Sunday, June 14, 2009

சினேகாவின் 'தங்கமான' சிரிப்பு


உழவனா இருந்தாலும் சரி, ஓரடி கூட நகர முடியாத கிழவனா இருந்தாலும் சரி, சினேகாவோட சிரிப்பை 'சிரப்' மாதிரி குடிச்சிட்டு காலந்தள்ளுற ரொம்ப பேரை நானறிவேன். டெவிலுக்கெல்லாம் கோவில் கட்றாய்ங்க, தேவதைக்கு ஒரு செங்கல்லை கூட வைக்க மாட்றாங்களே?ன்னு இவய்ங்க தவிக்கிற தவிப்பு இருக்கே, ரொம்ப பரிதாபம். விட்டா அறநிலைய துறைக்கு ரத்த கையெழுத்து போட்டு மகஜர் அனுப்புவாய்ங்க போலிருக்கு.

பண்ருட்டிய கடக்கும் போதெல்லாம் "சினேகா பொறந்த ஊருடோய்..."னு கூச்சல் போட்டு, பலாப்பழ முள்ளாள இடி வாங்குன இளைஞ்சருங்களுக்கு ஒரு தகவல். பருவ வயசிலே பல ஊரு சுத்துனாலும், இறுதி காலத்திலே இங்கதான் இருக்கணும்ங்கிறதுதான் சினேகாவோட கொள்ளை ஆசையாம். (இனிமே பண்ருட்டியிலே ரியல் எஸ்டேட் தொழில் பிச்சுக்கும்)

சினேகா நடிச்ச ஒரு படத்துக்கு போயிருந்தோம் நாங்க. (.சூ, சக்தி, அம்முலுன்னு...) படத்தோட டைரக்டரு திடீர்னு பக்கத்திலே வந்து, சார் ஏதாவது வேணுமான்னாரு. 'கேண்டீன்லேர்ந்து'ங்கிற வார்த்தைய அவரு சேர்க்காம போனதால வந்த வினை, உற்சாகமாயிட்டாரு .சூ. "சார், கேட்டா கண்டிப்பா கொடுப்பீங்களா?" கேளுங்க சார்.. -இது அவரு! "கோவிச்சுக்க கூடாது" -இது நம்ம ஆளு. சஸ்பென்சை இன்னும் நீடிக்க விடக்கூடாதுன்னு நினைச்ச டைரக்டரு, "சீக்கிரம் சொல்லுங்க. அஞ்சு நிமிஷத்திலே உங்க கையிலே இருக்கும்"னாரு. .சூ.கேட்டாரே ஒரு பரிசு...

"சார், சினேகாவோட முடியிலே ஒண்ணே ஒன்ணு. போதும். நான் பர்சிலே பத்திரமா வச்சுப்பேன்...!" அவ்வளவுதான், இடைவேளையிலே எங்களை பார்த்து பக்குவமா விசாரிச்ச டைரக்டரு, படம் முடிஞ்ச பிறகும் பக்கத்திலேயே வரலே. எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு இருந்திச்சு சினேகாவோட (ஆரம்ப கால) அழகில். ஒரு பிரஸ்மீட்லே இதை அப்படியே போயி ஒரு நிருபர் சினேகாவிடம் சொல்ல, அவங்க வெட்கமா சிரிச்சது இப்பவும் கண்ணுலேயே இருக்கு.

பக்கத்து பக்கத்திலே நின்று பல முறை பார்க்கிற வாய்ப்பு வந்தும், மணிக்கணக்காக ஒரே இடத்திலே இருக்கிற சூழ்நிலை அமைஞ்சும் அவங்களும் பேசாம, நானும் பேசாம போனதுக்கு ஒரு காரணம் இருந்திச்சு. நான் அவங்ககிட்டே எடுத்த ஒரு பேட்டி. விரும்புகிறேன் ரிலீஸ் ஆகாம முடங்கி கிடந்த நேரம். அது அவங்களோட முதல் படம். 'விரும்புகிறேன்' பற்றி பேச போய், நொறுங்குகிறேன்னு ஆயிட்டாங்க.

படத்தின் இயக்குனர் சுசி கணேசன் தனக்கு டார்ச்சர் கொடுத்தாருன்னு ஆரம்பிச்சு ஒரே கம்ப்ளைன்ட் அவரு மேலே. இறுதியா "என்னை கொல பண்ண ட்ரை பண்ணினாரு தெரியுமா?"ன்னு அவங்க சொல்ல, கிடைச்சுதுடா ஒரு கவர் ஸ்டோரின்னு ஜில்லாயிட்டேன். சைலன்ட்டா எழுந்து வந்து சுசிக்கு போன் போட்டு, "சினேகாவை கொல்ல முயற்சி செஞ்சீங்களாமே?"ன்னு கேட்க, முதலாம் பானிப்பட்டு போரை விட மோசமான போர் ஆரம்பம் ஆச்சு. சினேகாவுக்கு போனை போட்டு அவரு திட்ட, "அந்த நியூசை போடாதீங்க சாரு"ன்னு அவங்க என்னை விரட்ட, ஒரே பிடிவாதமா செய்தியை போட்டுட்டுதான் ஓய்ந்தேன்.

'என்னை கொல்ல சதி. டைரக்டர் மீது சினேகா பரபரப்பு குற்றச்சாட்டு'ன்னு போஸ்டர் சென்னையை அலங்கரிக்க, அலங்காநல்லு£ர் காளை போனில் வந்து கொக்கரித்தது. அதுதான் சினேகா கடைசியா என்னோட பேசுனது. அதுக்கு பிறகு ஸ்ரீகாந்த் படங்களின் ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் அவரை பார்ப்பேன். ஏப்ரல் மாதத்தில், போஸ், பார்த்திபன் கனவுன்னு பல படங்களில் சேர்ந்து நடிச்சாங்க. அவரும் என்னை பார்ப்பார். ஆனால் பேசிக் கொண்டதே இல்லை. அவருக்கே தெரியாமல் அவரோட வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன். (இப்போ விரிவா சொல்ல முடியலேன்னாலும், சந்தர்ப்பம் வரும்போது...)

சில மாதங்களுக்கு முன் ஒரு பிரஸ்மீட். சற்று லேட்டாக போனதால் பிரஸ்மீட் முடிந்து அவர் வெளியே வரும்போது நேருக்கு நேர் பார்க்கும்படி ஆனது. "நல்லாயிருக்கீங்களா?" என்றார் அதே பசுமை மாறாத சிரிப்போடு. அந்த சிரிப்பு இருக்கே, அது எதிரியாக இருந்தாலும், ஒரேயடியாக சாய்த்துவிடுகிற 'தங்கமான' சிரிப்பு.

16 comments:

butterfly Surya said...

நீங்க குடைச்சல் கொடுக்காத ஆளே இல்ல போலிருக்கே சார்.

சினேகா புன்னகை 'தங்கமான' சிரிப்பு.

எத்தனை காரட்..?

சரவணகுமரன் said...

//அவருக்கே தெரியாமல் அவரோட வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன். (இப்போ விரிவா சொல்ல முடியலேன்னாலும், சந்தர்ப்பம் வரும்போது...)
//

அத கிளப்பி விட்டது நீங்க தானா? :-))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அது எதிரியாக இருந்தாலும், ஒரேயடியாக சாய்த்துவிடுகிற 'தங்கமான' சிரிப்பு.//

ஓ.கே..,

ஓ.கே..,

Joe said...

//
அவருக்கே தெரியாமல் அவரோட வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன். (இப்போ விரிவா சொல்ல முடியலேன்னாலும், சந்தர்ப்பம் வரும்போது...)
//
இப்படிச் சொல்லியே எல்லாப் பயலுகளையும் தினம் இவரு கடைக்கு வர வைச்சிடுறதே இவருக்கு வேலையாப் போச்சு!

கலக்குங்க தலைவா!

Punnakku Moottai said...

ஐயா தல,

நானும் ஒங்ல மாதிரித் தான். நான் கல்லூரியில் கொடைச்சல் குடுக்காத ஆளே இல்ல. 18 வருஷம் கழிச்சி என் பழைய நண்பர்கள் என்ன பாத்து கேக்கற கேள்வி, "பாவி, இன்னும் நீ திருந்தவே இல்லையா?".

இப்படிக்கு,
S. பாலமுருகன் (நெய்வேலி),
முன்னாள் MSEC, Kilakarai மாணவன் (1987-91)

Punnakku Moottai said...

தல,

சிநேகா படிச்ச ஸ்கூல் நெய்வேலி (Block 29). சொந்த ஊரு வேண்னா பண்ருட்டியா இருக்கலாம். ஆனா, கொஞ்சங் காலம் அவுங்க ஊடு நெய்வேலி பக்கத்துல இருக்கிற 'தீடீர்குப்பம்' தான். என்கிட்ட இன்னும் நிறைய செய்தி இருக்கு அவங்ள பத்தி.

என்ன பண்றது. மேல போன ஓடனே பழசு மறந்து போச்சு. உன்னைச் சொல்லி குத்தமில்லை. காலம் செய்த கோலம்.

இப்படிக்கு,

S.பாலமுருகன்,
முன்னாள் MSEC மாணவன் (19987-91)
இப்போது பஞ்சபரதேசி.
முன்பு நெய்வேலி, இப்போ புவனகிரி.

Bhuvanesh said...

//'தங்கமான' சிரிப்பு..//

யாருப்பா அது ?? நான் கொஞ்சம் உரசிப் பாக்கட்டா னு கேக்கறது ??

வணங்காமுடி...! said...

\\
"அந்த நியூசை போடாதீங்க சாரு"ன்னு அவங்க என்னை விரட்ட, ஒரே பிடிவாதமா செய்தியை போட்டுட்டுதான் ஓய்ந்தேன்
\\
அங்கன தான் நீங்க நிக்குறீங்க தலைவா...

\\அவருக்கே தெரியாமல் அவரோட வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன். (இப்போ விரிவா சொல்ல முடியலேன்னாலும், சந்தர்ப்பம் வரும்போது...)\\

அது என்னான்னு எனக்குத் தெரியுமே... :-)))

ரவிஷா said...

//"அந்த நியூசை போடாதீங்க சாரு"ன்னு அவங்க என்னை விரட்ட, ஒரே பிடிவாதமா செய்தியை போட்டுட்டுதான் ஓய்ந்தேன்.//

நீங்க நல்லவரா கெட்டவரா?

//(இப்போ விரிவா சொல்ல முடியலேன்னாலும், சந்தர்ப்பம் வரும்போது...)//

நீங்கதானே ஷாம்-சினேகாவின் உதடு கடியைப் பத்தி ந்யூஸ் கொடுத்தது?

ganeshguruji said...

"anthananji நல்லாயிருக்கீங்களா?"
(இப்போ விரிவா சொல்ல முடியலேன்னாலும், சந்தர்ப்பம் வரும்போது...)


எப்ப அந்த சந்தர்ப்பம் வரும் ?
pe ganesh.

Anonymous said...

கணே‌ஷ்‌ ஜி‌, வா‌ங்‌க வா‌ங்‌க. பத்‌தி‌ரி‌கை‌யு‌லகி‌ன்‌ பி‌தா‌மகர்‌களா‌ன உங்‌களுக்‌கே‌ நா‌ன்‌ சொ‌ல்‌லப்‌ போ‌றது தெ‌ரி‌யலேன்‌னா‌ எப்‌படி‌? ச்‌சும்‌மா‌ச்‌சுக்‌குதா‌னே‌ கே‌ட்‌டீ‌ங்‌க?

அந்‌தணன்‌

உண்மைத்தமிழன் said...

ஓஹோ.. அந்த பரமாத்மா நீங்கதானா..?

உங்களுக்கே நியாயமா..?

சிரிப்பழகியையே அழுக வைச்சிருக்கீங்களே..

பாவத்துல ஒண்ணு கூடியிருக்கு..

anthanan said...

test

Anonymous said...

test

anthanan said...

;l;slkf;lksf

Anonymous said...

The King Casino - Herzaman in the Aztec City
The King Casino in Aztec City is the place where you https://septcasino.com/review/merit-casino/ can find and play for real, real 출장안마 money. septcasino Enjoy a memorable stay 바카라사이트 at this one-of-a-kind casino herzamanindir.com/