Sunday, June 21, 2009

நிருபரோட மடியும், நடிகையோட இடியும்?


வடக்க சூலம், தெற்க மூலம்னு பேட்டியெடுக்க போம்போதே எச்சரிக்கறதுக்கு ஒரு பொண்டாட்டி இல்லாத பேச்சுலரா இருந்த நேரம்! (அட, நான் இல்லீங்ணா... நம்ப ஃபிரண்டு)

"ஒங்களுக்கு என்னய்யா... ஜாலி? பக்கத்திலே உட்கார்ந்தமா, பல்ல இளிச்சிட்டு கேள்வி கேட்டமான்னுட்டு. எங்க பொழப்புதான் அகோரம்"னு அலுத்துக்கிட்டாரு ஒரு அரசியல் நிருபர். "கொஞ்சம் ஏடாகூடமா எழுதிட்டா கூட வீட்டுக்கு ஆட்டோ வரும் தெரியும்லே?"ன்னாரு. பாவம்தான். இவருக்காவது ஆட்டோ. நம்ம ஃபிரண்டுக்கு என்ன தெரியுமா? பி---ஷ்டம்?! பக்கத்திலேயே வந்து வசமா உட்காந்திட்டாரு அந்த நடிகை. இடுப்பு மட்டுமே இருவது கிலோ இருக்கும் அவருக்கு. அதை நம்ம நிருபரு தொட மேல வச்சு அழுத்திகிட்டு அவரு உட்காரவும், ஏரிக்கர பன மரம் வேறொடு மேலே விழுந்த கதையா, நகரவும் முடியாம, நசுங்கவும் பொறுக்காம தவியா தவிச்சு போயிட்டாரு நம்ம ஆளு. ஃபயர் இன்ஜினுக்கு போன் பண்ணி மீட்க வேண்டிய ஆள, சமர்த்தா பேசி, சாதுர்யமா மீட்டாரு எடிட்டர்.

புலியோட கூண்டுக்குள்ளே எலியாட்டம் போயி மாட்டுன நம்ம நிருபரோட கண்ணீர் கதைதான் இது. அத சொல்றதுக்கு முன்னாடி நடிகை யாருன்னு சொல்லிட்டா, நச்சுன்னு ஃபீல் பண்ணலாமே? "ஏலே லம்பர ஏலே லம்பர.."ன்னு டிஆரால அறிமுகப்படுத்தப்பட்ட கொடியிடை நாயகி நளினிதான் அவர். இப்போ எப்படியிருக்காருன்னு நான் சொல்லணுமா என்ன?

அது ஒரு வார பத்திரிகை. நடிகைகளை பற்றி எழுதும்போது மட்டும் வகை தொகையில்லாம எழுதுவாங்க. ராமராஜனை பிரிஞ்சு தனியா இருக்கிறதால சந்தேக கண்ணோடு பார்த்த எடிட்டர் இவரையும் இன்னொருத்தரையும் சேர்த்து வச்சு எழுதிட்டாரு. நாகரிகமா எழுதினா போனா போவுதுன்னு போற பெரிய மனசுதான் நளினிக்கும். ஆனா, எழுதின விதம் இருக்கே, முற்றும் துறந்த முனிவியா இருந்தாலும், அக்கினியா கொதிக்கிற மாதிரி இருந்திச்சு. புத்தகம் கடைக்கு வந்து அடுத்த வாரத்திலேயே சினிமா நிருபரை கூப்பிட்டு, "கோலங்கள் தேவயானியை ஒரு பேட்டியெடுங்களேன்"னாரு எடிட்டர்.

அட, அடிக்கிற வெயில்ல குளீர்ர்ர்னு பீரு குடிக்கிற மாதிரி அசைன்ட்மென்ட்டா இருக்கே. சரி சரின்னு சொல்லிட்டு சட்டு புட்டுன்னு கிளம்புனாரு நிருபர். ஆபிஸ் சுவத்துல செவனேன்னு ஒட்டிகிட்டு கிடக்குற பல்லிக்கு கூட விஷயம் முன் கூட்டியே தெரிஞ்சுருச்சு போல. மச்சி பத்திரம்ங்கிற மாதிரியே, இச்சு இச்சுன்னுச்சாம். (சகுனத்தை பற்றியும் பின்னாடி நிருபர் நம்மகிட்ட அதிர்ந்துகிட்டாரு)

வளசரவாக்கத்திலே ஒரு பங்களாவிலே ஷ¨ட்டிங். நேரிலே தேவயானியை பார்த்ததும், 'இவங்க தேவயானியில்லே, தேவதைகளுக்கே ராணி'ன்னு மனசுக்குள்ளே குயிலு வந்து ரயிலு ஓட்டுச்சு. பக்கத்திலேயே உட்கார்ந்து குளிர குளிர பேட்டி கொடுத்தாரு தேவயானி. கூடவே தன்னோட வீட்டிலேர்ந்து வந்திருந்த லஞ்ச்சையும் சேர்த்து கொடுத்து, நிருபரோட மனசிலே நிரந்தரமா வூடு கட்டிட்டாரு. கிளம்பும்போதுதான், பஞ்சாங்கத்திலே போட்டிருக்கிற மாதிரி, வடக்கே சூலம்ங்கிறது நிரூபணம் ஆச்சு நிருபருக்கு. "வந்தது வந்தீங்க, அப்படியே நம்ம நளிளியையும் ஒரு பேட்டி எடுத்திட்டு போயிருங்களேன். சந்தோஷப்படுவாங்க"ன்னு தேவ 'ராணி' சொல்ல, ஊ லல்லலலான்னாரு நிருபரு. போன வார கட்டுரையெல்லாம் தேவயானியோட தேன் குரலுக்கு முன்னாடி, மைண்டுக்கு வந்து மணியடிச்சாதானே?

சொன்னதோட விட்றாம கேமிராவுக்கு முன்னாடி நின்னுட்டிருந்த நளினியிடம் கூட்டிட்டு போயி, "உங்களுக்காகதான் வெயிட் பண்ணுறாரு. ஒரு பேட்டி கொடுத்திருங்க"ன்னாரு. நளினியும் சந்தோஷமா மொகத்தை வச்சிகிட்டு, "எந்த பத்திரிகை?"ன்னு கேட்டாரு. இவரு பத்திரிகை பேர சொல்ல, எவ்வித ரீயாக்ஷனும் காட்டாம "வெயிட் பண்ணுங்க. வந்திர்றேன்"னு சொல்லிட்டு ஷாட்ல மூழ்கிட்டாரு. அவசரம் அவசரமா ஷாட்டை முடிச்சிட்டு வந்தவர், "வாங்க உள்ளே போயிரலாம்"னு அழைச்சிட்டு மேக்கப் ரூமுக்கு போயிட்டாரு. அங்கே அவங்க ரெஸ்ட் எடுக்க ஒரு கட்டில் வேற. நிருபரை கட்டிலில் உட்கார சொல்லிட்டு தானும் பக்கத்தில் உட்கார்ந்தார்.

"வாங்க, உட்காருங்க"ன்னு இன்னும் பக்கத்திலே அழைத்தவர், தன்னோட இருவது கிலோ சமாச்சாரத்தை நிருபரு தொடை மேல வச்சு அழுத்திகிட்டே, "எந்த பத்திரிகை?"ன்னாரு இன்னொரு தடவ. லக்கேஜை தெரியாம எறக்கி வச்சிட்டாங்க போலிருக்குன்னு நினைச்சுகிட்டே இவரு வலிய பொறுத்துகிட்டு பத்திரிகை பேரை சொன்னாரு. அவ்வளவுதான்... "போன வாரம் என்னய பத்தி எழுதினவன் எந்த தே....£ ...யன்?" என்று ஆரம்பிச்சாரு நளினி.

அட, ஆமாம்ல... இந்தம்மாவை பற்றி போன வாரம் எழுதிபுட்டாங்களேய்யா. கொஞ்சம் முன்னாடி அது ஞாபகத்துக்கு வந்திருக்கலாமே? வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு சாப்பிட்டாலும், முக்கியமான நேரத்திலே முடக்கத்தான் லேகியத்தை தின்ன மாதிரி ஆயிருதே மூளைக்குன்னு ஒரே வருத்தம் நம்மாளுக்கு. ஆனாலும் சமாளிச்சுக்கிட்டு "எந்த மேட்டரு?"ன்னு இவரு திரும்பி கேட்க, "உன் புக்கை நீயே படிக்கறதில்லையா?"ன்னு ஆரம்பிச்சு, அதுக்கும் சேர்ந்தா மாதிரி அர்ச்சனைய ஆரம்பிச்சிட்டாங்க மேடம்.

"அப்படி ஒரு கட்டுரை வந்ததே எனக்கு தெரியாது. யார் யாரோ வெளியிலேந்து வந்தெல்லாம் எழுதி கொடுக்கிறாங்க. அது மட்டுமில்லீங்க. நான் வேலைக்கு சேர்ந்தே நாலு நாளுதான் ஆவுது"ன்னாரு நிருபர். பொய்யி பொய்யின்னு மனசாட்சி கூவினாலும், அந்த மனசாட்சி மேலயா இந்த இருவது கிலோ வெயிட்டும் எறங்கியிருக்கு? காலு மேல அல்லவா அத்தனை வெயிட்டும் இருக்கு? அப்பவும் ஓடிப் போயிடாம இறுக்கமா புடிச்சுகிட்டு இருந்த நளினி, "ஒங்க எடிட்டருக்கு போனை போடு"ன்னாரு. நல்ல வேளைடா, இதுக்காவது அனுமதி கொடுத்திச்சு. இனிமே எப்பிடியாவது நம்மள காப்பாத்திருவாய்ங்கங்கிற நம்பிக்கையிலே எடிட்டருக்கு போனை போட்ட நிருபரு, "சார். நான் கோலங்கள் ஷ¨ட்டிங்கிலே இருக்கேன். போன வாரம் நம்ம புக்கிலே நளினி மேடத்தை பற்றி நியூசு ஏதோ வந்திருச்சாமே? அவங்க ரொம்ப கோவமா இருக்காங்க. என்னைய ரூமுக்குள்ளே வச்சு பூட்டிட்டு விட மாட்டேங்கிறாங்க. என்ன நடந்ததுன்னு அவங்ககிட்டேயே சொல்லுங்க"ன்னாரு.

குரலை கடுமையா வச்சுகிட்ட எடிட்டர், "மேடம் நீங்க பண்ணுறது சரியில்லே, உங்களுக்கு அந்த மேட்டர்ல எதிர் கருத்து இருந்தா ஆபிசுக்கு நேரா வாங்க. பதில் சொல்றேன். இல்லைன்னா வக்கீல் நோட்டீஸ் அனுப்புங்க. கோர்ட்ல பார்க்கலாம். அதை விட்டுட்டு அப்பாவி பையனை அடைச்சு வச்சிட்டு இம்சை பண்ணினா, சும்மாயிருக்க மாட்டேன். வேற மாதிரி ஆயிரும்"னு பேச, பேச, நிருபர் தொடையிலேர்ந்து வெயிட்டை நகர்த்தி வேற இடத்திலே இறக்கி வச்சாங்க நளினி. 'அப்பா, தொட தப்பியது, தொம்பிரான் புண்ணியம்'னு எழுந்து நின்னுகிட்டாரு நிருபர். (உட்காந்தாதானே திரும்ப வப்பே?)

"சரி, நீங்க போகலாம்"னு நளினி உத்தரவு கொடுக்க, பாய்ந்தடித்து வெளியே ஓடி வந்தார் நிருபர். வாசலில் நின்று கொண்டிருந்த தேவயானி, "பேட்டி முடிஞ்சுருச்சா?"ன்னு சிரிச்சிகிட்டே கேட்க, "செம வெயிட்டான பேட்டிங்க"ன்னாரு நிருபர்.

அந்த வெயிட் என்ன வெயிட்டுன்னு தேவயானிக்கு சொல்லாமலா இருந்திருப்பாங்க நளினி?

18 comments:

ரொம்ப நல்லவன் said...

பலரும் சொல்ற மாதிரி
மீ த பர்ஸ்டு..


மீண்டும் வரேன்.

ரொம்ப நல்லவன் said...

>>ஏரிக்கர பன மரம் வேறொடு மேலே விழுந்த கதையா
நல்லவேளை.. வேற என்னமோ சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்..

>>"உன் புக்கை நீயே படிக்கறதில்லையா?"
இந்த மாதிரி மேட்டர் வேற இருக்காண்ணா?

>>தொட தப்பியது, தொம்பிரான் புண்ணியம்'னு
வழக்கம்போலவே கலக்கிட்டீங்க தல..

butterfly Surya said...

அடடா, சிரிச்சு ரொம்ப நாளாச்சு.

இதென்ன.. வீட்கெண்ட் ஸ்பெஷலா... ஆனா வீக்கா இல்லாம வெயிட்டாதான் இருக்கு..

அமர்க்களம்.

வழக்கம் போல் கலக்கல்.

Suresh said...

உண்மை சம்பவத்தை அதுவும் வேதனையை அழகான நகைச்சுவையாய் சொல்லி கலக்கிட்டிங்க நண்பா :-)

Suresh said...

20 கி தாஜ் மகால் என்றால் என்ன ? அந்த நிருபர்க்கிட்ட கேட்டு சொல்லுங்க ;)

Anonymous said...

தமிழிஷ் ஓட்டு பட்டனை இங்கேயே சேர்த்துடுங்களேன். நான் ஓட்டு போடனும்னா தமிழிஷ் போய் தேடனும். நேரம் இல்லை. அதனால் ஒரு ஓட்டு நஷ்டம் உங்களுக்கு.

வலைஞன் said...

ɐƃuǝǝʇʇnuuoʞ

சப்ராஸ் அபூ பக்கர் said...

////அந்த வெயிட் என்ன வெயிட்டுன்னு தேவயானிக்கு சொல்லாமலா இருந்திருப்பாங்க நளினி?///

அதானே..... (சின்ன புள்ள தனமா இல்ல????)

தொடருங்கள் உங்கள் பயணத்தை....

நம்ம காட்டுலயும் மழை கொட்ட ஆரம்பிச்சிடுச்சீங்கோ.......

உண்மைத்தமிழன் said...

அடடாடா..

நிருபர் வேலைல இப்படியெல்லாம் இம்சை வேற கிடைக்குமா..?

இனி அது மாதிரி எழுதமாட்டாருல்ல உங்க பிரெண்ட்டு..?

Anonymous said...

அபூ‌ பக்‌கர்‌,

இலங்‌கை‌ வா‌னொ‌லி‌ நி‌லை‌யத்‌தி‌ன்‌ அறி‌வி‌ப்‌பா‌ளர்‌களை‌ மறக்‌க முடி‌யு‌மா‌? அன்‌பு‌ அறி‌வி‌ப்‌பா‌ளர்‌ பி‌.எச்‌. அப்‌துல்‌ ஹமீது, கே‌.எஸ்‌.ரா‌ஜா‌வி‌ன்‌ குரல்‌கள்‌ எல்‌லா‌ம்‌ கா‌துகளி‌ல்‌ இன்‌னும்‌ ரீ‌ங்‌கா‌ரமி‌ட்‌டுக்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌ன்‌றன. நீ‌ங்‌கள்‌ இலங்‌கை‌யை‌ சே‌ர்‌ந்‌தவர்‌. வெ‌ளி‌நா‌ட்‌டு வா‌னொ‌லி‌யி‌ல்‌ அறி‌வி‌ப்‌பா‌ளரா‌க இருக்கி‌றீ‌ர்‌கள்‌ என்‌றதும்‌ எனக்‌கும்‌ அவர்‌கள்‌ நி‌னை‌வு‌ வந்‌தது. அவர்‌களை‌ போ‌லவே‌ பு‌கழடை‌ய உங்‌களை‌ வா‌ழ்‌த்‌துகி‌றே‌ன்‌.

அந்‌தணன்‌

anthanan said...
This comment has been removed by the author.
anthanan said...

test

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
anthanan said...

ok

கலையரசன் said...

வழக்கம்போல நாட் அவுட் பதிவு.. சும்மா பின்றீங்கண்ணே!

//vavavavava//

யாரை பின்னூட்டத்துல, வா வா ன்னு கூப்புடுறீங்க பாஸூ?

அப்புறம் அண்ணே!, நீலமும்.. ஆரஞ்சு காம்பினேசன் டெம்பிளேட்
நல்லாயில்லண்ணே! ஏதோ, என் மனசுலபட்டத சொன்னேன்...
மாத்தினா சந்தோஷம்.. இல்லனாலும் சந்தோஷம்!

வால்பையன் said...

ஹா ஹா ஹா

நல்ல காமெடி தல!

sowri said...

//வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு சாப்பிட்டாலும், முக்கியமான நேரத்திலே முடக்கத்தான் லேகியத்தை தின்ன மாதிரி ஆயிருதே மூளைக்குன்னு ஒரே வருத்தம் நம்மாளுக்கு.//

:)