(பின்னு£ட்டத்தில்) யுனானிமஸ்சா இல்லைன்னாலும், அநானிமஸ்சா கேட்டுகிட்டேயிருக்காரு ஒருத்தர், "அந்த விக்ரமாதித்யனை எங்க பார்த்தீங்க? சொல்லவே இல்லையே"ன்னு! (குழம்புபவர்கள் 'அவரு ஒரு நீர் வாழ் தாவரம்'ங்கிற மேட்டரை இன்னொரு முறை படிக்கவும்)
பார்ப்பதற்கு வேதாந்திரி மகரிஷி மாதிரி இருந்தாலும், அவரு ஒரு 'போதாந்திரி ஃபிகரிஷி'! பெரும் கவிஞர். ஒருகாலத்தில் கவர்ன்மென்ட்டையே ஆட வைத்த பத்திரிகையாளர். இன்னும்... இன்னும்...! ஆங், எங்கே பார்த்தேன் அவரை? அதுக்கு முன்னாடி விக்ரமாதித்யன் பற்றி ஒரு சின்ன சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்றேன். கொஞ்சம் சிரிச்சுட்டுதான் போங்களேன்.
பல வருடங்களுக்கு முன் முன்னணி புலனாய்வு இதழான நக்கீரனில் வேலை செஞ்சுட்டு இருந்தார் நம்ம கவிஞர். கோபாலண்ணனுக்கு யாரு தண்ணியடிச்சாலும் பிடிக்காது. அதிலும் பெரியவருங்கிறதால கவிஞருக்கு மட்டும் விதிவிலக்கு. கண்டும் காணாமலே இருந்தார். ஆனால் போக போக கவிஞரின் 'பாட்டில்' மோகம் அதிகரிக்க பொறுமை இழந்திட்டார். "அண்ணே, தண்ணியடிச்சுட்டு ஆபிசுக்கு வராதீங்க. குடிக்கணுமா, சாயங்காலம் வேலைய முடிச்சுட்டு போகும்போது குடிங்க! நான் கேட்கவே மாட்டேன்"னு சொல்லிட்டாரு. ஆனாலும், விட்டு விலகிற 'ஸ்மால்' பந்தமா அது? தொட்டு தொடர்கிற 'ஃபுல்' அன்பாச்சே? தினந்தோறும் தண்ணீர் லாரி, ஆபிசுக்குள் புகுந்தது மாதிரியே புகுந்தார் கவிஞர். அண்ணன் ஒருநாள் கண்ணை காட்ட, அலுவலக நண்பர்கள் இருவர், "அண்ணே வாங்க. ஒரு சின்ன வேலை, போயிட்டு வந்திரலாம்"னு அழைச்சிட்டு ஆட்டோவில் ஏறுனாங்க.
வண்டி போகும்போதே, அவரு பாக்கெட்டில் இருந்த நாலணா எட்டணா உட்பட எல்லா காசையும் ஏதேதோ காரணம் சொல்லி வாங்கிட்டாங்க. "எங்கேப்பா போறோம்"னு கவிஞர் கேட்க, "முக்கியமான அசைன்ட்மென்ட். நீங்கதான் பேசணும்"னு சொல்லியிருந்தாங்க. சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு வண்டி ஆவடியை தாண்டியது. "அப்படியே ஓரமா உட்கார்ந்து கொஞ்சம் ஒண்ணுக்கு அடிக்கலாமா" என்றார்கள் நண்பர்கள். ஒருத்தர் போனால், பின்னாலேயே பின்பற்றுவது இந்த ஒரு விஷயத்தில் தானே? கவிஞரும் வண்டியை விட்டு இறங்கினார். அவர் உட்காரவும், நண்பர்கள் ஓடிவந்து வண்டியில் ஏறவும் சரியாக இருந்தது. அவ்வளவுதான்... வண்டியை கிளப்பிக் கொண்டு வந்தே விட்டார்கள்.
கையிலும் காசில்லை. கவிஞரின் கௌரவத்திற்கு யாரையும் கேட்கவும் முடியாது. நட நட என்று நடந்தார் ஆபிசுக்கு. கிட்டதட்ட ஐம்பது கிலோ மீட்டருக்கும் மேல். அவருக்கு காரணம் புரிந்துவிட்டது. இனி குடித்துவிட்டு ஆபிசுக்கு போகக் கூடாது. அந்த சம்பவத்திற்கு பிறகும் அவர் நிறைய குடிச்சார். ஆனால் அலுவலக நேரத்திலே இல்ல!
கிட்டதட்ட எழுவது வயசை தாண்டிட்டாரு கவிஞர். நாடி சோதிடம் பார்க்க வந்திருந்தாரு ஓரிடத்திற்கு. அங்கேதான் சந்திச்சேன் கவிஞரை, அதுவும் பல வருடங்களுக்கு பிறகு. நான் ஏன் அங்கே போனேன்? அது தனிக்கதை.
கவிஞருடன் அவரது மனைவியும், மகனும் வந்திருந்தாங்க. மகன் ஒரு படத்தில் கேமிராமேனாக வொர்க் பண்றாராம். தொழில் காண்டம், அப்புறம் என்னென்னவோ காண்டங்கள். (எல்லாத்துக்கும் தனி தனி பீஸ்) எல்லாத்தையும் தனி தனியாக பார்த்திட்டு இருந்தாரு கவிஞர். "ஒங்களுக்குதான் வயசாயிடுச்சுல்ல, இனிமே பார்த்து என்ன பண்ண போறீங்க? உங்க பையனுக்கு பாருங்களேன்"னாரு அங்கிருந்த நெல்லை வசந்தன். (நான் மதிக்கிற, நம்புகிற ஜோதிடர் இவரு)
"இல்ல சோதிடரே, நான் கடவுள் படத்திலே நடிச்சதுக்கு பிறகு நிறைய பேரு நடிக்க கூப்பிடுறாங்க. போலாமா, வேணமாங்கிறதுக்காக தொழில் காண்டம் பார்க்க வந்தேன்"னாரு கவிஞர். காண்டம் என்ன சொல்லிச்சோ தெரியலே, கவிஞர் வேறொரு படத்திலே நடிச்சிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன்!
8 comments:
காண்டம் பார்த்தவுடன் எதோ வில்லங்கம்னு நினைச்சேன். பரவாயில்லை. நம்ம செட்ல யார இது மாதிரி நடக்க விடலாம். சொல்லுங்க? செய்யலாம்.
த்ரிஷா மாட்டர் திரிசங்குல நிக்குது. சீக்கிரம் பதியவும்!!!!!!!!!!!!!
தல,என்ன தல காண்டம்,காண்டம்னு (condom) சொல்லிட்டு ஒரே கண்டம போட்டுடீயே,
முடியல தல நீ யாரையும் விட்டு வைக்க மாட்ட போல... ஒழுங்க படத்தில் நடிக்கும் பெரியவர விட்டுடு...
innum innum ugakida irunthu ethirparkiren
Sridhar சாரை வழி மொழிகிறேன்.
சீக்கிரம்.
Sridhar சாரையும், வண்ணத்துபூச்சியாரையும் வழி மொழிகிறேன்.
சட்டுபுட்டுன்னு மேட்டரை போடுங்கப்பு....
ஜோசியர் கிட்டே போய் ஏன் காண்டம் பற்றி கேட்கிறார்?
மருந்துக் கடையில் கேட்டால் கொடுத்து விட்டு போகிறார்கள்?
Sridhar சாரையும், வண்ணத்துபூச்சியாரையும், அன்பு சாரையும் வழி மொழிகிறேன்.
Sridhar சாரையும், வண்ணத்துபூச்சியாரையும், அன்பு சாரையும், ராஜ் சாரையும்
வழி மொழிகிறேன்.
இப்படி காண்டம் பத்தி எழுதிட்டு, பல பேர் கண்டம்களை தாங்கிக்கிட்டு...நல்ல வேளை நீங்க அடுத்த பிறவியில காண்டமா போகக் கடவாய் முதலைவாய் என்று யாரும் பின்னூட்டம் போடலை..அது மட்டும் சந்தோசம்தான்.
Post a Comment