Sunday, June 7, 2009

குப்புற படுத்துகிட்டு என்ன பண்றீங்க?


....ண்ணே, மதுர திமிருங்கிற படத்துல ஒரு பாட்டெழுதியிருக்கேன். உங்க வெப்சைட்டுல ஒரு நியூச போட்டூட்ருங்கன்னு பால பாரதி கேட்டப்போ, சந்தோஷமா இருந்திச்சு. 'பாட்டு வாங்குன' ஒரு ஆளு பாட்டு எழுதினா சந்தோஷந்தானே பாலியல் பாரதி?ன்னேன்! பால பாரதிய நான் செல்லமா கூப்பிடுறது அப்படிதான். அவரும் புரிஞ்சிகிட்டு, "அண்ணே நானே அதை மறந்திட்டேன்"னாரு மறக்காம! ஆனா மறக்கக்கூடிய சமாச்சாரமா அது?

பேட்டிக்காக போற இடத்திலே என்ன கேட்கிறோம்னே தெரியாம எதையாவது கேட்டுட்டு, கண்ணு மண்ணு தெரியாம புண்ணாகிப்போயி வருவாய்ங்க சில பேரு. நம்மாளும் அப்படிதான். அன்னைக்கு நடந்த சம்பவம்...? அத சொல்றதுக்கு முன்னாடி கண்ணு, மண்ணு, புண்ணுன்னு அடுக்கு மொழியிலே சொல்லிட்டு அத பற்றி எழுதாம போனா, எழுதுற பேனாவுக்கே அழகில்லே! அதனால சொல்லிடுறேன்.

ஒரு பிரபல வார இதழில் அப்பதான் வேலைக்கு சேர்ந்திருந்தாரு அந்த 'சொட்டை தலை' நிருபர். லொட லொட ஆசாமிதான் இவரும். வந்த புதுசில்லையா? ஆர்வத்தை பேனாவிலே நிரப்பினாலும், அடக்கத்தை உரல்ல போட்டு குத்தோ குத்துன்னு குத்திட்டு இருந்தாரு. அமெரிக்காவ பற்றி ஒரு டவுட்டுன்னு வைங்க. "டேய், கிளின்டனுக்கு போன போடு. கேட்ருவோம்"ங்கிற அளவுக்கு இவரோட ஆர்வம் ஆர்ட்டீஷியன் லெவலுக்கு பொங்கி பிரவாகம் எடுத்து ஓடியது ஆபிஸ் எங்கும். முனிஸ்வரன் வந்தாலே முட்ட பரோட்டாவ குடுத்து சமாளிக்கிறவய்ங்க, சொட்டையோட வேகம் தாங்காம துடிச்சு போயிட்டாய்ங்க. இவரோட அழும்புக்கு தழுப்பு ஏற்படுத்தணும்ங்கிற முடிவுக்கு வந்திட்டாய்ங்க. ஒரு பெண் போலீஸ் ஆபிசர் பேர சொல்லி, அவங்ககிட்ட ஒரு பேட்டிய எடுத்திட்டு வந்திருங்கன்னாய்ங்க விவரமா.

அடுத்த செகன்ட் அந்த ஆபிசரு வீட்டுக்கு போன போட்டுட்டாரு நம்மாளு. நைட் ட்யூட்டி பார்த்திட்டு வந்த களைப்போ, என்னவோ, அந்தம்மா நல்லா து£ங்கிட்டு இருந்தாங்க. இருப்பு கொள்ளாம போனை அடிச்சிகிட்டே இருந்தாரு சொட்டை. கொஞ்சம் லேட்டா, வேலைக்காரி போனை எடுத்து "அம்மா து£ங்குறாங்க"ன்னு சொல்ல, "நான் இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன். எழுப்பு"ன்னுட்டாரு நம்ம ஆளு. அட, இதையாவது சகிச்சுக்கலாம். து£க்க கலக்கத்தோட எழுந்து ரிசீவரை எடுத்த அந்தம்மாவிடம், மணி பத்தாவது. இந்நேரத்திலே குப்புற படுத்துகிட்டு என்ன பண்றீங்கன்னுட்டாரு! (வேறொன்னுமில்லே, வாயி..) "ஹே, ஹ¨ ஆர் யூ"ன்னு அந்தம்மா போன்லேயே லட்டியை சுழற்ற, மொத மொதலா ஈரக்கொலையிலே தாரு ஊத்துன வலி ஏற்பட்டுச்சு சொட்டைக்கு. தப்பா கேட்டுட்டோமோ? இதிலே மணி பத்தாவுது. இன்னும் து£க்கமான்னு கேட்ட வரைக்கும் ஓ.கே. அதுக்கு பிறகு குப்புறப்படுத்து.... ஆங் அங்கதான் தப்பு பண்ணிட்டோம் போலருக்குன்னு வினாடிய நு£றா பிரிச்சு அதுக்குள்ளே யோசிச்சிட்டாரு மனுஷன்.

"மேடம், நான் வந்து... வந்து... இந்த பத்திரிகையிலேர்ந்து... ஒரு பேட்டின்னு..." குளறி குளறி சொல்லி முடிச்சதும் "போனை வைங்க. நானே கூப்பிடுறேன்"னாங்க அந்தம்மா. அடுத்த செகன்ட் எடிட்டருக்கு போன் பறந்தது. "யாருங்க அவன்? இப்படி கேட்கிறான்"னு அவங்க சொல்ல, ரிசீவரை சாத்திய அடுத்த வினாடி எடிட்டர் டேபுளுக்கு முன்னாடி நின்னாரு சொட்டை. அவரு மனசுக்குள்ளே போட்டிருந்த தோட்டாதரணி 'செட்டை' பிரிச்சு எடுத்திட்டாரு எடிட்டர். (எல்லாமே கிசுகிசு பாணியிலே இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாலைஞ்சு பேருக்கு இது தெரியும்)

ஹ¨ம், திரும்பவும் நம்ம பாலபாரதி மேட்டருக்கு வருவோம். 'போலீஸ் செய்தி' என்ற புலனாய்வு பத்திரிகையிலே சினிமா நியூஸ் எழுதிட்டிருந்தாரு பால பாரதி. பிளேடு பக்கிரி, பிச்சுவா பரமன்கிற மாதிரி, இவரு ஸ்பீக்கர் பாரதி. ரொம்ப பேசுவாரு. பிரஸ்மீட்லே ஹீரோ ஒரு பதில சொன்னா, காதோரமா வந்து "என்ன இப்பிடி சொல்றான்? இவன பத்தி தெரியதா?"ம்பாரு ஆம்புலன்ஸ் அவசரத்தோடு. "பிரஸ்மீட் முடிஞ்சு போம்போது இவன தனியா பார்த்து நான் குடுக்கிறேன் பாருங்க நக்கலுன்"னு அவரு சவால் விடுறதை பார்த்தா, நாளைய தந்தியிலே இதுதான் தலைப்பு செய்தியா வரும் போலங்கிற அளவுக்கு இருக்கும். ஆனா இவரு போயி அவருகிட்ட தனியா பேசுறதை கேட்டாதான் தெரியும். அது நக்கலு இல்லே, ஹீரோவோட 'நெஞ்ச நக்கலுன்னு!'

ஒரு முறை டிஆரை பேட்டி எடுக்க வந்திருந்தாரு பால பாரதி. நாங்கள்ளாம் வெளியே பேசிட்டு இருந்தோம். அண்ணன் வரச்சொல்லியிருக்காருன்னு எங்ககிட்ட சொல்லிட்டு உள்ளே போனாரு. பேட்டி நல்லா ஸ்மூத்தாதான் போயிட்டு இருந்திச்சு. திடீர்னு உள்ளேயிருந்து ஒரே சத்தம். "டேய், கதவை இழுத்து மூட்றா. இவனை கட்டிப்போடு. ங்கொ....ள யாருகிட்டே கேக்கிறே"ன்னு ஒரே சத்தம். ஆஹா, டிஆரோட பசிக்கு நம்மாளு பிரியாணி ஆயிட்டாரேன்னு நாங்க பதற ஆரம்பிச்சிட்டோம்.

பதினைந்து நிமிஷம் காட்டுக்கூச்சல் உள்ளேயிருந்து. டிஆரோட கோவத்தை பார்த்தா, இன்னிக்கு பால பாரதிய பார்சல் கட்டிதான் வெளியே கொண்டு வரணும் போலங்கிற அளவுக்கு ஆயிருச்சு. கதவை திறந்திட்டு வெளியே வந்த டிஆர், "போடுய்யா அவங்க ஆபிசுக்கு போனை" என்றார். நாங்க மெல்ல பஞ்சாயித்திலே என்டர் ஆகி "என்னாச்சுண்ணே?" என்றோம். "இல்லய்யா, சிம்புவை நடிக்க வச்சு அதுல வர்ற வருமானத்திலேதான் நீங்க வாழுறீங்களாமேன்னு கேக்கிறான்யா"ன்னாரு அழாத குறையாக!

பிறகு மெல்ல பால பாரதிய காப்பாற்றி வெளியே கொண்டு வந்து விட்டோம். பாதி கேட் தாண்டுறதுக்குள்ளே திரும்பவும் கூப்பிட்டாரு டிஆர். "தம்பி கோவிச்சுக்காதீங்க. எமோஷனலாயிட்டேன். அப்படியெல்லாம் அண்ணன்கிட்டே கேட்க கூடாது, தெரியுமா?"ன்னு அன்பா தோளிலே கையை போட்டு, ஆறுதலா பேசியும் அனுப்பினாரு. இப்போ கூட டி.ஆர் பிரஸ்மீட்லே பால பாரதியை பேச சொல்லுங்க பார்ப்போம். ம்ஹ¨ம்...!

16 comments:

Anonymous said...

unmaiya sonna etuku tr kovichchukiraru? thalai inta tr payaludaium simbu payaludaum alambal tangala thalai... ivanunga koddam adangura mathiri inta rendu loosu payalukade kathaikalai ethunga thalai... apadiyavatu tirunturanuhala pappom.. loosu payaluha.
epadi thalai inta 2 paradesika kida velai senjinga?
Ellalan

கிரி said...

பாட்ட பற்றி சொல்ல சொன்னதுக்கு இப்படி மொத்தமா டேமேஜ் பண்ணிட்டீங்களே!

கலையரசன் said...

அண்ணே.. இது சரியில்ல, சினேகா போட்டோ போட்டு வேற எதையோ எழுதின உங்கள.. 24 மணிநேரம் பதிவுலகம் பக்கம் பாக்கக்கூடாது! அப்ப பார்த்தா சினேகா பத்திய பதிவோடதான் பாக்கனுமுன்னு ஜொள்ளி கொள்கிறேன்!

(டிஸ்கி: கிளுகிளுபா இருக்கனும்!)

கண்ணா.. said...

//எல்லாமே கிசுகிசு பாணியிலே இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாலைஞ்சு பேருக்கு இது தெரியும்//

இது என்னாங்க கொடுமையா இருக்கு...

இப்பிடியா சுத்தல்ல விடுறது....

யாருங்க அந்த நாலைஞ்சு பேரு..அதையாச்சும் சொல்லுங்க...நாங்க அவிங்ககிட்ட கேட்டுக்கறோம்...

ரொம்ப நல்லவன் said...

சிங்கத்துகிட்டயேவா...
நம்ம டி ஆர் ஒரு டெரருண்ணே..

அன்புச்செல்வன் said...

அண்ணன் டி.ஆருக்கு வந்த கோவத்த அப்படியே பாருங்க:

http://www.youtube.com/watch?v=dy4AzEp6YuY

Anonymous said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

Anonymous said...

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

butterfly Surya said...

ஆர்வ கோளாறினால் வந்த வினை..

அய்யோ பாவம்.

sowri said...

அடக்கம் அமரரில் உய்துவிடும். அடங்காமை ....... இன்னுமா அவுரு உங்ககிட்ட பாடம் கத்துகல.

அமர பாரதி said...

டி.ஆர். பேட்டிகளில் சாமியாடும் வீடியோக்களில் யு.ட்யூபில் பார்த்திருக்கிறேன். அதை பால பாரதியுடம் பொருத்திப் பார்த்த போது வந்த சிரிப்பில் அலுவலகத்தில் சத்தமாகவே சிரித்து விட்டேன். சூப்பர்.

பொன் மாலை பொழுது said...

நல்லாத்தான் மதுர தமிழில் நாலு வூடு கட்டுறீங்க.
நல்ல கூத்துதான். பாவம் அவர்.
மேலும் வரட்டும்.

Joe said...

வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிறதுன்னா இது தானோ?

ஆனானப்பட்ட கரன் தப்பரே நம்ம அம்மையார்கிட்ட நொந்து நூலாப் போனார்லே?

ஆளு யாருன்னு பாத்து பேசணும் நம்ம நாட்டில.

ganeshguruji said...

பெ.கணேஷ்
andanangi sema camedy
kalakkaringa....

ganeshguruji said...

பெ.கணேஷ்
anthananji
kalakkuriga...

உண்மைத்தமிழன் said...

ஆஹா.. சூப்பருங்கண்ணா..!