Sunday, May 10, 2009

பூமிகாவுக்கு 'மூட்' வந்திருச்சு...


தாட் பூட் தஞ்சாவூர்னு குதிச்சாலும் 'மூட்' போச்சுன்னா மொத்தமும் காலி! ஆணானப்பட்ட ரஜினியா இருந்தாலும் சரி, 'வீணானப்பட்ட' வையாபுரியா இருந்தாலும் சரி. 'மூட்' ரொம்ப முக்கியம்!

எனக்கு தெரிஞ்ச ஹீரோ ஒருத்தரு. ஒரே ஒரு படம்தான் நடிச்சாரு. (ஓடுச்சான்னு கேட்டு, வெந்த புண்ணுல வெங்காயத்தை பிழியாதீங்கய்யா...) அப்பா துட்டுள்ள பார்ட்டி. பிள்ளையின் நச்சரிப்பு தாங்காம நடிக்க அனுமதிச்சாரு. படம் எடுக்கிறதுக்காக பாதி பணத்தையும் அர்ப்பணிச்சாரு.

மனுசனுக்கும், பூனைக்கும் 'திங்க்' பண்ணுற விஷயத்திலே டிபரன்ஸ் இருந்தாலும், 'திங்கிற' விஷயத்திலே உமிழ்நீர் ஒன்ணுதானே? நம்ம ஹீரோ நடமாடுற இடமெல்லாம் ஒரே சுடிதார் சுண்டெலிகள்! மசால் வடை மணத்திலே 'குஷால்' ஆனார் ஹீரோ! ஃபுளோர் உள்ளே போனாலே, நகத்தை கடிச்சு துப்புறதும், நாக்கை சுழற்றி சப்புறதுமா ஒரே பேஜாரு.

டயலாக்கை சொல்லி கொடுத்தாலும், நாக்கு வரைக்கும் வந்து 'லாக்' ஆகி நின்னுது வார்த்தைகள். அதுவும் ஹீரோயின் தன் பக்கத்திலே வந்தாலே, படபடன்னு ஆடுச்சு பார்ட்டி! து£ரத்திலே இருந்து எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்த அப்பா சரியா யூகிச்சிட்டாரு. மாட்டுக்கு தண்ணி வைச்சா 'ஹம்ம்ம்ஆ...' சத்தம் குறையலாம்! "ஒரு வாரம் டைம் குடுங்க. பையன் சரியாயிடுவான்"னு சொல்லி ஷ§ட்டிங்கையே தள்ளி வைச்சாரு. (ச்சும்மாவா? பாதி பணம் இவருதாச்சே?)

பையனை கூப்பிட்டு, ஜாலியா 'பாங்காக்' போயிட்டு வாடான்னு அனுப்பிச்சாரு. கைநிறைய அமெரிக்கா டாலரையும் கொடுத்து, கூடவே துணைக்கு அவனோட ஃபிரண்டையும் அனுப்பி வைச்சாரு. கிளம்பும்போது பையன்ங்கிட்ட "ஜாக்ரதையா இருடா. முக்கியமான நேரத்திலே கந்தசஷ்டி கவசத்தை மறக்காதே"ன்னாரு. அவரு 'கவசத்தை'ன்னு அழுத்தி சொல்லும்போதே பையன் புரிஞ்சுகிட்டான். "சரிப்பா"ன்னு வெட்கப்பட்டுக் கொண்டே ஜிப்பை இழுத்து மூடுனான். (சூட்கேசோட ஜிப்பைன்னு சொல்ல வந்தேன்)

ஒரே வாரம்தான். திரும்பி வந்தபோது அவன் அவனா இல்லை. வேற ஆளா இருந்தான். சுண்டெலியும் தெரியலே, மசால் வடை மணத்தையும் மதிக்கலே. 'த்ரி புறமும்' நின்ன திரிபுர சுந்தரிங்க யாரும் அவன் கண்ணுக்கு படலே. டயலாக்கை கேட்டமா? நடிப்பை பிழிஞ்சமான்னு மொத்த படத்தையும் 28 நாளில் முடிச்சாங்க. எல்லாம் ஹீரோவோட டெடிக்கேஷன். "எப்பிடி சார் இதெல்லாம்?னு டைரக்டர் கேட்டப்போ, அப்பா சிரிச்சாரு ஒரு சிரிப்பு. அந்த சிரிப்புக்குள்ளே செலவான டாலரும், பலமான மேட்டரும் இருந்திச்சு...!

மூட் விஷயத்திலே இன்னொரு சம்பவம்! சிரிச்சாலும், அழுதாலும் ஒரே மாதிரி இருக்கிற பூமிகாதான் அந்த படத்தின் ஹீரோயின். க்ளைமாக்ஸ் எடுத்திட்டு இருந்தாங்க. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன். கண்ணீரும் கம்பலையுமா பூமிகா ரயில்லே ஏறி போகணும். ஜன்னல் வழியா ராதிகாவும், ரகுவரனும் பூமிகாவிடம் சில டயலாக்குகள் பேசணும். அதுக்கு அழுதுகிட்டே அந்த பொண்ணு சில பதில்கள சொல்லணும்.

சிட்டிக்குள்ளே இருக்கிற ரயில் நிலையத்திலே ஷ§ட்டிங் எடுக்க பர்மிஷன் கிடைக்கலே. ரொம்ப பாடுபட்டு காட்டாங்குளத்து£ர் ரயில்வே ஸ்டேஷன்லே பர்மிஷன் வாங்கியிருந்தாங்க. இது மாதிரி பொதுமக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்பு நடத்தனும்னா, இரவு பத்து மணிக்கு மேலேதான் பர்மிஷன் கொடுக்கறது ரயில்வேயின் வழக்கம். ஏன்னா பொதுமக்களுக்கு இடையூறு குறையுமே?

கேமிரா வைக்கிறது, லைட்ஸ் அரெஞ்ச் பண்ணுறதுன்னு ஒரு வழியா பனிரெண்டு மணிக்கு நடிக்க ஆரம்பிச்சாங்க. லைட்ஸ்.... கேமிரா... ஆக்ஷன்.... கிளாப் கட்டைய மூக்குக்கு நாலு சென்ட்டி மீட்டர் முன்னாடி வச்சு து£க்கம் கலையுற மாதிரி ஓங்கி அடிச்சிட்டு ஒதுங்கிக்கிட்டாரு உதவி இயக்குனர். ராதிகாவும் ரகுவரனும் உருக்கமாக பேச ஆரம்பிச்சாங்க. எல்லாம் சரியாதான் போயிட்டு இருந்திச்சு. கண்ணீரோடு பதில் சொல்ல வேண்டிய பூமிகா, டயலாக்கை விட்டுட்டு "கெக்கெக்கேன்..."னு சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிச்சுது. "கட்... கட்..." பதறிப்போன டைரக்டர் ஓடிவந்து "என்னாச்சு என்னாச்சு?"ன்னாரு பூமிகாவிடம்.

பதிலே சொல்ல முடியாம சிரிச்சிட்டு இருந்த பூமிகா, "ஸாரி சார். நேத்து ஒரு மேட்டர். அது இப்போ ஞாபகத்துக்கு வந்திருச்சு. ம்... டேக் போகலாம்"னு சொல்லிட்டு, கண்ணுல கிளிசரின ஊத்திகிட்டு ரெடியாச்சு. "லைட்ஸ்... கேமிரா... ஆக்ஷன்..." ரகுவரனும் ராதிகாவும் உருக்கமாக பேச ஆரம்பிக்கும்போதே மறுபடியும் "கெக்கெக்க்கே....!" பூமிகாதான். கொஞ்சம் பெரிய ஹீரோயின். தெலுங்குல முக்கியமான இடத்திலே இருந்த நேரம் வேற. எதையாவது சொல்லி கோவிச்சுட்டு கிளம்பிட்டா என்னாவறது? பக்குவமா பக்கத்திலே வந்த டைரக்டர், "நீங்க வேணா கேரவேன்லே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வர்றீங்களா?"ன்னாரு பரிதாபமாக! என்ன நினைச்சுதோ, "இந்த முறை சரியா பேசிடுறேன்"னுச்சு பூமிகா.

மறுபடியும் நடந்ததே நடந்திச்சு. கரெக்டா தனது முறை வரும்போது சிரிக்க ஆரம்பிச்சுது பொண்ணு. அப்புறம் என்ன நினைச்சுதோ? "சார், எனக்கு மூட் இல்லே. இன்னொரு நாளு எடுத்துக்கலாமேன்"னுது ரொம்ப சாதாரணமாக. பர்மிஷன் வாங்கிய கஷ்டமோ, தயாரிப்பாளர் இந்த ஒரு நாளுக்காக செலவு செய்த தொகையோ, அதுக்கெங்கே தெரியப்போவுது? ரொம்ப கவலையோடு "சரி"ன்னு சொன்ன டைரக்டர், பூமிகாவை அனுப்பிட்டு ரகுவரன், ராதிகா சம்பந்தப்பட்ட சீன்களையும், குளோஸ் அப்புகளையும் அங்கேயே வைச்சு எடுத்துட்டு சென்னைக்கு கிளம்பினாரு.

பிறகு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ரயில்வே ஸ்டேஷன் செட் ஒன்றை போட்டார் தயாரிப்பாளர். (நல்லாவே தாங்குற கை என்பதால் பிரச்சனையில்லை) அதுவும் காட்டாங்குளத்து£ர் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்த காட்சிகளோடு ஒப்பிடணும் என்பதால், அதே மாதிரி செட் போட்டார்கள். ஒரு ரயில் பெட்டியையும் அப்படியே தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்கள். "கடவுளே, நல்ல மூட்லே நடிக்கணும் அந்த பொண்ணு"ன்னு வேண்டிக் கொண்டே "ஆக்ஷன்..." சொன்னார் டைரக்டர். எந்த கொல சாமி புண்ணியமோ, அதிக டென்ஷன் இல்லாமல் அந்த காட்சி முடிந்தது.

படம் ரிலீஸ் ஆனது. சூப்பர் ஹிட்!

8 comments:

பாசகி said...

//...சிரிச்சாலும், அழுதாலும் ஒரே மாதிரி இருக்கிற பூமிகா.../

என்னோட ஆல்டைம் ஃபேவரைட் 'ஆப்பிள் பெண்ணை' கிண்டல் பண்ணிதை வன்மையா கண்டிச்சாலும், கிசு கிசு நல்லாருந்துச்சுன்னா....

Sridhar said...

/ தாட் பூட் தஞ்சாவூர்னு குதிச்சாலும் 'மூட்' போச்சுன்னா மொத்தமும் காலி!/

இதில் எந்த உள்குத்தும் இல்லை என்று நம்புகிறேன்.

/ மனுசனுக்கும், பூனைக்கும் 'திங்க்' பண்ணுற விஷயத்திலே டிபரன்ஸ் இருந்தாலும், 'திங்கிற' விஷயத்திலே உமிழ்நீர் ஒன்ணுதானே?/

எப்படி இது? ரூம் போட்டு யோசிப்பங்களோ? :)

எம்.பி.உதயசூரியன் said...

மனுசனுக்கும், பூனைக்கும் 'திங்க்' பண்ணுற விஷயத்திலே டிபரன்ஸ் இருந்தாலும், 'திங்கிற' விஷயத்திலே உமிழ்நீர் ஒன்ணுதானே?/

எப்படி இப்படி சுரக்குதுண்னா!?

Anonymous said...

இலங்கையில் ஒரே இரவில் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலி.
http://www.ponmaalai.com/2009/05/2000.html

Guru said...

அண்ணே, பூமிகாவ விடுங்க. அந்த ஹீரோ உங்க ஹீரோ தான... சில பேரை நடிக்க வைக்கறதுக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு.. நல்ல அப்பா .. நல்ல பையன். உங்க விஷயமெல்லாம் ரொம்ப சூப்பரா இருக்குன்னே.. உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

உண்மை விளம்பி said...

மீனாவுக்கு கல்யாணமே ஏதாவது ஸ்பெஷல் பதிவு போடுங்க தலைவா.

butterfly Surya said...

வழக்கப்படி கலக்க்லோ கலக்க்ல்...

சூப்பர் சார்...

sowri said...

The flow and usage of words are just amazing!:) ( i don't know.. how to type in tamil .. read as if vijay's dialogue in vasigara)