அவரோட ரியல் லைப் ஸ்டோரியா.....?
சே! என்ன கொடுமைங்க, வேட்டிய எட்டு துண்டா மடிச்சும் பத்தல, அவ்ளோ ஈரம்!
அதெல்லாம் சரி, ஈசிஆர் மேட்டர் சொல்லாம எஸ்கேப் ஆயிட்டீங்கலே?
அண்ணா... பாவனா ஒருத்தர் பின்னாடி லோ லோன்னு காதல்ல சுத்தினதை சொல்லாமல் விட்டுடீங்களே?
ECR padam edutha anubavam eppidi anna......vivareeenggaaa.....plssss...............
சினிமா எடுத்து அழிந்தவர்கள் பலர் ம்ம்ம்
இந்த கதை எல்லாம் ஒன்றுமில்ல என்று நினைக்கிறேன்..சும்மா ஜுஜுபி
பல கதைய சொன்னா படிக்கிறவங்க ரத்த கண்ணீர் வடித்து விடுவாங்கன்னு நினைக்கிறேன் !!
முற்றிலும் உண்மை .ஜேப்பியார் ஒரு முறை சொன்னார் எல்லா தொழிலிலும் முதலாளி முன்னால் தொழிலாளி கை கட்டி நிப்பார் சினிமாவில் தொழிலாளி முன்னால் முதலாளி கை கட்டி குனிந்து நிற்க வேண்டும் என்னால் அது முடியாது என்று.
இந்த இன்வெஸ்ட்மெண்டுக்குதான்
"வந்தா மலை போனா ம$ரு"ன்னு சொல்லுவாங்க. தயாரிப்பாளர்களும் பாவப்பட்ட சனங்கதாம்பா.
பாவம் சார் செலவ குமார்...
நொந்தா பரமசிவம்... பந்தா டி.பி...
மீன் கொழம்பு சட்டியை விட இரண்டடி உயரமா இருந்துகிட்டு இந்த அட்டூழியமா? எல்லாம் நேரம்!
அண்ணாச்சி, ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், பதிலே வரல? நீங்க எடுக்கப் போற படத்தில ஹீரோ சான்ஸ் எல்லாம் கேக்க மாட்டேன், தைரியமா பேசுங்க!
Post a Comment