Sunday, April 12, 2009

கேப்டனுக்கு பிடித்த லஜ்ஜாவதியே....

பரத் வாயை திறந்தா வளவளன்னு கொட்றது ரெண்டே ரெண்டு! ஒன்ணு ஜொள்ளு, இன்னொன்னு கிள்ளு! அதுவும் ஒங்க வீட்டு கிள்ளு எங்க வீட்டு கிள்ளு இல்லே, ஊருக்கே வலிக்கிற 'மாட்டூசி' கிள்ளு! படத்திற்கோ, அல்லது ஃபங்ஷனுக்கோ போனா பரத் இல்லாத இடமா பார்த்து உட்கார்றது என்னோட வழக்கம்! ஏன்னா சைலண்டா ஜோக்கடிச்சுட்டு வேற பக்கம் பார்த்திட்டிருப்பாரு பரத். கெக்கக்கேன்னு ஓவரா சிரிச்சு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரோட சாபத்தை வாங்கிப்பேன் நான்.

போனவாரம் ஒரு ஃபங்ஷன். இசையமைப்பாளர் தேவா கலந்துகிட்ட விழா அது. தெரியாம போயி பரத் பக்கத்திலே உட்கார்ந்திட்டேன். பேச்சுக்கு பேச்சுக்கு காமென்ட். தேவா பேசும்போது, "நான் அந்த பொண்ணோட குரலை கேட்டுட்டு அசந்து போயிட்டேன். இந்த படத்திலே மட்டுமில்லே, என்னோட அடுத்தடுத்த படத்திலேயும் இந்த பொண்ணுக்கு பாடற வாய்ப்பை கொடுக்க போறேன்" என்றார். பரத் சும்மாயில்லாமல், "அந்த பொண்ணுக்கு இவரு வாய்ப்பு கொடுப்பாரு, இவருக்கு யாரு வாய்ப்பு கொடுப்பாங்களாம்?" என்றார் சிரிக்காமல். பரத் இப்படிதான்! "ஏய், நம்மளையே எல்லாம் வாட்ச் பண்றாங்க. பேசாம இரேன்" என்று அதட்டினாலும், அஞ்சு நிமிஷம்தான் அமைதியா இருக்க முடியும் அவரால். ஒரு மாலை தினசரியின் நிருபன்தான் இந்த பரத்!

எல்லாரையும் ஓட்டும் பரத், கொஞ்ச நாள் "ஆள விடுங்கடா சாமீய்ய்ய்ய்"னு ஓடுனாரு. எப்போ தெரியுமா? நட்சத்திர கலை விழாவுக்காக ஒட்டு மொத்த நடிகர் சங்கமும் ஃபாரினுக்கு கிளம்புச்சே, அப்போ!

விஜயகாந்த் நடிகர் சங்க தலைவரா இருந்தப்போ நடந்த சம்பவம் அது. சங்க நிதிக்காக வெளிநாட்டில் நட்சத்திர கலைவிழா நடத்துறதா முடிவு பண்ணிட்டாங்க. இதிலே சில நடிகர் நடிகைகள் வருவாங்களா, மாட்டாங்களா என்ற சந்தேகமும் எழுந்திச்சு. அதனால் எல்லா நடிகர்களுக்கும் போன் போட்டு அவரே நேரடியாக இன்வைட் பண்ணிட்டு இருந்தாரு. அட, விழாவுக்கு அழைக்கிறது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்க இந்த பாட்டுக்கு ஆடணும். இந்த காட்சிக்கு ஏத்த மாதிரி நடிக்கணும்னு ஏகப்பட்ட ஐடியாக்களை வேற அள்ளி விட்டுகிட்டு இருந்தாரு. அப்போதான் பிஆர்ஓ க்களில் ஒருவரான நெல்லை சுந்தர்ராஜனிடம் சொல்லி, "அண்ணே பரத்துக்கு போன் போட்டுக் கொடுங்க. பேசணும்"னு விஜயகாந்த் சொல்ல, அவரும் ஒரு நம்பரை போட்டு விஜயகாந்துக்கிட்டே கொடுத்திட்டாரு.

கொடுமை என்னன்னா விஜயகாந்த் கேட்டது நடிகர் பரத் நம்பரை. நெல்லை சுந்தர்ராஜன் போட்டுக் கொடுத்தது நம்ம நிருபன் பரத்தோட நம்பரை. எடுத்த எடுப்பிலேயே "என்னா பரத்? ஷ§ட்டிங்கிலே இருக்கீங்களா"ன்னாரு கேப்டன். அந்த நேரம் பார்த்து நம்ம ஆளு ஒரு ஷ¨ட்டிங்கிலே கதாநாயகிய பேட்டி எடுத்திட்டு இருந்தாரு. அட, கேப்டன் குரல் மாதிரி இருக்கு. கரெக்டா ஷ¨ட்டிங்கிலே இருக்கீங்களான்னு வேற கேட்கிறாரு. நடிகர் சங்க தலைவர்ங்கிற முறையிலே ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணிட்டாளா இந்த நாதாரின்ன்னு நடிகையை முறைச்சுகிட்டே, "ஆமாம் சார். என்னா விஷயம், சொல்லுங்கன்னாரு". மைண்டுக்குள்ளே நாம ஒன்ணும் இந்த நாதாரிய தப்பா கேட்கலீயே. அப்புறம் என்னவா இருக்கும்னு ஓடிட்டு இருந்திச்சு பரத்துக்கு!

"பரத், நீங்க வர்றீங்கதானே"ன்னு கேப்டன் கேட்க, பேட்டிய முடிச்சுட்டு நடிகர் சங்கத்துக்கு வர சொல்றாரு போலிருக்கு. ஏதோ முக்கியமான பிரஸ் மீட்டா இருக்கும்னு நெனச்சுகிட்டு, "ம்... வர்றேனே" என்றார் பரத்!

நீங்க மைண்ட்லே என்ன பாட்டு வச்சுருக்கீங்கன்னு தெரியாது. ஆனா, எனக்கு புடிச்சது லஜ்ஜாவதியேதான்னாரு கேப்டன். ஆஃப் பாட்டிலை அப்படியே ராவா அடிச்சது மாதிரி குழம்பி போன பரத், குத்து மதிப்பா "எனக்கும் அதுதான் சார் புடிக்கும்னாரு"

"ரொம்ப ஃபாஸ்ட் ஸாங்... வீட்லே எம் பையன் பிரபாகரன் அந்த பாட்டை கேட்டா சும்மாயிருக்க மாட்டான். பயங்கரமா ஆடுவான்"னு அவரு சொல்ல, உங்க பையன்தானே? ஆடினாலே பயங்கரமாதான் இருக்கும்னு பரத் நினைத்துக்கொண்டே, "ஆமாம்... ஆமாம்"னாரு குத்து மதிப்பா. ஆனா, எங்கோ இடிக்குதேன்னு மனசு சொல்லிகிட்டே இருந்தாலும் பேச்சை விடலை ரெண்டு பேரும்.

"அப்படின்னா அதே பாட்டுக்கு நீங்க ஆடிடுங்க. ரிகர்சல் நாளையிலேர்ந்து இருக்கு. தினமும் ஒன் அவர் வந்தா கூட போதும். நீங்கதான் நல்லாவே ஆடுவீங்களே"ன்னு கேப்டன் சொன்னாரு. அப்போதான் புத்தியிலே புல்லட் ஓடுச்சு பரத்துக்கு. அட பாவி மக்கா, இப்படி லைனை மாத்திப் போட்டு கொல்றாய்ங்களேன்னு அதிர்ச்சியனவரு, சரி சார்னு ஒரு பதிலை சொல்லிட்டு நடிகர் பரத்தாகவே நினைத்துக் கொண்டு போனை வச்சிருக்கலாம்.

"சார், நீங்க நினைக்கிற நடிகர் பரத் நான் இல்லை. நான் ரிப்போர்ட்டர் பரத்" என்று சொல்ல, எதிர்முனையில் "யோவ்... நெல்லைய்ய்ய்ய்ய்ய்ய்"னு கேப்டன் கத்துனது பரத்துக்கு தெளிவா கேட்டுச்சாம். ரெண்டு நாள் கழிச்சு, "ஏன்யா, நீயாவது முதல்லேயே நான் இல்லேன்னு சொல்லக் கூடாதா? கேப்டன் ரவுண்டு கட்டிட்டாருய்யா"ன்னு புலம்புனாராம் நெல்லை!

எல்லாரையும் ஒட்டுற பரத்தை "யோவ், ஒன்னை கேப்டன் கூப்பிடுறாரு"ன்னு சொல்லி சொல்லியே விரட்டினாங்க சக நிருபர்கள். அப்போ பரத் வழிஞ்சதை பார்க்கணுமே!

16 comments:

butterfly Surya said...

சூப்பர்.

vijay shan said...

Anthanan,
unga approache thani. keep up the good work. Since I do not know much about you, Is it too much to ask that you do a posting about the various places you worked in and and what you are currently doing. Just a humble request.

Vijay

தலைவர் said...

தல, இந்த கதை நடிகர் பரத்துக்கு தெரியுமா ?

அன்புச்செல்வன் said...

வழக்கம்போல suuuperuங்க அப்படியே அந்த 'மஞ்ச கலரு ஜிங்குச்சான்' மேட்டரையும் அவுத்து வுட்டுராதீங்க.... பாஸ்..

-அன்புச்செல்வன்

ஜீவா said...

சார்

உங்களின் பதிவுகள் அனைத்தையும் படித்தேன். எத்தனை அழகாய் , அத்தனையும் என் கவலைகள் மறந்து கண்ணீர் வரும்வரை சிரிக்க வைத்து விட்டீர்கள் . நன்றிகள்

Anonymous said...

sir, T.R patthi innum sollunga....

Bhaskar said...

Thamizh Thiraiyulagin thannigarilla nirubar, thaanai thalaivan bharath vazhga...

Karthick said...

Bharat Miss pannitare Lajjavathiye dance....he is a good dancer

Sridhar said...

நெல்லைக்கே அல்வா கொடுத்துட்டாங்களா? அப்படி போடு அரிவாளை. அண்ணா கலக்கறீங்க.

R.Gopi said...

//"ரொம்ப ஃபாஸ்ட் ஸாங்... வீட்லே எம் பையன் பிரபாகரன் அந்த பாட்டை கேட்டா சும்மாயிருக்க மாட்டான். பயங்கரமா ஆடுவான்"னு அவரு சொல்ல, உங்க பையன்தானே? ஆடினாலே பயங்கரமாதான் இருக்கும்//

**********

சின்ன கேப்டன பத்தி, நீங்க சொன்னது

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு............

நெக்ஸ்ட் யாரு "தல"??

வழிப்போக்கன் said...

எப்பிடி இப்பிடியெல்லாம்???
ஹய்யோ..ஹய்யோ..
ஹி..ஹி..
:)))

Anonymous said...

I guess you forgot to write about kavingar vikramadityan.

♫சோம்பேறி♫ said...

கேப்டன் ஆடினாலே பாக்க முடியாது. இவரு பையன் வேறைய்ய்யா..

வெங்க்கி said...

கேப்டன் பையன் ஆடினாவா?? ஐயோ...காண்டாமிருகம் கோமணம் கட்டி ஆடுற மாதிரி இருக்குமே??

Anonymous said...

//உங்க பையன்தானே? ஆடினாலே பயங்கரமாதான் இருக்கும்னு//

kalakkal thalai

sparrowrajesh said...

entha aproachkuda nallathan eruku