Tuesday, July 14, 2009

பிரபுதேவா வீட்டு மாடி...?


அடிக்கடின்னு பிளாக்குக்கு பேரு வச்சிட்டு இப்படி ஆடிக்கு ஆடிதான் பதிவு போடுறதான்னு திட்றவங்களுக்கு... இந்த லீவை ஆடித் தள்ளுபடின்னு நினைச்சுக்கோங்களேன் பிரண்ட்ஸ்!

தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா. நாலு மீட்டர் துணியிலே பேண்ட் தச்சு, அதுல ஒரு குழாய்லே நாட்டியத்தையும், மறு குழாய்லே நட்டுவாங்கத்தையும் ஒளிச்சு வைக்கிற அளவுக்கு கேப் வுட்டிருப்பாரு. பேண்டு சட்டைக்குள்ளே இவரு ஆடிட்டு இருப்பாரு. சட்டையும் பேண்டும் தனியா ஆடிட்டு இருக்கும். அப்படி ஒரு தொள தொள...

அந்த காலத்திலே இதே மாதிரி டிரஸ்சை போட்டுட்டு, நாய் துரத்தி நடுவீதியிலே விழுந்த இளவட்டங்க ஏராளம். போதாத குறைக்கு தலையிலே டபுள் பீன்சை கவுத்துவுட்ட மாதிரி கொத்து கொத்தா ஹேர் டிரஸ்சிங். இந்த தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சனை ஸ்ட்ராவை போட்டு உறிஞ்சு ருசிச்சிட்டு இருந்திச்சு ஊரு ஒலகமெல்லாம். அந்த பீரியட்லதான் நான் பிரபுதேவா வீட்டுக்கு போயிருந்தேன். நாக்க முக்காவுக்கெல்லாம் நாலாவது தலை முறை பாட்டனா, முக்காப்புலாங்கிற பாட்டு உறுமியடிச்சிட்டு இருந்த நேரம் அது. நான் ஏன் அங்க போனேன்?

பிரபுதேவா வீட்டு மாடியிலே ஒரு சினிமா கம்பெனி இருந்திச்சு. அவங்களுக்கு போன் அடிச்சு, "அண்ணே ஒரு விளம்பரம் வேணும். நான் இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன்"னு சொன்னேன். எவ்வளவு ரேட்? எத்தனையாவது பக்கத்தில் வரும் என்றெல்லாம் பேசிய பிறகு "வாங்களேன்"னாரு தயாரிப்பாளர். "அட்ரசை சொல்லுங்க"ன்னு கேட்டப்போ அவரு கொடுத்த அட்ரசு நம்ம பிரபுதேவா வீட்டோட அட்ரஸ். பாழாப்போனவய்ங்க, "மாடியிலே இருக்கேன் சாரு"ன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூடாது?

சர்ருன்னு வண்டிய கொண்டு போயி அவரு வீட்டு முன்னாடி நிறுத்திட்டு கதவ தட்டி சவுண்டா குரல் கொடுத்தேன். சாரு...

யாரு... ன்னு கதவை தெறந்தது மைக்கேல் ஜாக்சனின் அப்பா, சுந்தரம் மாஸ்டர். "நான் இன்னாரு. இன்ன பத்திரிகையிலேர்ந்து வர்றேன்". அவ்வளவுதான். "வாங்க, உள்ளே வாங்க" என்றார். அமர்ந்தோம். "தம்பீய்ய்ய்ய்..."னு அவரு குரல் கொடுக்க, நெத்தி நெறய விபூதி. புத்திய உரசுற பார்வை. பக்தியா ஒரு கும்பிடுன்னு படார்னு வந்து நின்னாரு பிரபுதேவா. அட, சினிமாவுல பார்த்தா சிலம்பாட்டம். நேரா பார்த்தா எலும்பாட்டம். என்னய்யா இது?ன்னு ஒரே ஆச்சர்யம். ஆனாலும் பேட்டிய பிறகு எடுத்துக்கலாம். இதழ் வேலைய முடிக்கணும். மொதல்ல விளம்பர டிசைனை வாங்கிட்டு போயிரலாம்ங்குது புத்தி.

சார் என்ன சாப்பிடுறீங்க? / ஒன்னும் வேணாம் சார். / இல்லையில்லே, காபியாவது குடிங்க. சம்பாஷணைகள் தொடர, தொடர, விளம்பரத்துக்கு ரேட் சொன்னோம். ஆனால் பைனல் கூட பண்ணலியே? கேட்ட பணத்தை குடுப்பாரா? பாதியா குறைப்பாரான்னு மனசு ஒரே இடத்திலேயே நின்னு டப்பாங்குத்து போடுது. சர்ருன்னு ஒரே மூச்சுலே காபிய குடிச்சிட்டு, "சார் சொல்லுங்க" என்றேன் தெம்பாக. "நீங்கதான் சொல்லணும்" என்றார் மாஸ்டர்.

இதென்னடா வம்பா போச்சுன்னு நினைச்சுகிட்டே, "நீங்களே சொல்லுங்க சார்" என்றேன். "நானா, என்னத்தை சொல்லணும்? நீங்க ஏதாவது கேளுங்க. இவன்கிட்ட பேசணுமா? அவனையே கேளுங்க" என்றார். "சார், போன்லே பேசுனது நீங்கதானே? அப்ப நீங்களே பேசுங்க. எதுக்கு உங்க பையன்கிட்ட விடுறீங்க?" என்றேன் நான்.

"நானா? போன்லேயா? நான் எப்போ பேசினேன்? திடீர்னு வந்தீங்க. போன்லே பேசுனேன்னு சொல்றீங்க" என்றவர் குழப்பமாக எங்களை பார்க்க, குறுகுறுன்னு சிரிச்சிகிட்டே உட்கார்ந்திருந்தாரு பிரபுதேவா. "சார், அந்த சினிமா விளம்பரம்"னு நான் இழுக்க, "அட அதுவா... சரியாப்போச்சு போங்க. அந்த கம்பெனி மாடியிலே இருக்கு. ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்றார் மாஸ்டர். அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார் பிரபுதேவா. இது நடந்து பல வருசம் ஆயிருச்சு. இடையிலே பலமுறை நம்ம மைக் ஜாக்சனை பார்த்திருக்கேன். பேசியிருக்கேன். ஆனா, அன்னைக்கு அவரு சிரிச்ச வெள்ளந்தி சிரிப்பு இருக்கே, அதுல பாதிய புட்டு பங்கு போட்டுருச்சு சினிமா.

நாலு நாளைக்கு முன்னாடி கூட ஒரு சின்ன நிகழ்ச்சியிலே அவரை பார்த்தேன். பத்திரிகைகாரங்க நாங்க பத்து பேரு மட்டும் கலந்துகிட்ட விழா அது. நாங்கள்ளாம் வருவோம்னு அவரு எதிர்பாக்கவே இல்லை போலிருக்கு. வாய புடுங்கி வயித்தெறிச்சலை கொட்டிட போறாய்ங்களோன்னு நினைச்சு அவரு ஓடுன ஓட்டம் இருக்கே... மொளகா மண்டியிலே வளைகாப்பு வச்ச மாதிரிதான்!

எலும்பை எடுத்து எந்த பக்கம் வேணும்னாலும் போட்டுக்கிற சாமர்த்தியம் இருந்தும், பொல்லாத நாக்கை பொசுக்குன்னு சுருட்டி, உள்ளே வச்சுக்கிற அளவுக்கு தொரத்தோ தொரத்துன்னு தொரத்துதேய்யா இந்த காதல்!

17 comments:

butterfly Surya said...

மொளகா மண்டியிலே வளைகாப்பு வச்ச மாதிரிதான்!
//////

சூப்பர்.

இதுவும் ஒரு விழா முடிந்து வந்து போட்ட பதிவா..?

அண்ணே..அங்கே பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேன்..

இங்க மிஸ் பண்ணாமல் முதல்ல படிச்சிட்டேன்..

வினோத் கெளதம் said...

ரொம்ப நாளு கழிச்சு வந்து இருக்கீங்க..உங்க நண்பரையும் அடிக்கடி கொஞ்சம் எட்டிப்பார்க்க சொல்லுங்க தல.

கலையரசன் said...

பேக் டு பெவிலியன்..

ஏன்ணே?
வெளுத்து வாங்குவீங்கன்னு பாத்தா,
வெள்ளந்தியா வெளக்குறீங்களே...

ம்ஹூம்.. செல்லாது செல்லாது!!
அந்தணன் பாசை பதிவெழுத சொல்லுங்க..

பித்தன் said...

மொளகா மண்டியிலே வளைகாப்பு வச்ச மாதிரிதான்! - அண்ணே வெடிச்சிரிப்பு சிரிச்சேன்.

biskothupayal said...

அடிக்கடின்னு பிளாக்குக்கு பேரு வச்சிட்டு இப்படி ஆடிக்கு ஆடிதான் பதிவு போடுறதான்னு திட்றவங்களுக்கு... இந்த லீவை ஆடித் தள்ளுபடின்னு நினைச்சுக்கோங்களேன் பிரண்ட்ஸ்!

"இப்பயாவது வந்ததுக்கு வாழ்த்துகள்! " "இத்தன நாள் வராததுக்கு கண்டனங்கள் !"

நா.இரமேஷ் குமார் said...

//எலும்பை எடுத்து எந்த பக்கம் வேணும்னாலும் போட்டுக்கிற சாமர்த்தியம் இருந்தும், பொல்லாத நாக்கை பொசுக்குன்னு சுருட்டி, உள்ளே வச்சுக்கிற அளவுக்கு தொரத்தோ தொரத்துன்னு தொரத்துதேய்யா இந்த காதல்//

சூப்பர்

நா.இரமேஷ் குமார் said...

//எலும்பை எடுத்து எந்த பக்கம் வேணும்னாலும் போட்டுக்கிற சாமர்த்தியம் இருந்தும், பொல்லாத நாக்கை பொசுக்குன்னு சுருட்டி, உள்ளே வச்சுக்கிற அளவுக்கு தொரத்தோ தொரத்துன்னு தொரத்துதேய்யா இந்த காதல்//

சூப்பர்

நாஞ்சில் நாதம் said...

:))

sowri said...

சுப்ஜெக்டயும் தொடாம அப்ஜெக்டயும் விடாம இப்படி எழுத உங்கள மட்டுமே முடியும். ஆடி தள்ளுபடில ஆடாம எழுதிடீங்க !

Arun said...

ah the first few lines was so funny i was laughing madly. thanks anthanan sir.. it was worth the wait... but marubadiyum indha maadhiri periya idaiveli vendaame pls :P

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

konguthamizh said...

இந்த வாரம் எங்களை ஏமாத்தி விட்டிக, நாங்க ரொம்ப பெரிசா எதிர்பார்த்தோம்

Sridhar said...

// அட, சினிமாவுல பார்த்தா சிலம்பாட்டம். நேரா பார்த்தா எலும்பாட்டம்.//

அருமை.

வழக்கம்போல் கலக்கல்

உண்மைத்தமிழன் said...

அப்படியும் கோட்டை விட்டுட்டீங்களே ஸார்..!

நயன்ஸ் இப்ப எங்க இருக்காங்கன்னு சும்மா போஸ்ட்மேன் மாதிரி கேட்டிருக்கலாமே..?!!!

Joe said...

நயன்தராவுக்கு அழகைக் கொடுத்த ஆண்டவன் அறிவைக் கொடுக்கல.

அது கொஞ்சமாவது இருந்தா, ஏன் இப்படி கொடூரமான மூஞ்சிகளையே தேடித் போயி காதலிக்கப் போகுது?

குழலி / Kuzhali said...

//அந்த காலத்திலே இதே மாதிரி டிரஸ்சை போட்டுட்டு, நாய் துரத்தி நடுவீதியிலே விழுந்த இளவட்டங்க ஏராளம்.
//
நாய் துரத்திய ஆட்களில் நானும் ஒருவன் :-)

தமிழன்-கறுப்பி... said...

:))