Tuesday, June 30, 2009

விஜய் போட்ட முதல் உத்தரவு?!


"ரேகை தேயுற அளவுக்கு கை தட்டு. நாக்கே சுளுக்கிக்கிற அளவுக்கு விசிலடி. யாரை வேணும்னாலும் ரசி. அதுக்கு மேலே போனா வெளங்க மாட்டடா டேய்..."னு போஸ்ட் மரத்திலே முட்டுக் கொடுத்தபடி போதையில் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு 'ஆயுள் சந்தா' அறிவுஜீவி. விஜய் கட்சி ஆரம்பிக்க போறாருன்னு நியூஸ் வந்திச்சே, அப்பவுலேர்ந்து இப்படிதான்!

எவனோ விட்டுட்டு போன ஊறுகாய, தொட்டு நக்கிட்டு பேசுற டாஸ்மாக் கோவாலுங்க சொல்றதெல்லாமா ஒரு விஷயம்னு பேசிட்டு இருக்கணும்? நம்ம புத்தி இப்பிடி நாக்கை புடுங்கிற மாதிரி கேட்டாலும், பயபுள்ளைங்க பேசுறதிலேயும் ஒரு நேர்மை இருக்கதானே செய்யுது?

சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு பிரஸ்மீட். அது விஜயகாந்த் நடிச்ச ஏதோ ஒரு படம். சைதாப்பேட்டை சிக்னல் அருகே இருக்கிற அரசாங்க பில்டிங்கிலே ஷ¨ட்டிங். லைட்டு வெளிச்சத்துக்கு முன்னாடி விஜயகாந்த் வசனம் பேசிக் கொண்டிருக்க, அவரு வர்ற வரைக்கும் நாங்களெல்லாம் ஒரு ஷாமியானாவுக்கு கீழே சேர் போட்டு உட்கார்ந்திருந்தோம். அந்த நேரம் பார்த்துதான் அவன் வந்தான். ஷ¨ட்டிங் நடக்கிற ஏரியாகிட்டே போனா விரட்டி விட்ருவாய்ங்கன்னு நெனச்சானோ என்னவோ, எங்க பக்கத்திலே வந்து நைசாக உட்கார்ந்தான். "சாரு, நீங்கள்ளாம் யாரு?"ன்னான் அப்பாவியாக. "ஏம்ப்பா, என்னா விஷயம்?"னாரு விக்கி. "கேப்டன்னா எனக்கு உசிரு சாரு"ன்னவன், இங்கிருந்தபடியே அங்கிருக்கும் அவரை ஏக்கமாக நக்கினான். விக்கிக்கு செம கோவம். பிரஸ்சுக்கு போட்ட சேர்லே ஒரு ரசிகன் வந்து உட்கார்ந்திட்டானேன்னுதான்.

அதோட முடிஞ்சிருந்தா பரவாயில்லை. "சாரு, நானு என் புள்ளைய து£க்கிட்டு கேப்டனோட படத்தை பார்க்க போனேன். கூட்ட நெரிசல்ல புள்ள செத்து போச்சு. அப்பவும் விடாம, படத்தை பார்த்திட்டுதான் பொணத்தோட வீட்டுக்கு போனேன்"னான். அவ்வளவுதான். அதுவரைக்கும் போனா போவுதுன்னு அவனை அனுமதிச்ச அத்தனை பேருக்கும் செம கோவம். "எந்திர்றா நாயே..."ன்னாரு விக்கி. மற்றவங்களும் சேர்ந்து கொள்ள, ஒரே தள்ளு. அடுத்த செகண்ட் ரோட்டில் இருந்தான் ரசிகன்.

சிலுக்கு கடிச்சி வச்ச ஆப்பிளை ஏகப்பட்ட ரூவாய்க்கு ஏலம் எடுத்து, உலகத்தையே ஒரு ஆப்பிளின் கீழே கொண்டு வர நினைச்ச, நவீன அலெக்ஸ்சாண்டருங்க திரியுற பூமி இது. இங்கதான் நான் பார்த்தேன் அந்த கொடூரத்தையும். ரஜினி நடிச்ச ஒரு படத்துக்கு போயிருந்தேன். படத்திலே ஒரு போலீஸ் ரஜினிய அடிக்க, பாராவுக்கு வந்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருத்தரை புரட்டி எடுத்திட்டாய்ங்க சில பேரு. "எங்க தலைவரையா அடிச்சே?"ன்னு அவரை புரட்ட, "யோவ் நான் எங்கேய்யா உங்க தலைவர அடிச்சேன்?"னு ஓடிப் போனாரு தியேட்டரை விட்டே. போற வேகத்திலே அவரு பின்னாடியே விரட்டிட்டு போயி 'து££££...'ன்னு துப்பிட்டு ஓடி வந்தாரு ஒரு வெறிபிடிச்ச ரசிகரு. ஓடிப்போன போலீஸ்காரர் ஒரு படையோட திரும்பி வந்த போது, அப்பாவி ரசிகருங்கதான் மாட்னாய்ங்க. கிர்ணிப்பழமே கிழிஞ்சு தொங்குற அளவுக்கு அடிச்சி பின்னிட்டாய்ங்க. எச்சல் துப்பினவன் எஸ்கேப் ஆகிவிட, மிச்சர் தின்னவன்லாம் மாட்னான் அன்னிக்கு!

இது போன வாரத்து காமெடி. விஜய்யோட பிறந்த நாளுக்கு பிரஸ்சை கூப்பிட்டிருந்தாங்க. திரும்புற இடத்திலே எல்லாம் கொல கொலயா தலைங்க. உச்சி வெயில் வேற மண்டையிலே இறங்கி, தண்டு வடத்திலே தாளம் போடுது. எரிச்சல்ல திரண்டிருந்த ரசிகருங்க கூட்டத்தை வேற சமாளிக்க வேண்டியதா போச்சு ஒவ்வொரு நிருபருக்கும். காது பக்கத்தில வந்து கேத்தான் ஃபேன் மாதிரி காத்தடிச்சிகிட்டே கத்துறாய்ங்க தலைவா££££ன்னு! உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு உருண்டுகிட்டே போனா எப்படியிருக்கும்? அப்படி ஒரு அனுபவம் உள்ளே போவதற்குள்.

காலையிலே இருந்து விஜயோட முகம் தெரியுமான்னு காத்து கிடந்தவங்களுக்கு, ஒருத்தர் வந்து இறங்கியதும் உள்மனசெல்லாம் பல்பு எரிஞ்சுது. அது யாரு? நீங்க நினைக்கிற மாதிரி நடிகையெல்லாம் இல்லை. ஒரு ஆங்கில நாளிதழின் நிருபி. பார்க்க கொஞ்கம் ஸ்மார்ட்! வெயில் என்பதால் அன்னைக்கு பார்த்து பெரிய கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஒரு நடிகை ரேஞ்சுக்கு காரிலிருந்து இறங்கினார். யாரோ ஜுனியர் ஆர்ட்டிஸ்டு போலிருக்கு. விஜயை வாழ்த்த வந்திருக்காங்கன்னு நினைச்ச செக்யூரிடி, சூனியரெல்லாம் அந்த கேட்... அந்த கேட்டு...ன்னு குச்சியை வச்சுகிட்டு லொட்டு லொட்டுன்னு அந்தம்மா பக்கத்திலே தட்ட, செம டென்ஷன் அவங்களுக்கு. "ஸ்டுப்பிட்... நான் பிரஸ்"சுன்னாரு கோவமா. பதறிப்போன செக்யூரிடி "அம்மா போங்கம்மா"ன்னு வழிவிட்டாரு.

அதுக்குள்ளே எவனோ ஒருத்தன் வெந்த புண்ணிலே வெளக்கு மாவு படைச்சிட்டான். டேய்... அசினுடான்னு அவன் கத்த, அவ்வளவுதான். பண்ருட்டியிலேயிருந்து பறந்து வந்த பலாப்பழ கொசுங்க மாதிரி மொய்ச்சிட்டாய்ங்க. பண்ருட்டிகளின் தின்ருட்டி அட்டகாசம் ஆரம்பமாயிருச்சு. இடுக்காலே ஒருத்தன் கைய விட்டு இடுப்பை கிள்ள, அப்படியே ஆளாளுக்கு கையை விட ஆரம்பிச்சிட்டாய்ங்க. "ஸ்டுப்பிட்...நான்சென்ஸ்.. ஆ... கிள்ளுறானே..."ன்ன்னு ஒரே கூச்சல் இவங்ககிட்டேயிருந்து.

நல்லவேளை நாலைஞ்சு பேரு இதை கவனிச்சிட்டோம். படக்குன்னு பாஞ்சு நிருபியை (தொடாம) வளைச்சு பிடிச்சோம். அப்படியே காப்பாற்றி ஹாலுக்குள் கொண்டு வந்தோம். மேலு கையெல்லாம் ஒரே கிள்ளல் காயம். ரொம்ப நேரம் "ஸ்டுப்பிட்ஸ்..."னு முணுமுணுத்துகிட்டேயிருந்தாங்க நிருபி. நிருபர்களின் கேள்வி கணைகளுக்கு பதில் சொன்ன விஜய், இவங்க சும்மாவே இருக்கறதை கவனிச்சுட்டாரு. "என்ன மேடம். எனி கொஸ்டீன்ஸ்..."ன்னு கேட்டாரு. அவ்வளவுதான். வெறி புடிச்ச மாதிரி "நத்திங்..."ன்னுச்சு நிருபி. அவரு கிளம்புற நேரத்திலே கிட்டே போயி "என்னைய உங்க ரசிகருங்க கிள்ளிட்டாய்ங்கன்னு நிருபி சொல்ல, விஜய் போட்ட முதல் உத்தரவு, "யோவ்... இவங்களை பத்திரமா கார்லே ஏத்திவிட்ருங்க" என்பதுதான்.

வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு இப்படியா இருக்கணும்?

25 comments:

ரவி said...

சூப்பர் !!!!!!!!!!!!!!!

butterfly Surya said...

வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு............??????


சைலன்ஸ்....

RRSLM said...

//நல்லவேளை நாலைஞ்சு பேரு இதை கவனிச்சிட்டோம். படக்குன்னு பாஞ்சு நிருபியை (தொடாம) வளைச்சு பிடிச்சோம். //
ஹ ஹா............... நம்பிட்டோம் தல........(இப்போ புரிஞ்சி போச்சி ,பதிவுக்கு மத்தியில எதுக்கு இவ்ளோ gap எடுத்துக்க கொள்கிறீர்கள் என்று.)

தினேஷ் said...

//இடுக்காலே ஒருத்தன் கைய விட்டு இடுப்பை கிள்ள, அப்படியே ஆளாளுக்கு கையை விட ஆரம்பிச்சிட்டாய்ங்க//

கிடைச்ச கேப்புல என்ன என்ன பண்றாங்கே ...

Sridhar said...

வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு............??????

சைலன்ஸ்....

இது சூப்பரு

butterfly Surya said...

நன்றி. Sridhar சார்...

நலமா..??

R.Gopi said...

//வண்ணத்துபூச்சியார் said...
வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு............??????


சைலன்ஸ்....//

ஏய்.................. படிச்சுட்டு இருக்கோம்ல..............

// படக்குன்னு பாஞ்சு நிருபியை (தொடாம) வளைச்சு பிடிச்சோம்//

"தல" ஒங்கள நம்பிட்டோம்........... இவிங்கள இன்னுமா இந்த ஊர்காரைங்க நம்பிட்டு இருக்காங்க (இது நாங்க சொல்லல..... ஊரு சொல்லுதுபா......)

biskothupayal said...

வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு இப்படியா இருக்கணும்?


கிளம்பிட்டான்யா! கிளம்பிட்டான்யா !!!!!!!!!!!!!!!!!!!!

நா.இரமேஷ் குமார் said...

வண்ணத்துபூச்சியார் said...
//வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு............??????


சைலன்ஸ்....//

சூப்ப‌ர்

கலையரசன் said...

காக்டெயல் மாதிரி...
அருமையா 3 பேர் ரசிகர்கள் பண்ணிய
அட்டகாசங்களை அடுக்கிட்டீங்க பாஸ்!!

Bhaskar said...

'Anupavam' pudhumai

Anonymous said...

otha alith kumar rasigargal pathi solla theriyatha unaku... baaduu

Senthilkumar said...

/**
கிர்ணிப்பழமே கிழிஞ்சு தொங்குற அளவுக்கு அடிச்சி பின்னிட்டாய்ங்க. எச்சல் துப்பினவன் எஸ்கேப் ஆகிவிட, மிச்சர் தின்னவன்லாம் மாட்னான் அன்னிக்கு!
**/

சூப்பர் டயலாக் பங்காளி!!.. சினிமா-இக்கு கதை வசனம் எழுதலாம் நீங்க.

Anonymous said...

unga blog enaku romba pidikum... romba nalla eluthiringa...
innaikum valama pola kalakitinga.

அன்பரசு said...

நம்ம வருங்கால மொதல்வர் டாக்டர் தம்பி பண்றதப் பாத்து இப்பவே கண்ணக் கட்டுதே...

சப்ராஸ் அபூ பக்கர் said...

இப்படியெல்லாம் நடக்குதோ???....... திலகம் எதுவுமே இன்னும் என்கிட்ட சொல்லல்ல....(ஹி.....ஹி........)

அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க......

Joe said...

வருங்கால இந்திய பிரமதரை குறைத்து மதிப்பிட்ட, அந்தணனுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். ;-)

உண்மைத்தமிழன் said...

இது போதும்...

தொகுதிக்கு பத்தாயிரம் மகளிர் வாக்குகளை அள்ளிரலாம்..!

Arun said...

varungaala CM? no comments.. as usual kalakkal padhivu.. thanks annaathe..

Venkat said...

poda thevidya payya :D yen un soothu ippadi yeriyuthu vijay publicity ya pathu :D :D asith ali fan comedy thaangala pa :D

Barath said...

///வருங்கால இந்திய பிரமதரை குறைத்து மதிப்பிட்ட, அந்தணனுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். ;-)////

நீங்களும் கொறச்ச்சு மதிப்பிட்டுடீங்க... அண்ணன் வருங்கால அமெரிக்க அதிபர்... டாக்டர் அண்ணன் வாழ்க.. வருங்கால அமெரிக்க அதிபர் விஜய் வாழ்க..

Barath said...

அண்ணன் ரசிகர்கள் சில பேரு இங்கேயும் வேலைய காட்டுறாங்க போல.... அண்ணன் கிட்ட சொல்லி உங்களயும் பாதுகாக்கணும்....

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு..!

Anonymous said...

so unna porutha varaikum ajith mattum thaan ulagathula nallavan ... eluthalan na biased ah illama irukanum avan thaan eluthalan ...thu ...