Monday, June 1, 2009

சாக்ரட்டீஸ்களின் சந்தைக் கடை!


வடபழனி சூர்யா ஆஸ்பிடல் ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தா, ஃப்ளாப் கொடுத்த நேற்றைய இயக்குனருலேர்ந்து, 'கிளாப்' அடிக்கிற இன்றைய துணை இயக்குனர் வரைக்கும் பார்க்கலாம். பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக் பார்! பொய்யெல்லாம் அவுத்து எறிஞ்சிட்டு வெள்ளந்தியா பேசுற அந்த கடை, சத்தியமா சொல்றேன்... சாக்ரடீஸ்கள் கூடுற சந்தைக் கடை!

"மாப்ளே, ஒரு கதை சொல்றேன் கேளு"ன்னு அந்த போதையிலும், ரீரெக்கார்டிங்கோட சொல்ற, ஷங்கர் மணிரத்னத்தையெல்லாம் அங்கே ஏராளமா பார்க்கலாம்.

ஒரு 'நாட்' மட்டும் சொல்றேன். கேளுங்கன்னு ஆரம்பிச்சு, ஒரு குயர் 'நோட்' அளவுக்கு 'நாட்'டை மட்டுமே சொல்ற நண்பர்களோடுதான் இப்பவும் பழகுறேன். "ஏண்ணே, இரண்டரை மணி நேர படத்துக்கு நாலு மணி நேரம் கதை சொல்றீங்களே, வெளங்குமா இது?"ன்னு கேட்க ஆசைப்பட்டாலும், அதுக்கு ஒரு பதில சொல்றேன்னு இன்னும் ஒரு மணி நேரத்தை காலி பண்ணினா என்னாவறது? "சூப்பர்..."னு ஒரு வார்த்தைய சொல்லிட்டு ஓடிப்போன நாளு நிறைய.

நடந்தாதான் கதை சொல்ல வரும்னு நடந்துகிட்டே கதை சொல்வாரு ஒருத்தர். ஆக்ஷன் சீன் சொல்லும்போது மேலே பாஞ்சு பிராண்டிட்டு 'ஸாரி'ன்னு ஒரு வார்த்தையை எடுத்து பிராண்டின இடத்திலே தடவிட்டு போவாரு இன்னொருத்தர். அழுகாச்சி சீன்லே மூக்கை சிந்தி, நம்ம சட்டையிலேயே தொடச்சுட்டு "நல்லா 'சிந்தி'ச்சு சொல்லுங்க, நல்லாயிருக்கா இல்லியா?"ம்பாரு வேறொருத்தர். இப்படி நடமாடும் தியேட்டர்களை என் தோளில் தொங்கவிட்டுட்டு இருக்கிற தங்கமான புள்ள நான்.

உலகத்திலேயே கொடுமை என்னான்னா குடிகாரன் பேச்சை குடிக்காம கேட்கிறதுதான். அதைவிட கொடுமை சினிமா கதை கேட்கிறதுதான்! இது என்னோட தாழ்மையான அபிப்பிராயம். ஆனா கதை சொல்லும்போதே நமது விரலையும் பிடிச்சு இழுத்திட்டு போயி கதைக்குள்ளே கரைய வைக்கிற ஏராளமான நண்பர்களையும் பார்த்திருக்கேன். அப்படி கதை சொல்ற அற்புதமான ஆளுதான் 'தினந்தோறும்' நாகராஜ்.

முரளி-சுவலட்சுமி நடிச்ச 'தினந்தோறும்' என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர். தமிழ்சினிமாவிலே ஒரு விடிவெள்ளின்னு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் சந்தோஷப்பட்டுட்டு இருந்தப்போ, 'குடி' கொள்ளின்னு பேரு வாங்கிட்டாரு மனுஷன். ஒரே படத்தின் மூலம் வந்த வெற்றி தலைகால் புரியாம அவரை ஆட வச்சுது. காலை அரும்பி பகலெல்லாம் ஃபுல்லாகி பாழாப் போனாரு மனுஷன். ஒருநாள் இதே சூர்யா ஆஸ்பிடல் வாசல் பக்கமா நின்னு வேடிக்கை பார்த்தப்போதான் அந்த அதிர்ச்சி! ஆறேழு ஃபுல் பாட்டிலை அந்தரத்திலே நிக்க வைச்ச மாதிரி ஒரு ஆளு. வேற யாருமில்லே, நம்ம நாகராஜ்தான் அது.

கையிலே ஒரு கிளாசை வச்சிகிட்டு பக்கத்திலே நின்ன பையனோட உச்சந்தலையை பிடிச்சு பக்கத்திலே இழுத்தாரு. ஐயோ பாவம், அந்த பையன் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் போலிருக்கு. வலியை பொறுத்திக்கிட்டு அவரு பக்கத்திலே தலையை கொண்டு போனாரு. அதுவரைக்கும் எனக்கு தெரியாது, அந்த அசிஸ்டென்ட் டைரக்டருதான் நாகராஜோடே மெயின் டிஷ்ஷ§க்கு, சைட் டிஷ்ஷ¨ன்னு! மூச்சை வேகமா உள்ளே இழுத்து உச்சந்தலையை முகர்ந்தார். அந்த வாசனை போறதுக்குள்ளே ஒரே கல்ப்பா உள்ளே இறக்குனாரு அந்த சரக்கை! இப்படி சரக்குள்ள ஒரு இயக்குனர் கையிலே 'சரக்கை' கொடுத்தே சாய்ச்சுது விதி.

"காலையிலே வாங்க, ஈவினிங் வரைக்கும் இருந்து சீன் சொல்லுங்க, போம்போது ஒரு ஃபுல் தர்றேன்"னு சொல்லியே நாகராஜை 'கல்ப்பா' அடிச்சுது தமிழ்சினிமா. எத்தனையோ வெற்றிப்படங்களின் நல்ல நல்ல சீன்கள் நாகராஜுடையதாகவும் இருக்கலாம். எல்லாவற்றின் விலையும் சில பல ஃபுல்கள் மட்டுமே!

இப்போ சமீபத்திலே ஒரு சினிமா கம்பெனியிலே நாகராஜை பார்த்தேன். இளைத்து பென்சில் போல இருந்தார். "எல்லாத்தையும் விட்டுட்டேன். இப்போ பல மணி நேரம் நிக்கணும்னு நினைச்சாலும் நிக்க முடியலே. ஆனா, எப்படியாவது பழையபடி நின்னு காட்டணும்னு ஆசையும் வெறியும் இருக்கு"ன்னாரு அடங்காத தாகத்தோடு.

இந்த தாகம், 'அந்த' தாகம் இல்லேங்கிறது மட்டும்தான் நிறைவான நிம்மதி!

13 comments:

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

Cable சங்கர் said...

தலைவரே சமீபத்தில் நானும் அவரும் ஒரு படத்தின் டிஸ்கஸனில் இணைந்து வேலை செய்தோம் இன்னும் அவரிடம் அதே வீச்சு இருக்கிறது.. நிச்சயமாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை அவருக்கு மட்டுமல்ல எனக்கும் இருக்கிறது.

butterfly Surya said...

தலைவரே சமீபத்தில் நானும் அவரும் ஒரு படத்தின் டிஸ்கஸனில் இணைந்து வேலை செய்தோம்.. அப்படின்னு கேபிள் சங்கர் பத்தி நான் சொல்லணும்..

ஆனா சத்தியமா “தாகசாந்தி” கிடையாது..

கிரி said...

வருத்தமான செய்தி..

தினந்தோறும் படத்துல அவர் கண்ணை சிமிட்டி சிமிட்டி பேசுறது ரொம்ப நல்லா இருக்கும் (அவரோட இயல்பே அது தான்னு நினைக்கிறேன்)

அந்த படமும் ரொம்ப நல்ல படம்..

பிரபாகர் said...

அந்தனன்,

நாகராஜ் மற்றும் தினந்தோறும் படத்தின் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுடனும் பழகியிருக்கிறேன். குடி பழக்கம் எந்த அளவிற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு அந்த படத்தில் வேலை செய்த பலர் உதாரணமாயிருக்கிறார்கள்.

உண்மை சுடும் - நல்ல பதிவு.

பிரபாகர்.

Sridhar said...

மீண்டு(ம்) வர வாழ்த்துகள்

Revolt said...

I met Mr.Nagaraj and i spoke to him few times since he is my neighbour in Choolaimedu Veerapandia Nagar. He is such a wonderful Director. But he missed the chance to become a legend director. One of the Lingusamy interviews, he said Nagaraj is the best than other directors. Nowadays i am seeing him in Hair Dressing Shop and Road. He should ensure his presence in Cine Industry again. All The Best Mr.Nagaraj.

பிரகாஷ் said...

minnale kakka kakka love portion dailouge ellam ivar ezudiyadudahn

ங்கொய்யா..!! said...

பாவம்..!!

Joe said...

நாகராஜ் மீண்டு வருவதற்கு வாழ்த்துக்கள்.

அளவோடு குடித்து வளமோடு வாழ்வது நல்லது.

And then, நான் பிரபலம் ஆன கதைய படிச்சு பின்னூட்டம் போடாத அந்தணன், வண்ணத்துப்பூச்சியார் இன்ன பிறருக்கு, கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

கலையரசன் said...

அடுத்த பதிவு லாரன்ஸ்சுன்னு சொன்னாங்க?
நாகராஜ் மாட்டிட்டாரா?

அண்ணே! கொஞ்சம் மொக்க பதிவும் போடுங்க!
எல்லா பதிவும் நல்லாருக்கு, நல்லாருக்கு சொல்லி
போர் அடிக்குது!

மொக்க பதிவு போட்டா நாங்களும் அட்வைஸ் பண்னுவோமுல்ல!

Anonymous said...

இசை ஸ்ரீகாந்த் தேவாவாம். ஆர்மோனிய பொட்டிக்கு அல்சர் போலிருக்கு!

what is this mean?

உண்மைத்தமிழன் said...

குடி குடியைக் கெடுக்கும்.

இதே போல் குடி பழக்கத்திற்கு ஆளாகி பீல்டை விட்டே போனவர்கள் ஏராளம். ஏராளம்..!

புரிந்து கொண்டு அண்டவிடாமல் இருந்து உழைத்தவர்கள் புத்திசாலிகள்..