Sunday, May 24, 2009

பார்த்திபன் வீசிய பந்துகள்...


தமிழ்சினிமாவிலே டி.ராஜேந்தர் ஒரு அஷ்டாவதானின்னா, பார்த்திபன் ஒரு நஷ்டாவதானி! இவரு எடுக்கிறதெல்லாம், பாக்ஸ் ஆபிஸ் படமா இருக்கனும்னுதான் நினைப்போம். ஆனா, எல்லாமே 'ஃபால்ஸ்' ஆபிஸ் படமா இருக்கும்! ஆனாலும் மனுசனை எந்த விழாவிலே பார்த்தாலும், "உற்சாகமே... உன் பேர்தான் பார்த்திபனா?"ன்னு கேட்க தோணும்.

வாயால 'சிலம்பம்' சுத்துற ஆளு பார்த்திபன். வார்த்தை சித்தர் வலம்புரிஜான் மாதிரி, இவரு வார்த்தை அக்தர்! வீசுற ஒவ்வொரு பந்துமே ராக்கெட் வேகத்திலே போய், ஜாக்கெட்லதான் விழும்! மேடையிலே பார்த்திபன் இருந்தார்னா, சுமார் நடிகையா இருந்தாலும், ஜிலீர்னு மாறி ச்சில்லுன்னு சிரிச்சே ஆகணும். அப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் இவருகிட்டேயிருந்து. ஒருமுறை அனுஹாசன் மேடையிலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகிட்டு இருந்தார். மேடையேறிய பார்த்திபன், "இந்த நிகழ்ச்சியை அனு அனுவா ரசிக்கிறேன்"னு ஏக்கமா அனுஹாசனை பார்க்க, புரிஞ்சிட்டு கைதட்டின ரசிகர்களோடு சேர்ந்து, தன்னையே மறந்து கைதட்டினார் அனு.

"ஆயுதம் விக்கிறவங்க, அவங்ககிட்டே இருக்கிற துப்பாக்கி பீரங்கியெல்லாம் கொடுத்திட்டு, இங்கேயிருந்து எதையாவது வாங்கிட்டு போக நினைச்சா, சினேகாவோட சிரிப்பை மட்டும் அனுப்பி வைக்கலாம். ஏன்னா, அதுதான் உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம்"னாரு பார்த்திபன். பக்கத்திலே இருந்த சினேகா பளீர்னு சிரிக்க, அந்த நேரத்திலே கரண்ட் ஆஃப் ஆகியிருந்தாலும் காப்பாற்றியிருக்கும் சினேகாவின் சிரிப்பு.

பார்த்திபனின் 'எல்லை மீறிய' பயங்கரவாதம் ஒன்றை நேரில் பார்த்து ஆடிப் போயிட்டேன். அந்தம்மா ஒரு முக்கியமான அரசியல் கட்சியிலே மிகவும் முக்கியமானவர். அழகோ அழகு! மேடை ஏறிய பார்த்தி, அந்தம்மாவை வர்ணிக்க ஆரம்பிச்சுட்டார். அவங்க பார்வையிலே கோபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நல்லவேளை, புரிஞ்சுகிட்டாரு புதுமை பித்தன். (வீட்டுக்கு போன பிற்பாடு அர்சனை, ஆறு கால பூஜையெல்லாம் நடந்திருக்கும்ங்கிறது என்னோட யூகம்)

இப்படியெல்லாம் சூரியனுக்கே 'டார்ச்' அடிக்கிற பார்த்திபனோட வாழ்க்கை மட்டும் இருட்டா போச்சு! கருத்துப்போன பார்த்திபனுக்கு கட்டி தங்கமான்னு பல்லு வெளக்காத பயலுக எல்லாம் பாஞ்சு பாஞ்சு கண்ணு வச்சதாலதான், இல்லறம்ங்கிறதுல 'ரம் இல்'லாம போச்சு போலிருக்கு. ஒசரத்திலே உரியை கட்டி, அதிலே தாராளமாக தயிரையும் வச்சு, தாவி தாவி தின்னுக்கோன்னு ஆண்டவனே ஆஃபர் வச்சுட்டான் இந்த பார்த்திப பூனைக்கு. ஹ¨ம்... என்னதான் செய்வாரு அவரும்? (இதுக்கும் மேல ரொம்ப போனா, சீதாயணத்தையும் சேர்த்து எழுதணும் என்பதால் இத்தோடு நிற்க!)

"இப்படியெல்லாம் பேசுறீங்களே, எப்பிடி சார்?"னு கேட்டேன் ஒருமுறை அவரிடம். அது ஸ்கூல்லே படிக்கும்போது ஆரம்பிச்சுதுன்னு அந்த வரலாறை வாசிக்க ஆரம்பிச்சாரு பார்த்தி. எட்டாவது படிக்கும் போது ஆங்கில பாடம் எடுத்திட்டு இருந்தாராம் வாத்தியாரு. 'நெய்தர்', 'நார்' என்ற இரண்டு இங்கிலீஷ் வார்த்தையும் எப்படி 'யூஸ்' பண்ணுறதுன்னு கிளாஸ். அப்போ பார்த்து இவரு பையிலே வச்சுருந்த மாம்பழத்தை நைசா கடிச்சிகிட்டே கிளாசை கவனிச்சாராம்.

கவனிச்ச வாத்தியாரு, செம்மையா இவரை 'கவனிச்ச'தோடு, "எப்பிடிடா இருந்திச்சு மாம்பழம்?"னு கேட்க, இவரு சொன்னாராம். "நெய்தர் காய், நார் பழம்"னு! இந்த பதிலை எதிர்பார்க்காத வாத்தியாரு கிளாஸ் பசங்க அத்தனை பேரையும் எழுந்து நின்று கைதட்ட சொல்ல, அங்கே ஆரம்பிச்சுது பார்த்திப குசும்புகள்! திடீர்னு கருப்பண்ணசாமி சிலைய அனுப்பி வைப்பாரு நிருபர்களுக்கு. இன்னொரு முறை மாடர்ன் காலண்டர் வரும் அவருகிட்டேயிருந்து. இப்படி வருஷத்துக்கு மூணு முறையாவது தனது இருப்பை பொறுப்பா சொல்லிட்டு இருக்கிற பார்த்தி, இப்போதெல்லாம் ஒரு விசிட்டிங் கார்டு கூட அனுப்பறதில்லே. (டப்பு வேகலே போலிருக்கு)

முன்பெல்லாம் வருகிற இவரது பேட்டிகளில், ஒரு பையனை தத்தெடுத்து வளர்க்கிறார் என்ற செய்தி கட்டாயம் இடம் பெறும். ஒரு முறை பார்த்திபனிடம், "ஏன் சார்? தத்தெடுத்திட்டீங்க. சந்தோஷம். அதுக்காக ஒரு பேட்டி தவறாம இதையே சொன்னா, அந்த பையன் வளர்ந்த பிறகு உங்களை அப்பான்னு கூப்பிட சங்கடப் பட மாட்டானா? என்னதான் இருந்தாலும் நாம அநாதைங்கிற உணர்வுதானே அவனுக்கு வரும்"னு கேட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த பார்த்திபன், இனிமே அப்படி எந்த பேட்டியிலேயும் சொல்ல மாட்டேன். உங்களுக்கு நன்றின்னாரு. இப்பவும் அதை கடைபிடிக்கிறாரு.

ஒருமுறை நான் இவரை பற்றி எழுதின படுமோசமான விமர்சன கட்டுரை ஒன்றை தனது ஆபிஸ் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி, என் எழுத்துக்கும் மரியாதை கொடுத்ததை எப்படி எடுத்துக்கொள்வது? (பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே டைப் போலிருக்கு) இவரை பற்றி வெளிவந்த தப்பு தப்பான செய்திகளை மட்டுமே சீக்கிரம் ஒரு தொகுப்பாக வெளியிடப் போறாராம். நம்ம கட்டுரையும் இருக்கும்னு நம்புறேன்.

13 comments:

கண்ணா.. said...

// ஒருமுறை நான் இவரை பற்றி எழுதின படுமோசமான விமர்சன கட்டுரை ஒன்றை தனது ஆபிஸ் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி, என் எழுத்துக்கும் மரியாதை கொடுத்ததை எப்படி எடுத்துக்கொள்வது? (பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே டைப் போலிருக்கு) இவரை பற்றி வெளிவந்த தப்பு தப்பான செய்திகளை மட்டுமே சீக்கிரம் ஒரு தொகுப்பாக வெளியிடப் போறாராம். நம்ம கட்டுரையும் இருக்கும்னு நம்புறேன் //

நிஜமாவே... வித்தியாசமான ஆளுதான்....போல..

வழக்கம்போல் உங்கள் ஸ்டைலில் அசத்தல் பதிவு..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பார்த்திபனின் 'எல்லை மீறிய' பயங்கரவாதம் ஒன்றை நேரில் பார்த்து ஆடிப் போயிட்டேன். அந்தம்மா ஒரு முக்கியமான அரசியல் கட்சியிலே மிகவும் முக்கியமானவர். அழகோ அழகு! மேடை ஏறிய பார்த்தி, அந்தம்மாவை வர்ணிக்க ஆரம்பிச்சுட்டார். அவங்க பார்வையிலே கோபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க.//


அவங்களா தல.....

butterfly Surya said...

அங்க கேட்டது இங்கே கிடைத்தது.

சும்மா கும்முன்னு இருக்கு பதிவு..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"நெய்தர் காய், நார் பழம்"னு!//


அவர்பாணியில சொன்னா...,, விளையும்பயிர்.......... தெரிகிறது

கலையரசன் said...

"உங்க பதிவுகளை அனு அனுவா ரசிக்கிறேன்"
பார்த்திபன் சொன்ன அனு இல்லங்கநோவ்!

biskothupayal said...

வாயால 'சிலம்பம்' சுத்துற ஆளு பார்த்திபன். வார்த்தை சித்தர் வலம்புரிஜான் மாதிரி, இவரு வார்த்தை அக்தர்! வீசுற ஒவ்வொரு பந்துமே ராக்கெட் வேகத்திலே போய், ஜாக்கெட்லதான் விழும்!
உங்களோடது அதையும் தாண்டி!

Tech Shankar said...

Your writing style is too cool. great yaar

vicki said...

endha thamizhachiya pathi pesunaru?

butterfly Surya said...

போன பதிவில் கேட்டதற்கும் ஸ்ரீதர் சார் வழி மொழிந்ததிற்கும் பதில் இல்லையே..??

ஏதாவது தப்பா கேட்டு விட்டேனா சார்..??

அமர பாரதி said...

//அது ஸ்கூல்லே படிக்கும்போது ஆரம்பிச்சுதுன்னு // //"நெய்தர் காய், நார் பழம்"னு!// இது ஸ்கூல் படிக்கும் போதா நடந்தது? நான் இவரு பொறந்து ரெண்டு நாளிலேயே நடந்ததுன்னு நினைச்சேன்.

Joe said...

//
ஒருமுறை நான் இவரை பற்றி எழுதின படுமோசமான விமர்சன கட்டுரை ஒன்றை தனது ஆபிஸ் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி, என் எழுத்துக்கும் மரியாதை கொடுத்ததை எப்படி எடுத்துக்கொள்வது? (பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே டைப் போலிருக்கு) இவரை பற்றி வெளிவந்த தப்பு தப்பான செய்திகளை மட்டுமே சீக்கிரம் ஒரு தொகுப்பாக வெளியிடப் போறாராம். நம்ம கட்டுரையும் இருக்கும்னு நம்புறேன்
//

அந்த கட்டுரையை எப்போ வெளியிடுவீங்க? ;-)

செந்தில்குமார் said...

அந்தணன் சார்...

வார்த்தை ஜாலம் அருமை..

உண்மைத்தமிழன் said...

இப்படி பதிவுக்கு பதிவு ஏதாவது சஸ்பென்ஸ் வைச்சுத்தான் எழுதணுமா..?

அந்த "அழகு" யாரோ..?