தப்பே பண்ணாத ஒரு திரையுலக மார்கண்டேயன் சிவகுமார். தப்பை மட்டுமே சரியாக செய்யும் ஒரு திரையுலக மார்கண்டேயன் முரளி. ஆச்சர்யம் என்னன்னா, இரண்டு பேருமே பார்த்த காலத்திலேர்ந்து அப்படியே இருப்பதுதான். (யோகா, ஆன்மீகம்னு மெனக்கெடுறாரு சிவகுமார். முரளியை பொறுத்தவரை அப்படியெல்லாம் இல்லை. ஒரே ஜாலியோ ஜிம்கானாதான்! ஒருவேளை இதுவும் ஒரு 'டைப்பான' யோகாவோ?)
நாலு நாளைக்கு முன்னாடி இவர் நடித்த 'நீ உன்னை அறிந்தால்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் முரளி. காபி டீக்கு பதிலாக காயகல்பத்தை கரைச்சு கரைச்சு குடிப்பாரு போலிருக்கு. அன்னைக்கு பார்த்தபோதும், என்னைக்கோ பார்த்த மாதிரியே இருந்தார். பேச்சிலே மட்டும், சுய விமர்சனம் தெரிஞ்சுது. ஓப்பனாகவே "இனி தப்பு பண்ண மாட்டேன்"னாரு மைக்கில்!
முல்லா கதைகள் மாதிரி முரளியின் கதைகளை தனி தொகுதியாக போட்டால், டீன் ஏஜ் எரியாவில் செம கலெக்ஷன் பார்க்கலாம். நாம் சொல்லப்போவது அதுவல்ல, வேற! ஸ்ரீகாந்திடம் கதை சொல்ல வந்தார் ஒரு உதவி இயக்குனர். துவாரபாலகன் மாதிரி து£ணுக்கு பக்கத்திலே நிக்கிறவன் (மன்னிக்கணும், நின்னவன்) நான்தானே? முதலில் எங்கிட்ட கதை சொன்னவர், "இங்கே தேவலாம் சார். கதை கேட்கன்னு ஒரு 'மெத்தர்டு' வச்சிருக்கீங்க. கேட்டுட்டு நல்லாயிருந்தா சாரு கேக்கிறாரு. ஆனா அங்க அப்படியில்லே. அவருதான் கேப்பாரு. ஆனா, அதுக்குள்ளே நமக்கு நாக்கு தள்ளி, நண்டுவாக்கிளி போட்டுரும்" என்றார். யாரந்த அவரு? வேறு யாருமல்ல, முரளி. இவரிடம் அந்த உதவி இயக்குனர் கதை சொன்ன கதைதான் இது!
கதை சொல்ல முன் அனுமதி வாங்கியிருந்தாரு நம்ப உதவி இயக்குனரு. "நேரா மஹாபலிபுரம் வந்திருங்க. ஷாட் பிரேக்குல கதை கேட்டுர்றேன்" என்று சொல்லியிருந்தார் முரளி. சொன்ன மாதிரியே இவரும் போயிட்டார். காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் என்னென்னவோ காரணத்தால கதை கேட்கிற விஷயம் தள்ளி தள்ளி¢ போயிட்டே இருந்திச்சு. பேக்கப் என்று டைரக்டர் சொன்ன பின்பு, நாளைக்கு வரச் சொல்லிருவாரோ என்று கவலையோடு நின்றிருந்தார் நம்ம ஆளு.
"வாங்க பாஸ், காரிலேயே கதைய கேட்டுடலாம்" என்று அவரையும் காரில் ஏற்றிக் கொண்டார் முரளி. கிளம்பும்போது மணி சுமார் ஆறு இருக்கும். அப்படியே மாலை கவிழ்ந்து இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. முரளி காரை எடுத்த எடுப்பிலேயே அடி வயிற்றில் சூலம் குத்துச்சு நம்மாளுக்கு. "மெதுவா போங்க"ன்னு சொல்லி, அவரு தப்பா எடுத்துகிட்டா? கதை கேட்காட்டியும் பரவால்ல. காரிலேர்ந்து இறக்கிவிட்டு பஸ்லே வான்னு சொல்லிட்டா என்ன பண்றது? பெருமாளே, பத்திரமா கொண்டு போயி சேருன்னு வேண்டிக்கிட்டு கதை சொல்ல ஆரம்பிச்சாரு.
"சார், வில்லேஜ்லேர்ந்து சிட்டிக்கு போயி காலேஜ்ல படிக்கிற ஒரு...." இப்படி ஆரம்பிக்கும்போதுதான் உ.இயக்குனருக்கு விதி வேற ஒருத்தன் ரூபத்திலே வந்திச்சு. பொய்ய்ய்ய்ய்ங்க்க்குன்னு முரளியோட காரை சைடு வாங்கிட்டு முன்னாலே போனான் ஒரு காரு காரன். போனவன் சும்மாயில்லாம லேசா ஹாரனை அடிச்சு இந்த காரை வெறுப்பேத்திட்டு போக, முரளிக்குள்ளே முனியாண்டி பூந்துட்டான். "ங்கோ... எங்கிட்டயா? இப்ப பாருடா" என்றபடி ஆக்சிலேட்டரை ஏறி அமுக்க ஆரம்பித்துவிட்டார். கதையை தொடருவதா? அல்லது இந்த சேசிங் முடிஞ்சதும் ஆரம்பிச்சுக்கலாமா என்ற குழப்பத்திலேயே முரளி முகத்தை இவர் பார்க்க, "ம்ம்மம்ம்... நீங்க சொல்லுங்க தலைவா"ன்னாரு முரளி.
"சார் வில்லேஜ்லேர்ந்து சிட்டிக்குப்ப்ப்ப்....." வார்த்தையை அதற்கு மேல் தொடர முடியாதவாறு சர்வநாடியும் ஒடுங்கிப் போய் உட்கார்ந்துவிட்டார் உ.இ. வண்டி இப்போது 110 கி.மீ வேகத்தில் போய் கொண்டிருந்தது. அது இன்னும் அதிகரிக்கக் கூடும் என்பது போலவே இருந்தது முரளியின் முனீஸ்வர மூஞ்சி. "டேய், எங்கிட்டயா? நானெல்லாம் ரேசுக்கு போறவண்டா" என்று தனக்குள் பேசிக்கொண்டே வண்டியை முறுக்கினார் முரளி.
முன்னால் போனவனுக்கு வண்டியிலே வேகமா போயி வெறுப்போத்துறதுதான் பால்குடி காலத்திலேர்ந்தே 'ஹாபி' போலிருக்கு. ஒவ்வொரு வண்டியையும் ஸ்டைலாக கட் பண்ணிக் கொண்டே பறந்தான். பின்னால் இன்னொரு வண்டி தன்னை விரட்டுகிறது என்றதும், இன்னும் உற்சாகமாகிவிட்டான். ஈசிஆர் ரோட்டில் ஒரு அறிவிக்கப்படாத ரேஸ் நடத்திக் கொண்டிருந்தார்கள் இருவரும்.
"டேய், பணக்கார பாவிங்களா? உங்க ஆட்டத்திலே என்னை ஏண்டா பொலி போடுறீங்க? நான் பாட்டுக்கு செவேனேன்னு ஊர்ல கெடந்திருப்பேன். இப்படி வந்து மாட்டிட்டனே. இனி கதைன்னு இவன் பக்கம் வரக்கூடாது. பெருமாளே, இவனுக்கு நல்ல புத்தி குடு"ன்னு வேண்டிகிட்டே ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தார் உதவி இயக்குனர். விடாமல் தொடர்ந்த இந்த சேசிங் திருவான்மியூர் நெருங்கும்போதுதான் முடிவுக்கு வந்தது. முன்னால் சென்ற காரை முந்திவிட்டார் முரளி.
எவன்கிட்ட காட்ற ஒன் வேலைய? என்று முணுமுணுத்தவாறே திருவான்மியூர் ஓரமா காரை நிறுத்தினார் முரளி. "தலைவா, இப்போ வீட்டுக்கு போனா கதை கேட்க நேரம் இருக்காது. அப்படியே திரும்பி போனா, ஈசிஆர்ல ஒரு ஹோட்டல் இருக்கு. அங்கே போயிரலாம்"னு சொல்லி வண்டிய திருப்பினார். மறுபடியும் ஒரு பதினைஞ்சு கிலோ மீட்டர் பின்னாலே போனாங்க இரண்டு பேரும்.
காரை பார்க்கிங் பண்ணிய முரளி, அங்கேயே ஒரு ரூமை புக் பண்ணினார். உ.இ க்கு ஒரே சந்தோஷம். ஆஹா, நமக்காக ஒரு ஹீரோ ரூம் போடுறாருன்னா, இவருதாண்டா நடிகர்களின் நாயகன். மனிதருள் மாணிக்கம். இன்னிக்கு கதைய சொல்லி அசத்திர வேண்டியதுதான் என்று ஆனந்த கூத்தாடினார். ரூமிற்குள்ளே போனதும் அப்படியே பொதுக்கென்று கட்டிலில் விழுந்த முரளி, "ஏதாவது சாப்பிட்டுட்டே பேசலாம்" என்றபடி, பெல்லை அழுத்தி பேரரரை அழைத்தார். "ஒங்களுக்கு பீர்?" என்று ஆஃபர் வைக்க, "இல்ல சார். கதைய சொல்லிடுறேனே?" என்றார் உ.இ. "சரி, எனக்கு மட்டும் ஒரு ஃபுல் எடுத்திட்டு வந்திருங்க" சைட் டிஷ்ஷையும் சேர்த்து சொல்லிட்டு பாத்ரூம் போயிட்டு திரும்பி வந்தார் முரளி.
"தலைவா, சொல்லுங்க"
"சார், வில்லேஜ்லேர்ந்து சிட்டிக்கு போயி காலேஜ்ல படிக்கிற ஒரு...." அதற்குள் பேரர் வந்து விட, சரக்கை அப்படியே கிளாசில் கவிழ்த்து ராவாக அடிக்க ஆரம்பித்தார் முரளி. ஐந்தே நிமிடத்தில் "சொழ்ழிகிழ்ழே இழ தழைய்வா...." என்றாகிவிட்டார்.
கதையை சொல்றதா? சொன்னாதான் புரியுமா? இல்ல இப்படியே கழண்டுகிறதா? பசி வயிற்றை கிள்ள, அங்கிருந்த சைட் டிஷ்களை பதம் பார்த்தார் உ.இ.
"இன்னைக்கு முடியாது. நாளைக்கு வந்திருங்க" என்பதை எப்படியோ உதவி இயக்குனருக்கு புரியும்படி சொன்னார் முரளி. அல்லது இவரே அப்படி புரிந்து கொண்டார். கிளம்பி பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தவர், மறுநாள் படப்பிடிப்பு எங்கே என்று விசாரித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் இவரை போலவே முரளியை தேடிக் கொண்டிருந்தது மொத்த யூனிட்டும். அவர் இருக்கும் இடத்தை சொல்வது சரியாக இருக்குமா? எதற்கு வம்பு என்று மீண்டும் ஹோட்டலுக்கே வந்தார் உ.இ.
முதல் நாள் என்ன கண்டிஷனில் இருந்தாரோ, அதே கண்டிஷனில் இருந்தார் முரளி. இப்படியே நான்கு நாட்கள். இவர் படப்பிடிப்புக்கு போவதும், மீண்டும் ஹோட்டலுக்கு வருவதுமாக இருந்தார். ஒருகட்டத்தில் இது வேலைக்கு ஆவாது என்ற முடிவுக்கு வந்தததாக சொன்னார்.
முரளி இனிமே தப்பு பண்ண மாட்டேன்னு சொன்னது இது மாதிரி விஷயங்களுக்காக இருக்காது என்பது என் யூகம். ஏன்னா முரளியை பொறுத்தவரை இதெல்லாம் தப்பு இல்லை. அது வேற....
15 comments:
thalaiva,
ippadi puttu puttu vaikiriye?
rajesh.v
//அது வேற....//
புரியலியே. வெளக்கமாச் சொல்லும் வோய்!
அவ்வளவையும் எழுதி இப்படி முகதிரையை கிழிக்கறீங்களே?
தல, பின்னிட்ட போ, மறுபடி பீல்டுக்கு வந்தவர நீ வீட்டுக்கு அனுப்பி வச்சுருவ போல தெரியுது.
சரி, அது வேற... ன்னு சொன்னியே எனக்கு மட்டும் ரகசியம சொல்லு
அந்தணன் சார்,
சரியான நடை... சான்சே இல்லை....உங்கள் எழுத்துலக அனுபவங்களின் முதிர்வும் திறமையும் அசால்ட்டாக வெளிப்படுகிறது உங்கள் எழுத்தில்...
பாஷா ல ஒரு வசனம் வரும்,. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் சண்டை வெறி ஊரினவனாலதான் இப்படி அடிக்க முடியும் என்று.. அதே போல.. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் நகைச்சுவை உணர்வும் அதை வெளிக்கொணரும் திறமையும் இருந்தால் தான் இப்படி தொடர்ந்து பதிவுகளை சரமாரியாகத் தரமுடியும்....
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஈ ரா
/// ஈ ரா said...
பாஷா ல ஒரு வசனம் வரும்,. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் சண்டை வெறி ஊரினவனாலதான் இப்படி அடிக்க முடியும் என்று.. அதே போல.. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் நகைச்சுவை உணர்வும் அதை வெளிக்கொணரும் திறமையும் இருந்தால் தான் இப்படி தொடர்ந்து பதிவுகளை சரமாரியாகத் தரமுடியும்....///
வழிமொழிகிறேன்...
இதுதான் உண்மை
கலக்குங்க சார்...
மிக மிக நன்றாக இருக்கின்றன உங்கள் பதிவுகள் ,
கலக்குங்க நண்பா...
பரதன்
அந்தணன் சார்
இந்த "தப்பு தப்பான" வெளையாட்டுல கார்த்திக், அர்ஜூன் இவங்க எல்லாம் கூட முரளிக்கு சளைச்சவங்க இல்ல போல இருக்கு......
வரட்டும், வரட்டும், இப்போதானே ஆரம்பம் ஆகி இருக்கு. வரிசையாக வரும் .......
கலக்குங்க "தல"..........
அவர் பையனும் நடிக்க வந்திட்டாராமே! இதெல்லாம் ஒழுங்காக சொல்லிக்கொடுக்கச்சொல்லனும்.ஒரே கவலையாக இருக்கு. :-)
பல உண்மைகள் வெளிய வரும் போல இருக்கு.
உங்க பாணி எழுத்துகளுக்கே தனியா இருக்கு தல.
சூப்பர்.
வாழ்த்துகள்.
pathavachitiye parattai
வார்த்தைகளை எங்கதான் புடிக்கிறிகளோ பின்ன்ரிங்க
/// ஈ ரா said...
பாஷா ல ஒரு வசனம் வரும்,. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் சண்டை வெறி ஊரினவனாலதான் இப்படி அடிக்க முடியும் என்று.. அதே போல.. நாடி நரம்பு ரத்தம் எல்லாம் நகைச்சுவை உணர்வும் அதை வெளிக்கொணரும் திறமையும் இருந்தால் தான் இப்படி தொடர்ந்து பதிவுகளை சரமாரியாகத் தரமுடியும்....///
நானும் இதை வழிமொழிகிறேன்.
அந்தணன் சார், நீங்க ஒரு பதிவுலக பாட்ஷா பாய் :-)
முரளியை வேறு சந்தர்ப்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்து இருக்கிறேன்...அவர் குஷ்பூ வை பற்றி கூறிய பலான கமெண்ட் இன்னமும் எனக்கு சிரிப்பை மூட்டும்.."கும்பகோணம் வெத்தல மாதிரி................" அந்தணன் சார்...உங்களுக்கு இது புரியும்ன்னு நெனைக்கிறேன்...
Super..Ellame Sema Sarakku!! Konjam innum Murali-in velaiyaattukkalai yeduthu vidunga.
Post a Comment