Saturday, June 12, 2010

அரை‌ கி‌ணறு, அரை‌ கம்‌பம்‌, அப்‌பு‌றம்‌... கமல்‌ஹா‌சன்‌


தன்னை வருத்திக்கிற ஹீரோ தமிழ்சினிமாவுல யாருன்னு கேட்டா கண்ணை மூடிகிட்டு சொல்லிடலாம், கமல்தான்னு! அவ்வை சண்முகி மட்டுமில்ல, அன்பே சிவம்ல கூட அவரோட மேக்கப்பும் அர்ப்பணிப்பும் அற்புதம். இந்த அதிசயத்தை சிலேட்ல எழுதினாலும் அழிக்க முடியாது. சிஸ்டத்தில எழுதினாலும் வழிக்க முடியாது.

அரை கிணறு, அரை கம்பம் இதெல்லாம் அவலத்துக்கான அடையாளம். ஆனால் கமலோட அரை நு£ற்றாண்டு அனுபவம் இருக்கே, அது அரை குறையானது அல்ல. அந்த அரையும் நிறையானது! இவ்வளவு பில்டப்பும் கடைசி பாராவுல என்னாகுதுங்கிற மேட்டருக்கு வர்றதுக்கு முன்னே, அசிஸ்டென்ட் டைரக்டர்களோட அவசியத்தையும் பேசியாகணும். அனுபவத்தையும் பேசியாகணும். (ஹலோ, எங்க அதுக்குள்ளே கடைசி பாராவுக்கு ஓடுறீங்க?)

ஒட்டகத்தை உரிச்சாதான் குர்பானி. ஆனா உரிக்காமலே குர்பானியாகிற ஒரே ஜந்து அசிஸ்டென்ட் டைரக்டருங்கதான். விடிஞ்சா கல்யாணம், வெளக்கு வச்சா சாந்தி முகூர்த்தம்னு ஒரே நாளில் பெரிய மனுசனாக்கிடுது இல்லறம். ஆனால் இந்த அசிஸ்டென்ட்டுங்க பொழப்பு இருக்கே, விடிஞ்சா பொறப்பு. வெளக்கு வச்சாலும் பொறப்புதான். வருஷத்தை இவங்களும், வருஷம் இவங்களையும் உருட்டி உருட்டி விளையாடிக்கிட்டே இருக்கும். நல்ல வாய்ப்பு வர்றதுக்குள்ளே தல நரைச்சு போறவங்களும், குடல் இளைச்சு போனவங்களும்தான் இந்த ஃபீல்டுல ஜாஸ்தி.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு உதவி இயக்குனரானாரு. இந்த தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி அவர் ஒரு பத்திரிகையாளர். போன இடத்தில சிங்கம் மாதிரி கர்ஜிக்கறதும், எவ்வளவு பெரிய மனுசனா இருந்தாலும் கேள்விகள கேட்டு அவங்களை கிறுக்கு புடிக்க வைக்கிறதும் அவருக்கு புடிச்ச விளையாட்டு. காலம் அவரையும் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆக்கிருச்சு. முன்னணி டைரக்டர் ஒருத்தரிடம் உதவி இயக்குனரா சேர்ந்தாரு. ஏவிஎம்ல படப்பிடிப்பு. ஆளை பார்த்து நலம் விசாரிக்கலாம்னு போயிருந்தேன். போன இடத்தில நான் பார்த்த கோலம், மார்கழி மாசத்து மங்கல கோலமில்ல. கத்தரி வெயிலில் கட்டாந்தரையில் போட்ட தண்ணீர் கோலம். புஸ்ஸ§ன்னு வாயிலேர்ந்து பெருமூச்சு வர, ஒரு பெரிய பெட்டிய தலையில வச்சுகிட்டு அந்த யூனிட்டை சுத்தி சுத்தி ஓடி வந்துகிட்டு இருந்தாரு.

அதிர்ந்து போன நான் அவரு பொட்டிய வச்சிட்டு ஒதுங்குற வரைக்கும் காத்திருந்தேன். வந்த பிறகு என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவரு சொன்ன பதில் ஆட வச்சிருச்சு. அது பனிஷ்மென்ட்டாம். டைரக்டர் சொன்ன ஏதோ ஒரு வேலைய செய்யாம விட்டுட்டாரு. டைரக்ஷனுக்கு தேவையான மெட்டீரியல் வச்சிருக்கிற பொட்டிய தலையில ஏத்தி, சுத்தி சுத்தி வான்னு சொல்லிட்டாரு இயக்குனரு. மண்டைய சுற்றி அறிவு வெளிச்சம் அடிச்சாலும், தொண்டைய மூடிக்கிட்டு சொன்னதை செய்யலேன்னா போயிட்டு வா ராசாதான்! அதனாலதான் பணிவா அந்த வேலையை செஞ்சுகிட்டு இருந்தாரு நண்பர்.

இவருக்கு டைரக்டரால பிரச்சனை. சிலருக்கு ஹீரோ, ஹீரோயின்னு பலராலும் பிரச்சனை வரும். 'என்னவோ எனக்கு அவன புடிக்கல. அவன் முழியே சரியில்ல. வேற யாராவது அனுப்பி டயலாக் படிக்க சொல்லுங்க' என்று ஹீரோ காய்வார். காஸ்ட்யூம் மாத்துறதுக்குள்ளே கதவிடுக்கால பார்த்திட்டான்னு கம்ப்ளெயின்ட் பண்ணி படம் முடியுற வரைக்கும் பக்கத்திலேயே வராத மாதிரி படுத்துற ஹீரோயினுங்க இருப்பாங்க. அதுக்கு காரணம் செல்போன் கடலைக்கு இடையூறா 'ஷாட் ரெடி மேடம்'னு அடிக்கடி போயிருப்பாரு அந்த பக்கம்! இப்படி அசிஸ்டென்ட் டைரக்டருங்களுக்கு மே மாச வெயிலை மண்டைக்கு அனுப்பிட்டு, டிசம்பர் மாச மழைய கண்ணுல வரவழைப்பானுங்க, அல்லது ....ப்பாளுங்க!

கழுத்தை பிடிச்சா டை. அதுவே கொஞ்சம் இறுக்கி பிடிச்சா நாக்கு தள்ள வைக்கிற டைய்! சிலரோட கண்டிப்பும் இப்படிதான் இருக்கும். ஆனால் அது பர்பெக்ஷனுக்கான பாராயணம்ங்கறது போக போகதான் தெரியும். யானை தும்பிக்கைய ஆட்டுதுன்னு ஆட்டுக்குட்டியும் வாலாட்டின கதையா சில டைரக்டர்களும், நடிகர்களும் கோவத்தை வலிய வரவழைச்சுகிட்டு அலட்டிக்கறதும் இங்க நடக்கும். கடந்த பாராவில் நான் சொன்ன விஷயம் அப்படிதான்.

ஆனால் கலையை கருவறையா நினைக்கிற கமலுக்கும் அடிக்கடி கோவம் வரும். அவர் நடிக்கிற படத்தில யாரு வேணும்னாலும் டைரக்டரா இருக்கலாம். ஆனா காட்சியை வரையறுக்கிற அதிகாரம் கமலுக்கு மட்டும்தான். (பாலசந்தர் காலத்தை விட்ருங்க. நான் சொல்றது இப்போ) படத்தில இவர் கோட் போட்டுக் கொண்டு வர்ற காட்சியா இருக்கும். அதில ஒரு மயிரிழை சுருக்கம் கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவரு அவர். ஷாட்ல கழற்றி அரை நிமிஷம் கழிச்சு திரும்ப மாட்டினா கூட அதுக்குள்ளே அயர்ன் பண்ணியிருக்கணும் அந்த கோட். இல்லைன்னா இஸ்திரி பொட்டி கோபத்தோட சம்பந்தப்பட்ட அசிஸ்டென்ட் டைரக்டரை படுக்க வச்சு பரேட் எடுப்பாரு கமல்.

அவரு மனசில நினைக்கறதை 'மானிட்டர்' பண்ணுற அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கணும். அவரு கட்டளையிட்டு வாயை மூடுவதற்குள்ளே விஷயம் முடிஞ்சுருக்கணும். இல்லைன்னா ஒரே ஒரு பார்வையிலேயே 'ஒண்ணுக்கு' வர வைக்க முடியும் அவரால். அந்த பார்வையில கலங்கரை விளக்கமும் தெரியும். காசிமேடு அருவாளும் தெரியும். சார் அடுத்ததா என்ன சொல்லப் போறாரோன்ங்கிற அவஸ்தையிலேயே அடி வயித்தில வைப்ரேட்டரோட சுத்தி வர்ற உதவி இயக்குனர்களுக்கு அந்த படத்தின் ரிலீஸ் நேரத்திலதான் சுவாச குழாயே திறக்கும்!

அப்படியாப்பட்ட கமல் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் சொன்ன பதில்தான் நான் இப்போ சொல்லப்போற விஷயம். அதை படிச்சுட்டு எங்க அந்த நாதாரின்னு விரட்டுனாலும் சரி, இவன்தாண்டா சர்தாரின்னு பாராட்டுனாலும் சரி, அது உங்க விருப்பம். கமல் நடிச்ச ஒரு படத்தில அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். கதை பனிப்பொழியுற ஏதோ ஒரு பிரதேசத்தில நடக்குது. காஷ்மீரோ, ஊட்டியோன்னு வச்சுக்கோங்களேன். ஆனா அப்படத்தின் விட்டுப் போன ஒரு பகுதிய சென்னையில எடுத்துகிட்டு இருந்தாங்க. பொதுவா பனி பிரதேசத்தில புகை மாதிரி மிஸ்ட் நடமாடிக்கிட்டேயிருக்கும்.

பின்னணியில் இந்த 'மிஸ்ட்' வரணும்னு நினைச்ச கமல், விறகு கட்டைகளை போட்டு எரிங்கன்னு சொல்லிட்டாரு அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம். ஷாட்ல விழாத இடத்தில கட்டைய போட்டு கற்பூரத்தை ஏத்துறதுக்குள்ளே "எங்கய்யா புகை வரலே... வேலை ஆச்சா"ன்னு பத்து முறை குரல் கொடுத்திட்டாரு கமல். அடுத்த முறை அவரு நேர்ல வந்து கத்தறதுக்குள்ளே ஊதி புகையை வர வச்சுரணும்னு நாலைஞ்சு பேரு ஒண்ணு சேர்ந்து ஊதிகிட்டேயிருந்தாங்க. அதுக்குள்ளே பொசுக்குன்னு அங்க என்ட்ரி கொடுத்த கமல், "என்னய்யா இவ்வளவு நேரம், புகை வந்திச்சா?"ன்னு கேட்க, "ஒரு நிமிஷம் இருங்க சார்"னு சொன்னாரு அந்த உதவி இயக்குனர்.

அப்படியே கீழே குனிஞ்சு விறகு கட்டைக்கு கேட்கிற மாதிரி, "கமல்ஹாசன்....கமல்ஹாசன்... கமல்ஹாசன்"னு சத்தமா மூணு தடவ கூவுனாரு. பிறகு தலையை து£க்கி, "சார் உங்க பேர சொன்ன பிறகும் பத்த மாட்டேங்குது. என்ன பண்ண சொல்றீங்க?"ன்னு சொல்ல, மத்த அசிஸ்டென்ட்டுகளுக்கு இப்போ பேண்ட் நனையுற அளவுக்கு பதட்டம். ஆனால் கமல் என்ன செஞ்சாரு தெரியுமா? அப்படியே அவரை தீர்க்கமா சில வினாடிகள் பார்த்திட்டு அந்த இடத்திலிருந்தே அகன்றுவிட்டார். அப்புறம் விறகு தானாக எரியுற வரைக்கும் அந்த பக்கமே வரலை!

சரி அந்த அசிஸ்டென்ட் என்ன பண்றாரு இப்போ? அன்னையோட வீட்டுக்கு போனவரு எந்த மெஸ்ல அடுப்பூதிகிட்டு இருக்காரோ?

Friday, June 4, 2010

ரீமாசென்னும், ஒரு நாகரீக சியர்சும்...


'சோழரே...பாடுவீரோ' ன்னு நாக்கை சைசா இழுத்து, கண்ணை லைட்டா செருகி ரீமாசென் கூப்பிடும்போது பாழாப்போற பார்த்திபன் படார் தீடீர்னு ஒரு ஸ்டெப்பு வைப்பாரே, அது ஆட்டம்னு நினைக்கிறீங்க? அதெல்லாம் இல்ல. கடுகு ஒன்ணு மேல விழுந்து கடப்பாரய நசுக்குன மாதிரி ரீமாசென்னோட பார்வை தாங்கமுடியாம பார்த்திபன் போட்ட பல்லாங்குழி பரதம்! யாராயிருந்தாலும் அந்த 'லுக்'குக்கு முன்னாடி மிக்சியில போட்ட மிளகா சட்னிதான்.

மயிலுன்னு பேரு வச்சாரு பாரதிராஜா. அதுக்கு பொறுத்தமா மயிலாட்டமே இருந்தாரு ஸ்ரீதேவி. அதுக்கு பிறகு தேவதைங்கிற படத்தில நடிச்ச கீர்த்தி ரெட்டிக்கும், படத்தின் தலைப்புக்கும் அப்படி ஒரு தேவ பொருத்தம். அந்த வரிசையில மின்னலேங்கிற படத்தில அறிமுகமாகி ஆயிரம் வோல்டேஜ் அழகோட ரசிகர்களின் ப்யூசை பிடுங்கின ஒரே அழகி நம்ம ரீமாதான்.

முப்பத்திரண்டு தும்ப பூவை, வரிசைக்கு பதினாறா வகுந்து வச்சா அதுதான் அவரோட சிரிப்பு. அதுக்காக பார்க்கிறவங்க எல்லாருக்கும் தும்ப பூ பிரசாதம் கொடுத்தா தப்பா போயிரும்னு ஷ§ட்டிங் ஸ்பாட்ல உம்முன்னே நிப்பாராம் நம்ம ரீமா. இந்த உம் ஒருகட்டத்தில எரிச்சலை உண்டாக்க, வல்லவன் படத்திலே வகையா வேக வச்சாரு சிம்பு. இனிமே அந்தாளு படத்தில நடிக்கவே மாட்டேன்னு அறிக்கை விடுற அளவுக்கு சூடான ரீமா, காத்திருந்து நடிச்ச படம்தான் ஆயிரத்தில் ஒருவன். கோழி செத்தாலும் பரவால்ல, முட்டை உடையாம பார்த்துக்கோன்னானாம் ஒரு முட்டாப்பய. அப்படிதான் ரீமாசென்னை வெயில்ல போட்டு வறுத்தெடுத்தாய்ங்க படத்துல. 'அவுட் புட்' நல்லா வந்தா போதும்ங்கறதுக்காக, 'இன் புட்' கொடுக்கிற மீராவ செம திட்டு திட்டுவாராம் செல்வா. அப்படியிருந்தும் காடு மலையெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு கச்சிதமா படத்தை முடிச்சு கொடுத்தது ரீமாசென்னோட பெரிய மனசு.

படம் ரிலீஸ். ஆஹான்னு பாராட்டவும், ஓஹோன்னு தாலாட்டவும் மீடியாவுக்குள்ளேயே ஒரே போட்டி. அந்தளவுக்கு ஸ்கோர் பண்ணியிருந்தாரு ரீமா. உங்க நடிப்புக்கு ஒரு ஆஸ்கர். இடுப்பு மடிப்புக்கு ஒரு ஆஸ்கர். கடைசியா வாளெடுத்து சுத்துனீங்களே, அதுக்கொன்னுன்னு பர்மா பஜார் பேட்டரி செல்லு கணக்கா ஆஸ்கர் விருதை மலிவாக்கினாய்ங்க அத்தனை பேரும்.

வண்ணத்துப்பூச்சியா இருந்தாலும் வருசத்துக்கு ஒரு தடவயாவது சலவைக்கு போனாதான் பளீர்னு இருக்க முடியும்ங்கறது ரீமாவோட பாலிஸி. இந்த நேரம் பார்த்துதான் பார்ட்டி எப்பம்மான்னு பரபரப்பை கிளப்புனாய்ங்க ரீமாசென்கிட்ட பிரண்ட்ஷிப்பு வச்சிருந்த கோடம்பாக்க ஹீரோக்கள். (அதாரு...?) நுனி நாக்கு இங்கிலீஸ்ல கொஞ்சூண்டு ஒயினை மிதக்க விட்டு வழுக்கி வழுக்கி பேசுறதுல கில்லாடி ஹீரோக்களும் இருக்காய்ங்க இங்க. அவங்ககிட்ட மடங்கி ஒடுங்கி மனசொடுங்கி போறதுல பல நடிகைகளுக்கு தனி கிறக்கமே உண்டு. அப்படிதான் ரீமா கிறங்குவார்னு நினைச்சுது அந்த கூட்டம்.

அன்பா கேட்டா அத்தனையும் கொடுக்கிற ரீமா, ஒரு பார்ட்டி கொடுக்க மாட்டாரா என்ன? மவுண்ட் ரோடு பக்கத்தில இருக்கிற ஐந்து நட்சத்திர ஓட்டல். வாட்ச்மேன், செக்யூரிடிங்க கூட இங்க வாஷிங்குக்கு போட்ட மாதிரியே பளிச்சுன்னு இருப்பாய்ங்க. அந்தளவுக்கு சுத்தமான ஓட்டலை அழுக்கு பண்ணுறதுக்காகவே கூடுறது நம்ம கோடம்பாக்க கூட்டத்துக்கு பிடிச்ச விளையாட்டு. டாப் ஹீரோ நாலு பேர விட்டுடுங்க. அதுக்கு அடுத்த ஸ்டெப்ல இருக்கிற ஹீரோ அத்தனை பேரும் ஒண்ணு கூடிட்டாய்ங்க. இந்த பக்கம் அந்தகால ஆன்ட்டிகளில் ஆரம்பிச்சு, இந்த கால 'அடல்ட்'டிகள் வரைக்கும் லிப்ஸ்ட்டிக் மினுமினுக்க வந்திட்டாங்க.

இந்த வாலாட்டுற திமிங்கல கூட்டத்தில வத்திப்போன கருவாடு ஒன்ணும் வந்து சேர்ந்திருச்சு. யாரு அழைச்சதுன்னும் தெரியல. எதுக்காக வந்தாருன்னும் புரியல. மார்க்கெட்ல முன்னணியில் இருந்தாதான் நேர்ல நின்று கொட்டாவி விடுறதுக்கு கூட வாய திறப்பாய்ங்க. அந்தளவுக்கு சந்தர்பவாதிங்க இவய்ங்க. அப்படி ஒரு அந்தஸ்து பேதம் தலைவிரிச்சு ஆடுற கூட்டத்தில நடிக்கிற எல்லா படத்தையும் பிளாப் படமாவே கொடுக்கிற இளம் ஹீரோதான் அந்த வந்திப்போன கருவாடு. ஒரு க்ளு. இவர் சுறா ஸ்டார் விஜய்க்கு ரொம்ப நெருக்கமான ஆளு!

கிளாஸ்களுக்கு நடுவே நடக்கிற கபடி ஆட்டத்தில, இவரோட கிளாசும் செம சறுக்கல் போட, 90 ப்ளஸ் 90 ப்ளஸ் 90 ப்ளஸ் என்று ஏறிக்கொண்டே போனது அளவு. பக்தி படமா இருந்தாலும் அதுல பதற வைக்கிற க்ளைமாக்ஸ் இல்லாம படம் முடியாது இல்லையா? இங்கயும் அப்படிதான் வந்தது அந்த பதற வைக்கிற க்ளைமாக்ஸ்.

மண்டைக்குள்ளே மங்காத்தா நடக்கிற ஸ்டேஜ் வந்திருச்சு அத்தனை பேருக்கும். கல்கி ஆசிரமத்தில கர்ண கடூரமா பக்தைகள் சிரிக்கிற கிளிப்பிங்ஸ் ஒன்று யூ ட்யூப்ல வெள்ளிவிழா கொண்டாடுதே, அதே ஸ்டைலில் அசுர சிரிப்பு சிரிச்சுகிட்டே அள்ளி அணைக்க தயாராச்சு ஒரு கூட்டம். ப்ளஸ்சும், மைனசும் கூட்டணி அமைத்துக் கொண்டு காணாமல்போக, ஸ்டடியாக நின்றது ரீமா மட்டும்தான். வந்த அழைப்பையெல்லாம் தட்டிக்கழித்துக் கொண்டே வந்த ரீமா, பார்ட்டி ஹாலை நோட்டம் விட, வசந்த மாளிகை சிவாஜி மாதிரி, வகை தொகையில்லாம கிளாசையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தோல்விப்பட ஹீரோ.

சில அரிதான நேரங்களில் லைட் ஹவுஸ் குனிஞ்சு சுண்டலுக்கு கை நீட்டும். அதுதான் நடந்தது அங்கும்!

"அடப்பாவி. பார்ட்டிக்கு வந்து பரிதாபமா குடிக்கிறீயே, அப்படியென்ன கவலை உனக்கு? எங்கிட்ட சொல்லு"ன்னு அரை குறை தமிழ்ல ரீமாசென் ஆறுதல் சொல்ல, அதுவா... அதுவான்னு கேட்டபடியே மாருல சாஞ்சு 'கோ...'ன்னு அழ ஆரம்பிச்சாரு ஹீரோ. அவரு கண்ணை துடைக்கவும், கவலை போக்கவும் துடியா துடிச்ச ரீமா மெல்ல அவரை அணைச்சபடி 'ரஞ்சிதா வைத்தியம்' செய்ய, அத்தனை வருட தோல்விகளும் கண்ணுக்கு வராம கரைஞ்சே போனார் ஹீரோ. அதுக்கு பிறகு அவரு தெளிஞ்சு கண்ண தெறக்கும்போது பக்கத்தில் கிடந்த பஞ்சலோகத்தை அவராலேயே நம்ப முடியல.

அந்த ஜோர்லயே மறுநாள் ரீமாவுக்கு போன் அடிச்ச இளம் ஹீரோ, மறுநாள் ராத்திரியும் டாஸ்மாக் சரக்கை குடிச்சுட்டு வாந்தி எடுத்ததுக்கு காரணம், ரீமாவின் இங்கிலீஸ் திட்டுகள்தான் என்பது பல பேருக்கு தெரியாத பதி விரத ரகசியம்.

பின்குறிப்பு- கடந்த பதிவுக்கே கடைசியா க்ளு கொடுத்திருந்தேன். இந்த பதிவுக்கு ரொம்ப அலுத்துக்க வேண்டாம். நடிகர் மூன்றெழுத்து ஹீரோவின் உறவினரும் கூட!