Monday, April 6, 2009

"டேய்... மாப்ளே, இவனை ஒரு போட்டோ எடு...."

சென்னையில் வலம் வரும் எந்த பஸ்சை பார்த்தாலும், சப்பாத்திக்கு மாவு பிசையுற மிஷின் மாதிரியே தோன்றும் எனக்கு. அதுவும் பீக் அவர்சில் பயணம் செய்பவர்களின் பாடு இன்னும் கொடுமை. பாக்கு இடிக்கிற உரலுக்குள் சிக்கி கொண்டது மாதிரியே பிதுங்கி போவார்கள். ஷேர் ஆட்டோக்களின் கருணைக்கும் தப்பி, இப்படி சிக்கிக் கொள்கிறவர்களை பற்றி எனக்கு அதிக கவலை உண்டு.

தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு பாடாய் படுத்துகிற மாத்திரை மாதிரியே இன்னும் சில பஸ்கள். மேம்பாலத்தின் நடுவிலோ, அல்லது சுரங்க பாலத்தின் மத்தியிலோ 'பொசுக்' என்று விழுந்துவிடும். இறங்கி தள்ள எவருக்கும் பொறுமை இருக்காது. கிடைக்கிற சந்தில் ஊர்ந்து, கடந்து, மறுபக்கத்தை அடைகிற இரு வீலர் உரிமையாளன் நான் என்பதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமித 'ஸ்மைல்' உண்டு.

சாலையில் நடக்கும் இத்தனை களேபரத்திற்கு நடுவில் செக்கிங் என்ற பெயரில் ஏறி, அதே இடத்திலேயே பஸ்சை நிறுத்தி 'கொலகார பாவிங்க' லிஸ்ட்டில் தன்னையும் இணைத்துக் கொள்வார்கள் செக்கர்கள். அப்படி ஒரு செக்கருக்கும், என் நண்பருக்கும் இடையே நடந்த சுவையான சம்பவம் இது.

நண்பர் நெல்லை பாரதி அப்போது ஒரு புலனாய்வு இதழில் நிருபராக இருந்தார். காலை பத்து மணிக்கு சுமாருக்கு இவர் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஏறினார் செக்கர் ஒருவர். நல்ல கோடை காலம். பஸ்சை ஜெமினி பாலம் அருகே ஓரம் கட்டிவிட்டார் டிரைவர். டிக்கெட், டிக்கெட்... என்று பரிசோதித்துக் கொண்டே வந்தார். அதற்குள் பலர் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்று பெருமூச்சு விட்டார்கள். அடிக்கடி வாட்சை பார்த்துக் கொண்டார்கள் பலர். ஏனென்றால் அது அலுவலகம் போகிற நேரம்.

பாரதி சும்மாயில்லாமல், "பீக் அவர்ஸ்ல செக் பண்றீங்க. பரவால்ல. வண்டிய எதுக்கு நிறுத்தறீங்க? அது பாட்டுக்கு போகட்டுமே, நிறைய பேரு ஆபிசு போகணும்லே..." என்றார். செக்கருக்கு மூக்கு மேல் மிளகாய் பொறிந்தது. "யோவ்... முதல்ல உன் டிக்கெட்டை எடு" என்றார். அவ்வளவுதான், பாரதிக்குள் இருந்த அயோத்தி குப்பம் வீரமணி 'விசுக்' என்று எழுந்து கொள்ள, செக்கரை இரண்டு கைகளாலும் இறுக கட்டிக் கொண்டார். "டேய்... மாப்ளே, இவனை ஒரு போட்டோ எடு. முதல் பக்கத்திலே போட்டு தாளிச்சிடலாம்" என்றார். பக்கத்தில் இருந்த போட்டோகிராபர் அவசரம் அவசரமாக கேமிரா பையை ஓப்பன் செய்ய, அடடா... பத்திரிகைகாரனுககிட்ட மாட்டிகிட்டமே என்பதை உணர்ந்து பாரதியின் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டு பஸ்சில் இருந்து கீழே குதித்தார் செக்கர்.

பின்னாலேயே நெல்லை பாரதியும் குதிக்க, அயன் படத்தில் வருகிற மாதிரி பிரமாதமான சேசிங். கொஞ்ச து£ரம் விரட்டிக் கொண்டே ஓடிய நெல்லை பாரதி, பின்னால் திரும்பி செக்கர் வந்த ஜீப்பை பார்த்ததும் ஓட்டத்தை நிறுத்திவிட்டார். "எப்படியிருந்தாலும், இந்த ஜீப்பை எடுக்க நீ வந்துதானே ஆகணும் மாப்ளே, வா" என்பது அவரது கணக்கு. பஸ்சை போக சொல்லிவிட்டு இவரும் போட்டோகிராபரும் செக்கரின் ஜீப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். நேரம் கடந்து கொண்டிருந்தது. இவர்களும் போவதாக இல்லை. செக்கரும் வருதாக இல்லை. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒருவர் மெல்ல இவர்கள் அருகில் வந்து, "சார்... செக்கரு தெரியாம பண்ணிட்டாராம். உங்களுக்கு பயந்து வள்ளுவர் கோட்டம் சந்துக்குள்ளே நிக்கிறார். நீங்க போயிட்டீங்கன்னா இந்த ஜீப்பை எடுத்திட்டு போயிடுவாராம்" என்றார். "எங்க நிக்கிறாரு, காட்டு?" என்று வந்தவரை இழுத்துக் கொண்டு கிளம்பினார்கள் நெல்லையும், போட்டோகிராபரும்.

சொன்ன மாதிரியே வள்ளுவர் கோட்டம் சந்துக்குள் பம்மிக் கொண்டு நின்றார் செக்கர். து£ரத்திலேயே அவரை பார்த்துவிட்ட நெல்லை, பின்புறமாக ஓடிப்போய் அவரை இறுக்கமாக கட்டிக் கொண்டார். "டேய் மாப்ளே, எட்றா போட்டோவ" என்றார். செக்கர் திமிர, நெல்லை இறுக்க, இறுதி வெற்றி போட்டோகிராபருக்கு.

மார்பளவு போட்டோ போதும் என்றாலும், பின்னால் நின்று இறுக்கிய பாரதியின் கைகளும் அந்த மார்பளவு போட்டோவில் மறைக்க முடியாமல் விழுந்திருந்தது. "போடுங்க அந்த கையோடவே" என்றார் எடிட்டர். எல்லாருக்கும் கையளவு மனசு. பாரதிக்கு மட்டும்தான் 'கையளவு' துணிச்சல்!

17 comments:

R. said...

ninga vandiya ottra azagu irukke super. ungalakku aduthu yaarnu ungalukke theriyum. aayiram kan pathaathu. (ithil entha ulkuththum illai)

அன்புச்செல்வன் said...

அண்ணே! போட்டுத்தாக்குரீங்க,தினமும் ஒரு முறை உங்க பதிவை பார்க்காம விடுவதில்லை. வாழ்த்துக்கள் !

-அன்புச்செல்வன்(U.S.A)

Anonymous said...

That's hilarious! :-)

வண்ணத்துபூச்சியார் said...

தினமும் ஒரு முறை உங்க பதிவை பார்க்காம தூங்கறதில்லை.

கலக்கல்.

Simple_Sundar said...
This comment has been removed by the author.
Simple_Sundar said...

டூ-வீலரில் போகும்போது டிராபிக் போலீசாரிடம் மாட்டி பின்னர் PRESS என்று சொல்லி நீங்களோ அல்லது வேறு யாரோ தப்பித்த சுவாரஸ்யமான கதை ஏதாவது இருந்தால் வெளியிடவும். (எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அச்சகத்தில் பணிபுரிகிறார். சும்மாகாட்டியும் PRESS என்று ஸ்டிக்கரை வண்டியின் முன்புறம் ஒட்டிவைத்து அனைவருக்கும் டேக்கா கொடுத்து வருகிறார்.)

- சுந்தர்

நா.இரமேஷ் குமார் said...

அந்தணனுக்குள்ள இருக்கிற 'அந்நியனை' இப்போ தான் பார்க்கிறேன்.

Anonymous said...

intha checker thevidiya pasanga panra thollai thaanga mudiyaathu..antha naayingalukku itha padikka kodukanum..ella checkers-ayum sollai..etho ivangathaan laadu labakku daasunu ninaikira naatharingala mattum..

MAHESHWAR said...

Antha Marbalavu Photovaiyum pottirunthal nalla irunthirukkum. Try pannunga sir.

Subbu said...

தினமும் ஒரு முறை உங்க பதிவை பார்க்காம வேலைய விட்டு கிலம்புவதில்லை ;)

Senthil said...

kalakkareenga annae

Joe said...

ஒரு அப்பாவியெ விரட்டி விரட்டி பயமுருத்திருக்கீங்க, பாவம்!

அது என்ன இரு வீலர் ?!?
டூ வீலர், இல்லைன்னா இருசக்கர வாகனம்-னு சொல்லுங்க! ;-)

வெடிகுண்டு வெங்கட் said...

அந்நியன் அந்தணன். சூப்பர்.

R. said...

உங்க நண்பரின் பிளாக்கை பார்த்தீங்களா?

http://chudachuda.blogspot.com/

உங்களை பற்றி எழுதிருக்காரு

பட்டாம்பூச்சி said...

பாவங்க அவரு :)
வெரட்டி வெரட்டி லவ் பண்ணவங்கள மட்டும்தான் பார்த்திருப்பார்.
நீங்க வெரட்டி வெரட்டி படம் பிடித்து பயமுறுத்திட்டீங்களே :).

கிரி said...

ஹா ஹா ஹா செம காமெடி.. செக்கர் நிலைமை தான் பரிதாபம் :-)

வெங்க்கி said...

உண்மையிலேயே மகா மகா லொள்ளு கும்பல் தான் சார் நீங்க...நம்ம frequency லேயே வரீங்க....உங்க contact குடுங்க...கண்டிப்பா இந்தியா வரும் போது உங்களை நான் சந்திக்கணும்.. :))

keys.ven@gmail.com