பிஷ்வாஷ்கிட்டேயிருந்து பிச்சுகிட்டு வந்ததிலிருந்தே கார்த்திக் ஒரு 'ஹாயான' அரசியல்வாதியாயிட்டாரு. அவரோட கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவுதுன்னு அறிவிச்சு சில நாள் கழிச்சு, வேட்பாளர்களை பிரஸ்சுக்கு அறிமுகப்படுத்த வந்திருந்தாரு. ரொம்ப 'பிரஸ்' பண்ணி கேட்டுக் கொண்டதால, பத்தே பிரஸ்தான் வந்திருந்தாங்க. ஏன்னா, அவருக்கு கடந்த முப்பது வருசமா 'கேன்சலோபோஃபிபியா' இருக்கிறது பிரஸ்சுக்கு நல்லாவே தெரியும். அதனால தப்பிச்சோம்னு போனவங்க பாதி. கேட்டதை அப்பிடியே போயி ஆபிஸ்ல, ஒப்பிப்போம்னு வந்தவங்க மீதி.
அவரோட 'கேன்சலோபோஃபியா' பற்றி பேசுனோம்ல, வசனம் பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு வயித்தை பிடிச்சுகிட்டு, "ஹே, கொஞ்சம் ரெஸ்ட் வேணும்யா"னு சொல்லுவாரு. சரி, கொஞ்ச நேரம் ரூமுக்கு போயிட்டு வந்திருவாருன்னு யூனிட்டே வெயிட் பண்ணும். ஆனா மனுஷன் காரை எடுத்துகிட்டு கண்காணாத இடத்துக்கு போயிருவாரு. மறுபடியும் அவரு ஷ¨ட்டிங் வரணும்னா பச்ச புள்ளங்களுக்கு முட்டாயி காட்டுறா மாதிரி அவருக்கு வேறொன்னுத்த காட்டணும். (ஆங்... ஒன்னுமே தெரியாத மாதிரி, அது எந்த முட்டாயிம்பீங்களே?) இப்பல்லாம் கடலை முட்டாயி பழக்கம் இருக்க வாய்ப்பில்லேன்னாலும், 'கேன்சலோபோஃபியா' மட்டும் போகவே இல்லே அவரை விட்டு. ஷ¨ட்டிங் மாதிரியே கடைசி நேரத்திலே பொதுக்கூட்டத்தையும் கேன்சல் பண்ணுற அட்டகாசமெல்லாம் நம்ம கார்த்திக்குக்கு மட்டுமே சாத்தியம். அப்படி பிரஸ்மீட்டும் பலமுறை கேன்சல் ஆகியிருப்பதால பலருக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும், நன்னம்பிக்கை முனையிலே இருந்து வந்த தன்னம்பிக்கை திலகங்கள் ஒரு பத்து பேரு வந்திருந்தாங்க.
என்ன ஆச்சர்யம்? சொன்ன நேரத்துக்கு சரியா வந்திட்டாரு கார்த்திக். முன்னதாக "அண்ணன் வாழ்க"ன்னு கோஷம் போட்ட தொண்டர் ஒருத்தரை ஒருவிரல் காட்டி உஷ்ஷ¨ன்னு அடக்கினாரு. அப்படியே சிரிச்சுகிட்டே "ஹே, எங்க எல்லாரும்?"னாரு, ஏதோ எல்லாரும் டிபன் சாப்பிட போயிட்டது மாதிரி. வந்திருக்கிறதே அவ்ளோதான்னு யாரு சொல்றது? நல்லவேளை, சொல்லாமலே புரிஞ்சிகிட்டாரு போல. "பேட்டிய ஆரம்பிக்கலாமா?"ன்னாரு.
டிவி கேமிராமேன்கள் லைட்டை ஆன் பண்ணி கேமிராவை ஓடவிட்டாங்க. பெரிசா குறிப்பெடுக்க தயாராக பேனாவை திறந்து வச்சிட்டாங்க நிருபருங்க. ஆனா, படார்னு வாய தொறந்து படீர்னு பேச வேண்டிய தலைவரு என்ன சொல்ல வந்தோம்கிறதையே மறந்திட்டு ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருந்தாரு. வந்திருந்த ஒன்னு ரெண்டு தொண்டருங்க அவருக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்தது வசதியா போச்சு. (அவங்க நின்னது டிவியிலே தெரிவோம்னுதான்) ஒருத்தரு குனிஞ்சு, "வேட்பாளர் அறிவிப்பு"ன்னு எடுத்துக் கொடுக்க, "ஆங்... வேட்பாளர் ஹே, அறிவிக்கனுமில்லே... அதான்... எப்பிடி...?" என்றார் சிந்தனைச் செல்வனைப்போல.
"உங்களுக்கெல்லாம் நல்லா அறிமுகமான ஒருத்தரைதான் முதல்ல அறிவிக்க போறேன். அவரு கடந்த 29 வருசமா ஒங்களுக்கு தெரிஞ்சவருதான்"னாரு புதிர் போடுற மாதிரி. நான்தான் அதுன்னு நேரா சொல்லிச் தொலைச்சிருக்கலாம். "விருதுநகர்லே போட்டியிடப் போறவரு..." சற்று இடைவெளி விட்டு, "எம்.கார்த்திக்" என்றார்! கொஞ்சமே கொஞ்சம் புன்னகையோடு அவர் சொல்லி முடிக்க, ஒரு டிவி நிருபர், "யாரு சார் அவரு? இங்க வந்திருக்காரா? ஒரு பைட் எடுக்கணும்" என்றார் அவரு சொன்ன கார்த்திக் இவருதான்ங்கிற உண்மை தெரியாமலே!
இந்த பேரதிர்ச்சியை தாங்கி கொள்ளவே முடியவில்லை கார்த்திக்கால். "சார், ஹே... நீங்க எந்த டிவி?"ன்னாரு அடக்கவே முடியாமல். அந்த கலந்துரையாடல் முடிவில் "நான்தான் அந்த எம்.கார்த்திக்"னு அவரே விளக்க வேண்டியதா போச்சு!
"இன்னொரு வேட்பாளரு..."ன்னு மறுபடியும் கார்த்திக் யோசனைக்கு போக, "பார்வதி"ன்னு பின்னாடி ஒருத்தர் எடுத்துக் கொடுத்தாரு. "ஆங்... பார்வதி. அவங்க.. ஹே... இப்போ இங்க இல்லை. வந்திட்டு பிளைட் பிடிச்சு... அவங்க... அங்கேயிருந்து"ன்னு சொல்லி முடிப்பதற்குள், "வந்திட்டு இருக்காங்களா?"ன்னாரு நிருபர் ஒருத்தரு. "ஆமாம், ஆமாம். வேணும்னா இவரை அவங்களா நினைச்சுக்கோங்களேன். ஆனா இவரு பேண்ட் சர்ட் போட்டிருக்காரு. அவங்க புடவை கட்டியிருப்பாங்க"ன்னு சொல்லி கடகடவென்று அவரே சிரிக்க, அந்த பேண்ட் ஆசாமி, பெரும் பேறு அடைந்தவர் மாதிரி ஒரு லுக் விட்டார் எங்களை!
சும்மாயில்லாத நிருபர் பரத், பக்கத்திலே உட்கார்ந்து பீதி கிளப்புகிற ஜோக்குகளை அள்ளிவிட, நான் வயிற்றை இறுக்கி பிடிச்சுட்டு உட்கார்ந்திருந்தேன். என்ன நினைத்தாரோ, திடீர்னு எழுந்த பரத், "நீங்க விருது நகர்லே நிக்கறதால அந்த தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து வந்திருச்சு" என்றார். இவ்வளவு நேரம் இந்த குளுக்கோஸ் பாக்கெட்டுக்காகவே காத்திருந்தவர் போல், பாய்ந்து பரத்தின் கைகளை பிடித்துக் கொண்டார் கார்த்திக். "ஹே... அப்பிடியா? நீங்க அவசியம் எலக்ஷன் கவரேஜ் பண்ண விருதுநகர் வரணும். என்ன ஹே, எப்பிடி... நம்ம கூடவே வந்திடுறீங்களா"னு விடாமல் இறுக்க, "மாட்னாண்டா மாப்ளே"ன்னு வெளியே பாய்ஞ்சேன் நான். அதுக்கு பிறகு பரத் 'கால்' பண்ணி, "ஒரே ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு எவ்ளோ பெரிய தண்டனை?"ன்னு சொல்லிட்டு கெக்கக்கேன்னு சிரிச்சாரு.
பரத்து... மறுபடியும் போவே அந்தப் பக்கம்?
பின் குறிப்பு - நடுவாப்ல ஸோல்டர் பேக்கோட நிக்குற கண்ணாடிதான் நம்ம பரத்!
15 comments:
ஒரே ஒரு கேள்விக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?, நம்ம பரத்தோட நெலமை ரொம்ப பாவம் பாஸ்...
வழக்கம் போல கலக்கல் காமெடி பாஸ்.
super.....
இது ஸ்டார் பேட்டி. சூப்பரப்பு.
ஹா ஹா ஹா!
ஒரு கேள்வி கேட்டதுக்கு பாவம் இப்படி ஒரு தண்டனையா?
அங்கங்கே "ஹே" போட்டிருக்கீங்க கார்த்திக் மாதிரி மிமிக் பண்ணி படிச்சாங்கன்னா செம காமெடியா இருக்கும்.
கேன்செலோபோபியா-ன்னு சொல்றத விட கேன்செல்மேனியா-ங்கிறது தான் சரி. மேலும் விளக்கங்களுக்கு மருத்துவர் ருத்ரன் அவர்களை கேட்கவும்.
லிங்க் கொடுத்ததுக்கு நன்றி.
அதுனாலே ஒரு நூறு பேரு என்னோட தளத்தை / கவிதையை படிச்சிருப்பாங்க போலேருக்கு. (இதெல்லாம் ஒரு கவிதையா-ன்னு இது வரைக்கும் யாரும் பின்னூட்டம் போடலை... ஹீ ஹீ!)
ஒரு பக்கியும் கமெண்ட் போட மாட்டேங்கிது, ஒரு வேளை என் தளத்திலே எதுவும் பிரச்சனையா?
அடிக்கடி தமிலிஷ்லே இருந்து லிங்க் கொடுங்க ஜோ! ஆமா, ஃபாரின்லேர்ந்து வந்தாச்சா? போஃபியாவோ, மேனியாவோ, கண்டுக்கிறாதீங்கப்பு. கார்த்திக் விஷயத்திலே எதுவுமே சீரியஸ் இல்லே!
அந்தணன்
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது, Joe சொன்ன மாதிரி படிச்சு பாத்தேன் சிரிப்பு தாங்க முடியல...
ANNA,
Naan marupadiyum Karthikai parka mudiyathapadi panniteenga..... Virudhu Nagar pogum bakkiyam pari poi vittadhu......
Ithu dummy peesu sir. ha ha ha
செம கவரேஜ். கலக்கல் காமெடி
Konja Naal Munnadi Bharat Karthicka meet panni intha mathiri solli iruntharna avara Matthiya chennai vetpalara aaki Irukkalam. Padaiyappa bag matti Kattam potta sattai potirupavar thaan namma BHARAT...Etho Ennala mudinjathu "Karthik"oda Nadalum(?) makkal katchiyoda kodikananakkana thondarla oruthanavathu BHARAT mugatha nalla pathukka maataana....Etho Nammalala Mudinjathu...Enna Sir Soldreenga...
Nice post. Simply superb.
:-)
health tips
என்ன கொடுமை அந்தணன் சார் இது. இதிலே பரத் வேற கார்த்திக்கூட போக ஆசையா இருக்காரு. நான் முரளிகிட்டே பேசட்டுமா ?. அதான் அவருடைய இயற்பெயர்
என்ன கொடுமை அந்தணன் சார் இது. இதிலே பரத் வேற கார்த்திக்கூட போக ஆசையா இருக்காரு. நான் முரளிகிட்டே பேசட்டுமா ?. அதான் அவருடைய இயற்பெயர்
//"யாரு சார் அவரு? இங்க வந்திருக்காரா? ஒரு பைட் எடுக்கணும்" என்றார் அவரு சொன்ன கார்த்திக் இவருதான்ங்கிற உண்மை தெரியாமலே!//
ஹி ஹி ஹி நிஜமாவா!
//இப்பல்லாம் கடலை முட்டாயி பழக்கம் இருக்க வாய்ப்பில்லேன்னாலும்//
யாரு சொன்னா?? அப்போ காஸ்ட்லி முட்டாய்னா.. இப்போ லோக்கல் முட்டாய் அவ்வளவு தான்!!
இன்னொரு வேட்ப்பாளர் மகளீர் அணி தலைவி தான? (நான் எதார்த்தமா தான் கேட்டேன்.. முந்தைய பாரா க்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லயோ.. இதில் உள் குத்து எல்லாம் இல்லை!!)
Post a Comment