Sunday, April 26, 2009

நடிகை செருப்பு, நானா பொறுப்பு?

நடுவிலே சுருட்டிகிட்ட மாராப்பாலேயும், நச்சுன்னு வர்ற வீராப்பாலேயும் ஒரு பயனும் இல! இதையெல்லாமா சொல்லுவாரு திருவள்ளுவரு? நான் ரோட்டிலே அகஸ்மாத்தா சந்திச்ச தெரு வள்ளுவருதான் இப்பிடி சொன்னாரு. "அப்புறம் எப்பிடி போவுது பொழப்பு?" நான் கேட்கிறதுக்காகவே காத்திருந்த மாதிரி, "நல்லா கேட்டீங்க தலைவா? இது வேலையா? பொழப்பான்னே தெரியலே. டீசண்டா கேட்டா வேலை, கோக்கு மாக்கா கேட்டா பொழப்பு. உங்களுக்கு தெரியாதா, நீங்கதான் பார்த்தீங்களேன்"னாரு. அது நடந்து வருஷமாயிருக்கும். மனுஷன் இன்னும் அந்த அவமானத்திலே இருந்து மீளலே போலிருக்கு.

"அன்னைக்கு மட்டும் வீராப்பா கோவிச்சுட்டு போகாம இருந்திருந்தா, இன்னைக்கு யாரையாவது புடிச்சு ஒரு படத்தை பண்ணியிருப்பேன் தலைவா. இடையிலே பிரேக் விட்டுட்டேனா? மறுபடியும் ஒரு டைரக்டரை பிடிச்சு சேர்றதுக்குள்ளே தாவு தீர்ந்து, 'தைஸ்' இளைச்சுருச்சு. ஒருவழியா ஒரு இடத்திலே சேர்ந்து, விட்ட இடத்திலேர்ந்து வேலைய தொடர்றேன். சீக்கிரம் ஒரு படம் பண்ணனும்" என்றார் நம்பிக்கையோடு. இந்த நம்பிக்கைதான் பல உதவி இயக்குனர்களுக்கு ஆக்சிஜன், அனாசின், நோவால்ஜின் எல்லாம்....!

நான் நீண்டகாலம் கழித்து சந்தித்த அந்த நண்பர், சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் உதவி இயக்குனராக இருந்தார். அந்த படத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்ததால் அடிக்கடி நானும் அங்கே விசிட் அடிப்பேன். படத்தின் நாயகி ஆர்த்தி அகர்வால். ஆந்திராவில் கொடி கட்டி பறக்கிறார் என்பதற்காக இங்கே அழைத்து வந்திருந்தார்கள்.

அவரு கொடி உசரத்திலே பறந்தாலும், இங்கே இருந்த ஒவ்வொரு நாளும் அது நாகரீகமான கொடியா, நாறிப்போன கோவணமான்னே தெரியாத அளவுக்கு ரவுசு பண்ணுச்சு பொண்ணு. நம்ம அசிஸ்டென்ட் டைரக்டர்தான் பக்கத்திலே போய் சீனுக்கான டயலாக்கை சொல்லனும். ஷாட் பிரேக்கில் அன்புமணியின் எதிரியை விரலுக்குள் பிடித்து ஒய்யாரமாக புகை விட்டுக் கொண்டிருப்பார் நடிகை. "ஹே, கேரி ஆன்... நீ சொல்லுப்பா"ன்னு சொல்லிட்டு வேறு பக்கம் திருப்பிக் கொண்டு குப் குப்புன்னு புகையை விட, இந்த பக்கம் லொக் லொக்குன்னு இருமிகிட்டே டயலாக்கை சொல்லிக் கொடுப்பார் நம்ம நண்பர். இதுவாவது பரவாயில்லே. அவரோட அப்பா அவ்வப்போது ஃபிளைட்டை புடிச்சு சென்னைக்கு வந்து இறங்கிட்டா, இரண்டு மத்தாளமாயிடும் அசிஸ்டென்ட் பொழப்பு.

ஷாட் ஓக்கேன்னதும் ஓடிப்போய் அப்பா மடியிலே உட்காந்துக்கும் பொண்ணு. அதுவும் எப்படி? பொண்ணு முதுகும் அப்பா வயிறும் ஒண்ணா ஒட்டுற மாதிரி உட்கார்ந்தா பரவாயில்லே. இரண்டு பேரு வயிறும் ஒன்னா ஒட்டியிருக்கிற மாதிரி ஒட்காந்துக்கும். (என்ன பாசமோ? கண்றாவி!) இப்போ போயி அந்த பொண்ணுக்கு டயலாக் சொல்லிக் கொடுன்னா...? இப்படியே நாளை கழிச்சு, நங்கூரத்தை தள்ளினாரு உதவி இயக்குனர்.

கடைசி நாள் ஷ¨ட்டிங். அடுத்த ஷெட்யூல் வேற ஏதோ ஒரு ஊர்லே. வடபழனியில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்திருந்தாங்க பொண்ணுக்கு. கடைசி நாள் என்பதாலே ரூமை காலி பண்ணிட்டு வந்திருச்சு. சாயங்காலம் அஞ்சு மணி இருக்கும். திடீர்னு ஒரே கூச்சல். "என்னோட செருப்பை ரூமிலேயே விட்டுட்டு வந்திட்டேன். ரொம்ப சென்ட்டிமென்ட் அந்த செருப்பு மேல நான் வச்சுருக்கு. அதனால அது வேணும்"

நம்ம ஆளதான் செருப்பு கொண்டு வர அனுப்பினாங்க. ரிசப்ஷன்லே போயி, "சார்... நான் --------- கம்பெனியிலேர்ந்து வர்றேன். இங்கே தங்கியிருந்த ஆர்த்தி அகர்வால் அவங்க செருப்பை விட்டுட்டு போயிட்டாங்களாம். என்னை எடுத்திட்டு வரச்சொன்னாங்க. கொடுத்திங்கன்னா நல்லாயிருக்கும்"னாரு.

"யாராவது வருவீங்கன்னுதான் தேடிட்டு இருந்தோம். நல்லவேளை, வந்திட்டீங்க. அப்படி ஓரமா உட்காருங்க. ஒங்க ஆபிசுக்கு போன் பண்ணி இருபதாயிரம் ரூவாய கட்டிட்டு உங்களை கூட்டிட்டு போக சொல்லுங்க" என்று சொல்ல, அதிர்ந்தே போனார் அசிஸ்டென்ட் டைரக்டர். "சார் என்னாச்சு சார்?"னாரு பதறிப் போயி. "யோவ்... அந்த பொம்பளையால ஹோட்டலே எரிஞ்சு போயிருக்கும்யா. சிகரெட்டை குடிச்சு பெட் மேலே போட்டுட்டு போயிருச்சு. உள்ளேயிருந்து ஒரே புகை. கதவை ஒடைச்சு பார்த்தா, காஸ்ட்லியான அந்த மெத்தை எரிஞ்சு போச்சு. இருவதாயிரம் இருந்தா நீயே கொடுத்திட்டு போ. இல்லைன்னா எடுத்திட்டு வரச்சொல்லு. செருப்பு வேணுமாம்ல செருப்பு"ன்னு வெறுப்பை உழிழ, அங்கேயிருந்து போனை போட்டார் அசிஸ்டெண்ட். அன்றைய பட்ஜெட்டில் எதிர்பாராம இருபதாயிரம் ரூபாய் செலவு.

"சார், நல்ல கம்பெனி சார் அது. வந்து கொடுப்பாங்க. என்னைய விடுங்க"ன்னு இவரு கேட்டும் ஓட்டல் ஆளுங்க விடலே. அவமானம் ஒரு பக்கம். சிங்கிள், டபுளுக்கு கூட போக விடாம கண்காணிப்பு. வெறுத்தே போயிட்டாரு அசிஸ்டென்ட் டைரக்டர். அவங்களும் பணம் புரட்ட என்ன கஷ்டமோ, இரவு பத்து மணி வரைக்கும் வரவேயில்லை. நல்லவேளையாக அந்த நேரத்திற்கு பிறகு வந்து பணத்தை கொடுத்து மீட்டார்கள்.

அன்னைக்கு கோவிச்சுக்கிட்டு போனவர்தான். பல மாதங்களுக்கு பிறகு சமீபத்தில்தான் சந்தித்தேன் அவரை. "இப்போல்லாம் கோவம் வருதா?" என்றேன். "படைப்பாளிக்கு அது இல்லேன்னா எப்பிடி சார்?"னாரு. "அப்போ தம்பி படம் பண்ண இன்னும் பத்து வருஷம் ஆவும்னு சொல்லுங்க"ன்னு நான் அடிச்ச கமெண்ட்டை அவரு அவ்வளவா ரசிச்சதா தெரியலே!

10 comments:

Thiva said...

அப்படியே போகட்டும்னு விடாம, காச கட்டி ஆள மீட்டாங்கன்னு சந்தோஷ படாம இப்படியா கோவிக்கிறது? ஏதோ நல்லா இருந்தா சரி.
" இரண்டு பேரு வயிறும் ஒன்னா ஒட்டியிருக்கிற மாதிரி ஒட்காந்துக்கும்"
த்ரிஷாதான் அப்பாவி பொண்ணுன்னு பார்த்தா இந்த நடிகையும் அதே மாதிரி தான் போலருக்கே...

வண்ணத்துபூச்சியார் said...

பாவம் சார் அவர்.

அது ஏன் சார். இந்த மாதிரி ஆட்களை மற்ற மொழியிலிருந்து தேடி பிடிச்சி கொண்டு வருகிறார்கள்.

=============================

'தைஸ்' இளைச்சுருச்சு.

--------------

ஆக்சிஜன், அனாசின், நோவால்ஜின் எல்லாம்....!

-----------------

அன்புமணியின் எதிரியை விரலுக்குள்

-----------------------

நங்கூரத்தை தள்ளினாரு உதவி இயக்குனர்.

---------------

Xlent...

-------------------------
பத்து வருஷம் ஆவும்னு சொல்லுங்க"

குசும்பு... ஒவரு...

---------------------------

Cable Sankar said...

உதவி இயக்குனர்களுக்கு சூடு சொரணையே இருக்க கூடாதுன்னுதான் நிறைய பேர் நினைக்கிறாங்க.. சார்..

Sridhar said...

நடுவிலே சுருட்டிகிட்ட மாராப்பாலேயும், நச்சுன்னு வர்ற வீராப்பாலேயும் ஒரு பயனும் இல

அண்ணா இத நீங்க சொல்லலாமா?

என்ன பயன்கிறதை நான் சொல்லமாட்டேன்.

அன்புச்செல்வன் said...

\\Sridhar said...
நடுவிலே சுருட்டிகிட்ட மாராப்பாலேயும், நச்சுன்னு வர்ற வீராப்பாலேயும் ஒரு பயனும் இல்ல

அண்ணா இத நீங்க சொல்லலாமா?

என்ன பயன்கிறதை நான் சொல்லமாட்டேன்.\\

என்கிட்ட மட்டும் கொஞ்சம் சொல்லுங்க Sridhar சார்...

\\" இரண்டு பேரு வயிறும் ஒன்னா ஒட்டியிருக்கிற மாதிரி ஒட்காந்துக்கும்"\\

அடக்கண்றாவி
ரொம்பவும் ரசிச்சு வாய் விட்டு சிரிச்சேங்க...

கிரி said...

உதவி இயக்குனர்களின் நிலை ரொம்ப பரிதாபம் தான் :-(

ரொம்ப நல்லவன் said...

வண்ணத்துபூச்சியார் சொன்னதை வழிமொழிகிறேன்.
முதல் இரு பாராக்களும் சூப்பரப்பு.

Joe said...

அந்த மனுஷனோட அல்லல்கள் உங்களுக்கு தமாஷா இருக்கு?

பாவம்ங்க அவரு.

Bhuvanesh said...

//"அப்போ தம்பி படம் பண்ண இன்னும் பத்து வருஷம் ஆவும்னு சொல்லுங்க"ன்னு நான் அடிச்ச கமெண்ட்டை அவரு அவ்வளவா ரசிச்சதா தெரியலே!//

அவரே நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்காரு.. இதுல இந்த கமெண்டுக்கு ரசிக்கலனு பீலிங்க்ஸ் வேறையா ?

நா.இரமேஷ் குமார் said...

//அந்த படத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்ததால் அடிக்கடி நானும் அங்கே விசிட் //

அண்ணா...
எந்த விதத்துல சம்பந்தப்பட்டிருந்தீங்கன்னு நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்