Sunday, April 19, 2009

த்ரிஷாவும், சில கெட்டவார்த்தைகளும்...

'குப்புற கெடக்குது வீண, குனிஞ்சு பாருய்யா கேன'ன்னு யாரோ உசுப்பி விட்டுருக்கணும். இல்லேன்னா, சாதாரண 'ரிச் கேர்ள்' ஆக இருந்த த்ரிஷா, ரசிகர்களின் 'ரிசர்ச்' கேர்ள் ஆக மாறுவாரா? மௌனம் பேசியதே படத்தில் த்ரிஷாவை பார்த்தப்போ, விளம்பரத்தில் வந்த இந்த ஹார்லிக்ஸ் அம்மா, தமிழ்சினிமாவின் ஊட்டச்சத்தாக மாறுவார்னு நினைக்கவே இல்லே. விமர்சனம் எழுதறப்போ, பேனா முனையை 'நல்லா அழுத்தி' த்ரிஷாவுக்கு வலிக்கிற மாதிரி எழுதி தொலைச்சுட்டேன். தமிழை பொறுத்தவரைக்கும் அவர்தான் சாலமன் பாப்பியாச்சே? அதனால், (நான் நினைச்சா மாதிரியே) அவரு அதை படிக்கலே! ஆனா அமீர் படிச்சிட்டாரு. தினமும் ஒரு தடவையாவது போன் அடிக்கிற முத்துராமலிங்கம், நான் போன் அடிச்சா கூட, "ம்... ம்ஹ§ம்..."னு ஓரெழுத்திலேயே பேசிட்டு இருந்தாரு. ஏன்னா, இவரும் அமீரும் திக் பிரண்ட்ஸ். விஷயம் புரிஞ்சுது எனக்கு. "படத்தை நல்லா எழுதிட்டேன். த்ரிஷாவ எழுதுனா அமீருக்கு ஏன் கோவம் வரணும்"னேன் மு.ராவிடம்.

"அதில்லே பிரதர், படம் ரிலீஸ் ஆனதும் வர்ற முதல் விமர்சனம். என்னா எழுதியிருக்காங்கன்னு ஆவலா இன்டர்நெட்டை ஓப்பன் பண்ணியிருக்கார். பயங்கர அப்செட்"டுன்னார் மு.ரா! படத்தோட தயாரிப்பாளர் ரகு, அமெரிக்கவாசிங்கிறதால அவரும் தமிழ்.சினிமா.காம் பார்த்திட்டு அமீரிடம் சொல்ல, இரட்டை வருத்தம் டைரக்டருக்கு! அப்படியே வருஷம் நிமிஷமா ஒடிருச்சு.

ராம் ரிலீசுக்கு பின்னே பருத்தி வீரனுக்காக சூர்யாவிடம் கதை சொல்ல நேரம் கேட்டாராம் அமீர். நான் பெரிய பேனருக்குதான் படம் பண்ணுற ஐடியாவில் இருக்கேன்னு அவரு சொல்ல, ஸ்ரீகாந்திடம் வந்தார். அதுவரைக்கும் ராம் பார்த்திருக்கவில்லை ஸ்ரீ. படத்தை காட்டவும் ரெடியாக இருந்தார் அமீர். பிரசாத் லேப் தியேட்டர். ஸ்ரீகாந்த் படம் பார்த்துக் கொண்டிருக்க, நாங்க வெளியே நின்றிருந்தோம். இவரு அந்தணன்னு மு.ரா நினைவுபடுத்த சரக்கென்று ஃபிளாஷ்பேக் அடிச்சார் அமீர். "த்ரிஷாவ பற்றி அப்பிடி எழுதினீங்களே, இன்னைக்கு அவங்க லெவல் தெரியுமா?"ன்னாரு பழைய கோபம் முகத்தில் கொப்பளிக்க!

இடையிலேயே த்ரிஷாவ நான் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்துச்சு. 'மனசெல்லாம்' ஷ§ட்டிங் ஸ்பாட்லேதான். நான் ஸ்ரீ யை பார்க்க போவேன். மெல்லிசா ஒரு புன்னகையை அனுப்பிவிட்டு புத்தகம் வாசிச்சுட்டு இருப்பாரு த்ரிஷா. (அவரு படிச்ச படிப்புக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்செல்லாம் கூட பாஸ் பண்ணியிருக்கலாம். எந்நேரமும் புத்தகமும் பொய்யுமாவே இருப்பாரு ஷ¨ட்டிங் ஸ்பாட்ல) இவரும் ஸ்ரீ யும் ஏற்கனவே பிரண்ட்ஸ்சுங்கறதால, என்னையும் வச்சுகிட்டு ஸ்ரீ அடிக்கிற கமெண்ட்டுக்கு த்ரிஷாவ தவிர யாரா இருந்தாலும், பத்ரகாளி டான்ஸ் ஆடியிருப்பாங்க. ஆனா, த்ரிஷாவின் பேலன்ஸ் ஷீட்டில், வட்டியும், நட்டமும் சிரிப்பை தவிர வேறில்லை.

'த்ரிஷாவும் சில கெட்ட வார்த்தைகளும்'னு தலைப்பை போட்டுட்டு இப்படி மொக்கை போடுறீயேன்னு நீங்க மூச்சு வாங்க, என்னை காய்ச்ச ரெடியாவறது கேக்குது ஃபிரண்ட்ஸ். ...ந்தா வந்திட்டேன்... (தொடர்ந்து படிக்கறதுக்கு முன்னால பதினெட்டு வயசுக்கு கீழே இருப்பவங்க இந்த பக்கத்தை குளோஸ் பண்ணிட்டா, உங்களை கெடுத்தேங்கிற பாவத்திலேர்ந்து விடுதலை கிடைக்கும்)

ஒரு இளம் ஹீரோவுடன் பேசிட்டு இருந்தேன். த்ரிஷாவ பற்றியும் பேச்சு வந்திச்சு. "ரொம்ப நல்ல பொண்ணுங்க. வெகுளி"ன்னாரு. எப்படியாம்? இவரு ஒருநாள் ஜென்ஸ் பாத்ரூம்லே ஒன்னாம் நம்பர் போயிட்டு இருக்கும்போது, ரூம் மாத்தி உள்ளே வந்திருச்சாம் பொண்ணு. பதறிப் போய் இவரு ஜிப்பை மூட, "யேய்... ஒன்னுத பார்த்திட்டேனே"ன்னு சிரிச்சிட்டே ஓடுச்சாம் வெளியிலே! அப்படி ஒரு வெகுளின்னாரு. (இதுக்கு பேரு வெகுளியாம்ல?)

படம் பெயர் நினைவில் இல்லை. இப்போ இருக்கிற அளவுக்கு உச்சாணி கொம்பிலே இல்லை த்ரிஷா. ஷ§ட்டிங் ஸ்பாட்டில் பிரஸ்மீட். மரத்தடியிலே டீச்சரை சுத்தி பசங்க உட்கார்ந்து பாடம் கேட்குமே? அப்படி உட்கார்ந்திருந்தோம் த்ரிஷாவ சுத்தி. அதிகம் பேரு இல்லே. வெறும் பத்தே பேர் மட்டும்தான். நிருபர் ஜெயச்சந்திரனும் த்ரிஷாவும் பேசிகிட்டாங்க. ஒரு வெகுளி பொண்ணுகிட்டே எப்பிடியெல்லாம் பேசுறாங்கப்பா. சேச்சே...

அப்புறம் சொல்லுங்க த்ரிஷா, ஸாங்குக்கு அவுட்டோர் போனீங்களே எப்படியிருந்திச்சு?

அதையேன் கேட்கிறீங்க? ஃபாரஸ்ட் ஏரியாங்கறதால ஒரே அட்டை பூச்சி தொந்தரவு. ரொம்ப கஷ்டமாயிருச்சு.

ஐயய்யோ, அட்டை கடிச்சிருச்சா என்ன?

கடிக்கலே, கடிக்கறதுக்கு முன்னாடியே நசுக்கிட்டேன்னு சொன்னவரு அட்டை ஏறுன விஷயத்தை விவரிக்க ஆரம்பிச்சாரு. நான் பாட்டுக்கு புக் படிச்சிட்டே உட்கார்ந்திருந்தேன். திடீர்னு ஊர்ற மாதிரி இருந்திச்சு. (இடையிலே குறுக்கிட்ட ஜெயச்சந்திரன்) எந்த இடத்திலேன்னாரு. இப்போ த்ரிஷா கை காட்டிய இடம், 'கிட்டதட்ட' அபாயகரமானது. ஐயய்யோன்னு தவிச்ச ஜெ.ச "ம்ம்... அப்புறம்"னாரு நாக்கை சப்புக் கொட்டிகிட்டே!

என்னடா ஊர்ற மாதிரி இருக்கேன்னு கையை வச்சு பார்த்தேன். ஏதோ நீளமா கொஞ்சம் உருண்டையா தென்பட்டுச்சு. (இந்த இடத்தில் மறுபடியும் குறுக்கிட்ட ஜெ.ச "இவ்வளவு நீளம் இருக்குமா?"ன்னு விரலை நீட்டி ஒரு அளவை காட்டினார்) "ம்ஹ§ம் இன்னும் கொஞ்சம் பெரிசு. இவ்வளவு பெரிசு இருக்கும்"னு விரலை நீட்டி த்ரிஷா ஒரு அளவை காட்டினார். "பயங்கர கருப்பா இருந்திருக்குமேன்"னாரு ஜெ.ச. "நல்லவேளை, தொட்டு பார்த்ததோடு சரி. அது எப்படியிருக்கும்னு பார்க்கலையே"ன்னாரு த்ரிஷா. நாங்களெல்லாம் பேட்டி போற ரூட்டே சரியில்லையேங்கிற பயத்தோட கவனிக்க ஆரம்பித்தோம். ஆனாலும் ஒருத்தராவது இடையிலே குறுக்கிடனுமே? பயங்கர ஆர்வம் எல்லாருக்கும்.

"அப்புறம் உருண்டையா இருந்த அதை பிடிச்சு வெளியே விட்டுட்டீங்களா?"ன்னாரு ஜெ.ச. "இல்லையில்லே, அதை கையால தொடவே கொஞ்சம் அசூசையா இருந்திச்சு. அதனால் ஸ்கர்ட்டுக்கு உள்ளேயே வச்சு நசுக்கிட்டேன்"னாரு த்ரிஷா.

"ஐயய்யோ, ஸ்கர்ட்டெல்லாம் ரத்தமாயிருக்குமே?" இவரு கவலை இது. "ஆமாம், அப்படியே எழுந்து ரூமுக்கு போயிட்டேன். அப்புறம் வேற ஸ்கர்ட் கொடுத்தாங்க"ன்னு அந்த எபிசோடுக்கு முற்றுப்புள்ளி வைச்சாரு த்ரிஷா.

இந்த உரையாடலின்போது எந்த இடத்திலும் அவரு சிரிக்கவோ, அல்லது குறுகுறுக்கவோ இல்லை. ஒருவேளை அந்த ஹீரோ சொன்ன மாதிரி, த்ரிஷா ஒரு வெகுளி பொண்ணுதானோ?

அன்புச்செல்வன், பாலா, வண்ணத்துப் பூச்சியார், ஜோ, ராஜ், விஜயசாரதி உள்ளிட்ட பின்னு£ட்ட சமூகத்திற்கு, த்ரிஷா மேட்டருக்கு ஞாயிற்று கிழமை வரைக்கும் காத்திருக்க சொன்னேனே... திருப்திதானே?

11 comments:

Anonymous said...

ANthanan,

Parthunga ippadi unamaya sonna aalu vachi adikka poranga.... "naan ungaltha parthutten" itha padicha vudaney ennaku sirippu adangavey illai.

selva

M Bharat Kumar said...
This comment has been removed by the author.
அன்பு said...

அமாங்க பாஸ் ரொம்ப, வெகுளித்தனமான பொண்ணுங்க அது... (தலைவா ஞாயித்துக்கிழமை வரை காக்க வச்சு இப்படி கவுத்திட்டியே,த்ரிஷா மேட்டர்னதும் நானும் என்னமோ ஏதோனு நினைச்சுபுட்டேன்)

Guru said...

அந்தணன் சார், நீங்க பல உண்மைகளை போட்டு உடைக்கிறீர்கள்.. த்ரிஷாவா இவ்ளோ வெகுளியா நெனச்சா ரொம்ப வருத்தமா இருக்கு. உண்மையில் பல நடிகைகள் வெகுளியாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இது போல இன்னும் வெகுளி சம்பவங்கள் இருக்கிறதா??
வாழ்த்துக்கள்

வண்ணத்துபூச்சியார் said...

கலக்கலோ கலக்கல்.

என்ன இவ்வளவு வெகுளியா இருக்கிங்க அந்தணன் சார்.????

அப்பாவி தமிழன் said...

ஏன் சார் இப்டி எங்கள மாதிரி சின்ன பசங்கள எல்லாம் இப்டி வெறுப்பேத்துறீங்க

Sridhar said...

ஆமாம் எல்லாம் சரி. என்கிட்ட சொன்ன அந்த கிளுகிளு மாட்டர் நீங்க
எழுதவே இல்லயே !!!!!!!!!

எதோ என்னால முடிஞ்சது பத்த வச்சுட்டேன். இனிமே அன்புச்செல்வன், பாலா, வண்ணத்துப் பூச்சியார், ஜோ, ராஜ், விஜயசாரதி உங்களை கவனிப்பாங்க.

Joe said...

பின்னூட்ட சமூகம்?!? ஹாஹாஹா!
பின்னூட்ட சமூகத்தை சார்ந்தவர்களும் சில பதிவுகள் எழுதுகிறார்கள், அதற்கு எவரும் பின்னூட்டம் இடுவதில்லையே ஏன்?

"பதிவு நல்லாயிருந்தா தன்னாலே பின்னூட்டங்கள் வரும் போய்யா"-ன்னு சொல்லுவீங்களோ? என்னமோ போங்க!

Anonymous said...

த்ரிஷா அவ்வளோ வெகுளித்தனமா இருக்க கூடாது சார்! மனசு வருத்தமா இருக்கு.

வண்ணத்துபூச்சியார் said...

நீங்க வெகுளின்னூ பின்னூட்டமிட்டா..??

என்ன சார் இப்படி பண்ணீடிங்க..

ஸ்ரீதர் சார் சொல்வது உண்மையா..?

எங்களை ஏமாத்தாதிங்க சார்.

கடவுளே....

அந்தணன் சாரை நம்பினோமே..?? இது என்ன சோதனை..??

Palacios said...

ANthanan, Parthunga ippadi unamaya sonna aalu vachi adikka poranga.... "naan ungaltha parthutten" itha padicha vudaney ennaku sirippu adangavey illai. selva