Monday, April 20, 2009

அன்புக்கும் உண்டு அவிச்ச முட்டை!

'அழுக்கு போக சோப்பு, சோப்பு டப்பா அழுக்கு!' இது அன்பு வேலாயுதத்தோட கவிதை. நாங்கள்ளாம் "அன்பேய்..."ம்போம் அவரை!

"கொரு... (குரு என்பதாக கொள்க) செல நேரம் ட்ரெயின் வீட்டிலேந்து வந்திட்டு இருக்கா, இல்லே நாமதான் வீட்டுக்கு போயிட்டு இருக்கோமான்னே தெரியலையே கொரு..."ம்பாரு. சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ து£ரத்திலிருந்து தினமும் இங்க வந்து வேலை பார்த்திட்டு போன மகானுபவசாலி இந்த அன்பு. "நீங்க திருவள்ளுவர் இல்லே, ஆனா தங்கச்சி வாசுகியாதான் இருக்கணும்" என்பேன் நான். நாலு மணிக்கெல்லாம் அவரது மனைவி எழுந்து, சாம்பார், ரசம், பொறியல், கூட்டு, வற்றல், ஊறுகாய், மற்றும் தயிருடன்தான் அனுப்புவார் இவரை. இவற்றுடன், மறக்காமல் ஒரு அவிச்ச முட்டையும் இருக்கும் அன்புவின் டிபன் கேரியரில்! "அன்பேய்... எப்பிடிங்க இதெல்லாம்?"னு கேட்காதவங்க ட்ரெயின்லே இவருகிட்ட பிச்சையெடுக்கிற சமானியர்கள் மட்டும்தான்! மற்றபடி எல்லாரும்.

கொஞ்சம் கூட சிரிக்காம தீக்குச்சிய கிழிச்சு சீட்டுக்கு கீழே வச்சுட்டு, நம்பளையே கவனிக்கிற குசும்பன் இந்த மனுஷன். ஒருமுறை டிஆர் கேட்டார். "ஏன்யா, நம்ம தலையங்கத்தை பற்றி என்னய்யா பேசிக்கிறாங்க வெளியிலே? ஏன்னா நான் உங்களை மாதிரி டீக்கடையிலோ, பஸ் ஸ்டான்டிலோ நின்னு அவங்க பேசிக்கறதை கேட்க முடியாதில்லையா? அதான் கேட்டேன்"னாரு.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு தகவல். இதழில், தலையங்கம் முடிகிற இடத்தில், இன் பிரிண்ட் என்று சொல்லப்படுகிற அச்சக விபரங்கள், மற்றும் ஆசிரியர் குழு விபரங்களை அச்சிட்டு வந்தார்கள். வாரம் தவறாமல் இது அந்த இடத்திலேயே வந்து கொண்டிருந்தது.

அன்பு சொன்னாரு. "அண்ணே, எல்லாம் பிரமாதம்னு சொல்றாங்க. ஆனா, தலையங்கத்தை முடிக்கும்போது மட்டும் ஏன் ஒரே மாதிரியா முடிக்கிறாருன்னு பேசிங்கிறாங்கண்ணா" என்றார் சிரிக்காமல்! அவரும் அன்பு என்ன சொல்றாருன்னு புரியாமலேயே, "இல்லீயே... நாம எங்கய்யா ஒரே மாதிரி முடிக்கிறோம்"னாரு. "இல்லேண்ணே, எல்லா தலையங்கத்தையும் முடிக்கும்போதும், கதைகளில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே. அச்சிட்டு வெளியிடுபவர் டி.ராஜேந்தர்னே வருதே, அதான் ஏன்னு கேட்கிறாங்க?" என்று சொல்ல, விழுந்து சிரித்தாரே பார்க்கலாம் டிஆர். "யோவ், பயங்கர குசும்பன்யா நீ" ன்னாரு சிரிச்சுக்கிட்டே!

அப்போது டாக்டர்களின் பேட்டிகள் அன்புவின் பொறுப்பில்தான். தினமும் சென்னைக்கு 200 கி.மீ து£ரத்திலிருந்து வருவதால், மருத்துவர்களை வாரா வாரம் சந்தித்து எழுதுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது அன்புவுக்கு. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்ன வேலையை மெனக்கட்டு செய்து வந்தார். "கொரு, இந்த வாரத்துக்கு ஒருத்தரும் சிக்கலையே? ஒரு ஆளுகிட்டே பேசினேன். ஏழு மணிக்கு வாங்கிறாரு. அந்த நேரத்திலே நான் போற ரயிலு எந்த ஸ்டேஷன்லே நிக்குதோ, யாரு கண்டா?" என்று அலுத்துக் கொண்டார். பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த போதுதான் அன்புவின் கண்களில் அந்த போர்டு சிக்கியது.

பெரிய திருமண மண்டபத்தின் வாசலில், 'மருத்துவர்கள் மாநாடு' என்று பெரிய பேனர் தொங்கிக் கொண்டிருந்தது. வாசலில் தட புடலான அலங்காரங்கள். "கொரு... இன்னும் கொஞ்ச நாளைக்கு அலைய வேண்டிய அவசியமே இல்ல. மொத்த டாக்டருங்களையும் இங்கேயே புடிக்கிறோம். வாரம் ஒரு கட்டுரை"ன்னு உற்சாகமா வண்டிய விட்டு குதித்தே விட்டார் அன்பு.

நான் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போவதற்குள், போன வேகத்தில் கெக்கேக்கேன்னு சிரிச்சுகிட்டே ஓடிவந்தாரு! "கொரு... கொரேய்... ஏமாந்துட்டோம் கொரேய்"னாரு, கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் வெளியே வர! நான் தயக்கத்தோடு உள்ளே நோக்க, அது முடி திருத்துபகிற சகோதரர்களின் மாநாடு. பாரம்பரியமாக அவர்கள் மருத்துவர்கள் என்பதால், வாசலில் அப்படி ஒரு போர்டு. ஆனாலும் விடாப்பிடியாக உள்ளே நுழைந்தோம் இருவரும். அங்குதான் அன்புவுக்கு கிடைத்தது நெகிழ்ச்சியான அந்த சந்திப்பு. அவருடைய பால்ய கால நண்பர் ஒருவர் அந்த மாநாட்டில் இருந்தார். வெகு காலம் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். சென்னையில் மிகப்பெரிய சலு£ன் ஒன்றை வைத்து நடத்துகிறார் அவர். கட்டிப்பிடித்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்கள் இருவரும்.

ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார் அன்பு. ஆனால், இப்போதும் முடி திருத்த, திருத்தணியில் இருந்து சென்னைக்குதான் வருகிறார். வேறொன்றுமில்லை, அதற்கு காரணம் வார்த்தைகளில் அடங்காத ஒரு உணர்வு இருக்கிறதே... அதுதான், அன்பு!

9 comments:

butterfly Surya said...

அன்பு மிகவும் அன்பானவர்.

ஏன் ஊரிலேயே செட்டில் ஆகி விட்டார். அதற்க்க்கும் ஏதாவது பின்னணி இருக்குமே..??

anthanan said...

ராத்திரி பதினொரு மணிக்கும் வண்ணத்துப்பூச்சி முழிச்சிருந்து கமெண்ட் அனுப்புதே, நன்றியய்யா நன்றி!

அந்தணன்

Unknown said...

சூப்பர் சூப்பர் சூப்பர்.
நம்ம டி ஆர் மகன் பற்றி "எதாவது" எழுதுங்க தலைவா. உங்க மற்ற website மாதிரி.

butterfly Surya said...

நன்றி மறப்பது நன்றன்று.


உங்களை விட முடியுமா அந்தணன் சார்.

தமிழ் சினிமா.காம் தொடர் பதிவுகள் அனைத்து படித்தேன் அருமை.

எவ்வளவு ரசிச்சு பொறுப்பா எழுது இருக்கிங்க..

அதுவும் உங்களோட் சொந்த வலையா..??

அருமை

வாழ்த்துகள்.

Sridhar said...

அன்பிற்கும் உண்டோ அடைகும் தாழ்.

நமது அன்பிற்கும் உண்டோ அவிச்ச முட்டை ( வெஜ் வாய்லே என்ன வார்தை) சிவ சிவ

அன்புச்செல்வன் said...

ஆஹா இது வேற அன்பா?, அவிச்ச முட்டை எனக்கோன்னு நெனச்சுட்டேன், ஏமாந்துட்டேன் கொரேய் (குரு), அவிக்காத முட்டை இருந்தா அனுப்புங்க பாஸ்!

ஈ ரா said...

// "இல்லேண்ணே, எல்லா தலையங்கத்தையும் முடிக்கும்போதும், கதைகளில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே. அச்சிட்டு வெளியிடுபவர் டி.ராஜேந்தர்னே வருதே, அதான் ஏன்னு கேட்கிறாங்க?" //

Xavier said...

தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக்ச்சிறப்பான நடையில் உள்ளது. வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.

Anonymous said...

Innum knojam Nadigar Murali matter irrunthaa sollungaa? Avaru leelaigal ellam padikka aarvamaai ulloam.