Sunday, May 17, 2009

பிரகாஷ்ராஜின் ''ச்செல்லங்கள்...''


"ச்செல்ல்ல்ல்ல்ல்ல்லோம்..., நான் அப்பிடி சொல்லலையே செல்ல்ல்ல்ல்லோல்ம்"னு நிருபர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பிரகாஷ்ராஜ் பதில் சொன்னப்போ, புதுசா சினிமா ரிப்போர்ட்டிங்குக்கு 'ஷிப்ட்' ஆகி வந்திருந்த ஒரு அரசியல் நிருபருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருச்சு. பிரஸ்மீட் முடிஞ்சதும், "என்னங்க இந்தாளு, ஒரு ரிப்போர்ட்டரை ச்செல்லம்ன்றாரு. இவங்களும் சும்மாயிருக்காய்ங்க. ஒன்னுமே புரியலேயே?"ன்னாரு.

"இங்கே எல்லாமே அப்படிதான். "என்னா தலைவா? நேத்தெல்லாம் து£க்கமே இல்லை போலிருக்கு, கண்ணெல்லாம் ரெட்டா இருக்கு? அவுட்டோர்லே போய் இன்டோர் கேம் ஆடிட்டீங்களா?"ன்னு கேஷ¨வலா பொடி மட்டைய மூக்குக்கு நேரா நீட்டி 'தும்ம' வைப்பாய்ங்க நம்ம ரிப்போர்ட்டருங்க. பெரிசா கண்டுக்க மாட்டாய்ங்க ஹீரோக்களும். அதுக்கு பதிலா இப்படி கூட்டத்திலே போட்டு குமுறும்போது நம்மாளுகளும் திருப்பி கண்டுக்க மாட்டாய்ங்க. இது ஒரு மாதிரி உலகம்ங்க"ன்னு சொல்லி புரிய வெச்சேன்.

பூஞ்சிட்டு கன்னங்களேன்னு ஓடிவந்து, பொன் வண்ண கிண்ணங்களை பரப்பி வைக்கிற அநேக ஹீரோக்கள், வளர்ந்தப்புறம், "போங்கடாங்"னு போறது சினிமாவிலேதான்!

டூயட்னு பேரு போட்ட டாடா சீராவிலே, 'சீசாவை' நிரப்பிக்கிட்டு ரிப்போர்ட்டருங்களோட ரூமுக்கே வந்து 'தண்ணீரா' அன்பு செலுத்துற பிரகாஷ்ல ஆரம்பிச்சு, "ஹேய்..."னு வினாடியிலே கைகுலுக்கி வேற பக்கம் திரும்பிகிட்டு 'வென்னீரா' வெறுப்பு காட்டுற பிரகாஷ் வரைக்கும் பார்த்துகிட்டேதான் இருக்கேன்.

பிரகாஷ்ராஜ் வில்லனா? ஹீரோவா? குணச்சித்திர நடிகரா? காமெடியனா?ன்னு கேட்டா, எல்லாந்தான்னு சொல்லுவான் ரசிகன். பக்கத்திலே இருந்து பார்க்கிற எங்களை கேட்டாலும் "புரியலையே எசமான்"னுதான் சொல்லுவோம்.

போன வாரம் குடும்ப நல கோர்ட்டுக்கு வந்திருந்தாரு பிரகாஷ்ராஜ். அதுவும் தனது 'குடும்பத்தோட(!?) எல்லாம் விவாகரத்துக்காகதான். "ச்செல்லோம்"னு எத்தனை தடவ பொண்டாட்டிய கூப்பிட்டிருப்பாரு? அத விடுங்க, பாசத்தை பாக்கெட்ல அடைச்சுட்டு வந்ததை கண்ணால பார்த்து, கண்ணு வச்சவன் நானு. டைரக்டர் பாலா கல்யாணத்துக்கு மதுரைக்கு வந்திருந்த பிரகாஷ்ராஜ், "வாங்கடா அம்மா மெஸ்சுக்கு போகலாம்"னு தரணியையும், ஸ்ரீகாந்தையும் கூட்டிட்டு கௌம்புனாரு. கூடவே நானும்! (அழைக்கப்பட்ட விருந்தாளியாகதான்!)

மதுரையிலே கும்பிடுறதுக்கு மீனாட்சின்னா, கொட்டிக்கறதுக்கு அம்மா! வறுத்து வச்ச மட்டனையும், வாட்டி வச்ச சிக்கனையும் போட்டோ எடுத்து மாட்டியிருப்பாய்ங்க. கூடவே, தமிழே உணவுன்னு வாழுர வைரமுத்துவோட போட்டோவும், கிராமமே க்ளாஸ்னு தமிலிஷ்லே பேசுற பாரதிராஜாவோட போட்டோவும் மாட்டியிருப்பாய்ங்க. இவங்க மட்டுமில்லே, ஒட்டுமொத்த கோலிவுட்டும் அங்கதான் இருக்கும். போட்டோவிலே பின்னாடி இவங்களும், முன்னாடி மூணு அடி நீள இலையும் இருக்கிற மாதிரியே எடுத்திருப்பாய்ங்க எல்லா போட்டோவையும். தமிழ்சினிமாவிலே ரொம்ப பேரு இங்கே போயி நாக்கை நனைச்சவங்கதான்! அப்படிப்பட்ட அம்மாவிலே பறக்கிறதையும், பாயறதையும் பறந்து பறந்து சாப்பிட்டு முடிச்சிட்டு, மறக்காம பிரியாணி பார்சல் வாங்கிக்கிட்டாரு பிரகாஷ்ராஜ். "ச்செல்லத்துக்கு பிடிக்கும்"னு அவரு சொன்னது அவரோட லலிதகுமாரிய! சூடு ஆறுவதற்குள்ளே ஃபிளைட் புடுச்சு சென்னைக்கு ஓடி போனப்போ என் கண்ணுக்கு தெரிஞ்ச பிரகாஷ்ராஜை ஒரு கேரக்டரா பார்த்தேன்.

ஒரு தடவ பேட்டிக்காக வீட்டுக்கு போயிட்டேன். தரையிலே உட்காந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். காலே மரத்துப் போச்சு. முடிச்சுட்டு எழும்போது 'ஸ்லிப்' ஆயிருச்சு காலு. அவ்வளவுதான், பாஞ்சு பிடிச்சுகிட்ட பிரகாஷ், "கொஞ்சம் கால நனைங்க. சரியாயிடும்"னு தண்ணி எடுக்க ஓடினாரே, அப்போ அவர வேற ஒரு கேரக்டரா பார்த்தேன்.

கரு.பழனியப்பன் கல்யாணத்திலே வெளியே நின்னு ஜாலியா பேசிட்டு இருந்தவருகிட்டே ஓடிவந்து ஆட்டோகிராப் கேட்ட 20 வயசு பையனை, "பேசிட்டு இருக்கேன்லே..."னு சொல்லிகிட்டே விரட்டிப் பிடிச்சு முதுகுல செம்மையா அறைஞ்ச பிசாசு குணத்தையும் பார்த்தேன்.

விதவிதமா நடிக்கிற நல்ல நடிகன்னு ஊரு ஒலகமே சொல்லுது. இப்போ சொல்லுங்க, அவரு எங்கே நடிக்கிறாரு?

8 comments:

அன்புச்செல்வன் said...

பிரகாஷ்ரா(ய்)ஜ் ஒரு சிறந்த நடிகர். சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை கேரக்டர்கள்?.

வழக்கம்போல கலக்கல் பதிவு "ச்செல்ல்ல்ல்ல்ல்ல்லோம்"..

Sridhar said...

// விதவிதமா நடிக்கிற நல்ல நடிகன்னு ஊரு ஒலகமே சொல்லுது. இப்போ சொல்லுங்க, அவரு எங்கே நடிக்கிறாரு? //

உண்மைதான் வாழ்ந்து காட்டுரார்.

பாசகி said...

காலம் எதையும் கொல்லும், எதையும் ஆக்கும்...

கலையரசன் said...

//"பேசிட்டு இருக்கேன்லே..."னு சொல்லிகிட்டே
விரட்டிப் பிடிச்சு முதுகுல செம்மையா அறைஞ்ச
பிசாசு குணத்தையும் பார்த்தேன்//

அண்ணே..நல்லவேளை, நீங்க மேல சொன்னத வீடியோவோட போடல. அப்டி போட்டிருந்தீங்க....

நம்ம மக்க (பதிவர்கள்தான்) அந்த வீடியோவை, கிழிச்சி, கடிச்சி, கொதரி, நச்சி.. காயவச்சிபாய்ங்க!

racmike said...

srikanth thaan thayir soru aache, avar inna panaaru amma mess le?

racmike said...

idu nijama?

http://www.cinesouth.com/masala/hotnews/new/13112006-1.shtml

anthanan said...

நண்பர் மைக் அவர்களே,

நீங்கள் படித்த செய்தி உண்மைதான். நிறைய விஷயங்களை எழுத முடியாதளவுக்கு மனசாட்சி தடுக்கிறது.

அந்தணன்

Anonymous said...

http://www.paristamil.com/tamilnews/?p=10671