Sunday, April 5, 2009

எம்.பி தேர்தலில் நமீதா?

ரொம்ப நாள் கழித்து சாதிக் பேசினார். சார், நமீதா வருமான்னாரு மொட்டையாக! இஸ்திரி பெட்டியே காதுல நுழைஞ்ச மாதிரி, "சாதிக் சார்... என்னா கேக்கிறீங்க, புரியிலேயே"ன்னேன். "இல்ல சார். திருப்பதியிலே ஃபிரண்டு ஒருத்தரு ஹோட்டல் கட்டியிருக்காரு. நமீதா வந்து ரிப்பன் கட் பண்ணா நல்லாயிருக்குமேன்னு... யாரை புடிச்சா நமீதாட்ட பேசலாம்"ணாரு.

"நமீதாவோட பிஆர்ஓ நம்ப ஃபிரண்டுதான். பேசிடலாம். நிகழ்ச்சி என்னைக்கு?"

"நமீதா என்னைக்கு வர்றாங்களோ, அன்னைக்கு"ன்னாரு சாதிக் தீர்மானமாக! "அப்படின்னா விடுங்க, நண்பர்கிட்டே கேட்டுட்டு சொல்லிடறேன்"னு சொல்லிட்டு நண்பருக்கு போன் அடிச்சேன். "என் ஃபிரண்டோட ஃபிரண்டாம். திருப்பதியிலே ஓட்டல் திறக்கணுமாம். நமீதா எவ்ளோ கேப்பாங்க"ன்னேன். "அண்ணே, மேடத்திட்டே பேசிட்டு திரும்ப கூப்பிடட்டுமா" என்றவர், அடுத்த அரை மணி நேரத்தில் மறுபடியும் லைனுக்கு வந்தார்.

"ரெண்டு ரூவாண்ணே.... போறதுக்கு 'இன்னோவா' வேணும். அவங்களோட ஃபிரண்டு ஒருத்தரும் கூட போவாங்க. முதல் நாள் நைட்டே மேடம் திருப்பதிக்கு வந்திருவாங்க. ஆனா, எல்லாம் பீஸ் ஃபுல்லா இருக்கணும். ஏதாவது, தப்பா நடந்துகிட்டா மேடம் அடுத்த நிமிஷம் அங்கே இருக்க மாட்டாங்க. நீங்க சொல்றீங்கன்னுதான்...." இழுத்தார் நண்பர். "சேச்சே, எல்லாம் ஜெனியூனான ஆளுங்க. அட்வான்ஸ் எவ்வளவு? எப்போ பணத்தோட வரணும்?" மளமளவென்று அலைபேசியில் மேட்டரை முடித்துவிட்டு சாதிக்கிடம் விஷயத்தை பாஸ் பண்ணினேன்.

மறுநாள் மதியம் பணத்தோடு நமீதா வீட்டுக்கு போவதாக ஏற்பாடு. வள்ளுவர் கோட்டத்துக்கு எதிரிலேதான் மேடம் வீடு. நான் வாசலில் நிக்கிறேன் வந்திருங்கன்னாரு பிஆர்ஓ. நானும் சொன்ன நேரத்திலே டான்னு ஆஜராயிட்டேன்.

ச்சும்மா ஜிவ்வுனு படகு காரிலே வந்திறங்கினார் சாதிக். கூடவே நம்ப ஜே.கே.ரித்தீஷ்! முக்கால்வாசி முகத்தை மூடிக் கொண்டிருந்தது கூலிங் கிளாஸ். கண்ணை பறிக்கும் ஜிவு ஜிவு டி-ஷர்ட். அசத்தலாக இறங்கினார். பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு, "சாதிக் சார், ரித்தீஷ்தான் நீங்க சொன்ன ஃபிரண்டுன்னு சொல்லவேயில்லீயே"ன்னேன். "இல்ல சார், ஹோட்டல் அவருதில்லே, அவரோட ஃபிரண்டுது"ன்னாரு.

அந்த நேரத்தில் ரித்தீஷ§க்கு என்ன நினைப்பு இருந்திருக்கும்? கானல் நீர் படம் வந்த நேரம் என்பதால் திரும்பிய இடத்திலெல்லாம் சின்ன எம்ஜிஆர் மாதிரி இவரது போஸ்டர்கள்தான் இருந்தன. அழைக்கிறார் அண்ணன் என்று இவர் கைகூப்பிய போஸ்டர்களில், ரசிகர்களை இமயமலைக்கோ, கார்கிலுக்கோ அழைக்கவில்லை ரித்தீஷ். தியேட்டருக்குள்ளே படம் பார்க்கதான் அழைத்திருந்தார். (போஸ்டருக்கு கீழே பிரியாணி இலவசம்னு எழுதியிருந்திச்சான்னு கவனிக்கலே) எழுத்துக்கூட்டி படிக்க தெரியாதவனாக இருந்தாலும் கூட, "யாருய்யா இந்தாளு" என்று ஆர்வமாகி படிக்க வைக்கிற முயற்சியாக இருந்தது அந்த விளம்பரங்கள்.

நமீதா தன்னை பார்த்ததும் 'ஓ, நைஸ்... உங்களை சந்திப்பேன்னு என் வாழ்நாளில் நினைக்கவே இல்லை. ஒரு ஆட்டோகிராப். ப்ளீஸ்'னு கேட்கப் போவதா நினைச்சிருப்பாரு போல... எல்லாருக்கும் முன்னே ஆர்வமுடன் நடை போட்டார்.

அவ்வளவு பெரிய நடிகையின் வீடாகவே இல்லை அது. ரிசப்ஷனே கோடவுன் மாதிரி இருந்தது. திரும்பிய இடமெல்லாம் தட்டு முட்டு சாமான்கள். பெஞ்சா, சோபாவா? என்று யூகிக்க முடியாத ஒரு இடத்தில் உட்கார்ந்தோம். முன்னதாக ஓடிவந்த நாய் ஒன்று எங்களை ஒரு கொஞ்ச நேரம் 'லுக்' விட்டது. அப்படியே கொஞ்சம் ஏற இறங்க பார்த்தது ரித்தீஷை! பிறகு என்ன நினைத்ததோ, நமீதாவின் ரூமிற்குள் போனது. திரும்ப வரவேயில்லை.

மேக்கப் இல்லாத நமீதா, மேக்கப் நமீதாவை விட அழகாக இருந்தார். ரித்தீஷை அறிமுகப்படுத்தும்போது, "இவர் வேகமாக வளர்ந்துகிட்டு வர்ற ஹீரோ. இப்போ கூட கானல்நீர்னு ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்கு"ன்னு பிஆர்ஓ சொல்ல, முகத்தில் எவ்வித ஆச்சர்யத்தையும் காட்டாத நமீதா, ஒப்புக்கு ஒரு 'ஹாய்' சொல்லிவிட்டு அங்கே கிடந்த பழைய ஸ்டூலில் அமர்ந்து கொண்டார். பலு£ன் வெடித்தாலாவது சத்தம் பெரிசா இருக்கும். இங்கே காற்று போனது மாதிரி புஸ்ஸ்ஸ்ஸ்....! என்ன நினைத்தாரோ, "நான் வெளியே நிக்கிறேன்" என்று எழுந்து போய்விட்டார் ரித்தீஷ்.

திருப்பதி நிகழ்ச்சி எவ்வித குளறுபடியும் இல்லாமல் நடந்தது. எல்லாரும் கண்ணியமாக நடந்துகிட்டதா பிஆர்ஓ விடம் சொன்னாராம் நமீதா.

பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பாக நிற்கிறார் ரித்தீஷ். நமீதாவை சந்திக்கிற அந்த நேரத்தில் அவர் புதுமுகம். இப்போது ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பொதுமுகம்! காலம் சுழல்வதை பார்த்தால், ரித்தீஷ§க்காக நமீதாவே பிரச்சாரம் செய்ய வந்தாலும் வரலாம்! யார் கண்டது?

14 comments:

butterfly Surya said...

(போஸ்டருக்கு கீழே பிரியாணி இலவசம்னு எழுதியிருந்திச்சான்னு கவனிக்கலே////////

super...

நா.இரமேஷ் குமார் said...

எல்லாம் சரி... எங்க தேடிப் பிடிச்சீங்க நமீதா இவ்வளவு லட்சணமா முழுக்க டிரஸ் பண்ண போட்டோவ? கொல்லணும்யா

Joe said...

நமீதா-வுக்கு புடவை கட்டி வரவும் தெரியும் என்று உலகுக்கு தெரிய வைத்த அந்தணன் வாழ்க! ;-)

பாசகி said...
This comment has been removed by the author.
பாசகி said...
This comment has been removed by the author.
Chennaivaasi said...

Sir, Kalakitteenga vazhakkam pola...at least vaarathukku oru muraiyavadhu namma T.R. a pathi ezhudhunga...vaai sirithaal noi vittu pogumnnu solluvaanga...

உண்மைத்தமிழன் said...

ஸார்..

சுவாரசியமா இருக்கு..

அந்த பிரியாணி இலவசம்னு போட்டிருந்ததை நானும்தான் கவனிக்கல..

என்னதான் ரித்தீஷ் பணத்தை வாரி இறைத்தாலும், அந்தப் பணம் யாருடையது, எப்படி சம்பாதித்தது என்கிற உண்மை தெரியாதபோது எதுவும் சொல்ல முடியவில்லை..

Sridhar said...

உங்களுக்கு நமிதாவை தெரியுமா? சொல்லவேயில்லை.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

நமீயை நேரிலே பார்த்தீங்களா? உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

நா.இரமேஷ் குமார் said...

ரித்தீஸையா கிண்டலடிக்கிறீங்க? நாயகன் மற்றும் கானல்நீர் படங்களின் விசிடியைக் கொடுத்து தொடர்ச்சியாக பார்க்கச் சொல்லி கொடுமை படுத்தனும். (ஆமா... இந்த படங்கள் எல்லாம் விசிடி வந்திருக்கா?)

R.Gopi said...

//என்னதான் ரித்தீஷ் பணத்தை வாரி இறைத்தாலும், அந்தப் பணம் யாருடையது, எப்படி சம்பாதித்தது என்கிற உண்மை தெரியாதபோது எதுவும் சொல்ல முடியவில்லை.. //

************

ஜெ.கே.ரிதீஷிடம் இருக்கும் பணம் (சுமார் 300 கோடிக்கும் மேல்) வளர்ப்பு மகன் சுதாகரனிடம் இருந்து ஆட்டை போடப்பட்டதில் ஒரு சிறு துளி (அப்போ மொத்தம் எவ்வளவு இருந்திருக்கும்னு நீங்களே கணக்கு போட்டுக்கோங்க).

கிரி said...

//இஸ்திரி பெட்டியே காதுல நுழைஞ்ச மாதிரி, "சாதிக் சார்... என்னா கேக்கிறீங்க, புரியிலேயே"ன்னேன்//

நல்ல வர்ணனை :-))))))))

//கூடவே நம்ப ஜே.கே.ரித்தீஷ்! முக்கால்வாசி முகத்தை மூடிக் கொண்டிருந்தது கூலிங் கிளாஸ்//

:-))))))))))

//அவ்வளவு பெரிய நடிகையின் வீடாகவே இல்லை அது. ரிசப்ஷனே கோடவுன் மாதிரி இருந்தது. திரும்பிய இடமெல்லாம் தட்டு முட்டு சாமான்கள். பெஞ்சா, சோபாவா? என்று யூகிக்க முடியாத ஒரு இடத்தில் உட்கார்ந்தோம்.//

அப்படியா!!!! பணத்தை எல்லாம் என்ன தான் பண்ணுறாங்க

//கொஞ்சம் ஏற இறங்க பார்த்தது ரித்தீஷை! பிறகு என்ன நினைத்ததோ, நமீதாவின் ரூமிற்குள் போனது. திரும்ப வரவேயில்லை.//

கலகலக்க வைக்கறீங்க ஹி ஹி ஹி

//பலு£ன் வெடித்தாலாவது சத்தம் பெரிசா இருக்கும். இங்கே காற்று போனது மாதிரி புஸ்ஸ்ஸ்ஸ்....! என்ன நினைத்தாரோ, "நான் வெளியே நிக்கிறேன்" என்று எழுந்து போய்விட்டார் ரித்தீஷ்//

ஹா ஹா ஹா ஹா

//ரித்தீஷ§க்காக நமீதாவே பிரச்சாரம் செய்ய வந்தாலும் வரலாம்! யார் கண்டது?//

ரித்தீஷ் கண்டிப்பா MP ஆகிடுவாரு அப்புறம் ..நமீதாவ பார்த்து இதே வசனத்தை சொல்ல போறாரு பாருங்க :-)))

அந்தணன் இந்த பதிவை பல முறை படித்து படித்து சிரித்தேன் ஹா ஹா ஹா

அருமையான எழுத்து நடை..:-))))

வசந்தசேனன் said...

மனசாட்சியே இல்லாம் காமெடி பன்னுரீங்க .. இந்த ரீத்திஸ் அமைச்சர் சு.ப.தங்கவேலன் பேரன் அப்படின்னு ஊருக்குள்ள சொல்லிகிறாங்க , சுதாகரன் டிரைவர் அப்படின்னு சொல்லிகிராங்க் எது உன்மை

வெங்க்கி said...

எல்லாம் அம்மா / அக்கா பணம் தான்.. சுதாகரன் அடிச்சாரு...அங்கன இருந்து இவுரு அடிச்சாரு...(பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அத்த புடுங்குனாராம் அனுமாரு)