Friday, April 3, 2009

இங்கதான் உட்காந்திருந்தான் இளையராசா

யேய்.. இங்கதான் உட்காந்திருந்தான் இளையராசான்னு முனிவர் கைகாட்டிய இடத்தில் இசைஞானியே உட்கார்ந்திருப்பது போல தோன்றும் எனக்கு. அப்பப்போ வந்திருவான். பாட சொல்லி கேப்பேன்னு சொல்லுவாரு. ஆச்சர்யமா இருக்கும். ஏலேய், சிவாசி என்ன பண்ணுவாம் தெரியும்லேம்பாரு திடீர்னு. (நடிக்க சொல்லி பார்த்திருப்பாரோ?) இப்படி யாகவா முனிவருக்கு ஏகப்பட்ட விவிஐபிகள் பக்தர்களாக இருந்தார்கள். யாராக இருந்தாலும் 'அடா புடா'தான் அவரு லாங்குவேஜ். இடையிடையே வந்து விழும், சு... பு... க்கள் தனி கணக்கு.

எனக்கும் ராஜசேகருக்கும் அவருன்னா ரொம்பவே பிடிக்கும். பத்து நாளைக்கு ஒரு முறையாவது வேளச்சேரிக்கு போய் விடுவோம். "ஏலேய், ஒரு வாரமா எங்கேடா போனீங்க? ஒரு ஆட்டோவ பிடிச்சிட்டு வாங்கடா"ன்னு போன் பண்ற அளவுக்கு நாங்க ரெண்டு பேரும் அவரோட வட்டத்துக்குள்ளே இருந்தோம். (இந்த ராஜசேகர்தான் விஷால் நயன்தாரா நடிச்ச சத்யம் படத்தை டைரக்ட் பண்ணினவரு)

"பைக்லே வராதீங்கடா. ரொம்ப து£ரம், முதுகு வலிக்கும்"னு அவரு அக்கறையா சொன்னதோட நிறுத்திக்காம நாங்க போய் இறங்குற ஆட்டோவையும் வெயிட்டா கட் பண்ணுவாரு. எங்களை திரும்பி அழைச்சிட்டு போற வரைக்கும் டிரைவரு அங்கே இருக்கனுமில்லையா? எல்லாத்துக்கும் சேர்த்து ஆட்டோக்காரரை 'கவனித்து' அவரையும் தன்னோட பக்தனா ஆக்கிக்கிற சாமர்த்தியம் அவருக்கு இருந்தது.

அவர் சொல்ற பல சம்பவங்கள் ரொம்ப பேத்தலா இருந்தாலும், ஏதோ சுவாரஸ்யமான படம் பார்த்த திருப்தியோடுதான் நாங்க அங்கிருந்து கிளம்புவோம். ஒரு முறை போன் அடித்து "பெரிய பெரிய அறிஞனுங்கள்ளாம் என்னை டெஸ்ட் பண்ண வர்றானுங்க. வந்திருங்கடா" என்றார். போயிருந்தோம்.

தென்கச்சி சுவாமிநாதன், மலர்க்கொடி சுகுமாரன்னு ஒரு ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷனே வந்திருந்தது. ஆளாளுக்கு மாறி மாறி கேள்வி கேட்டார்கள். எல்லா கேள்விகளுக்கும் உளறி தள்ளினார் முனிவர். "ஐயா, உங்களுக்கு வயசு எத்தனை?" தென்கச்சி கேட்டார். "ஐயாயிரத்து நானுத்து ஏழு"ன்னாரு முனிவர். எங்களுக்கு பெரிய அதிர்ச்சியில்லை. ஏன்னா இதைவிட பலமான ராக்கெட்டால்லாம் பார்த்திருக்கோம். ஆனா தென்கச்சிதான் ஆடிப் போயிட்டார். மேற்கொண்டு கேள்வி கேட்பதா? அல்லது சும்மாயிருந்திடலாமா என்று அவர் யோசித்திருப்பார் போலும். "ஏய் கேள்றா..."ன்னாரு முனிவர். தென்கச்சி பயங்கர அப்செட். அவரு வயசுக்கு யாரும் இப்படி பேசியிருக்கப் போவதில்லை. கொஞ்சம் சமாளித்துக் கொண்டு, "இராமாயண காலத்திலே நீங்க யாரு?"ன்னாரு குரல் நடுங்க.

"நான்தான் ராமன்". அதுக்குப் பிறகு தென்கச்சி கேள்வி கேட்கவே இல்லை. அடிக்கடி முனிவரிடம் பேச தமிழ் பண்டிதர்கள் வருவதும், அவர்களின் கேள்விகளுக்கு இவர் பதில் சொல்வதையும், டிவி கேமிராவை வைத்து ஷ¨ட் பண்ண சொல்வார் முனிவர். என் காலத்துக்கு பிறகு இதை போட்டு ஆராய்ச்சி பண்ணுவானுங்கடா! -இது அவரது நம்பிக்கை. என் யூகத்திற்கு ஒரு ரூம் முழுக்க இந்த கேசட்டுகள் இருக்கக்கூடும். பறவை பாஷை என்று இவர் பேசிய யுனான்ய மொழியையெல்லாம் யாரோ வந்து ஆராய்ச்சி செய்வார்கள். லு£சு என்று கூட முடிவாகலாம்.

"இதாண்டா என்னோட சமாதி. எவனுக்கும் இதை தெறந்து காட்னதில்லே. ஒங்களுக்கு காட்றேன். ஒரு நாள் நான் பாட்டுக்கு இதிலே இறங்கி படுத்திடுவேன். நான் கூப்டாதான் வரணும்னு இருக்காதீங்கடா. அப்பப்போ வந்து பாருங்கடா"ன்னு சொன்னார்.

எங்கள் பார்வைக்கு அவர் ஒரு போதும் முனிவராகவோ, கடவுளாகவோ தெரிந்ததில்லை. எங்கள் கிராமத்து முரட்டு தாத்தாக்களில் ஒருவராகவே தெரிந்தார். போன வாரம் கூட நானும் ராஜசேகரும் அவரை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நேரில் போய் சமாதியை பார்க்கதான் தைரியம் இல்லை இருவருக்கும்!

14 comments:

ilayadhasan said...

ஆபீஸ்ல உக்காந்து படிச்சுட்டு இருக்கேன் ....சிரிப்பை அடக்க முடியாம , கெக்கே பிக்கே ...கொஞ்சம் சௌண்டு கூட போல ....பக்கத்து சீட்டு காரன் , என்னமோ எதோன்னு வெறிக்க...ஒரே கலவரம் தான் போங்க ....இனிமே தனி ரூம்ல தான் படிக்கப் போறேன் !

Anonymous said...

அப்ப சீதை யாருன்னு கேட்டுருக்கணும்

Sridhar said...

avarkooda innum pala vishayangal irukkume. athayum ezuthunga.

மதன் சிந்தாமணி said...

நல்லா இருக்குங்கண்ணெ,

butterfly Surya said...

ரொம்ப நாளைக்கு பிறகு சிரிச்சு சிரிச்சு .....

அறுசுவை பதிவர் அந்தணன்.

வாழ்த்துகள்.

நன்றி.

நா.இரமேஷ் குமார் said...

'யாகவா'வின் கிணற்று தீர்த்தம்... அந்த பேத்தலையெல்லாம் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

Karthick said...

Avadoda Video or photo iruntha post pannunga sir.

வினோத் கெளதம் said...

ithai padikkum poluthu ennaku vivek+mayilsami(Yagava+sivasankar baba)
comedy thaan nyabagahthuku vanthatu...

Anonymous said...

தினமும் நாலு தடவை உங்க ப்ளாக் திறந்து பபேனுங்கணா.......எதாவது போஸ்ட் பன்னிருகீங்களான்னு கலக்குரீங்க போங்க.....

Anonymous said...

really superb in d way u share ur xperience...

Anonymous said...

Nice boss, very intersting and funny....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

M Bharat Kumar said...

Anthanan annae...kalakareenga...Intha P{adhivu sirippu vedi..........

நிகழ்காலத்தில்... said...

\\"ஏய் கேள்றா..."ன்னாரு முனிவர். தென்கச்சி பயங்கர அப்செட். அவரு வயசுக்கு யாரும் இப்படி பேசியிருக்கப் போவதில்லை. கொஞ்சம் சமாளித்துக் கொண்டு, "இராமாயண காலத்திலே நீங்க யாரு?"ன்னாரு குரல் நடுங்க.

"நான்தான் ராமன்". அதுக்குப் பிறகு தென்கச்சி கேள்வி கேட்கவே இல்லை. \\

சூப்பர் நண்பரே...