Wednesday, June 17, 2009

நடிகை வீட்டு போன்...?


"எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி, டிசைன் பண்ணி, போட்டோவெல்லாம் வச்சு புத்தகமா உருவாக்கி கடையிலே போட்டா எவன் வாங்குறான்? ஒண்ணுமே எழுதாம வெள்ளையா அரை குயர் நோட்டுன்னு கொடுக்கிறாய்ங்க, சொன்ன விலைக்கு வாங்கிட்டு போறானுங்களே..? அதுதான் ஆதங்கமா இருக்கு!" -சர்குலேஷன் சரியா இல்லேன்னு வருத்தப்பட்ட ஒரு சிறு பத்திரிகை ஓனரிடம் இப்படி சொல்லி அடிவாங்காம தப்பிச்சேன்னு வச்சுக்கோங்க! அப்படி ஒரு வாயி நமக்கு.

இப்பல்லாம் சினிமா டைரின்னு ஒரு புது ஸ்டைல் வந்திருச்சு கோடம்பாக்கத்திலே. நடிகர் நடிகைகளோட அட்ரஸ், அவங்க போட்டோன்னு கலக்கலா இருக்கும். முதல் பக்கத்தை விரிச்சா ரஜினியிலே ஆரம்பிக்கும். அப்படியே சீனியாரிடிபடி போயிட்டே இருக்கும். கொஞ்சம் நடுவாப்லே போயி பார்த்தாதான் தெரியும், பக்கெட் பக்கெட்டா ஒரே டிக்கெட்டுகளா(?) இருக்கும்! ஹ¨ம், இதெல்லாம் கலை சேவையா பண்ண வருதுங்க? நமக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் புதுசா வாடகைக்கு குடி போனாரு ஒரு வீட்டுக்கு. அதுக்கு முன்னாடி இந்த வீட்டிலே டிக்கெட்டு ஒண்ணு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும் போல. போயி கொஞ்ச நாளுக்குள்ளே அர்த்த ராத்திரியிலே கதவை தட்டி, "அதுக்குள்ளே து£ங்கிட்டியா?"ன்னு கேட்டிருக்காய்ங்க இவர. அட பாவி மக்கா, என் வீட்டிலே வந்து எவன் எவனோ கேக்க கூடாத சங்கதியெல்லாம் கேக்குறாய்ங்களேன்னு பயந்து போயி, ஒரே மாசத்திலே வீட்டை காலி பண்ணிட்டாரு.

சமயத்துல பழைய போன் நம்பருக்கு பணத்தை கட்டாம விட்டுருவாய்ங்க. அந்த நம்பர் எங்கெங்கோ மாறி நம்ம வீட்டுக்கோ, அல்லது நம்ம ஃபிரண்டு வீட்டுக்கோ வந்து சேரும். காலப்போக்குலே நமக்கு வந்து சேர்ற இந்த நம்பர் இருக்கே, சில நேரத்திலே வயித்து போக்குலே கொண்டு போய் விட்ரும். பிஎஸ்என்எல் கனெக்ஷன்ல பி ஃபார் பினாயில், என் ஃபார் நாத்தம்னு வெடிச்சாரு நண்பரு ஒருத்தர். (ஒன்னோட ஃபிரண்டு முழுக்க இப்படி சபிக்கப்பட்டவய்ங்களான்னு கேட்டுறாதீங்க மக்களே, விதி. வேறென்னுமில்லே) இவருக்கு கிடைச்ச நம்பரு, இதயம் நல்லெண்ணை விளம்பரத்திலே வருவாங்களே, சித்ரா. அவங்களோட பழைய நம்பரு. ஒருநாளு வீட்டுக்கு போனா, வாசலிலே துண்டு துண்டா கெடக்குது ரிசீவரு. என்னய்யா?ன்னு கேட்டா, "நேத்து ராத்திரி செம கோவம் வந்திருச்சு"ன்னாரு.

நான் சொல்லப்போற இன்னொரு ஃபிரண்டு நிஜமாவே சபிக்கப்பட்டவருதான். வையாபுரிய பேட்டியெடுத்தாலே, "விஷயம் தெரியுமா மாப்ளே, வைஸ் நேத்து போன் பண்ணுச்சு. நீங்க நம்மளோட வந்து ஒரு வா(ய்) சாப்டுதான் போவணும்னு ஒரே அடம்"னு சந்தோஷப்படுவாரு. மொக்கை பிளேடுக்கே இப்படி கெக்கே புக்கேன்னு சந்தோஷப்படுறாரே, சக்கை ஃபிகரு போன் பண்ணினா என்னாவாருன்னு நெனச்சுப்பேன். திராட்சை நழுவி தேன்ல விழுந்து, அதையெடுத்து சிலுக்கு ஊட்டுனா மாதிரி சந்தோஷப்பட்டாரு ஒரு நாளு. வேறொன்னுமில்லே, கவர்ச்சி நடிகை விசித்ராவை பேட்டியெடுக்க போனாராம். "உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்களே எனக்கு மேனேஜரா இருங்களேன்"னு கேட்டுருக்கு. பசுந்தாள் உரத்தை பரவலா அடிச்சா, சும்மா சிலுத்துக்கிட்டு நிக்குமே பயிரு, அப்படி சிலுத்துகிட்டு நின்னுது அவரோட உசிரு. (நாகரீகம்?)

காலையிலே ஆபிஸ்லே போயி கையெழுத்து போட்டா, அப்படியே அசைன்ட்மென்டுன்னு போயிருவாரு குலதெய்வம் சன்னதிக்கு. வளர்ச்சி பணிகள், ஐந்தாண்டு திட்டம்னு ஒரே வகுத்தல், பெருக்கல் சமாச்சாரங்களா விவாதிப்பாங்க ரெணடு பேரும். எல்லாம் எத்தனை நாளைக்கு? ஒரே வாரம்தான். "அட, போங்க சார்... மானத்திலே சாணத்தை அடிச்சுப்புட்டாய்ங்க"ன்னு பதறியடிச்சுட்டு ஓடிவந்தார் ஒருநாளு. என்னாச்சு? என்னாச்சு?

ஒன்னுமில்லே, அவங்களை ஏதோ கடை திறப்பு விழாவுக்கு கூப்பிட்டிருக்காய்ங்க. வாங்களேன் போயிட்டு வந்திரலாம்னு நம்ம நண்பரையும் வெளியூருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க விசி. இந்த சேவைக்கு கடைக்காரங்க கொடுத்த தொகை பத்தாயிரம் ரூபாய். கூடவே போனவரை, இவருதான் மேனேஜருன்னு அறிமுகப்படுத்தியிருக்கு விசித்ரா. விழா களேபரத்திலே இருக்கும்போது, ஊரு பெரிய மனுஷன் ஒருத்தரு வந்து, "தம்பி... நம்ம பேரு?"ன்னு அன்பா விசாரிச்சிருக்காரு. இவரும் பேர சொல்லிட்டு பேச ஆரம்பிக்க, அவரு சில சந்தேகங்களை கேட்டிருக்காரு. அதுக்கு வெள்ளந்தியா இவரு பதில் சொன்னதுதான் சிக்கலுக்கு காரணம்.

"தம்பி, பொண்ணு எவ்ளோ வாங்குது?"ன்னு அவரு கேட்டாராம். நம்மாளு விவரம் புரியாம, ஏதோ கடை திறப்பு விழாவுக்கு வர எவ்ளோன்னு கேட்கிறாரு போலிருக்குன்னு நினைச்சுகிட்டு, "பத்தாயிரம்"னு சொல்லியிருக்காரு. "ரொம்ப சீப்பா இருக்கே?"ன்னிருக்காரு பெரிசு. ஃபிரண்டு சும்மா இல்லாம, "அவங்க ரொம்ப ஆசைப்படுற டைப் இல்லே"ன்னு சர்டிபிகேட் கொடுத்திருக்காரு. இப்படியே பேசிட்டே வந்த பெரிசு, "ரூம் நம்ம போட்டுக்கணுமா, அந்த பத்தாயிரத்திலேயே வந்திருமா?"ன்னு கேட்க, அப்பதான் புரிஞ்சிருக்கு. "அட கருமம் புடிச்சவய்ங்களா? டபுள் எம்.ஏ படிக்கணும்னு ஆசப்பட்டவன்டா நான். படிக்காமலேயே சர்டிபிகேட் வாங்க வச்சிட்டீங்களேடா"ன்னு கோ கொலேன்னு மூக்கை சிந்திட்டு, பஸ் ஏறிட்டாரு.

வாங்க கார்லேயே போகலாம்னு 'விதி'த்திரா கூப்பிட, "பக்கத்து ஊர்லே சித்தி இருக்காங்க. பார்த்திட்டு வர்றேன்"னு கிளம்புனாராம். நேரா ரூம்லேதான் வந்து விழுந்தாரு. இப்போ கூட விசித்ராவோட படம் டி.வி ல வந்தா முதல்ல ரிமோட்ட எடுத்து ஆஃப் பண்ணிடுறாராம். "ஏண்ணே அப்படி கோவப்படுறாரு?"ன்னு அவரு பொண்டாட்டி கேக்குது. நான் என்னன்னு சொல்றது?

பின்குறிப்பு- அந்த சினிமா டைரிய வாங்கி அனுப்பு. டாலர்லே பணம் அனுப்புறேன்னு மட்டும் பின்னு£ட்டம் போட்றாதீங்க சனங்களா... நல்லாயிருப்பீங்க!

18 comments:

Unknown said...

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக மீ த ஃபர்ஸ்ட்..

Nice post as usual.. U rock andhanan..

butterfly Surya said...

அந்த சினிமா டைரிய வாங்கி அனுப்பு. டாலர்லே பணம் அனுப்புறேன்னு மட்டும் பின்னு£ட்டம் போட்றாதீங்க சனங்களா... நல்லாயிருப்பீங்க! ///

தொடர்ந்து பின்னூட்டம் போடு பவர்களுக்கு தீபாவளி பரிசாக அண்ணன் அந்தணன் இலவசமாக அனுப்பி வைப்பார்.

Bala said...

thalai unga pathivukkaha tavamaha kidakurom. en thalai ithanai nal late. per day 2 o 3 times open pani pakuren. update ahute illaiye.
pls thalai daily pathivu podunga.

Anonymous said...

sir super,
Dollor venatti, eurolayo or rupees layo vangikonga, enaku mattum atha anuppi vachirunka...

Anonymous said...

தேவஜாணி பத்தி எஅதும் நியூஸ் போதுபா plz

Anonymous said...

énunga anthanru namma abi devayani pathi oru news m umda illyijaaaaaa iruntha sollalaam illea...

devayani rasikr mandam

RRSLM said...

நேர உங்க சுவிஸ் அக்கௌன்ட்-ல போடறேன் தல...அனுப்பவெல்லாம் வேண்டம் நானே நேர்ல வந்து வங்கிகிறேன் தல...

நா.இரமேஷ் குமார் said...

வண்ணத்துபூச்சியார் said...
அந்த சினிமா டைரிய வாங்கி அனுப்பு. டாலர்லே பணம் அனுப்புறேன்னு மட்டும் பின்னு£ட்டம் போட்றாதீங்க சனங்களா... நல்லாயிருப்பீங்க! ///

//தொடர்ந்து பின்னூட்டம் போடு பவர்களுக்கு தீபாவளி பரிசாக அண்ணன் அந்தணன் இலவசமாக அனுப்பி வைப்பார்.//

''சினிமா டைரியைன்னு தெளிவா சொல்லுங்க!''

butterfly Surya said...

ரமேஷ்,

சினிமா டைரி தான்னு நினைச்சேன். தீபாவளிக்கு இலவச இணைப்பு ஏதும் உண்டா..??

கலையரசன் said...

//திராட்சை நழுவி தேன்ல விழுந்து, அதையெடுத்து சிலுக்கு
ஊட்டுனா மாதிரி சந்தோஷப்பட்டாரு ஒரு நாளு//

ஆகா.. எப்புடிண்ணே இதெல்லாம்? நானும் இப்புடி
எழுதுனுமுன்னு சிரசாசனம் போட்டு, சிரச்சிகிட்டே
யோசிச்சாலும் வரமாட்டேங்குது...

ரஜினி, நல்லவரா? கெட்டவரா? பதிவுக்கு அப்புறம்..
இப்பதான் பேக் டு பெவிலியன் மாதிரி,
பழைய ஸ்டைலுல அடிச்சு பின்றீங்க..

அந்தணன் என்பவர் அறவோர் என்கிறது தமிழ்நீதி!
அந்தணன் என்பவர் அடிச்சுஆடுபவர் என்பேன் நான்!!

Gokul said...

அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து படித்து மகிழ்ந்த நான் உங்களின் 100 வது follower...

உங்களின் எழுத்து நடை மிக அருமை..’அடிக்கடி’ பதிவு போடுங்கள்...ரொம்ப காக்க வைக்காதீர்கள் உங்கள் ஆட்களை...

நா.இரமேஷ் குமார் said...

வண்ணத்துபூச்சியார் said...
ரமேஷ்,

சினிமா டைரி தான்னு நினைச்சேன். தீபாவளிக்கு இலவச இணைப்பு ஏதும் உண்டா..??

பதிவர்களை மகிழ்விக்க தீபாவளிக்கு அந்தணன் மிக பிரமாதமான பதிவை ரெடி செய்து வைத்திருக்கிறார். (அண்ணே நீங்க பத்திரிக்கை ஆரம்பிக்கிறத நான் சொல்லவே மாட்டேன்)

நா.இரமேஷ் குமார் said...

பி.கு. : தீபாவளிக்குள்ள நீங்களும் 'அந்த" நடிகையும் காதலிச்ச‌ கதைகளைச் சொன்னாலும் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை.(பின்னூட்டமிடுபவர்களின் சார்பாக ஒரு கோரிக்கை. வேறு எந்த உள்குத்தும் இல்லை.)
இதுக்காக நேர்ல பார்க்கும் போதெல்லாம் துரத்தி துரத்தி அடிக்க கூடாது.

Anonymous said...

பா‌ரதம்‌ போ‌ற்‌றுகி‌ற நி‌ருபரா‌ வருவீ‌ங்‌கன்‌னு நி‌னை‌ச்‌சா‌ இப்‌படி‌ நா‌ரதர்‌ போ‌ற்‌றுகி‌ற நி‌ருபரா‌யி‌ட்‌டீ‌ங்‌களே‌ ரமே‌ஷ்‌? நமக்‌கெ‌துக்‌கு நீ‌ங்‌க சொ‌ல்‌ற தீ‌பா‌ வலி‌?

அந்‌தணன்‌

Joe said...

சரியான நகைச்சுவை.

விசித்திரா வெளிப்படையாகவே "அதை" செய்வதாக ஒப்புக் கொண்ட ஒரு நடிகை என்பது அறியாத வெகுளியா அவர்? ஹைய்யோ, ஐயோ!

உண்மைத்தமிழன் said...

[[[Joe said...
சரியான நகைச்சுவை. விசித்திரா வெளிப்படையாகவே "அதை" செய்வதாக ஒப்புக் கொண்ட ஒரு நடிகை என்பது அறியாத வெகுளியா அவர்..? ஹைய்யோ, ஐயோ!]]]

இது எப்ப எனக்குத் தெரியாதே..!

பாலா said...

ஹ்ம்ம்... இந்த மேட்டர் எல்லாம்.. ‘கல்யாணம்’ ஆன பின்னாடிதான் தெரியனுமா???

நான் கொடுத்து வச்சது அவ்ளோதான்..!!! :)

இந்தியா வரும்போது.. பூச்சி அண்ணன் கிட்ட இருந்து அந்த புத்தகத்தை வாங்கிக்கிறேன் தல.!! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க.

butterfly Surya said...

பாலா, கண்டிப்பாக அண்ணன் பெரிய மனசு உள்ளவர்தான்.

கவலை வேண்டாம்.