Saturday, June 12, 2010

அரை‌ கி‌ணறு, அரை‌ கம்‌பம்‌, அப்‌பு‌றம்‌... கமல்‌ஹா‌சன்‌


தன்னை வருத்திக்கிற ஹீரோ தமிழ்சினிமாவுல யாருன்னு கேட்டா கண்ணை மூடிகிட்டு சொல்லிடலாம், கமல்தான்னு! அவ்வை சண்முகி மட்டுமில்ல, அன்பே சிவம்ல கூட அவரோட மேக்கப்பும் அர்ப்பணிப்பும் அற்புதம். இந்த அதிசயத்தை சிலேட்ல எழுதினாலும் அழிக்க முடியாது. சிஸ்டத்தில எழுதினாலும் வழிக்க முடியாது.

அரை கிணறு, அரை கம்பம் இதெல்லாம் அவலத்துக்கான அடையாளம். ஆனால் கமலோட அரை நு£ற்றாண்டு அனுபவம் இருக்கே, அது அரை குறையானது அல்ல. அந்த அரையும் நிறையானது! இவ்வளவு பில்டப்பும் கடைசி பாராவுல என்னாகுதுங்கிற மேட்டருக்கு வர்றதுக்கு முன்னே, அசிஸ்டென்ட் டைரக்டர்களோட அவசியத்தையும் பேசியாகணும். அனுபவத்தையும் பேசியாகணும். (ஹலோ, எங்க அதுக்குள்ளே கடைசி பாராவுக்கு ஓடுறீங்க?)

ஒட்டகத்தை உரிச்சாதான் குர்பானி. ஆனா உரிக்காமலே குர்பானியாகிற ஒரே ஜந்து அசிஸ்டென்ட் டைரக்டருங்கதான். விடிஞ்சா கல்யாணம், வெளக்கு வச்சா சாந்தி முகூர்த்தம்னு ஒரே நாளில் பெரிய மனுசனாக்கிடுது இல்லறம். ஆனால் இந்த அசிஸ்டென்ட்டுங்க பொழப்பு இருக்கே, விடிஞ்சா பொறப்பு. வெளக்கு வச்சாலும் பொறப்புதான். வருஷத்தை இவங்களும், வருஷம் இவங்களையும் உருட்டி உருட்டி விளையாடிக்கிட்டே இருக்கும். நல்ல வாய்ப்பு வர்றதுக்குள்ளே தல நரைச்சு போறவங்களும், குடல் இளைச்சு போனவங்களும்தான் இந்த ஃபீல்டுல ஜாஸ்தி.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு உதவி இயக்குனரானாரு. இந்த தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி அவர் ஒரு பத்திரிகையாளர். போன இடத்தில சிங்கம் மாதிரி கர்ஜிக்கறதும், எவ்வளவு பெரிய மனுசனா இருந்தாலும் கேள்விகள கேட்டு அவங்களை கிறுக்கு புடிக்க வைக்கிறதும் அவருக்கு புடிச்ச விளையாட்டு. காலம் அவரையும் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆக்கிருச்சு. முன்னணி டைரக்டர் ஒருத்தரிடம் உதவி இயக்குனரா சேர்ந்தாரு. ஏவிஎம்ல படப்பிடிப்பு. ஆளை பார்த்து நலம் விசாரிக்கலாம்னு போயிருந்தேன். போன இடத்தில நான் பார்த்த கோலம், மார்கழி மாசத்து மங்கல கோலமில்ல. கத்தரி வெயிலில் கட்டாந்தரையில் போட்ட தண்ணீர் கோலம். புஸ்ஸ§ன்னு வாயிலேர்ந்து பெருமூச்சு வர, ஒரு பெரிய பெட்டிய தலையில வச்சுகிட்டு அந்த யூனிட்டை சுத்தி சுத்தி ஓடி வந்துகிட்டு இருந்தாரு.

அதிர்ந்து போன நான் அவரு பொட்டிய வச்சிட்டு ஒதுங்குற வரைக்கும் காத்திருந்தேன். வந்த பிறகு என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவரு சொன்ன பதில் ஆட வச்சிருச்சு. அது பனிஷ்மென்ட்டாம். டைரக்டர் சொன்ன ஏதோ ஒரு வேலைய செய்யாம விட்டுட்டாரு. டைரக்ஷனுக்கு தேவையான மெட்டீரியல் வச்சிருக்கிற பொட்டிய தலையில ஏத்தி, சுத்தி சுத்தி வான்னு சொல்லிட்டாரு இயக்குனரு. மண்டைய சுற்றி அறிவு வெளிச்சம் அடிச்சாலும், தொண்டைய மூடிக்கிட்டு சொன்னதை செய்யலேன்னா போயிட்டு வா ராசாதான்! அதனாலதான் பணிவா அந்த வேலையை செஞ்சுகிட்டு இருந்தாரு நண்பர்.

இவருக்கு டைரக்டரால பிரச்சனை. சிலருக்கு ஹீரோ, ஹீரோயின்னு பலராலும் பிரச்சனை வரும். 'என்னவோ எனக்கு அவன புடிக்கல. அவன் முழியே சரியில்ல. வேற யாராவது அனுப்பி டயலாக் படிக்க சொல்லுங்க' என்று ஹீரோ காய்வார். காஸ்ட்யூம் மாத்துறதுக்குள்ளே கதவிடுக்கால பார்த்திட்டான்னு கம்ப்ளெயின்ட் பண்ணி படம் முடியுற வரைக்கும் பக்கத்திலேயே வராத மாதிரி படுத்துற ஹீரோயினுங்க இருப்பாங்க. அதுக்கு காரணம் செல்போன் கடலைக்கு இடையூறா 'ஷாட் ரெடி மேடம்'னு அடிக்கடி போயிருப்பாரு அந்த பக்கம்! இப்படி அசிஸ்டென்ட் டைரக்டருங்களுக்கு மே மாச வெயிலை மண்டைக்கு அனுப்பிட்டு, டிசம்பர் மாச மழைய கண்ணுல வரவழைப்பானுங்க, அல்லது ....ப்பாளுங்க!

கழுத்தை பிடிச்சா டை. அதுவே கொஞ்சம் இறுக்கி பிடிச்சா நாக்கு தள்ள வைக்கிற டைய்! சிலரோட கண்டிப்பும் இப்படிதான் இருக்கும். ஆனால் அது பர்பெக்ஷனுக்கான பாராயணம்ங்கறது போக போகதான் தெரியும். யானை தும்பிக்கைய ஆட்டுதுன்னு ஆட்டுக்குட்டியும் வாலாட்டின கதையா சில டைரக்டர்களும், நடிகர்களும் கோவத்தை வலிய வரவழைச்சுகிட்டு அலட்டிக்கறதும் இங்க நடக்கும். கடந்த பாராவில் நான் சொன்ன விஷயம் அப்படிதான்.

ஆனால் கலையை கருவறையா நினைக்கிற கமலுக்கும் அடிக்கடி கோவம் வரும். அவர் நடிக்கிற படத்தில யாரு வேணும்னாலும் டைரக்டரா இருக்கலாம். ஆனா காட்சியை வரையறுக்கிற அதிகாரம் கமலுக்கு மட்டும்தான். (பாலசந்தர் காலத்தை விட்ருங்க. நான் சொல்றது இப்போ) படத்தில இவர் கோட் போட்டுக் கொண்டு வர்ற காட்சியா இருக்கும். அதில ஒரு மயிரிழை சுருக்கம் கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவரு அவர். ஷாட்ல கழற்றி அரை நிமிஷம் கழிச்சு திரும்ப மாட்டினா கூட அதுக்குள்ளே அயர்ன் பண்ணியிருக்கணும் அந்த கோட். இல்லைன்னா இஸ்திரி பொட்டி கோபத்தோட சம்பந்தப்பட்ட அசிஸ்டென்ட் டைரக்டரை படுக்க வச்சு பரேட் எடுப்பாரு கமல்.

அவரு மனசில நினைக்கறதை 'மானிட்டர்' பண்ணுற அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கணும். அவரு கட்டளையிட்டு வாயை மூடுவதற்குள்ளே விஷயம் முடிஞ்சுருக்கணும். இல்லைன்னா ஒரே ஒரு பார்வையிலேயே 'ஒண்ணுக்கு' வர வைக்க முடியும் அவரால். அந்த பார்வையில கலங்கரை விளக்கமும் தெரியும். காசிமேடு அருவாளும் தெரியும். சார் அடுத்ததா என்ன சொல்லப் போறாரோன்ங்கிற அவஸ்தையிலேயே அடி வயித்தில வைப்ரேட்டரோட சுத்தி வர்ற உதவி இயக்குனர்களுக்கு அந்த படத்தின் ரிலீஸ் நேரத்திலதான் சுவாச குழாயே திறக்கும்!

அப்படியாப்பட்ட கமல் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் சொன்ன பதில்தான் நான் இப்போ சொல்லப்போற விஷயம். அதை படிச்சுட்டு எங்க அந்த நாதாரின்னு விரட்டுனாலும் சரி, இவன்தாண்டா சர்தாரின்னு பாராட்டுனாலும் சரி, அது உங்க விருப்பம். கமல் நடிச்ச ஒரு படத்தில அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். கதை பனிப்பொழியுற ஏதோ ஒரு பிரதேசத்தில நடக்குது. காஷ்மீரோ, ஊட்டியோன்னு வச்சுக்கோங்களேன். ஆனா அப்படத்தின் விட்டுப் போன ஒரு பகுதிய சென்னையில எடுத்துகிட்டு இருந்தாங்க. பொதுவா பனி பிரதேசத்தில புகை மாதிரி மிஸ்ட் நடமாடிக்கிட்டேயிருக்கும்.

பின்னணியில் இந்த 'மிஸ்ட்' வரணும்னு நினைச்ச கமல், விறகு கட்டைகளை போட்டு எரிங்கன்னு சொல்லிட்டாரு அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம். ஷாட்ல விழாத இடத்தில கட்டைய போட்டு கற்பூரத்தை ஏத்துறதுக்குள்ளே "எங்கய்யா புகை வரலே... வேலை ஆச்சா"ன்னு பத்து முறை குரல் கொடுத்திட்டாரு கமல். அடுத்த முறை அவரு நேர்ல வந்து கத்தறதுக்குள்ளே ஊதி புகையை வர வச்சுரணும்னு நாலைஞ்சு பேரு ஒண்ணு சேர்ந்து ஊதிகிட்டேயிருந்தாங்க. அதுக்குள்ளே பொசுக்குன்னு அங்க என்ட்ரி கொடுத்த கமல், "என்னய்யா இவ்வளவு நேரம், புகை வந்திச்சா?"ன்னு கேட்க, "ஒரு நிமிஷம் இருங்க சார்"னு சொன்னாரு அந்த உதவி இயக்குனர்.

அப்படியே கீழே குனிஞ்சு விறகு கட்டைக்கு கேட்கிற மாதிரி, "கமல்ஹாசன்....கமல்ஹாசன்... கமல்ஹாசன்"னு சத்தமா மூணு தடவ கூவுனாரு. பிறகு தலையை து£க்கி, "சார் உங்க பேர சொன்ன பிறகும் பத்த மாட்டேங்குது. என்ன பண்ண சொல்றீங்க?"ன்னு சொல்ல, மத்த அசிஸ்டென்ட்டுகளுக்கு இப்போ பேண்ட் நனையுற அளவுக்கு பதட்டம். ஆனால் கமல் என்ன செஞ்சாரு தெரியுமா? அப்படியே அவரை தீர்க்கமா சில வினாடிகள் பார்த்திட்டு அந்த இடத்திலிருந்தே அகன்றுவிட்டார். அப்புறம் விறகு தானாக எரியுற வரைக்கும் அந்த பக்கமே வரலை!

சரி அந்த அசிஸ்டென்ட் என்ன பண்றாரு இப்போ? அன்னையோட வீட்டுக்கு போனவரு எந்த மெஸ்ல அடுப்பூதிகிட்டு இருக்காரோ?

19 comments:

Ashok D said...

பதம்ஸ்ரீ கமல்ஹாசன் சார பத்தி தெரியாத விஷயமா சொல்லியிருக்கலாமே.. :)

கிரி said...

:-))

King Viswa said...

சாதித்து விட்டோம் என்ற மமதைதான் காரணம்.

வாழ்க அந்த அசிஸ்டன்ட்.

Unknown said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Anonymous said...

Dont lie he is a legend

butterfly Surya said...

அசிஸ்டண்ட்.. அய்யோ பாவம்.. சும்மா ஊதி தள்ளிட்டீங்களெ தலைவா..

Raju said...

கமல் இடத்துல் நான் இருந்திருந்தா அஸிஸ்டெண்ட்டை பாராட்டியிருப்பேன்.
விற்குக்கு கமல்ஹாசனத் தெரியுமா..? இல்லை காஜல் அகர்வாலைத்தான் தெரியுமா..?
சூப்பர் ரிப்ளைல..!
I Like that Asst.

நா.இரமேஷ் குமார் said...

//சரி அந்த அசிஸ்டென்ட் என்ன பண்றாரு இப்போ? அன்னையோட வீட்டுக்கு போனவரு எந்த மெஸ்ல அடுப்பூதிகிட்டு இருக்காரோ?//

மெட்ராஸ்ல இருக்க விட்டாங்களே... சந்தோஷப்படுங்கண்ணா...

Gazy... said...

மமதை பிடித்த ஆசாமி

ரவிஷா said...

அது சரி! நீங்க இப்படி விலாவாரியா எழுதறீங்களே! இனிமேல் உங்களுக்கு கமல் வீட்டுப்பக்கமோ அல்லது ஆஃபிஸ் பக்கமோ போக பர்மிஷன் கிடைக்குமா?

rajesh.v said...

ha ha ha....

arumaiyana vishayam.

rajesh.v

King Viswa said...

புது டெம்ப்ளேட், புது டிசைன், கலக்குறீங்க அந்தணன் சார்.

அப்படியே இந்த கமென்ட் போட்டியையும் இதே பக்கத்தில் வருகிற மாதிரி செய்தால் இன்னும் சூப்பர்.

வெடிகுண்டு வெங்கட் said...

மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

சூன்யா said...

kalakkal Andhanan....
unga style ipo enakkum lesa thothikichu nu ninaikiren..
idhai padichuttu sollunga..

http://soonya007.blogspot.com/

Anonymous said...

கமல்ஹாசன் என்னும் சொறிநாயை பற்றிய நல்ல ஒரு பதிவு

Anonymous said...

அந்தணனின் துணிச்சலுக்கு ஒரு சபாஷ்!!!

இன்னும் கமலின் மறுபக்கங்களையும், இருட்டு விஷயங்களையும், அந்தணன் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார் என்று நம்புவோம்

நட்புடன் சௌம்யா.. said...

nall vishaya ma than iruku..... puriytha sila cinema paitheyangaluku...ungalai pondra oru asami tevaithan...thodaratum ungal kalai pani....

Unknown said...

super! :-)

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

தன்மானம் இருக்குற அசிஸ்டன்ட் டைரக்டர்ன்னா நீங்களும் நக்கல் பண்ணுறீங்களே தலைவா. கமல் ஹாசனா இருந்தாலும் விறகு எரியுரப்பதானே எரியும்? 'அவரு இப்ப எந்த மெஸ்சுல அடுப்பு ஊதுராரோன்னா அது ரொம்ப வலிக்குது தலைவா.