Friday, June 5, 2009

ஃபேஸ்புக்கில் வந்த நோஸ்கட்!


ஆஹா...ஹ்! நான் என்ன எழுதப்போறேன்னு தெரியாமலேயே இப்படி குமுறிட்டீங்களே சாருங்களா? விட்டா பாக்கெட்ல கைய விட்டு, இவர திட்ட சொல்லி 'அவரு' கொடுத்ததா?ன்னு கூட கேட்டிருப்பீங்க போலிருக்கு. பத்திரிகையிலே வந்தது... பாதி காதுல கேட்டது...ன்னு இல்லாம, கொஞ்சம் நிஜமாவே எழுதலாம்னு நினைச்சேன். அவரு சாப்பிடுற கொஞ்சூண்டு டிபன்லேர்ந்து, நெஞ்சார படிக்கிற புத்தகம், அப்புறம் வீட்டிலே நடக்கிற கிருஷ்ணன் பூஜை வரைக்கும் அதிலே அடக்கம். அதுக்குள்ளே இப்படியா? மை டியர் அண்ணாஸ்... இந்த ஆட்டத்திலேர்ந்து நான் அன்போட கழண்டுக்கிறேன். ஏன்னா, எனது நோக்கம் ஜாலியா படிக்கணும். சகஜமா சிரிக்கணும். இந்த பதிவு ரெண்டுக்கும் குண்டு வைச்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா ஒன்று மட்டும் புரியுது. அவது£று பரப்பறதுல நீங்கள்ளாம் கிசுகிசு கிங்கரர்களோட ஒன்ணு விட்ட சித்தப்பாங்களா இருப்பீங்கங்கறது மட்டும்! ஓக்கே, வேற பதிவுக்கு போவலாமா?

ஆர்குட் ஒரு பக்கமும், ஃபேஸ் புக் மறுபக்கமும் வந்ததிலேர்ந்து, கன்னித்தீவு கதையிலே வர்ற கண்ணாடி மாதிரி ஆயிடுச்சு வாழ்க்கை. (எனக்கில்லே சாமீ) பக்கத்து பக்கத்து டேபிள்ளே உட்கார்ந்திருந்தாலும் ஃபேஸ் புக்லேயே பேஸ்சிக்கிறாய்ங்க ரொம்ப பேரு. நான் சொல்லப் போற நண்பருக்கு ஏராளமான நண்பர்கள். பாதி பேரு இப்படி ஃபேஸ்புக்லே வந்தவங்கதான். கம்ப்யூட்டர்லே வலைய வீசுவாரு. சுறா கிடைச்சாலும் சரி, சுள்ளான் கிடைச்சாலும் சரி. ரெண்டுமே லாபம்தான் அவர பொருத்தவரை. ஏன்னா தனது பிசினசை அது மூலம் பெருக்க என்ன வழின்னு யோசிக்கிற ஆளு அவரு.

ஷ§ட்டிங்கிலே கேரவேன் கேரவேன்னு ஒரு ஐட்டம் இருக்கே? அதுதான் நம்ம ஆளோட பிசினஸ். ஆர்குட்லேயே ஆர்ட்டிஸ்டுகளை பிடிச்சு கலகலப்பா பேசுவாரு. அவங்க நல்ல பிரண்டானதும் ஷ§ட்டிங்கிற்கு கேரவேனை தள்ளி விட்ருவாரு. இப்படி அவரு வச்சிருக்கிற கேரவேன்கள் மாதத்திற்கு ஒரு குட்டிய போட்டு, (ஐ மீன் பல்கி பெருகி) இன்னைக்கு அவரு கையிலே அரை டஜன் கேரவேன்கள் ஓடிட்டு இருக்கு.

நாலு வாரத்துக்கு முன்னாடி, ஃபேஸ்புக்லே ஒரு யங் ஹீரோவோட பேர போட்டு 'சர்ச்' பண்ணியிருக்காரு மனுஷன். இவரு கெட்ட நேரம் போட்டவுடனேயே கிடைச்சிட்டாரு அவரும்.

சார்ட்டிங்லே, "ஹலோ சார் குட் மார்னிங்..."னு டைப் பண்ணிட்டு வெயிட் பண்ணிய நேரத்தில் இருப்பு கொள்ளாம நகத்தை கடிச்சிட்டு இருக்கும்போதே, எதிர்முனையிலிருந்து பளிச்சென்று வந்துச்சு பதில். "...மார்னிங்!"

அவ்ளோதான். சந்தோஷத்தில் பயங்கரமா மிதக்க ஆரம்பிச்சாரு பிரண்டு. பின்னே...? இவரு ட்ரை பண்ணிய அந்த யங் ஹீரோ பயங்கர மன்மதன். அவரு யாரையும் மதிக்க மாட்டாரு. நமக்கெல்லாம் அவரு ஃபிரண்டாவறதே கஷ்டம்னெல்லாம் உரைப்பு சட்டினியை உள் மனசிலே தடவி வச்சிருந்தாய்ங்க இவரோட பிரண்ட்ஸ். இந்த நிலைமையிலே ஹீரோவிடமிருந்து உடனே ஒரு குட் மார்னிங் வந்தால்? ஆடிப்போயிட்டாரு மனுஷன்.

தேங்க்ஸ்... அப்பிடின்னு டைப் பண்ணி அனுப்பிட்டு மறுபடியும் விட்டுப் போன விரலை எடுத்து நுனிப்பல்லிலே வச்சு நகத்தை கடிச்சிட்டு இருந்தாரு. அடுத்த செகன்ட் மறுமுனையிலிருந்து மன்மத ரிப்ளை! "ஓக்கே..." இப்போ மறுபடியும் கீ போர்டில் கபடி ஆட ஆரம்பிச்சாரு ஃபிரண்டு. "சார், நான் ஸோ அண் ஸோ. என்னோட பிசினஸ் இன்னது. உங்களுக்கு கேரவேன் வேணும்னா சொல்லுங்க. பிரமாதமா உங்களுக்காகவே டிசைன் பண்ணி தர்றேன்"னு இவரு டைப் பண்ணி என்ட்டர் கொடுத்திட்டு வெயிட் பண்ணினார். "எங்கே மீட் பண்ணலாம். எப்போ வர்றீங்க?"ன்னு அடுத்தடுத்து பதிலா வரப்போவுதுன்னு இவரு கற்பனையிலே மிதக்க, எதிர்முனையிலிருந்து வந்தது பதில்!

என்னன்னு? அதை எப்படி சொல்றது? வந்தது மூன்றெழுத்தில் அமைந்த சரியான கெட்ட வார்த்தை. அட, சு....க்கு நு£றாக்கிட்டியேடா என்னோட இமேஜைன்னு நொறுங்கிப் போன நண்பர், சிஸ்டத்தை குளோஸ் பண்ணினாரு. அன்னையிலேர்ந்து இந்த மாதிரி 'சிஸ்டத்தை' அவரு ஃபாலோ பண்றதே இல்லைங்கிறதை நான் சொல்லணுமா என்ன?

15 comments:

sowri said...

Me first for the first time.

sowri said...

Apart from message you convey, the style and usage(Choice of word)is very impressive. Never mind the critics, continue to convey your views and ideas. Basically blog is your expression of ideas and thought.

butterfly Surya said...

நான் வழக்கபடி சொல்லும் வழக்கப்படி கலக்கல்.////

ஆமாம் சார். நீங்க எழுதறதை ஜாலியா படிக்கவும், சகஜமாக இருக்கவும் மட்டுமே விரும்புகிறோம்.

எப்போதும் இடுவது போல ஜாலியாகவே நானும் கமெண்ட் போட்டா..

பின்னூட்டம் பக்கமே எட்டி பார்க்காதவனெல்லாம் ஒடி வந்து குதிக்கிறான், தாவுறான், மிரட்டுறான்.

அய்யோ.. அய்யோ...முடியலை..

நானும் இதையேதான் சொல்லலாம் என்றிருந்தேன். அன்போட கழண்டதிற்கு நன்றிகள் சார்.


Dear Anthanan, I feel sorry if anyone impaired.

வழக்கப்படி தொடருங்கள்.

பாலா said...

என்னங்க தல.. இது..? நான் சும்மாச்சுக்கும்தான் ‘ஹாலிவுட்’ கொந்தளிக்கும்னு சொன்னேன்..!!

யாராச்சும் பிரச்சனை பண்ணினா சொல்லுங்க. அர்னால்டை விட்டு அடிச்சிடலாம்! :) :)

அப்ப அந்த ‘தலைவர்’ நியூஸ் எல்லாம்.. ‘அம்போ’தானா?
=====

பூச்சி..., என்ன ஓவரா.. சவுண்டு..? :) :) :) :) :)

Rajesh.v said...

mr. anthanan,

i feel sorry for my previous message.

Rajesh.v

நா.இரமேஷ் குமார் said...

அண்ணே... பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தான். நாங்க எல்லாம் இருக்கோம். குவாட்டருக்கு கம்பெனி கொடுக்க... தைரியமா எழுதுங்கண்ணே... (சரி... சிம்பு மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா... ஃபேஸ்புக் பார்ட்டி... எல்லார்கிட்டேயும் சொல்லி கதறியிருக்கார் போலிருக்கே... உங்களை அருணாச்சலேஸ்வரர் தான் காப்பாத்தணும்)

அன்புச்செல்வன் said...

//நா.இரமேஷ் குமார் said...
... சிம்பு மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா...//

ஆஹா அது அவருதான்னு உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?!, கேரவன் பார்ட்டி பல ஏரியாவுல கதறி இருக்காரு போல.

Sridhar said...

சிம்பு மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா...//

சொம்புகிட்ட போனாலே வம்புதான்.

//இந்த ஆட்டத்திலேர்ந்து நான் அன்போட கழண்டுக்கிறேன்//

சூதனாமாத்தான் இருக்கீங்க

suryan said...

Dear Andanan Sir,
We really did not want to hurt you. We just inform that thalivar is a genuine personality and your word might hurt us. If you feel that my comment or our thalaivar fans comment hurt you, i beg sorry. Please continue your post about him
Suryan

Cary said...

You get intimidated by those people who were warning you?!! I didnt expect it from an experienced journalist like you.

If you are writing truth, whether its good or bad about Rajini (or any other person) why should you hesitate?

Its really pathetic to see the act of so called Rajini fans. Losers.

ஈ ரா said...

ஜி,

எனது பின்னூட்டம் தங்களை எரிச்சல் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.. ரஜினி மீது இருக்கும் அன்பினால் தான் அதை அனுப்பி இருந்தேன்..

மற்றபடி எனக்கு தவறான எண்ணம் எதுவும்இல்லை.. உங்கள் எழுத்துக்கும், அனாயாசமான் நடைக்கும் நானும் விசிறிதான்...


அன்புடன்

ஈ ரா

Bhuvanesh said...

அண்ணே, சும்மா மேட்டர் சொல்லாமா ஒரு நெகடிவ் பில்ட் அப் கொடுத்தது நீங்க.. இப்போ மத்தவங்கள குத்தம் சொன்னா எப்படி?? ரஜினி யை பத்தி தப்பா பேசுனா பாத்து பேர் எதிர்பாங்க.. நாலு பேர் ஆதரவா பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா ?? ஏன் அஜித்துக்கு இப்படி ஒரு நெகடிவ் பில்ட் அப் கொடுத்தா உங்களுக்கு கோவம் வராதா ??

நான் ரஜினி, அஜித் இருவரையும் compare செய்யலை.. உங்களுக்கு அஜித்தை பிடிக்கும் என்பதால் தான் அவரை பற்றி கேட்டேன்!!


எப்பவும் போல உங்கள் இந்த பதிவு கலக்கல்.. நம்ம லிட்டில் பத்தி லிட்டில் தெரிஞ்சிருந்தாலும் அவருக்கிட்ட போய் இப்படி கேட்டிருக்க மாட்டாரே ??

Giridharan V said...

அண்ணேன்!

ஏதோ மூஞ்சி தெரியாத ஆளுங்க நாங்க வந்து சொன்னதுக்கே "அன்போட" கழண்டிகிட்டீங்க.

அண்ணேன் உங்க "அன்பு" எங்களுக்கு தெரியாதா?...நாங்களும் தமிழ்சினிமா.காம் பற்றி அறிவோம்!

"அன்பு"டன்
கிரிதரன்

Giridharan V said...

அண்ணேன்,

ஏதோ ஒரு மன உறுத்தல்ல கொஞ்சம் வேகமா பேசிட்டேன் நெனைக்கிறேன்...மத்தபடி எப்போதும் உங்க எழுத்துக்கு இந்த தம்பி ஒரு ரசிகனா இருப்பேன்...அடிக்கடிக்கு அடிக்கடி வருவேன்....

அன்புடன்,
கிரிதரன்

உண்மைத்தமிழன் said...

ம்.. அந்தாளுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு..!

போயும்.. போயும்.. அவர்கிட்டதான் போய் கேக்கணுமா..?