Friday, April 24, 2009

பக்கத்தில் நடிகை, பாக்கெட்டில் சாமி!

"தம்பி, என்னென்னவோ எழுதிறீங்களாமே, இதையும்தான் எழுதுங்களேன்"னாரு 'அந்தகால' நிருபர் ஒருத்தர். சவசவன்னு எதையோ சொல்லப் போறாருன்னு நினைச்சு, காத அவருகிட்டேயும், கண்ணை வேற எடத்திலேயும் தவற விட்டுட்டு நின்னேன். பெருசு சொன்ன கதை...? சும்மா சொல்லக்கூடாது. இந்த மாதிரி கதை இருந்தா, இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்னு அவரு பின்னாடியே போற அளவுக்கு ஜோக் பிஸ்கட்டை வழி நெடுக து£வி விட்டுட்டாரு மனுசன்.

பெரிய நடிகர் அவரு. வில்லன்னா அவருதான்னு சொல்ற அளவுக்கு! அதே நேரத்திலே ஒழுக்கசீலன். ஆனால் வாயை திறந்தா கொஞ்சம் 'ஏ'சகு பிசகாதான் பேசுவாரு. அவுட்டோர் படப்பிடிப்பு. சேரை போட்டுட்டு ஓரமா உட்காந்திருந்தாரு வில்லன். படத்தின் ஹீரோ யாரு தெரியுமா? அந்த காலத்திலே மட்டுமில்லே, இறந்த பிறகும் மக்களோட மனசில வாழ்ந்துகிட்டு இருக்கிற அழகன்தான் ஹீரோ.

அந்த படத்திற்கு வஞ்சனை இல்லாமல் இரண்டு ஹீரோயின்கள். இரண்டு பேரும் நம்ம வில்லன் நடிகரு பக்கத்திலே வந்து உட்கார்ந்தாங்க. அவங்க பார்க்கிற மாதிரி, பையிலே இருந்து ஏதோ ஒரு படத்தை எடுத்து கண்ணிலே ஒத்திக்கிட்டு திரும்ப பாக்கெட்லயே வச்சுகிட்டாரு வில்லன். இரண்டு பேருக்கும் ஆர்வம் தாங்கலே. "சார், அது என்னது?" என்று கேட்டாங்க. அவரு, "இது ரொம்ப புனிதமான படம். இதை பார்த்திட்டு எதையாவது வேண்டிகிட்டா உடனே நடந்திரும். எனக்கு முக்கியமான விஷயம் ஏதாவது நடக்கனும்னா இதை பார்த்து வணங்கிட்டு பாக்கெட்ல வச்சிருவேன். சரியா ஒரு மணி நேரத்துக்குள்ளே அந்த விஷயம் நடந்திருக்கும். ரொம்ப பயபக்தியா இதை வணங்கிட்டு வர்றேன். என்னுடைய பல வருஷ கடவுள் இது"ன்னு சொல்ல, ஆர்வம் தாங்கவில்லை இரண்டு பேருக்கும்.

"எங்களுக்கும் கொஞ்சம் காட்டுங்களேன்"னு ஒரே அடம். அவர்களின் கெஞ்சல் தாங்க முடியாம போனதால ஒரு கண்டிஷன் போட்டாரு வில்லன். "இதை பார்க்கணும்னா அதுக்கு சில முறைகள் இருக்கு. குளிச்சுட்டு சுத்த பத்தமா இருக்கணும். வேற கெட்ட விஷயங்களோ, தப்பு தண்டாவோ பண்ணியிருக்க கூடாது. 24 மணி நேரம் இதையெல்லாம் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணினா இந்த போட்டோவை காட்டுறேன். நீங்களும் கும்பிடுங்க. அருளை அள்ளுங்க. இன்னைக்கு நீங்க ஒழுக்கமா இருக்கறதை வச்சுதான் நாளைக்கு நான் இதை உங்களுக்கு காமிக்க முடியும்"னாரு. அட, இந்த அற்புதத்தை நம்மால் உடனே பார்க்க முடியலையேங்கிற வருத்தம் ரெண்டு பேருக்கும். ஆனாலும், நாளைக்காவது இதை பார்த்திடணும்ங்கிற வெறியோடும், பக்தியோடும் ஷ¨ட்டிங்கை முடிச்சுட்டு ரெண்டு பேரும் ரூமுக்கு வந்திட்டாங்க.

ரொம்ப பயபக்தியா இருந்தவங்களுக்கு கொஞ்சம் இருள் கவிழ்ந்ததும் முக்கியமான இடத்திலே இருந்து அழைப்பு. ஆனாலும், போகாமல் தட்டிக் கழித்தார்கள் இருவரும். அடிக்கடி வந்த அழைப்புகளுக்கு வேறு எதையோ காரணத்தை சொல்லிக் கொண்டே இருந்தாங்க. ஏன்னா, "இந்த விஷயத்தை யாரிடம் சொல்லக் கூடாது"ன்னும் சொல்லியிருந்தாரு வில்லன். அதனால் பக்தி காரியம்னு கூட சொல்ல முடியாம தத்தளிச்ச இரண்டு பேரும் எப்படியோ விடியிற வரைக்கும் சமாளிச்சாங்க.

காலையிலே எழுந்து பயபக்தியா குளிச்சாங்க. மேக்கப் போட்டுக் கொண்டு ஷ¨ட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டாங்க. வில்லன் நடிகரும் வந்திட்டாரு. ஷாட் பிரேக்லே ரொம்ப ஆவலா அவரு பக்கத்திலே சேரை இழுத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்தாங்க ரெண்டு பேரும். "காட்டுங்க" என்று கோரசாக கேட்க, வில்லன் கேட்டாரு. "நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கவனமா இருந்தீங்களா நேத்திக்கு?" உடனே அவங்க "ஆமாம் ஆமாம்"னு தலையாட்டினாங்க. "ஒன்னும் தப்பு தண்டா பண்ணலையே?" "இல்லையே"ன்னாங்க மறுபடியும் கோரசாக!

"சரி, ஓக்கே" என்றபடியே அவரு பாக்கெட்ல இருந்த அந்த போட்டோவை எடுத்து அவங்களிடம் காட்டினாரு. அந்த போட்டோவில் இருந்தது...? இரண்டு யானைகள் இனவிருத்திக்கு ட்ரை பண்ணிக் கொண்டிருந்த காட்சி. பச்சையா சொல்லனும்னா பஜனை! ஒரு கணம் திகைத்துப் போன ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். "போங்க சார்... இப்பிடி தவிக்க விட்டுட்டீங்களே" என்று அந்த இடத்தை விட்டே ஓடினார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து ஹீரோவை அழைத்த வில்லன், "பார்த்தியா... நேத்து நீ கூப்பிட்டா அவங்க ரெண்டு பேரும் வர முடியாதபடி செய்யுறேன்னு சொன்னேன்ல. போட்டியிலே நான்தான் ஜெயிச்சேன். பணத்தை வை"ன்னு கேட்டு வாங்கிக் கொண்டார்.

அட, இவ்வளவு மேட்டரும் பந்தயத்துக்குதானா? அந்த காலத்திலே எப்படியெல்லாம் ஜோவியலா இருந்திருக்காங்க, ஆச்சர்யம்தான்!

12 comments:

Cable Sankar said...

interesting

C said...

இவரை நம்பி யார் என்ன செய்தார்களோ ?
RP Rajanayahem கூட இவரை பற்றி எழுதி இருக்கார்.

Thiva said...

நேற்றும் நடந்தது, நன்றாகவே நடந்திருக்கு, Old is always gold. (அஜீத்தோட பதிவ எடுத்துடீங்க, பட்டிகாட்டான் பற்றி எழுதுறேன்னு சொன்னத மறந்துராதீங்கண்ணே)

Anonymous said...

நல்லா இருக்கு ஆனா இடுகைகளைக் கொஞ்சம் குறையுங்கள் லோடாகா நேரம் எடுக்குது. தினசரி வருபவர்களுக்கு அனைத்தும் ஒரே பக்கத்தில் தேவையில்லையே.

joking said...

yaaru antha villain nambiayaar..kathaanayaagan "makkal thilagama"..nadigaigal ? sarojadeviyum lathavuma ?

வண்ணத்துபூச்சியார் said...

இதைதான் நம்பினார் கெடுவதில்லைன்னு சொல்வார்களே..?

சூப்பர்.

Joe said...

ஹா ஹா ஹா!
விழுந்து விழுந்து சிரித்தேன்.

நகைச்சுவையான ஒரு நிகழ்ச்சிக்குள்ள பல வில்லங்கமான விஷயங்களையும் சத்தம் போடாம நுழைச்சு விட்ருக்கீங்க! பிரமாதம்!

தமிழ் வெங்கட் said...

நல்லா கதை சொல்லுறீங்க தலை..ஹ்ஹ்ஹ்

Subankan said...

கலக்கல்

//இவரை நம்பி யார் என்ன செய்தார்களோ ?//

ரசித்தேன்.

குப்பன்_யாஹூ said...

இவ்வளவு நாகரீகம் , பண்பாடு, வலை உலகம், இணையம், வளர்ச்சி வந்தும் இன்னமும் திரை உலகம் இந்த நடிகை சார்ந்த விபச்சார பழக்கதை விடாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

இந்த திரை உலக விபச்சாரத்தையும் வெளியில் பகிரங்கமாக சொல்லி அது நிகழா வண்ணம் இருக்க நாம் முயல வேண்டும்.


என்ன தொழில் நுட்பம், என்ன கலை படைப்பு, ஆஸ்கார் விருது வாங்கி என்ன, அடிப்படை நாகரீகம் இன்னும் வளர வில்லையே.

எதனை கோடி செல்வளைத்து படம் எடுத்து என்ன பயன்.

கேட்பதற்கும் படிப்பதற்கும் வருத்தமாக இருக்கிறது.

குப்பன்_யாஹூ


Rp rajanyagam wrote about this, Nambiyar

Sridhar said...

நல்லா இருக்கு. அவரு வீட்லேயே பச்சையா பேசுவார்.

Anonymous said...

நல்லா காட்டினாரு....