Sunday, May 3, 2009

நடிகை ஸ்ரேயாவும், ஒரு அரவாணியும்?


கிரிக்கெட்ட பத்தி பேச்செடுத்தாலே தறிக்கெட்டு ஓடுற ஆளு நானு! என்னைய கூட்டிகிட்டு போனாங்க கிரிக்கெட் கிரவுண்டுக்கு. (ச்சும்மா வேடிக்கை பார்க்கதான்!) அதுவும் சேப்பாக்கம் கிரவுண்டோ, மடிப்பாக்கம் கிரவுண்டோ இல்லே, துபாய்லே இருக்கே ஷார்ஜா கிரவுண்டு.... அங்கே! டிக்கெட் உபயம் நடிகர் ஸ்ரீகாந்த் (மறக்கலே சாரு)

தெலுங்கு நடிகர்களும், தமிழ் நடிகர்களும் ஆடிய கிரிக்கெட் மேட்ச் அது. சென்னை மேட்ச்சை தொடர்ந்து துபாயில் ஆடுவதற்காக கிளம்பியது டீம். 'லேஸ்' கட்டறதையே கூட 'லேசி'யா நினைக்கிற என்னை பிளைட்டில் 'சீட் பெல்ட்' கட்ட வச்சுது எமிரேட்ஸ். உசரத்திலேயிருந்து சிட்டிய பார்க்கிறது சிலாகிப்புதான் என்றாலும், சைடிலே ஓடுற மரங்களும், ஜன்னல் வழியா அடிக்கிற காத்தும் இல்லாத பயணம், சுத்த போர்!

ஷார்ஜா கிரவுண்டில் எல்லா நடிகர்களும் பிராக்டீஸ் பண்ணிக் கொண்டிருக்க, பந்து வாயில் விழுகிற மாதிரி 'ஆ' வென்று கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன் நான். விஷால், சிம்பு, ஜீவா, ஆர்யான்னு எல்லாருமே அசிரத்தையாகவே ஆடிக் கொண்டிருந்தார்கள். (பயணக் களைப்பு?)

அடுத்த நாள்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. டே நைட் மேட்ச் என்பதால் காலை பதினொரு மணிக்கெல்லாம் கிரவுண்டுக்கு போய்விட்டோம். ரெஸ்ட் ரூமிற்குள் போனால்... அட, நம்ம ஸ்ரேயா! கூடவே அவங்க அம்மா(ன்னுதான் சொன்னாங்க) நம்ம ஹேண்ட் பேக்குதானேங்கிற மாதிரியே தன்னோட பொண்ணையும், 'ஓரமா வெச்சுட்டு' அந்தம்மா எங்கேயோ வேடிக்கை பார்த்திட்டு இருந்திச்சு. விட்டால் ஸ்ரேயாவின் பேண்ட் பாக்கெட்ல நுழைஞ்சு உட்கார்ந்திருவானோ என்ற அச்சத்தை தருகிற மாதிரி நெருக்கமாக உட்கார்ந்திருந்தான் ஒரு இளைஞன். அவன் தனது கையை எடுத்து நெஞ்சுக்கு பக்கத்திலே ஒர்ர்ர்ரு மாதிரி வச்சுகிட்டு அபிநயம் பிடிக்க, (அவன் நெஞ்சுக்கு பக்கத்திலேதான்) அதே மாதிரியே ஸ்ரேயாவும் செஞ்சார். அப்படியே விழிகளை கேணத்தனமா வளைச்சு வேறொரு முத்திரை காட்டினான் அவன். உட்கார்ந்தபடியே அந்த முத்திரையை அப்படியே செஞ்சுச்சு ஸ்ரேயா.

அது ரெஸ்ட் ரூம்ங்கிறதால நடிகர்கள் தங்களோட டிரஸ்சை மாற்றி கிரிக்கெட் பிளேயர்ஸ் டிரஸ்சை போட்டுக்கறதும், 'பேடு' கட்டுவதுமாக இருந்தாங்க. இந்த களேபரத்திலே ஓரமா உட்காந்திருந்த இந்த ஜோடி செய்யுற அழிச்சாட்டியத்தை யாருமே கண்டுக்கலே. ஆனா, என் கண்ணு அந்த இடத்தை விட்டு எங்கேயுமே போகலே. என்னதாண்டா நடக்குது அங்கே?ன்னு பெரும் குழப்பம் எனக்கு. மெல்ல எழுந்து அவங்களுக்கு அருகிலே போனேன். அதே சமயம், அவங்க 'நோட்' பண்ணாத டிஸ்டென்சில் உட்காந்தேன்.

இப்போதான் அவன நல்லா வாட்ச் பண்ண முடிஞ்சுது. நெற்றி புருவத்தை லேடீசெல்லாம் என்னவோ பண்ணுவாங்களே, ஆங்... ட்ரிம்? அத பண்ணியிருந்தான். உதட்டிலே லேசா லிப்ஸ்ட்டிக். சதா படபடன்னு அடிச்சிக்கிற கண்ணு. டக்குன்னு புரிஞ்சு போச்சு எனக்கு. அவனா நீயி...? (அதனாலதான் தாய்குலம் 'கேர் டேக்' பண்ணாம டேக் இட் ஈஸியாயிருச்சு போல) ஆஹா, பொண்ணு போற ரூட்டு சரியில்லேயே... சொக்கா போன போட்டு ஊருக்கு சொல்டான்னு உள் மனசு துடிக்க, துடிக்கிற மனச ஒரே 'அமுக்!' வெயிட் பண்ணி வேடிக்கைய கவனிடான்னுச்சு புத்தி.

மொழிய ஒளிச்சி வச்சுட்டு விழியாலே விளையாடிகிட்டாங்க ரெண்டு பேரும். அப்படியே டக்குன்னு உதட்டை மடக்கி, நுனி நாக்கை கடிச்சு என்னென்னவோ செஞ்சான் அவன்(ள்) அதையே திருப்பி செஞ்சுது ஸ்ரேயா. இந்த குறும்படம் சுமார் இருபது நிமிசம் இப்படியே ஓட, இப்போ திடீர்னு எழுந்து ஒரு ஸ்டெப் சொல்லிக் கொடுத்தான் அவன்(ள்) அட, 'சுமார் புத்தி' சுந்தரா. அது டான்ஸ் மாஸ்டர்டா. பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்குதுன்னு அப்புறம்தான் உறைச்சுது எனக்கு. மேற்படி பார்ட்டி யாரோ தெலுங்கு டான்ஸ் மாஸ்டரோட அஸிஸ்டென்ட்டா இருக்கணும். டைம் வேஸ்டாதானே போகுது. போற இடத்திலே டான்ஸ் சொல்லிக் கொடுன்னு அனுப்பியிருக்கணும். வந்த இடத்திலேதான் இப்படி. (என்னாவொரு டெடிக்கேஷன்?) அதுக்கு பிறகும் அதை வேடிக்கை பார்க்க மனசு வருமா என்ன?

ஆனால் அந்த கிரிக்கெட் கிரவுண்டில் ஸ்ரேயா ஒரு ரவுண்டு வந்திச்சு பாருங்க. ஒரே அமர்க்களம்! அதைவிட ஒரு பெரிய அமர்க்களம் கொஞ்ச நேரத்திலே நடந்திச்சு. நடத்தியவர் சிம்பு. அதை அடுத்த பதிவில் சொல்லட்டுமா?

10 comments:

ஜியா said...

தானைத் தலைவி ஸ்ரேயாவப் பத்தித் தப்பா சொல்லப் போறீங்களோன்னு ஒக்க செகண்ட் தப்பா நெனச்சிப் போட்டேன்.... அடுத்தப் பதிவு எப்போ?

Sridhar said...

என்ன ஒரு தொழில்பக்தி உங்களுக்கு. ஸ்ரேயாவை ரசித்தத கூட வேற மாதிரி சொல்றீங்களே. இவ்வளவு நல்லவரா நீங்க.

anthanan said...

ரொம்ம்ம்ம்ம்ப சீக்கிரம் ஜி அண்ணாத்த...

கடந்த சில பதிவுகளுக்கு முன் வந்த ஷமீதா பதிவிற்கு பின்னு£ட்டம் போட்ட கே.ஆர் குமார் (சிங்கப்பூர்) அண்ணாச்சிக்கு ஸ்பெஷல் வணக்கம். ஏன்னா எனக்கும் உங்க மாயூரம்தான் சொந்த ஊரு சாரே...

அந்தணன்

anthanan said...

ஸ்ரீதர் சார்,

ஸ்ரேயா பக்கத்திலே இருந்தா பக் பக்! ஆனா உங்க ஜமாவுல இருந்தா கிக்!! என்ன சரிதானே?

அந்தணன்

butterfly Surya said...

பக் பக்... பண்ணுவீங்களா... ஒ.. அந்த வலை நியாபகம்...

கலக்கிபுட்டேள்...

Anonymous said...

//அதைவிட ஒரு பெரிய அமர்க்களம் கொஞ்ச நேரத்திலே நடந்திச்சு. நடத்தியவர் சிம்பு. அதை அடுத்த பதிவில் சொல்லட்டுமா?//

parayu saare! ;-)

பிரபாகர் said...

Sreya-ve appadiththan irukku andhanan...

Prabhagar...

Prabhu said...

ச்சசச....என்னவோன்னு நெனச்சிட்டேன்....

Joe said...

ரெஸ்ட் ரூம் என்பதற்கு கழிப்பறை என்பது தானே அர்த்தம்?
நீங்கள் சொல்வது டிரெஸ்ஸிங் ரூம் என்று நினைக்கிறேன்.

(டேய்... ஆரம்பிச்சிட்டியா? உன்னோட தப்பு கண்டுபுடிக்கிற வேலைய?)

Tiffany said...

பக் பக்... பண்ணுவீங்களா... ஒ.. அந்த வலை நியாபகம்... கலக்கிபுட்டேள்...