முதுகை பார்த்தே 'முன்கதை சுருக்கம்' கண்டுபிடிக்கிற ஆளு நானு. ஆனாலும், எனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்த நடிகையை 'பின்னாடி' பார்த்திட்டு 'முன்னாடி' யாராக இருக்கும்னு யூகிக்கவே முடியலே! அந்த ஆதார சுருதி கொஞ்சம் சேதாரம் ஆகியிருந்ததுதான் இதற்கு காரணம்.
மெல்ல அமலன் பக்கம் திரும்பி 'முன்னாடி யாருங்க?' என்றேன். "லேட்டா வந்தா இப்படிதான், ப்ரீத்தி வர்மா"ன்னாரு அசுவாரஸ்யமாக! விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நடித்த 'மின்சாரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்த கூத்து. கொஞ்சம் லேட்டாக போனதால், இருட்டில் இருட்டையும் சேர்த்து தடவிக் கொண்டு அமர்ந்தேன். நான் போய் கொஞ்ச நேரம் கழித்துதான் சிறுத்தையே வந்தது. அது சீறுகிற நேரத்திற்குள் 'முன்னாடி' நோட்டம் விட்டதன் விளைவுதான் இந்த விசாரிப்பு.
இடையில் தன்னை விபச்சாரத்திற்கு தள்ள முயன்றதாக சொந்த(?) அம்மா மீதே போலீசில் புகார் கொடுத்து, பத்திரிகைகளின் பசிக்காகவே கொஞ்ச காலம் 'மெஸ்' நடத்தினாரே, அதே ப்ரீத்திவர்மாதான் இவர். திருமா நடித்த முதல்படமான 'அன்புத்தோழி'யில் சிறுத்தைக்கு ஜோடி இவர்தான்! அதனால்தான் இந்த சிறப்பு மரியாதை!
'ரிவைன்டிங்' பட்டனை மெல்ல சுழற்ற ஆரம்பித்தேன். ப்ரீத்தி நடித்த முதல் படம் (மாறனோ என்ன மண்ணாங்கட்டியோ?) ரிலீஸ் ஆகாத நேரம். குமுதத்திலிருந்து பெ.கணேஷ் போன் அடித்தார். "தலைவா... தீபாவளி வருது. ஸ்ரீகாந்துக்கு ஒரு நடிகை எண்ணெய் தேய்ச்சு விடுற மாதிரி (தலைக்குதான்) ஒரு மேட்டர் பண்றோம். கொஞ்சம் உங்க ஹீரோகிட்ட கேட்டு பிக்ஸ் பண்ணி கொடுங்களேன்" என்றார். ரோஜாக்கூட்டம் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலை வரை ஸ்ரீக்கு பர்சனல் பிஆர்ஓ நான்தான். கி.க.சா நான் தயாரிச்ச சொந்த படம். 'நொந்த' படம்னு வேணும்னா திருத்தி வாசிக்க இந்த நல்லுலகுக்கு முழு உரிமை உண்டு. ஸ்ரீ யின் பிஆர்ஓங்கிற உரிமையில் என்னிடத்தில் கேட்டார் கணேஷ்.
"அதுக்கென்னா, முடிச்சுருவோம். ஆனா நடிகை யாருங்கிறதை நீங்களே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க" என்றேன். அப்போது 'ஜுட்' படப்பிடிப்பு என்று நினைவு. சில மணி நேரத்திற்குள்ளாகவே "தலைவா, நடிகைகிட்டே பேசிட்டேன். வளர்ந்து வருகிற நடிகை"ன்னாரு மொட்டையாக. இந்த இடத்திலே அவருகிட்டே நான் கேட்ட வினா சென்சாருக்குரியது என்பதால், வேணாம்! "அவங்க வீட்டுக்கு போயி அவங்களையும் பிக்கப் பண்ணிட்டு போயிரலாமா?" என்றார். "ஆஹா, அதுக்கென்ன" என்றேன். சொன்ன மாதிரியே ஒரு வீட்டுக்கு அழைத்துப் போனார்.
போனபின்தான் "இவங்க எதிலேங்க நடிக்கிறாங்க?" என்றேன் கணேஷின் காதோடு காதாக! "நல்ல பொண்ணு தலைவா. கொஞ்சம் மேலே ஏத்தி விடுவோமேன்னுதான். பெரிய ஹீரோ காம்பினேஷன்ல ஸ்டில் வந்தா, அவங்களுக்கும் ஒரு லிஃப்ட்தானே"ன்னாரு. சரி போகட்டும் என்று ப்ரீத்தியின் காரிலேயே ஏறிக்கொண்டு ஷ¨ட்டிங் ஸ்பாட்டுக்கு போனோம். வழியிலேயே தனது 'ஸ்தல புராணத்தை' சொல்ல ஆரம்பிச்சுது ப்ரீத்தி. சொன்னதை கேட்டா அம்பானிக்கு பேத்தியா இருப்பாங்களோங்கிற சந்தேகம்தான் வரும். "வீட்டுலே நாலு கார் இருக்கு. எனக்கு எது பிடிக்கும்னு அப்பா காலையிலேயே கேட்டுப்பார். நான் எந்த காரை சொல்றேனோ, அதை விட்டுட்டு வேற காரைதான் எடுத்திட்டு போவாரு"ங்கிற ரேஞ்சில் ஒரே செல்ஃப் ஸ்டோரி! பொண்ணு நடிக்க வர்றதுக்கு முன்னாடியே பெரிய 'ரிச் கேர்ள்' ஆக இருக்கும் போலிருக்கும்னு நினைச்சுக்கிட்டேன்.
நினைத்த மாதிரியே எல்லாம் நடந்தது. ஷாட் பிரேக்கில் ஸ்ரீ க்கு எண்ணெய் தேய்ச்சு விட்டார் ப்ரீத்தி. 'பளிச் பளிச்' என்று பிளாஷ் மழை அடித்தார் அண்ணன் சித்ராமணி. "அசைன்மென்ட் ரொம்ப அற்புதமா வந்திருக்கு தலைவா"ன்னாரு கணேஷ். ஒரு மணி நேரம்தான் இந்த சந்தோஷம். கொஞ்ச நேரத்திலேயே போன் வந்தது ஸ்ரீகாந்தின் சித்தப்பா சுந்தரிடமிருந்து.
"சார், ஒரு பொண்ணை குமுதத்துக்காக கூட்டிட்டு வந்தீங்களே, அது ரிச் கேர்ள்ளாமே சார்"னாரு. அவர் என்ன கேட்க வர்றாருன்னே புரியாம, "ஆமா சார். அந்த பொண்ணு ரொம்ப ரிச் தான் போலிருக்கு. வீட்லே நாலு கார் இருக்காம். அதில்லாம ரெண்டு மூணு பங்களா கூட இருக்குன்னு சொல்லிச்சு சார்" என்றேன். எதிர்முனையில் விழுந்து விழுந்து சிரிச்சாரு சித்தப்பா! "அந்தணஞ்சாரு, என்னா போங்க. அந்த பொண்ணு சினிமாவிலே தினமும் 800 ரூவா சம்பளம் வாங்கிட்டு ரிச் கேர்ள்ளா நடிப்பாங்களே, அந்த கேட்டகிரியாமே?"ன்னாரு சிரிப்பை அடக்க முடியாமல்! "ஸ்ரீ கூட யாராவது ஒரு பெரிய நடிகை இந்த அசைன்ட்மென்ட்டை பண்ணினா நல்லாயிருக்கும்ல. முடிஞ்சா இந்த போட்டோவை 'டிராப்' பண்ண சொல்லுங்களேன்"னாரு.
"ந்தா வெயிட் பண்ணுங்க. கணேஷ்கிட்ட பேசிடுறேன்" என்றேன். "பாவம் தலைவா" என்று பரிதாபப்பட்டுக் கொண்டே ப்ரீத்தியின் போட்டோக்களை தியாகம் செய்தார் கணேஷ். மறுபடியும் அந்த அசைன்ட்மென்டுக்கு விந்தியா வந்தார். அந்த வார குமுதத்தில் விந்தியா உதவியோடு ஸ்ரீகாந்தின் எண்ணெய் குளியலும் வந்தது.
விழா நடந்து கொண்டிருந்தது. ப்ரீத்தி திரும்பி பார்ப்பதற்குள் நான் புறப்பட்டேன். 'ப்ரீத்திங்கிற மின்சாரம் இப்படி பேட்டரியாயிடுச்சே' என்ற கவலையோடு!
8 comments:
Interesting சார் என்னை நினைவிருக்கிறதா. சங்கர் நாராயண் குறும்பட இயக்குனர்
Dear Boss,
your blogger is joyfull. Please write more. Your writing is really interesting.....
Note: This is the first time for me to post the comment..
அந்த டிராப் செய்த படத்தை போட்ருக்கலாமே?
சிறுத்தையின் முதல் படம் இயக்குநர் உதயசூரியனின் நண்பர் தெரியுமா?
Preethi would have been better than Vindhiya!
But now it's too late ;-)
முதுகை பார்த்தே 'முன்கதை சுருக்கம்' கண்டுபிடிக்கிற ஆளு நானு ... ha ha
இன்னும் நிறைய கண்டுபிடிச்சு எழுதுங்க சார்...
சூப்பர்.
//முதுகை பார்த்தே 'முன்கதை சுருக்கம்' கண்டுபிடிக்கிற ஆளு நானு. ஆனாலும், எனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்த நடிகையை 'பின்னாடி' பார்த்திட்டு 'முன்னாடி' யாராக இருக்கும்னு யூகிக்கவே முடியலே! அந்த ஆதார சுருதி கொஞ்சம் சேதாரம் ஆகியிருந்ததுதான் இதற்கு காரணம்.//
**************
தலைவா
ஒப்பனிங்கே படு சூப்பரா இருக்கே.......
நடத்துங்க ... நடத்துங்க ..........
அதிகம் வெளியில் வராத நிகழ்ச்சிகள் பத்தியும் எழுதுங்க பாஸ்,.
thala kalakuringa... eda edalam parthu kandupidipingalo theriyala thala,ennum preeti scene padatha matha manasu varaliya 7lam thedi ku apparam padive illaiye sikkaram poduinga, romba........ aavala iruken thodaruinga thala
கலக்குறீங்க.. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.. (மத்தவனோட விஷயம் பற்றி அறியுறது தானே எங்களுக்கு சுவார்சய்மானது)
நேரடியாக நீங்கள் பெயர்கள் சொல்லியே எழுதுவது நல்லா இருக்கு.
Post a Comment