Wednesday, May 13, 2009

மீனாவின் 'இடை' தேர்தல்!


நான் சந்திச்ச அநேக நடிகைகளுக்கு 'குரலு மேல உரல' போட்டா மாதிரி 'பயங்கர' வாய்ஸ்! பல நடிகைகங்க அண்டங்காக்கா கொண்டக்காரிகளா இல்லேன்னாலும், அண்டங்காக்கா தொண்டக்காரிகளா இருந்தாங்க! இப்படிப்பட்ட சிம்மக்குரலிகளிடம் பேட்டியெடுக்க போனில் அப்பாயின்ட்மென்ட் வாங்கும்போது அது நிஜ 'அப்பா'யின்மென்ட் ஆகி, நான் டிஸ் அப்பாயின்மென்ட் ஆன கதையெல்லாம் உண்டு. எதிர்முனை 'ஹலோ'விடம் ரொம்ப கேஷ§வலா, "சார் உங்க பொண்ணை கொஞ்சம் கூப்பிடுங்களேன்"னு சொல்லுவேன். "பொண்ணுதான் பேசுறேன். சொல்லுங்க"ன்னு கேட்கிற பாக்கியம், இந்த பேனாக்காரனுக்கு மட்டுமே வாய்ச்ச பெருத்த அசௌகர்யம்.

இவங்களுக்கு மத்தியிலே இவரை மட்டும்தான் இப்படி கேட்க தோணும். "நடிகை மீனா, உங்க குரலென்ன நந்தவனத் தேனா?"

ரஜினி அங்க்கிள்னு கூப்பிட்டுகிட்டே ஓடிவர்ற அந்த குழந்தை மீனா, உருண்டு திரண்டு ஊரையே மயங்க வைச்சப்போவும் அதே மழலைக் குரல்தான். கண்ணை மூடிட்டு குரலை மட்டும் கேட்டா, இப்பவும் படுக்கையிலே 'மூச்சா' போவாங்களோன்னு சந்தேகம் வரும்ன்னா பாருங்களேன்! (ஓவராயிருச்சோ? விடுங்க பார்த்துக்கலாம்...)

இடைத்தேர்தல் நடந்தா மொத்த ஜனங்களின் பார்வையும் அந்த ஒரு தொகுதியிலேயே இருக்குமே? அப்படி மொத்த சினிமாக்காரர்களின் பார்வையும் மீனாவின் 'இடை' தேர்தலில் குவிஞ்சு கிடந்த நேரம் அது. ஒருபக்கம் பார்த்திபன் கவிதை எழுதுறாரு. 'மீனே கண்ணா? கண்ணே மீனா?' அப்பிடின்னு! இன்னொரு பக்கம் 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு'ன்னு மீனாவ வர்ணிச்சு எழுதிய சினிமா பாட்டை முன்னணி டைரக்டர் ஒருத்தரு தினமும் திருக்குறள் மாதிரி ஒப்பிக்கிறாரு. "ஹே, அது... வந்து... மீனா... என்னத்த சொல்றது... அவங்க..."ன்னு கார்த்திக் கடலை முட்டாயி மெல்லுராரு. சொன்னவன் பாதி பேரு. சொல்லாதவன் மீதி பேருன்னு எல்லாரையும் சேதுவாக்கிட்டு, அழகிய அலையா மீனா உலா வந்த நேரத்திலேதான் நான் அவங்களை பார்க்க போயிருந்தேன்.

இங்க் பில்லர்லே இங்கிலீஷை நிரப்பி, அதிலே ரெண்டு சொட்டை தமிழ் குடுவையிலே விட்டு, கலக்கி கலக்கி மீனா பேசுனதிலே, பேனாவ பிரிச்சு குறிப்பெடுக்கவும் மறந்து போச்சு எனக்கு. அவரு மேல ஒரு டைரக்டரு பிரியமா இருக்கறதாகவும், இரண்டு பொண்ணுக்கு அப்பாவான அவரு, இவரு நெனப்புல வீட்டுக்கே கூட போகாம ஆபிஸ்லேயே து£ங்குறதாவும் கேள்விப்பட்டதை மீனாட்ட கேட்டா, "ஐயோ பாவம்"னு சொல்லிட்டு "அப்பிடியா"ன்னும் கேட்டுச்சு.

முன்னணி வார இதழ்லே இவரையும், அவரையும் இணைச்சு வர்ற கிசுகிசுவை (அதுவும் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவ...) படிச்சீங்களான்னு கேட்டுட்டு அவரு வாயையே பார்த்தேன். "படிச்சேன். ஏன்தான் இப்படி எழுதறாங்களோ? அதிலே கொஞ்சம் கூட உண்மையில்லே தெரியுமா?"ன்னுச்சு. "உண்மையில்லேங்கறது எனக்கும் தெரியும்"னு நான் சொன்னதும், படக்குன்னு எழுந்து உட்கார்ந்த மீனா, "அப்புறம் ஏன் எழுதுறாங்க? நீங்களாவது சொல்லுங்களேன்"னுச்சு அப்பாவியாக.

நான் சொன்ன உண்மையை நெசமாவே தெரியாதது மாதிரி கேட்டுச்சா, அல்லது தெரிஞ்சே நடிச்சுதாங்கிறது மீனாவுக்கே வெளிச்சம். "அந்த பத்திரிகை ரிப்போர்ட்டரை ஒரு நாளு கேட்டேன். இப்படி எழுதறீங்களே, அதெல்லாம் நெசந்தானா?"ன்னு. "அது பெரிய இம்சை தம்பி. அத எதுக்கு இப்போ கேக்கிறீங்க"ன்னு ஒரு பதில சொல்லிட்டு எஸ்கேப் ஆக பார்த்தாரு. 'செல்லமா' அவரு 'மீசையை' பிடிச்சு இழுத்து கேட்டப்போ, அவரு சொன்னதுதான் இது"ன்னு நான் ஒரு விஷயம் சொன்னேன். அதை ரொம்ப அதிர்ச்சியோட கேட்டுச்சு மீனா.

"தம்பி, அவங்களுக்குள்ளே லவ்வு இருக்கா, இல்லையான்னே தெரியலே. ஆனா அந்த பையன்தான், 'அண்ணே... எங்களை பற்றி அடிக்கடி கிசுகிசு எழுதுங்கண்ணே'ன்னு கேட்டுகிட்டே இருக்காரு. ஒரு வேளை ஒன் சைடு லவ்வா இருக்கும் போலிருக்கு. நாம இப்படி போட, போட, அது மனசுல ஏதாவது ஆச வருமான்னு பார்க்கிறாரு போலிருக்கு. நமக்கென்ன, ஒரு செய்தியாச்சுன்னு போயிட்டு இருக்கு அந்த கிசுகிசு"ன்னாரு.

இத அப்பிடியே மீனாவிடம் நான் போட்டுக் கொடுக்க (இதுதான் சரியான வார்த்தையா இருக்கும்னு நெனக்கிறேன்) கொஞ்சம் அதிர்ச்சிதான் அந்த நிலா முகத்திலே. "அப்பிடியா சார். நெசமா அப்பிடி சொன்னாரா? நான் அந்த டைரக்டரையே நேரா கேக்குறேன். இத சும்மா விட மாட்டேன்"னுச்சு.

அதுக்கு பிறகு நேருக்கு நேரா பேசுனாங்களா? கணக்கை நேராக்கிக்கிட்டாங்களா?ன்னு எனக்கு தெரியாது. காலம் வேகமா ஓடியதில் மீனாவுக்கு முப்பத்தியாறு வயசாயிருச்சு. வித்யாசாகர்னு ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியரை கல்யாணம் செய்து கொள்ளப் போறதாகவும், அவரு மீனாவோட சொத்துக்கு ஆசை படாதவராகவும் இருக்கறதா சொன்னாங்க.

மீனான்னு ஒரு மிகப் பெரிய சொத்து கிடைக்கும்போது, மத்ததெல்லாம் பம்மாத்துங்கிறதுதான் என்னோட அபிப்ராயம். வேணும்னா அந்த புதுமாப்பிள்ளை கோடம்பாக்கத்திலே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி பார்க்கட்டுமே?

18 comments:

Unknown said...

I'm the First.

Unknown said...

மீனா பற்றி சிறு குறிப்பு வரைந்ததற்கு நன்றி. "பெரு குறிப்பு" ஒன்றும் எதிர்பார்கிறேன்.

முரளிகண்ணன் said...

வார்த்தை விளையாட்டுன்னா இதுதானா?

கலக்கல் நடை.

எம்.பி.உதயசூரியன் said...

அண்ணா..கலக்கிட்டிங்க!
மேதைகள் ஒண்ணாவே சிந்திப்பாங்கன்னு சொல்லுவேனே கேட்டிங்களா?
இப்போ பாருங்க..நானும்
மீனா மேட்டர்தான்!

எம்.பி.உதயசூரியன் said...
This comment has been removed by the author.
Sridhar said...

// நான் சந்திச்ச அநேக நடிகைகளுக்கு 'குரலு மேல உரல' போட்டா மாதிரி 'பயங்கர' வாய்ஸ் //

’குரலு உரல வாய்ஸ்’ ஒன்னும் உள்குத்து இல்லயே.

//மீனாவிடம் நான் போட்டுக் கொடுக்க//

ஆண்பாவம் சும்மா விடாது.

//புதுமாப்பிள்ளை கோடம்பாக்கத்திலே ஒரு கருத்துக் கணிப்பு //

எதுக்கு?????????????

உண்மை said...

//புதுமாப்பிள்ளை கோடம்பாக்கத்திலே ஒரு கருத்துக் கணிப்பு //

(தேக்கு)மரம் நட்டவர்கிட கேட்டா போதுமே !

செந்தில்குமார் said...

//ஒருபக்கம் பார்த்திபன் கவிதை எழுதுறாரு. 'மீனே கண்ணா? கண்ணே மீனா?' அப்பிடின்னு! //

தல.. எப்படி இதெல்லாம் ?? பார்த்திபன் ஒரு காலத்துல சொல்லி இருந்தாலும், அதே ஞாபகம் வெச்சு 'நச்சு'-னு போடற ஸ்டைல்.. கலக்கறீங்க போங்க..

butterfly Surya said...

பார்த்திபன் கவிதை எழுத பிரியப்படாத “புத்தகம்” எது தலைவா..??

புது புத்தகபிரியராச்சே..??

விரைவில் ஒரு பதிவை போடுங்க...

இதுவும் வழக்கம் போல கல கல...

அபாரம்....

Tech Shankar said...

வித்யாசாகர் பெங்களூரில் மீனாவுக்காக ஒரு வீடு வாங்கிட்டாராம்..

Bhuvanesh said...

அந்த டைரக்டர் க்கு ஒரு க்ளு கொடுத்திருக்கலாம்..

//மீனே கண்ணா? கண்ணே மீனா?' //

"கண்ணே மீனா
உன் கண்ணே மீனா?? " னு படுச்ச மாதிரி ஞாபகம்..

sowri said...

Vote potachu!

கலையரசன் said...

ஏன்ணே! சுருதி குறையரப்புல இருக்கு?
பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com

Unknown said...

மீனாப்பொன்னு ! மீனாப்பொன்னு ! ஆணியில் வாங்கப்போறா தாலி ஒன்னு !!

அமர பாரதி said...

என்ன இன்று மீனா ஸ்பெஷலா? உதயசூரியனும் மீனா பத்தியே எழுதியிருக்காரு. ஆனாலும் ஸ்டில்ஸ் அழகு.

அன்புச்செல்வன் said...

//அன்புச்செல்வன், நம்ம ஏரியாவுக்கு வராம அண்ணாச்சிக்கு பின்னு£ட்டமா? ரொம்ப கோவமா இருக்கேன்!

அந்தணன்..//

வந்துட்டோம்ல... ரெண்டு ஏரியாவுலேயும் மீனாவைப் பத்தி பதிவு போட்டிருந்ததால் சின்ன கன்ப்யூஷன் அண்ணாச்சி.கோவப்படாதீங்க...

மணல்கயிறு said...

ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாங்கறது கஷ்டமா இருக்கு. இப்ப எல்லா சினிமாக்காரங்களுமே எல்லாமே ரெண்டு ரெண்டு வெச்சுக்கிறாங்க.

இன்னொரு க்ளூ கொடுத்தா நல்லா இருக்கும்.

இப்படி கொஞ்சிக் கொஞ்சி பேசறியே மீனா..உன் குரலென்ன நந்தவனத் தேனா..நீ பேசுறத பார்த்து எழுதவும் மறக்குது எங்க அந்தணன் பேனா. தேவையில்லாம உன்ன வெச்சு கிசுகிசு செய்யறானே..அந்த டைரக்டர் ஒரு மேனா..மீனா மீனா

அண்ணே வெளுத்து வாங்கறீங்க நடையில..

Jayakumar Vellaiyan said...

தங்களின் எழுத்து நடை அழகு, மீனா ஸ்டில்ஸ் போலவே..