Tuesday, May 26, 2009

'காரேறி வந்த காட்டேரிங்க'


எந்த ஃபங்ஷனுக்கு போனாலும், 'காரேறி வந்த காட்டேரிங்க' மாதிரியே வர்ற நடிகைகளை பார்த்தா ஏன்தான் இப்படி வர்றாங்களோன்னு தோணும். தலைவிரி கோலத்தோட வர்ற அவங்கள, கொல வெறியோட பார்க்கும்போதெல்லாம், கோலி சோடாவ தட்டிவிட்ட மாதிரி குபுக்குன்னு கிளம்பும் வேதனை! ஏன் இப்படி வரணும்? தலைய குளிச்சோமா, முழம் பூவ வச்சோமான்னு வந்தா, குலதெய்வமேன்னு கொண்டாடுறதுக்குதான் நாங்க இருக்கோம்ல? (சர்ர்ர்ரி... சரி)

போன வாரம் 'பயம் அறியான்'னு ஒரு படத்தோட பிரஸ்மீட். ஹீரோயினும் அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க. கண்ணு எது, கடவாயி எதுன்னே புரியாத அளவுக்கு கூந்தல விரிச்சு முன்னாடி போட்டுகிட்டு வந்திருந்திச்சு பொண்ணு. அட, அவங்க அம்மாவாவது பொண்ணுக்கு புத்தி சொல்லக்கூடாதான்னு அந்த பக்கம் திரும்புனா, வயசுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஜீன்சையும், வாயுக்கு சம்பந்தமில்லாத ஒரு லிப்ஸ்டிக்கையும் போட்டுட்டு அந்தம்மா இருந்த கோலம், பயங்கரம்ம்ம்ம்டா சாமீய்! தெனோமும் இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கறதாலதான் படத்துக்கு 'பயம் அறியான்'னு டைட்டில் வச்சிட்டாய்ங்க போலிருக்கு.

தலை நெறய கொண்டை, அதை சுத்தி சுத்தி மல்லிப்பூன்னு களையா வர்ற நடிகைகள் யாராவது இருக்காங்களா? அவசரப்படாதீங்க, நெஞ்சை புடிச்சிட்டு யோசிச்சாலும் ஒருத்தர் மொகம்தான் கண்ணுக்குள்ளே நிக்குது. அது, பழம் தின்னு கொட்டைய போட்டு, அந்த கொட்டையையும் தின்னு பழத்தை போட்ட பரவை முனியம்மாதான்! நானும் பார்க்கிறேன். இந்தம்மாவுக்கு பிறகு வேற யாருக்குமே இப்படி வர்ற துணிச்சல் இல்லே. இன்னொரு அம்மா இருந்திச்சு. அது தேனி குஞ்சரம்மா.

எம்ஜிஆருக்கு ஜோடியா நடிச்ச ரெண்டு நடிகைகளை அன்னைக்கு ஒரு விழாவிலே பார்த்தேன். டிஎன்ஏ டெஸ்ட்டை யூஸ் பண்ணிதான் இந்த தொல்பொருள் தோழிகளோட வயசை கண்டுபிடிக்க முடியும் போலிருக்கு. அந்தளவுக்கு மேக்கப். 'ஒட்டடை பலத்திலேதான் உத்திரமே நிக்குது'ன்னாரு நாகேஷ். அது மாதிரி, லிப்ஸ்ட்டிக்கும், பேன்கேக்கும் இல்லேன்னா இவங்க ரெண்டு பேருக்குமே வயலின் வாசிச்சிருக்கும் வருஷம்! அப்படி ஒரு 'மேக்கப்' பலத்தோட வந்திருந்தாங்க! என்ன சொல்ல வர்றேன்னா, இவங்க கூட தலையை விரிச்சு போட்டுட்டுதான் வந்திருந்தாங்க அந்த விழாவுக்கு.

பெண்கள் ஏரியாவிலே ஆம்பளைக்கு என்ன வேலைன்னு நீங்க கோவப்பட்டாலும் சரி. இவரை பத்தி இந்த இடத்திலே சொல்லியே ஆகணும். (இங்கே சொல்லாம வேற எங்கே போயி சொல்லுறதாம்?) கூட்டம் நடக்கிற இடத்துக்கெல்லாம் கூந்தல விரிச்சு போட்டுட்டு வர்ற இன்னொரு நபர் நம்ம மன்சூரலிகான். மொணக்குன்னு முன்னாடி குனிஞ்சு மொத்த முடியையும் நெத்திக்கு கொண்டு வருவாரு. அடுத்த நொடியே படக்குன்னு பின் பக்கம் சாஞ்சி எல்லாத்தையும் பின்னாடி கொண்டு போவாரு. இந்த 'சீசா' விளையாட்டுல சின்னா பின்னமாவும் மொத்த கூந்தலும். அப்படியே தலைக்குள்ளே விரலை விட்டு சிக்கெடுப்பாரு. பிறகு மறுபடியும் மொணக்குன்னு முன்னாடி... படக்குன்னு பின்னாடி... பொறந்து ஆறே மாசத்துல தலை நின்னுடுமாம் குழந்தைங்களுக்கு. நாற்பத்தி ஆறு வயசு ஆன பிறகும் தலை நிக்காத ஒரே குழந்தை நம்ம மன்சூருதான் போலிருக்கு!

இப்படி கூந்தல் பராமரிப்புல தங்க மெடலே வாங்குற அளவுக்கு 'ஹேர் போன' நம்ம தமிழ்சினிமா மோகினிங்களுக்கு சரியா வேப்பிலை அடிக்க மாட்டியா கடவுளேன்னு நான் வேண்டிக்கிட்ட நாளாவது நாளு அந்த சம்பவம் நடந்திச்சு. இதே மாதிரி ஒரு விழாவுக்கு வந்திருந்தாரு நம்ம கார்த்திகா. கருவாப்பையா கருவாப்பையான்னு 'கரு கலையுற' வேகத்துக்கு ஒரு ஆட்டம் ஆடுவாரே, அவரேதான்!

காட்டேறிங்களுக்குதான் கவலையில்லே, இவர மாதிரி தேவதைகளுக்கு என்ன வந்திச்சாம்? அன்னைக்கு பார்த்து இவரும் கூந்தல கூட்டமா அள்ளி போட்டுகிட்டு வந்திருந்தாரு. நிகழ்ச்சக்கு கொஞ்சம் லேட்டா வந்ததால உருப்படியான எடத்திலே உட்கார வைக்க முடியாம திணறுன விழா ஆளுங்க, ஓடிப்போயி இரண்டு சேரை து£க்கிட்டு வந்து போட்டாங்க. கார்த்திகாவுக்கு ஒன்ணு. அவங்க அம்மாவுக்கு ஒன்ணு. அது மரத்திலே செஞ்ச மடக்குற நாற்காலி.

விழாவை இறுதி வரைக்கும் இருந்து ரசிச்ச கார்த்திகா, கடைசியா எழுந்திருக்கும்போதுதான் "அம்ம்ம்ம்ம்ஆன்..."னு கத்துச்சு. மடக்குற இடத்திலே மாட்டிகிச்சு கூந்தல். அதுக்குள்ளே பாஞ்சு போயி, பரவசமா காப்பாத்த இறங்கிச்சு ஒரு கோஷ்டி. முடியை பிரிச்சுவிட்ட அடுத்த நிமிஷமே கார்த்திகா "லலலலல்ல்லலா..." பாடுவாங்கன்னு நெனப்பு போலிருக்கு. நல்ல வேளையா அவங்க அம்மாவே கூந்தலுக்கும் சேதமில்லாம, கார்த்திகாவுக்கும் வலியில்லாம பிரிச்சுவிட, 'தேங்ஸ்'னு காப்பாத்த வந்தவங்களை கை கூப்பி வணங்கிட்டு, கப்புன்னு ஓடிப்போச்சு கார்த்திகா. இப்படி ஆயிருச்சேங்கிற வெட்கம்தான்!

இப்போ கூட கார்த்திகா அப்படியே விரிச்சு போட்டுட்டுதான் வர்றாரு. அதென்னவோ பாஞ்சாலி சபதம் மேல, நம்ம பாஞ்சாலிங்களுக்கு அப்படி ஒரு விருப்பம்!

பின்குறிப்பு- இந்த பதிவு, நான் பெண்ணுரிமைக்கு எதிரானவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தால், மன்னிக்கவும். நான் அப்படிப்பட்டவன் அல்ல!

26 comments:

anthanan said...

போன பதிவிலே, பத்திரிகை ஆரம்பிச்சா என்னன்னு ஐடியா கொடுத்த வண்ணத்துப்பூச்சியாருக்கும், ஸ்ரீதர் சாருக்கும் ஒரு அன்பான பதில். யானை அழகா இருக்குன்னு சவாரி பண்றேன். தந்தத்தை பிடிச்சு தொங்குன்னு சொல்றீங்களே, ஞாயமா ராசா(ங்களே...)?

அந்தணன்

நா.இரமேஷ் குமார் said...

அண்ணே உங்க 50வது பதிவு சூப்பர். முதல் வாழ்த்துகள்!. ஆமாம் அந்த ஹீரோயினுடனான உங்க காதல் என்னாச்சு?

Joe said...

//
பொறந்து ஆறே மாசத்துல தலை நின்னுடுமாம் குழந்தைங்களுக்கு. நாற்பத்தி ஆறு வயசு ஆன பிறகும் தலை நிக்காத ஒரே குழந்தை நம்ம மன்சூருதான் போலிருக்கு!
//

வருங்கால பிரதமர், எங்கள் வீட்டுப் பிள்ளை, மன்சூரைப் பற்றி அவதூறாக எழுதியதற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். ;-)

Joe said...

அந்தணன்,
நடிகைகளைப் பற்றி எழுதும் போது மட்டும், சற்று மரியாதைக் குறைவாக எழுதுவது போலத் தெரிகிறது.

என் கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

வினோத் கெளதம் said...

//ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கறதாலதான் படத்துக்கு 'பயம் அறியான்'னு டைட்டில் வச்சிட்டாய்ங்க போலிருக்கு.//

சரி காமெடி..

sowri said...

Who taught you tamil!. Your narration is more interesting than the incidents... sometimes. Keep it please

biskothupayal said...

//ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கறதாலதான் படத்துக்கு 'பயம் அறியான்'னு டைட்டில் வச்சிட்டாய்ங்க போலிருக்கு.//

இங்க சிரிக்க ஆரம்பிச்சதுதான் சிர்ச்சுகிட்டே இருக்கேன்

AKISAMY said...

vanakkam anthanan ungal blog oru nalum pakalaina enakku thokkama varathu.nan australiya vil ullan ungalin karuthukal nnalla nagaisuvaiya ullathu.thodarnthu ezthungal.AKISAMY.BLOGSSPOT.COM NAMMA blog konjam parunga.

Selva Kumar said...

Sir, ippadi pengal seyra thappai sonna athu penn viduthalaikku ethiranathu illai. Surya Vel padathula kooda solluvaaru. Pasanga Fashionnu solli vetila irunthu pantku vanthirukkanga. aana ponnunga.

Ayyo kadavule, itha sonna nammalai sadistnu solranga.

Naan ithunaala than chennai pakkame varathillai. Madurai innum inthalavukku mosam illai.

வணங்காமுடி...! said...

கலக்கல் பதிவுகள். வேறு எப்படியும் அறிந்து கொள்ள முடியாத நிகழ்ச்சிகளை கோர்த்து நீங்கள் கும்மும் விதம், சாரி... கொடுக்கும் விதம் சூப்பரோ சூப்பர்... தினசரி உங்கள் வலைப்பூ வை எட்டிப் பார்க்க வைத்து விட்டீர்கள். நன்றி...

சுந்தர்
ருவாண்டா ,
மத்திய கிழ்க்கு ஆப்பிரிக்கா

செந்தில்குமார் said...

//இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கறதாலதான் படத்துக்கு 'பயம் அறியான்'னு டைட்டில் வச்சிட்டாய்ங்க போலிருக்கு.//

அந்தணன் சார்,

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்துட்டு தான் இருக்கு... ஒரு வேளை நல்லா தலைசீவி பூ எல்லாம் வெச்சுட்டு வந்தா இவங்கெல்லாம் 'Celebrity' -ங்கறது தெரியாம போயிடுமோனு நெனைக்கறாங்களோ ?

//நாற்பத்தி ஆறு வயசு ஆன பிறகும் தலை நிக்காத ஒரே குழந்தை நம்ம மன்சூருதான் போலிருக்கு!//

நானும் Joe -வை வழிமொழிகிறேன்.. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, தமிழகத்தின் தன்மானச்சிங்கம் எங்கள் அண்ணன் மன்சூரை நையாண்டி செய்ததை வன்மையாக கண்டிக்கறேன்... :))

கலையரசன் said...

'காரேறி வந்த காட்டேரிங்க' உங்கள தவிர இந்த தலைப்பை வைக்க இங்க யாருக்குணே குசும்பு இருக்கு? உங்க தலைப்பே அமர்களம், அட்டகாசம், அருமை, எக்ஸ்சலன்ட், சூப்பர், டக்கர், அவுட்ஸ்டேன்டிங், பிரிலியன்ட், டிரெமென்டஸ், பக்கா, பகுத் அச்சா, அடிபொளி, பாகுன்னாரு (யப்பா...முடியலிங்கண்னா!) தலைப்பே இப்படின்னா... பதிவ பத்தி சொல்ல ஆரப்பிச்சேனா.. அது ஒரு பதிவாயிடும்!

கிரி said...

// இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கறதாலதான் படத்துக்கு 'பயம் அறியான்'னு டைட்டில் வச்சிட்டாய்ங்க போலிருக்கு.//

:-)))))))

//லிப்ஸ்ட்டிக்கும், பேன்கேக்கும் இல்லேன்னா//

நான் இதை பான் கேக் என்று நினைத்து இருந்தேன்

//நாற்பத்தி ஆறு வயசு ஆன பிறகும் தலை நிக்காத ஒரே குழந்தை நம்ம மன்சூருதான் போலிருக்கு!//

ஹா ஹா ஹா டாப்பு

அன்புச்செல்வன் said...

அரை செஞ்சுரி அடித்ததற்கு வாழ்த்துக்கள் தல, வெகு விரைவில் (முழு) செஞ்சுரி எதிர்ப்பார்க்கிறோம்.

butterfly Surya said...

அந்தணன் பதிவு ஐம்பது....
எழுத்து என்றுமே பதினாறு...

சும்மா ஏதோ கோத்து விட்டுட்டு போணும்ன்னு திடிரென்றும் சொல்லவில்லை.

உங்கள் ஐம்பது பதிவிலும் ஆணி அடித்தவன் என்றவன் முறையிலும் தினசரி 20 பிளாக்குகளையாவது படிப்பவன் என்ற முறையிலும் தான் சொல்கிறேன்.

பத்திரிகைகள் வாங்குவதை நிறுத்தி பல வருடம் ஆகிறது.. சில தொடர்களுக்காக முன்பெல்லாம் வாங்கியதுண்டு. அதுவும் தொடர் முடிந்ததும் புத்தமாக வெளிவரும் என்று தெரிந்து விட்ட படியால் புத்தகத்தையே வாங்கி கொள்ளலாம் என்று முடிவெடுத்து நிறுத்தி விட்டேன்.


எவர் நடையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் எழுத்தில் நடையே இல்லை.


சிங்கத்தின் குகைக்குள் சென்று பிடரியை பிடித்து உலுக்கும் நடை உள்ள தமிழ் இருக்கும் போது யானை தந்த்த்தை பிடிக்க பயமென்ன தலைவா..??

ஆயுள் சந்தா கட்ட நான் ரெடி.. ஆரம்பிக்க நீங்க ரெடியா..???

அடுத்த பதிவு லாரன்ஸா...??

வாழ்த்துக்கள்...

முரளிகண்ணன் said...

நீங்கள் சொல்லும் விஷயம் சூப்பர் என்றால், உங்கள் நடை (எழுத்து :-)))

சூப்பரோ சூப்பர்.

Sridhar said...

//
சிங்கத்தின் குகைக்குள் சென்று பிடரியை பிடித்து உலுக்கும் நடை உள்ள தமிழ் இருக்கும் போது யானை தந்த்த்தை பிடிக்க பயமென்ன தலைவா..?? //

சொல்லுங்க ஆரம்பிக்கலாம்

butterfly Surya said...

Sridhar said...
சொல்லுங்க ஆரம்பிக்கலாம்/////////


பைனான்ஸியர் கார்லேயே உட்கார்ந்து கொண்டு அட்ரஸ் இல்லாமல் அண்ணாநகரில் தேடலாமா..??

சுபயோக சுபதினத்தில் பூஜை போடப்படுமா..???

அண்ணன் மனது வைத்தால் அனைத்தும் நடக்கும்...

அன்புச்செல்வன் said...

//பொறந்து ஆறே மாசத்துல தலை நின்னுடுமாம் குழந்தைங்களுக்கு. நாற்பத்தி ஆறு வயசு ஆன பிறகும் தலை நிக்காத ஒரே குழந்தை நம்ம மன்சூருதான் போலிருக்கு!//

குசும்பு கொப்பளிக்குதுண்ணே...

//வண்ணத்துபூச்சியார் said...

அடுத்த பதிவு லாரன்ஸா...??//

அது எப்படிண்ணே வண்ணத்துப்பூச்சியாருக்கு மட்டும் முன் கூட்டியே தெரியுது? கலக்குங்க, கலக்குங்க (நான் பதிவ சொன்னேன்)

anthanan said...

நடிகையுடன் காதல்னு கிசுகிசுவை கிளப்பி, கிர்ணி பழத்தை நசுக்கிவிட்ட நா.ரமேஷ்குமார்லே ஆரம்பிச்சு, ( யாரு தெரியுதுங்களா? பாடலாசிரியர் நா.முத்துக்குமாரோட தம்பி. இவரு நடிகைகளுக்கு புடிச்ச பத்திரிகையாளர்! ) புதுசா படிக்க வந்த சௌரி, வணங்காமுடி, அகிசாமி வரைக்கும் அத்தனை பேருக்கும் நன்றிங்ணா...

அந்தணன்

butterfly Surya said...

எனக்கு ரொம்ப புடிச்ச கவிஞரின் சகோதரர் {நடிகைகளுக்கு புடிச்ச பத்திரிகையாளர்!} சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கு...


ஆஹா... கொளுத்தி போட்டுட்டாரே..??

விரைவில் வெளிவருமா..??

ஸ்ரீ.... said...

உங்களின் பதிவுக்கு இயற்கையாகவே மணமிருக்கிறது. வாழ்த்துக்கள். பெண்கள் ஏரியாப் பக்கம் போயிராதீங்க.

ஸ்ரீ....

kavi said...

அண்ணே அதுக்குள்ள 50 பதிவு தாண்டிட்டீங்களா, வாழ்த்துக்கள். உங்களுக்கு தினமும் கமென்ட்ஸ் (தமிழ் வார்த்தை வரலைண்ணே)அனுப்பும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். உங்கள் எழுத்துக்களுக்கே இவ்வளவு ரசிகர்கள் என்றால் உங்கள் பேச்சையெல்லாம் இவர்கள் கேட்டால் என்ன சொல்வார்களோ ????, நன்றி வணக்கம்,

நா.இரமேஷ் குமார் said...

அண்ணே... ஒருதலை காதலும் காதல்ல சேர்த்தி தான். ச்சும்மா கூச்சப்படாம எழுதுங்கண்ணா. பல ஹீரோக்களோட கோவணத்தை எல்லாம் உருவுறீங்க. நீங்க இப்படி தயங்கலாமா?
உங்களோட காதலை நீங்க சொன்னாத் தான் நல்லாயிருக்கும். இதையெல்லாமா உதயசூரியனை எழுதச் சொல்ல முடியும்?

அமர பாரதி said...

நல்ல பதிவு. ஆனால் பெண்களைப் பற்றி எழுதும் போது சற்று அதிகமான எள்ளல் தெறிக்கிறது.

// நல்லா தலைசீவி பூ எல்லாம் வெச்சுட்டு வந்தா இவங்கெல்லாம் 'celibrity'-ங்கறது தெரியாம போயிடுமோனு நெனைக்கறாங்களோ//

அதானே? எல்லா நடிகைகளும் ஆஸ்கார் நிகழ்ச்சியில தலையை விரித்துப் போட்டுக்கொன்டு தானே வருகிறார்கள்? நம்முடைய அளவு கோலின் (?) படி எல்லோரும் செய்யறது தப்புதான். நாம பன்றது மட்டும் தான் ரைட்டு. நாம கலாச்சாரப் போலீஸாச்சே? சும்மா விட முடியுமா?

உண்மைத்தமிழன் said...

அடடா..

கூந்தல் இருக்குறவ அள்ளியும் முடிவா. கொண்டையும் போடுவா..

இல்லாதவ சவரி முடியை வாங்கிக் கட்டிக்கிட்டு போவ வேண்டியதுதான..

அதான் தலைல ஊகலிப்ட்ஸ் மரம் மாதிரி வளர்ந்திருக்கே.. இது பத்தாதா..?

இதுல கூடவா பொறாமை..?

முருகா..