காரணம், இலங்கை பிரச்சனை. இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையிலே நடந்த உணர்ச்சி பூர்வமான ஆர்ப்பாட்டத்திற்கு போயிருந்தேன். ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களை கண்டு தவிக்கும் மக்களின் ஆதங்கத்தையும், வேதனையையும், கோபத்தையும் அப்படியே தட்டி எழுப்பியது சிலரது பேச்சு. முக்கியமாக பாடலாசிரியர் தாமரையின் பேச்சு.
அவர் மேடைக்கு வரும்போது சிலர் உட்கார்ந்தவாறே வணக்கம் தெரிவிக்க, எழுந்து நின்று வணக்கம் சொன்னார் சத்யராஜ். இன்னைக்கு தாமரையின் பேச்சு பேரெழுச்சியை ஏற்படுத்தும்ங்கிறதை முன் கூட்டியே தெரிஞ்சு வச்சுருந்தாரோ என்னவோ?
மதியம் இரண்டு மணி இருக்கும். தாமரை பேசுவார்னு மேடையிலே அறிவித்தார்கள். "இன்றைக்கு நான் நிறைய பேசப் போறேன்" என்றபடியே மைக்கை பிடித்தார் தாமரை. பேச்சில் அனல் தெறித்தது. "ஏற்கனவே ஃபெப்சி மீட்டிங்கிலே நான் பேச வந்தேன். அப்போ என்னை பேசக் கூடாதுன்னு தடுத்திட்டாங்க. ஆனா, இப்போ என்னை தடுக்காதீங்க" என்று ஆரம்பித்தவர், பிடி பிடியென்று தமிழக தலைவர்களை பிடித்தார். இடையிலே "அப்படி பேச வேண்டாம்" என்று பாரதிராஜா இருக்கையை விட்டு எழுந்து வந்து தடுக்க, பார்வையாளர்கள் "தடுக்காதே, பேசட்டும்" என்று கூச்சலிட்டார்கள்.
"மத்தியிலே ஆளுற காங்கிரஸ் அரசு முதலாளியாகவும், தமிழகத்தை ஆளுற திமுக அரசு கூலி வாங்குகிற வேலைக்காரனாகவும் இருக்கு. உலக தமிழர்களோட தலைவர்னு சொல்லிகிறீங்க. உங்களால இந்த இனப்படுகொலையை தடுக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த முடியலேன்னா எதுக்கு பதவியிலே இருக்கீங்க? ராஜினாமா பண்ணிட்டு போக வேண்டியதுதானே? ஜெயலலிதா அரசு இருந்தா இப்படி நீங்க பேச முடியாதுன்னு சொல்றீங்க. ஜெ ஆட்சியிலேயும் பேசினா கைது பண்ணி உள்ளே போடுறாங்க. உங்க ஆட்சியிலேயும் கைது பண்ணி உள்ளே போடுறீங்க. திமுக வும், அதிமுகவும் இல்லேன்னா தனிஈழம் என்னைக்கோ அமைஞ்சிருக்கும்"
"தமிழன்ங்கிறது ஒரு இனம். மலையாளிங்கிறது ஒரு இனம். ஆனால், இந்தியன்ங்கிறது ஒரு இனம் இல்லையே? இதை சொன்னா இறையாண்மைக்கு எதிரா பேசியதா சொல்றீங்க? தேசிய பாதுகாப்பு சட்டத்திலே எங்க டைரக்டரை உள்ளே போட்டீங்க. ஆனா உயர்நீதிமன்றம் என்ன சொல்லுச்சு? உங்களால என்ன பண்ண முடிஞ்சுது?" இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட தாமரையை "பேசியது போதும்"னு மறுபடியும் இடை மறித்தார் பாரதிராஜா.
மீண்டும் பார்வையாளர்கள், "அவங்களை பேச விடுங்க" என்று கோஷம் போட்டார்கள். தொடர்ந்தார் தாமரை. "கலைஞர் சொல்றாரு... ஈழத்தந்தை செல்வா தந்தை பெரியாரை பார்த்து ஈழத்திலே நடக்கிற பிரச்சனை பற்றி சொன்னாராம். அப்போ பெரியார், 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?'னாராம். 'பெரியாரே அப்படி சொன்னார்'னு ஒரு பதிலை சொல்றீங்களே, நாற்பது வருஷமா தமிழனோட நிலைமை அப்படியே இருக்குன்னு சொல்றதுக்கு நீங்க எதுக்கு தமிழின தலைவர்னு சொல்லிக்கணும்?" என்றார் ஆக்ரோஷமாக!
இந்த முறை வலுக்கட்டாயமாக அவரை அமர வைத்தார்கள் பாரதிராஜாவும், வீ.சேகரும். ஆற்றாமையும், சோகமும் தாக்க கவலையோடு அமர்ந்தார் தாமரை. மாலை ஆறரை மணிவரை நீடித்த கண்டன கூட்டத்தில், தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப மத்திய அரசிடமே திருப்பி கொடுப்பதாக அறிவித்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 2004 ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட விருது இது.
"இந்த விருதை வீட்டிலே மாட்டியிருக்கும்போது பார்க்கிறேன். ஏதோ சிரங்கை பார்ப்பது போல அருவருப்பாக இருக்கிறது. இதை து£க்கி எறியவா? அல்லது உடைக்கவா?" என்றார் பார்வையாளர்களை பார்த்து! நல்லவேளையாக அமீர் இடையில் நுழைந்து "இதை முறைப்படி மத்திய அரசிடம் ஒப்படைப்போம். உடைப்பது தவறு" என்று பார்வையாளர்களையும், பாரதிராஜாவையும் ஆசுவாசப்படுத்தினார்.
18 comments:
சார். சீரியஸ் பதிவும் நல்லாதான் இருக்கு.
இதிலும் உங்க எழுத்தின் தனித்துவம் தெரியுது.
தாமரையின் பேச்சு போன்று தான் இப்போ வலையெங்கும்..
பந்த் பற்றி எத்தனை பாருங்க தமிலிஷ்ல இன்று மட்டும்.
பகிர்விற்கு நன்றி சார்.
அவரை பாதியிலே உட்கார வைத்தது தவறு.
தமிழக உறவுகளின் துணையுடன் நிச்சயம் அவலப்படும் தமிழ் மக்களுக்கு விடிவு வரும் என்ற நம்பிக்கையை, கவிஞர் தாமரை போன்றோரின் உள்ளக்குமுறல்கள் தருகின்றது. சீரியசான இந்த பதிவையும் பதிந்த உங்களுக்கு நன்றிண்ணே.
அருமையான பதிவு, அந்தணன்.
கடையடைப்பு எதுவும் செய்யக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் தடை விதித்தும், தமிழகத்தில் கடையடைப்பு நடந்தது எப்படி?
இந்தியாவின் அரசியல் தலைவர்கள் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்காமல், மனிதாபிமான அடிப்படையில் அங்கே தவிக்கும் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும்.
ஈழத்தில் மீண்டும் அமைதி திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்.
பாரதிராஜாவுக்கு முதுகெலும்பே கிடையாது??
இவர் என்ன ஒழுங்கா? எத்தனை முறை இவரை பாண்டியிலே பல நடிகை, எக்ஸ்ட்ரா க்களோட பாத்திருக்கேன். வயசாகியும் திருந்தலை...ஒழுக்கக்கேடுக்கு பேர் போனவர் எல்லாம் ஈழ்ம் பற்றி பேச பிலிம் காட்டுறார்..
ப.சிதம்பரத்துக்கு நடந்த செருப்படி போல தமிழ் நாட்டில், ஒரு தமிழனுக்கும் உள்ளூர் அரசியல் வாதி மேல் செருப்பு வீச "தில்" இல்லை....அதற்க்கு மாறாக நம் கையாலாகாத்தனத்தை எண்ணி நாமே நம்மை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்..
ஜெயலலிதா அமாவாசை என்றால் கருணாநிதி அமாவாசைக்கு அடுத்த நாள் என்ற தாமரையின் கருத்து 100% சரி.
///மீண்டும் பார்வையாளர்கள், "அவங்களை பேச விடுங்க" என்று கோஷம் போட்டார்கள். தொடர்ந்தார் தாமரை. "கலைஞர் சொல்றாரு... ஈழத்தந்தை செல்வா தந்தை பெரியாரை பார்த்து ஈழத்திலே நடக்கிற பிரச்சனை பற்றி சொன்னாராம். அப்போ பெரியார், 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?'னாராம். 'பெரியாரே அப்படி சொன்னார்'னு ஒரு பதிலை சொல்றீங்களே, நாற்பது வருஷமா தமிழனோட நிலைமை அப்படியே இருக்குன்னு சொல்றதுக்கு நீங்க எதுக்கு தமிழின தலைவர்னு சொல்லிக்கணும்?" என்றார் ஆக்ரோஷமாக!///
சத்தியமான வார்தைகள்
வாழ்க தாமரை.
Mattha Visayathukellam MPkaloda kannuka kaati kaati thanakku sathagamakita Mudhalvar.Ippe yen thandhi, Banth nu innum thanna thaane emathittu irukkaru(Makkal innum muttala illa). Avaru veetla tholaipesi illaya illa Soniya phone Number thaan Theriyatha. Enna Drama. Netraya thinamanila oru cartoon pottu irunthanga Mathi varanjathu...Seriyana Cartoon. Ipa irukka nilamaya sariyaa chitharichu irunthuchu, kastamavum irunthuchu.
"தாமரை" அவர்களின் கருத்தினை தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அவரின் கருத்து மிக்க சரியே...
இக்கருத்துக்கள் அனைத்தும் தமிழ் இனத்தின் மனக்குமுறலாகவே எனக்கு தோன்றுகிறது.
வாழ்க பல்லாண்டு..!
அன்புடன்,
முஹம்மது ரிஃபாய்.
Brutally honest words from Thamarai. I salute her for this very very bold speach. By now everone should know what kalaigner is capable of. Had something happened to one of his sons or grandsons or daughters he would have used all his power to get things right. Atleast I'm happy about one thing that Kalaigner is ruling at these times. Had it been "amma" then he would be screaming up & down now and we people will still be believeing in him. His true character has been exposed once & for all.
நன்றி அந்தணன்,
அருமையாக தொகுத்தற்கு.
// "மத்தியிலே ஆளுற காங்கிரஸ் அரசு முதலாளியாகவும், தமிழகத்தை ஆளுற திமுக அரசு கூலி வாங்குகிற வேலைக்காரனாகவும் இருக்கு. உலக தமிழர்களோட தலைவர்னு சொல்லிகிறீங்க. உங்களால இந்த இனப்படுகொலையை தடுக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த முடியலேன்னா எதுக்கு பதவியிலே இருக்கீங்க? ராஜினாமா பண்ணிட்டு போக வேண்டியதுதானே? ஜெயலலிதா அரசு இருந்தா இப்படி நீங்க பேச முடியாதுன்னு சொல்றீங்க. ஜெ ஆட்சியிலேயும் பேசினா கைது பண்ணி உள்ளே போடுறாங்க. உங்க ஆட்சியிலேயும் கைது பண்ணி உள்ளே போடுறீங்க. திமுக வும், அதிமுகவும் இல்லேன்னா தனிஈழம் என்னைக்கோ அமைஞ்சிருக்கும்" //
சத்தியம்...
ஈழபோராட்டத்தின் உங்கள் சிறப்பான கருத்துக்களை அளித்த தாமரைக்கும்...அதை சிறப்பான முறையில் தொகுத்த அந்தணனுக்கும் நன்றி..நன்றி..நன்றி..
அவரை பாதியிலே உட்கார வைத்தது தவறு.
//"தமிழன்ங்கிறது ஒரு இனம். மலையாளிங்கிறது ஒரு இனம். ஆனால், இந்தியன்ங்கிறது ஒரு இனம் இல்லையே?//
தமிழன்னு மட்டும் எங்க ஒரு இனம் இருக்கு? முதலியார், செட்டியார், ஐயர், தலித், வன்னியர் அப்டின்னு பல ஜாதி மட்டும் தான் இருக்கு!
பிரிவினை பேசினா பேசிட்டே இருக்கலாம். எல்லா இனமும் இந்தியர்னு ஒரு உணர்வோடு இருப்பது தான் இந்தியாவின் சிறப்பு.
இவர்களுக்கு எல்லாம் புலிகளை விமர்சிக்கும் துணிவு இருந்து இருந்தால் ஈழத்தமிழர் வாழ்வு நிம்மதியாக இருந்து இருக்கும்.
தாமரை அம்மா பாத்துங்க... அம்பளைகலே திண்டடுரங்க... பாத்துங்க ... வாய் கூஸம "விபச்சார வழக்கு போட்டு கைது பண்ணிடுவங்கா ...".
அம்பளைகலே நடுங்கி கிட்டு இருக்காங்க...
From Kumaran
Bharathiraja, Sathyaraj & some others only know to bash Rajini in meetings but Keep their mouth shut when it comes to bashing Politicians. Worthless scoundrels & cheaters of public.
Please don't censor this.
Hi,
Nice post. We're all having the same thoughts like thamarai. She express our feelings.
Thanks for this post. This post expresses our feelings.
health tips
சார், அந்த வீடியோ பார்த்தேன். ஏன் தாமரையே பேச விடமாட்டேன் என்கிறார்க்ள.. சேரனும் மறுபடியும் சேட்டை பண்றார் அங்கே.
பேசவும் மாட்டானுங்க... பேசரவங்க்ளையும் பேச வுட மாட்டானுங்க.. என்ன கண்றாவி சார் இதெல்லாம்.
அண்ணே,
மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். தமிழர்கள் வெறியர்கள். அவர்களை தூண்டி விடுவது மிகவும் எளிது. அவர்கள் மற்ற மொழிகாரர்களை "வெறியர்கள்" என்று சொல்வார்கள். ப்லாக் எழுதுபவர்கள் நிறைய பின்னூட்டம் வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். அவர்களும் ஒரு வகையான மீடியாகாரர்கள் தானே.
பாரதிராஜா அவருடைய விருதை திருப்பி கொடுக்க மாட்டார்.
Post a Comment