நடிகர் பரத்துக்கு லைன் போட்டு தரச்சொன்னா ரிப்போர்ட்டர் பரத்திற்கு லைன் கொடுத்து, கேப்டனை 'லயன்' போல் கர்ஜிக்க வைத்த நெல்லை சுந்தர்ராஜனின் கதையை சொல்லியிருந்தேன். (கேப்டனுக்கு பிடித்த லஜ்ஜாவதியே) அவரோட சாதனை கதம்பத்தில் இன்னொரு ஹி..ஹி...!
அதற்கு முன்பு நெல்லை பற்றி ஒரு சிறு குறிப்பு. மிக பழமையான மக்கள் தொடர்பாளர் இவர். ஆணானப்பட்ட சரத்குமாரையே ஒரு காலத்தில் தனது பைக்கில் வைத்துக் கொண்டு வாய்ப்பு கேட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியவர். இன்றைய தினம் மாருதி ஆம்னிக்கு மாறிவிட்டாலும், செய்வதெல்லாம் 'செக்கு சுத்தற' வேலைதான்! இவரது காருக்கு பின்னால் நெல்லை என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். ஆனால் அதை வாசிக்க நீங்க ஏதாவது ஒரு யுனிவர்சிடியில் குறைந்தபட்சம் டாக்டர் பட்டமாவது வாங்கியிருக்கனும். நியூமராலஜிப்படி ஸ்பெல்லிங் கோர்த்து எழுதியிருப்பார். படித்தால் நெல்லை என்பதற்கு பதிலாக நல்லெல்ல்லீய்ய்ய்ய்ய் என்றுதான் வாசிக்க முடியும்! இப்பவும் இன்டர்நெட் இதழாளர்களை 'இன்டர்காம் ரிப்போர்ட்டர்' என்று அழைக்கக்கூடிய அப்பாவி மனிதர்!
இவரை பார்க்கும்போதெல்லாம் 'நெல்லை, தொல்லை' என்றுதான் நகைச்சுவையாக அழைப்பார் சரத்குமார். அப்படிப்பட்ட இவர், ஏவிஎம் சரவணன், கே.ஆர்ஜி, கேயார் போன்ற பெருமைமிகு தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டிய கதைதான் இது.
தமிழ் திரையுலகம் சார்பாக எதற்கோ நிதி திரட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த நிதி திரட்டும் குழுவிற்கு தலைமை ஏற்றது திரையுலக தயாரிப்பாளர்களும், மிகப் பெரும் ஜாம்பவான்களுமாகிய ஏவிஎம் சரவணன், கே.ஆர்.ஜி உள்ளிட்ட பலர். திரைப்பட நட்சதிரங்களின் வீடுகள் அடிக்கடி மாறக்கூடியது என்பதாலும், அநேகமாக எல்லாருடனும் தொடர்புடையவர் என்பதாலும், நெல்லை சுந்தர்ராஜனைதான் வழிகாட்டுவதற்காக அழைத்துச் சென்றார்கள். அப்படிதான் ஒருநாள் காலையில் கிளம்பியது டீம்.
"யோவ் நெல்லை, மொதல்ல தேவா வீட்டுக்கு போகலாம்யா" என்றார் கே.ஆர்.ஜி. "சரிண்ணே..." என்று காரில் ஏறி டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார் நெல்லை. இசையமைப்பாளர் தேவா வீட்டுக்கு போகிறோம் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்க, தேவயானி வீட்டுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தார் நெல்லை. (தேவயானியை இவர் தேவா என்று செல்லமாக அழைப்பார் போலிருக்கிறது) தேவா வீட்டுக்கு சந்து பொந்தெல்லாம் சுற்றி போயிகிட்டு இருக்காரே என்ற சந்தேகம் இவங்களுக்கு இருந்தாலும், ஏதோ ஷாட் ரூட்லே போறாரு போலிருக்குன்னு அமைதியாக இருந்திட்டாங்க எல்லாரும். வண்டி போய் ஒரு பங்களாவுக்கு முன் நின்றது.
'நல்ல சம்பாத்தியம்யா தேவாவுக்கு. புதுசா வீடு வாங்கியிருக்காரு போலிருக்கு' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்கள் எல்லாரும். உள்ளே நுழைந்தவுடன் எல்லாருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால் தேவயானி சிரித்துக் கொண்டிருப்பது போல பெரிய அளவு போட்டோ! தேவா கொஞ்சம் அப்பிடி இப்பிடிதான். அதுக்காக 'வச்சுகிட்டு' இருக்கிற பொண்ணு போட்டோவ தன்னோட வீட்லே மாட்டுற அளவுக்கு தைரியம் வந்திருச்சா என்று அதிர்ந்தே போனார்கள். ஒருவருக்கொருவர் காதில் கிசுகிசுத்துக் கொண்டார்கள். விறுவிறுவென்று சமையலறைக்குள்ளே நுழைந்த நெல்லை, விஷயத்தை சொல்ல அரக்க பரக்க வெளியே ஓடிவந்தார் தேவயானியின் அம்மா.
அட, "அம்மாவையுமா?" என்று அதிர்ந்தே போனார்கள் அத்தனை பேரும். ஆனாலும் தேவா வரட்டும் என்பது போலவே அந்தம்மாவிடம் எதுவும் பேசாமல் "நல்லாயிருக்கீங்களா" என்று மட்டும் கேட்டுவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். "குளிச்சிட்டு இருக்கா, வந்திருவா" என்று அந்தம்மா சொல்ல, தேவயானி வந்தா என்ன, வராட்டி என்ன? தேவாவை வரச்சொல்லும்மா என்று மனசுக்குள் முணுமுணுத்தவாறு எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
மெல்ல நெல்லையை பக்கத்தில் அழைத்து, "யோவ் தேவா எங்கேய்யா?" என்றார்கள். "அதுவா, குளிச்சிட்டு இருக்குன்னு அவங்க அம்மா சொன்னாங்களே" என்றார் நெல்லை. "குளிக்கறது தேவயானி. நான் கேட்கிறது தேவா" என்று கேஆர்ஜி கோபம் காட்ட, அப்போதுதான் 'ஆஹா, மாட்டிட்டோம்டா' என்ற நிலைக்கு வந்தார் நெல்லை. "அண்ணே, நீங்க தேவான்னதும் நான் தேவயானின்னு நெனச்சுட்டேண்ணே. இது தேவா வீடு இல்ல, தேவயானி வீடு"ன்னு காதிலே கிசுகிசுத்தார்.
அதற்குள் தேவயானியே வந்து வணக்கம் போட, "இல்லம்மா அந்த நிதி...." ன்னு சமாளித்தார்கள் அத்தனைபேரும். "சார், நான்தான் நாற்பதாயிரம் கொடுத்திட்டேனே" என்று அதற்கும் தயாராக தேவயானி ஒரு பதிலை வைத்திருக்க, "இல்லைம்மா, ரவுண்டா ஐம்பதாயிரமா கொடுத்திருங்களேன்" என்று கேட்டு சமாளித்தார்கள். பிறகு அவர் கொடுத்த பத்தாயிரத்தை வாங்கிக் கொண்டு காரில் திரும்பினார்கள். காரிலேயே வைத்து நெல்லைக்கு கொடுத்த அர்ச்சனை இருக்கே, அது வெறும் அர்ச்சனை இல்லை, சர்ர்ரியான படையல்!
17 comments:
தல,அந்த நெல்லையை சினிமாவில் நடிக்க வைத்தால் கமெடியனாக ஒரு பெரிய ரவுண்ட் வருவார்.
இனி மேல் சர்தார்ஜி ஜோக் போல் நெல்லையன் ஜோக் உருவாக்கி விடலாம்.
//ஒரு நடிகை குளிக்கிறா//
கிளுகிளுப்பா தலைப்ப போட்டுட்டு இப்படி மொக்கையக்கிட்டியே...
நெல்லைக்கு விவரமா சொன்னாலே சொதப்புவார். எனக்கும் இது போல நடந்தது.
கலக்கல்.
பாவம் சார் நெல்லை.
Dear Mr.Sridhar..
உங்க பிளாக் ஒப்பன் ஆகலையே..???
நீங்கதான் துபாய் ஸ்ரீதரா..??
அந்தணன் சார். T.R. பற்றிய
எச்சிலான மைக்கும், ஈரமில்லாத மனசும்...!
இந்த பதிவு தமிலிஷ்ல இருக்கு. ஆனால் திறக்க முடியவில்லை.
தூக்கிட்டிங்களா..??
Anything Special..????
எழுதின பிறகு என் தலைவனை பற்றி இப்படி எழுதிட்டோமே என்று எனக்கே பாவமா இருந்திச்சு. அதான் து£க்கிட்டேன். தலைவன் பற்றி வேறொரு அசத்தல் நியூசோட சீக்கிரம் வர்றேன். அதுக்கு இடையிலே த்ரிஷா பற்றி கிளுகிளு மேட்டர் ஒன்னு இருக்கு. அதுக்கு ஞாயிற்று கிழமை வரைக்கும் பொறுமையா இருக்கணும். ஓக்கேவா?
அந்தணன்
ஞாயிற்று கிழமை வரைக்கும் பொறுமையா இருக்கணும். Too much
ஏதோ பாத்து செய்யுங்க எசமான்...
Dear Mr.Sridhar..
உங்க பிளாக் ஒப்பன் ஆகலையே..???
நீங்கதான் துபாய் ஸ்ரீதரா..??
Yes sir,
Nan thaan antha ex-dubai sridhar.
Naan oru paarvayaalan mattume padaipaali illa.
Dear Mr. Sridhar.
Thanx for your reply. ஒரு நல்ல படிப்பாளியே ஒரு படைப்பாளியாவது மிக சுலபம் சார்.
வாழ்த்துகள்.
என் வலைக்கு வந்த் வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியே..
நானும் நாலு ஆண்டு அமீரக வாசிதான் சார்.
சலாம்.....
//கிளுகிளு மேட்டர் ஒன்னு இருக்கு. அதுக்கு ஞாயிற்று கிழமை வரைக்கும் பொறுமையா இருக்கணும். ஓக்கேவா? //
ஞாயிற்றுக்கிழமை வரையுமா? அய்யோ அண்ணா! அவ்ளோ நாளெல்லாம் பொறுமையா இருக்க முடியாதுங்கண்ணா ஏதோ பார்த்து போடுங்கண்ணா!
Your removed post about TR is visible here:
http://www.envazhi.com/?p=6459
Not sure whether this person got your approval or not.
எச்சிலான மைக்கும், ஈரமில்லாத மனசும்…!
வேணாம்னா விட்றீங்களா?
“சார், ஒரு டிஆர் நியூஸ் ப்ளீஸ்?”னு போன்லேவும், மெயில்லேயும் கேட்டவங்களோட எண்ணிக்கை நூறை தொட்டதால, மறுபடியும் டி.ஆரை பத்தி எழுத வேண்டியதா போச்சு! (நூறு, டிஆரு… தலைவன் பாணியிலேயே பின்றோம்ல..!)
டிஜிபியும், போலீஸ் அதிகாரிங்களும் கூடிக் கூடிப் பேசுறதை பார்த்தா, விலங்குக்கு ‘நலுங்கு’ சுத்திருவாங்க போலிருக்கு! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்றதை பத்தி, பத்தி பத்தியா பேசிட்டு இருக்காங்க. அநேகமா ரெண்டொரு நாளிலே…, அது நடந்திரும்!
“என் தலைவனுக்கு ஜெயிலு புதுசில்லை, பாளையங்கோட்டையிலே பத்து நாள். செஞ்சிக் கோட்டையிலே இருவது நாள். செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே நிரந்தர முதல்வராக…” என்று மேடையிலே முழங்கறதுக்காகவே தலைவன் ஜெயிலுக்கு போகனும்னு நாங்கள்ளாம் விரும்பினோம்.
ஆனாலும், “ஏம்ப்பா சொன்னா நம்புப்பா… நானும் ரவுடிதான்”னு வடிவேலு மல்லுக் கட்டுவாரே, அதே கதையா, இவரோட முழக்கத்தை மதிச்சு, அட்லீஸ்ட் விசாரணைக்காகவாவது ஒரே ஒரு போலீஸ் தலை வீட்டுப் பக்கம் வரணுமே? தீவாளி, பொங்கல் இனாமுக்கு கூட ஒருத்தரும் அந்த பக்கம் வர்றதா தெரியலே!
பேச்சை பேச்சாத்தான் நினைச்சாய்ங்களே தவிர, அண்ணன் நினைக்கிற மாதிரி, ஒருவரும் அதை வாள் வீச்சா நினைக்கவே இல்ல. இந்த நேரத்திலேதான் அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவமும் நடந்தது. டிஆரை போலீஸ் பிடிச்சு வச்சுக்கிச்சு… அட, இதென்னடா கிச்சு கிச்சுன்னு நாங்க ஓடினோம் ஸ்டேஷனுக்கு! இந்த கைது ஏன் என்பதை விளக்கணும்னா, சம்பவம் நடந்த சில தினங்களுக்கு முன்னாடி போகனும். மறுபடியும் ஷேர் ஆட்டோ பிடிச்சு திரும்பி வரணும்!
திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடந்தபோது, நம்ம டிஆரும் தலைவர் பதவிக்கு நின்றார். எதிர்த்து நின்றவர் டைரக்டர் விசு.
கே.எஸ்.ரவிக்குமார், செல்வமணி உள்ளிட்ட பெரும் படையே நம்ம ஆளுக்கு எதிரா வேலை பார்த்துச்சு. “எம்.ஏ படிச்சவன்ங்கிற முறையிலே சொல்றேன். நானெல்லாம் அடிமட்டத்திலேர்ந்து உழைச்சு மேலே வந்தவன். என்னை ஜெயிக்க வைங்க”ன்னாரு டிஆர்.
“அவரு என்ன நாட்டுக்காகவா உழைச்சு முன்னுக்கு வந்தாரு? அவருக்காகதானே உழைச்சாரு”ன்னு திருப்பி போட்டு தாக்கினாரு செல்வமணி. இவர்களின் வாய் வீச்சில் ‘மைக்’ எச்சிலானதே தவிர, மனசு ஈரமாகவில்லை ஒருவருக்கும்! அறுதி பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில், தோற்றுப் போனார் டிஆர்!
தோல்வியை ஒத்துகிட்டா கேவலாமாகிடும்னு எந்த நாதாரி சொல்லிக் கொடுத்தானோ, தேர்தல் முடிவே ஃபிராடுன்னு திசை திருப்ப நினைச்சாரு அண்ணன். அதுக்காக ரோட்டிலே போற பஸ்சை மறிச்சா ஆகுமா? தனது ‘ஐம்பதுக்கணக்கான’ தொண்டர்களுடன் (ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன்னு சொல்ல ஆசைதான், இருந்தாதானே?) மறியல் செய்தார் டிஆர். வேறு வழியில்லாமல் வடபழனி ஸ்டேஷனில் எல்லாரையும் பிடித்து உட்கார வைத்துவிட்டது போலீஸ்.
தகவல் அறிந்து முதல் ஆளாக ஓடினேன். எங்கே போயிரப் போறாங்க என்ற தைரியத்துடன் தொண்டர்களை வாசல் ஏரியாவிலேயே உட்கார வைத்திருந்தார்கள். அண்ணனை மட்டும் எஸ்.ஐ டேபிளுக்கு முன்னால் உட்கார வைத்திருந்தார்கள். பக்கத்தில் அவரது சகோதரர் வாசு. நல்ல கொளுத்துற வெயிலில் வேர்வை பொங்க உட்கார்த்திருந்தார் டிஆர்.
இந்த இடத்தில் ஒரு இடைச் செருகல். பாக்கெட்ல இருந்தா எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்திருவாருன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன். ஒரு முறை இவரை பார்க்க தனது தம்பியுடன் வந்திருந்தார் நிருபர் ஒருவர். தம்பி பேரு கல்யாணசுந்தரம். இளவலை அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் “அண்ணே, என் தம்பி கல்யாணம்….”னு இவரு ஆரம்பிக்க, பாய்ந்து இரண்டடி முன்னால் வந்த டிஆர், “வாழ்த்துக்கள், எப்போ வச்சிருக்கீங்க?” என்றார் சந்தோஷமாக.
அட, கல்யாண சுந்தரம்னு அறிமுகப்படுத்துறதுக்குள்ளே அவனுக்கு கல்யாணம் நினைச்சுகிட்டு இப்படி பறக்கிறாரே, சரி, கல்யாணம்னே வச்சுகிடட்டும் என்று நினைத்த நிருபர், “அடுத்த மாசம்ணே” என்றார் சமயோசிதமாக. நிருபர் நினைத்ததுதான் நடந்தது. தனது பாக்கெட்டில் ஸ்டைலாக கைவிட்ட டிஆர், ஒரு ஆயிரம் ரூவாயை உறுவி, “வச்சுக்கோ” என்றார்.
இப்படியெல்லாம் அடிக்கடி நிகழ்ந்துவிடுவதால், அண்ணன் பாக்கெட்டில் பணமே இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார் அண்ணியார். அப்படி ஒரு துரதிருஷ்ட தினத்தில் அமைந்ததுதான் இந்த மறியலும், கைதும்!
நான் போயிருந்தபோது, கடும் தாகத்தில் இருந்தார் அண்ணன். ஒரு ஃபேண்டா குடிச்சா தேவலாம் போல இருந்திருக்குமோ என்னவோ, “சார், அண்ணி வர்றாங்களா பாருங்களேன்”னாரு அடிக்கடி. ஒருவேளை ஜாமீன் சம்பந்தமாக அவங்களை தேடுறாரோன்னு இருந்த நான், திரும்ப திரும்ப அவர் கேட்டதால் குழம்பி போய், “என்னண்ணே, ஏதாவது முக்கியமா சொல்லணுமா? நான் வேணா வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்றேன். “இல்ல சார், ஒரு ஃபேண்டா வேணும்னாரு” இப்போது கண்ணில் ஜலம் வந்திருச்சு எனக்கு. அடப்பாவமே, முன்னாடியே சொல்லியிருக்கலாமேன்னு நினைச்சுகிட்டு வாசலுக்கு ஓடினேன்.
தாகம் தீர குடித்தவர், தனது தம்பியை பார்த்து “வாசு… நம்மல்லாம் தமிழனா பொறந்துட்டோம்டா. அதான் இப்படி…” என்றவாறு இமையை நெருக்கி, துணியை பிழிய ஆரம்பித்தார். ஏற்கனவே வேர்வை. இதில் கண்ணீரும் சேர்ந்து கொள்ள, தெப்பலாக நனைந்திருந்தார் அண்ணன்.
ஒன்று மட்டும் புரியலே எனக்கு. இவர எதிர்த்து நின்னவங்களும், எதிரா வேலை பார்த்தவங்களும் கூட தமிழங்கதானேய்யா…!
ஆர்.எஸ்.அந்தணன்
www.adikkadi.blospot.com
அந்தணன் சார்.
டி.ஆர் போஸ்ட் என்வழி.காம் உள்ளது.
இதில என்ன காமெடின்னா
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.
அப்படின்னு கீழே போட்டிருக்கிறார்கள்.
இது தான் என் வழி.. தனி வழியா..??
//தேவா கொஞ்சம் அப்பிடி இப்பிடிதான். அதுக்காக 'வச்சுகிட்டு' இருக்கிற பொண்ணு //
போகிற போக்கில் தேவா(இசையமைப்பாளர் தான்)வையும் ஒரு வாங்கு வாங்கியிருக்கீங்களே...
அருமையாக இருக்கின்றன. நீங்கள் குறிப்பிடும் சம்பவங்களும், உங்கள் நடையும்.
ஞாயிறுக்கு வெயிட்டிங்
சார் சிம்பு , நயன் பத்தி எது news உண்டா
டி.ராஜேந்தர்
விஜயகாந்த்
இவங்க சம்பந்தப்பட்ட மேட்டர்னா காமெடிக்கு பஞ்சம் இருக்காது.
அடுத்து யாரு??
Post a Comment