Wednesday, April 1, 2009

சினிமா கதையும், எனிமா இரவும்...

கதை கேட்டு கதை கேட்டு வளர்ந்ததுதான் பாரத நாடும்பாரு ஒரு படத்திலே சுருளிராஜன். சின்ன வயசிலே அரிச்சந்திரன் நாடகத்துக்கு, பாய் தலையணையெல்லாம் எடுத்திட்டு போயி நாடகத்தையே அசிங்கப்படுத்தின பாவம், சென்னைக்கு வந்த பிறகும் என்னை விடாம துரத்துச்சு. மரத்து ஓரமா பாயை விரிச்சு படுத்துகிட்டே நாடகத்தை பார்க்கலாம்னு போனா, ஸ்கீரினை ஓப்பன் பண்ணுறதுக்குள்ளே து£க்கம் நம்மளை ஹைஜாக் பண்ணிரும். அந்த மந்திர திரையை து£க்குறதுக்கு முன்னாடி ஒரு பாட்டு ஒன்னு பாடுவாய்ங்க, அதிலே ராகம் இருக்கோ இல்லையோ, நிச்சயம் பத்து மில்லி கிராம் அளவுக்கு 'வேல்யூம்' மாத்திரை இருக்கும்.

ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த்துக்கு கதை சொல்ல வரும் உதவி இயக்குனர்களிடம் அந்த கதைகளை கேட்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. தினமும் நாலு கதையாவது கேட்பேன். இப்படியே மூணு வருஷம் ஒடுச்சு. நிறைய பேர் சாபம் விட்டார்கள். நள்ளிரவு ஒரு மணிக்கு போன் பண்ணி, "ஒரு கதை இருக்கு... கேட்கிறீயா மச்சி"ன்னு வெறுப்பேற்றினார்கள். அதிலே சிலர் மட்டும் ஐயோ பாவம். நல்ல கதையாக சொல்லியும், சைன் பண்ண முடியாமல் போனது ஸ்ரீகாந்த்துக்கு.

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பேட்டியளித்த பொல்லாதவன் இயக்குனர் வெற்றி மாறன், "அந்தணன் கதை கேட்டு நல்லாயிருக்குன்னாரு. ஆனால், ஸ்ரீகாந்துதான் கேட்கவில்லை" என்று கூறியிருந்தார். அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன. அது இப்போது தேவையில்லை.

விஷால் நடிச்சாரே திமிரு, அந்த படத்தில் முதலில் ஸ்ரீகாந்துதான் நடிப்பதாக இருந்தது. கதை சொல்வதற்காக வந்திருந்தார் தருண்கோபி. கதை கேட்க இரவு பத்து மணிக்கு நேரம் ஒதுக்கியிருந்தார் ஸ்ரீகாந்த். நான், ஸ்ரீகாந்த், அவரது சித்தப்பா சுந்தர் ஆகியோர் ஒரு அறையில் அமர்ந்திருந்தோம். இப்போதுதான் சொந்த வீடு. அப்போது பர்கிட் சாலையில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வாடகைக்கு குடியிருந்தார் ஸ்ரீ.

இன்னிக்கு கதையை சொல்லி இவனுங்களை கவுத்துப்புடனும் என்ற எண்ணத்தோடு வந்திருப்பார் போலிருக்கிறது தருண்கோபி. ஓப்பனிங்கே ஸ்ருதி ஓவர்! கொஞ்சம் சவுண்டை குறைக்கலாமே என்று சொல்ல நினைத்தாலும், இடையில் குறுக்கிட்டு அவரது மூடை கெடுக்க மனம் வராமல் விட்டு விட்டோம். நேரம் செல்ல செல்ல சத்தத்தை அதிகரித்துக் கொண்டே வந்தவர், ஒரு பைட் சீனை விவரிக்கிற நேரத்தில் சாமியாடவே ஆரம்பித்துவிட்டார். "டேய்ய்ய்ய்ய் ங்கொ......ள, விட மாட்டேண்டா ஒன்னை" என்று பாய ஆரம்பித்தார். இந்த டயலாக்கை அவர் ஒலித்தபோது அந்த அபார்ட்மென்ட்டே விழித்துக் கொண்டது.

அந்த வீடு ரயில்வே கம்பார்ட்மென்ட் போலவே இருக்கும். சற்று து£ரத்தில் அமைந்திருந்த பெட்ரூமில் அமைதியாக படுத்திருந்த ஸ்ரீகாந்தின் அப்பா, என்னவோ கதை சொல்ற ரூம்ல கலவரம் ஆயிடுச்சு போல என்று நினைத்துக் கொண்டு இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு இரைக்க இரைக்க ஓடி வந்தார். வந்தவர் ஒரு கணத்தில் நடந்ததை புரிந்து கொண்டு, "சார்... நாங்க வாடகைக்கு குடியிருக்கிறோம். எங்களை காலி பண்ண வச்சிராதீங்க. ப்ளீஸ்" என்று கையெடுத்து கும்பிட்டார். ஐயோ பாவம். நல்ல மூடில் கதை சொல்லிக் கொண்டிருந்த தருண்கோபிக்கு இப்படி தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டோமே என்ற கவலை தொற்றிக் கொண்டது. கதையை இதோடு நிறுத்திவிட்டு மறுநாள் வரச்சொல்லி கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

"எனக்கு எவ்வளவு வேலையா இருந்தாலும் முன்நேரத்திலேயே வந்திர்றேன். வெளக்கு வக்கறதுக்குள்ளே வந்து கதைய சொல்லிடுங்க. முடிஞ்சா மெதுவா சொல்லுங்க" என்று கேட்டுக் கொண்டார் ஸ்ரீ. மறுநாளும் வந்தார் தருண்கோபி. ஆனால், சத்தத்தை குறைக்கவே இல்லை. நல்லவேளையாக அது பகல் நேரம் என்பதால், பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை!

12 comments:

butterfly Surya said...

இது " நல்ல கதையா இருக்கே"

பகிர்விற்கு நன்றி

Chennaivaasi said...

Hello sir,

I have been reading tamilcinema.com since mid 2001 or early 2002...your writing style is very hilarious. You transport us to the scene of activity through your words...Also, thamizhanukke uriya antha kusumbu unga kitta romba malinjirukku :-)...

I have heard about your personally also through a ex-colleague of mine how jovial you are...but used to wonder what made you produce a crap movie like "ECR"...idhuthaan Yaanaikkum Adisarukkum enbadho...

Chennaivaasi said...

I used to see several names under the articles...Atal Bihari was one such...just a thought...is that you writing in several pseudonymns?

முரளிகண்ணன் said...

அள்ள அள்ள குறையாமல் பல மேட்டர்களை வச்சிருக்கிங்கிளே சார்.

தொடர்ந்து எங்களை குஷிப்படுத்துங்க

Cable சங்கர் said...

வருகைக்கு வாழ்த்துக்கள் சார்..

Sridhar said...

arumai atha ninaithale sirippu varuthu

கடைக்குட்டி said...

உங்கள் நடை அருமை...

உண்மைத்தமிழன் said...

நல்ல சுவாரசியமான பதிவு..!

ஏன் தருண்கோபியின் திரைப்படத்தைத் தவறவிட்டீர்கள்..!?

நா.இரமேஷ் குமார் said...

அண்ணே... நல்ல வேளை.. 'திமிரு" படம் ஸ்ரீகாந்த் கிட்டேயிருந்து தப்பிச்சுடுச்சு...

வினோத் கெளதம் said...

படிக்க ரொம்ப ஆர்வமாய் இருக்கிறது.

கிரி said...

பிறகு ஏன் ஸ்ரீகாந்த் அந்த படத்தில் நடிக்கவில்லை..

rajesh.v said...

sir,

Are you the producer of ECR?. I was surprised.

I happened to see that movie in udhayam theater. Once my mom went to my relation's house without giving the key to my neighbours. That time was noon. i found the house closed when i came. When i called my mom, she informed that she will come back only at evening 7.00pm. I dont know what to do. Suddenly i thought to go to udhayam complex to see any movie running there to spend my time till 7.00 pm. That time ECR was running in that theater. I decided to watch that movie on matinee show. I think its second day or third day for that movie. I went inside the theater. After half an hour only i realised that its better to wait for my mom by sitting simply outside my house instead of watching the movie ECR.

I have been reading your blog for past few weeks. I found it very interesting. I expect more from you sir.

RAJESH. V