Tuesday, May 12, 2009

டிஆரும், மன்சூரும்.... எலக்ஷன் 'சிரிப்பு'க் கட்டுரை


நெட்டையனும், குட்டையனும் நீராட போனாங்களாம்! குட்டையனுக்கு அலையிலே கண்டம். நெட்டையனுக்கு 'நீரே' கண்டம். வெளங்கிரும்டா கூட்டணின்னு பாலமன் ஆப்பைய்யா சொல்ல, பக்கத்திலே இருந்து 'கெக்கேபிக்கேன்'னு சிரிச்சான் தமிழன். ஆப்பையா சொன்னது எத பத்தி? மன்சூரும், டிஆரும் ஒண்ணா கூட்டணி வச்சாங்களே அத பத்தி!

ராகு கால நேரத்திலே ரூமை சாத்திட்டு , லைட்டையும் ஆஃப் பண்ணிட்டு இருட்டிலே யாருகிட்டேயும் பேசாம உட்கார்ந்திருப்பாரு டி.ஆர். லைட் எறிஞ்சா உள்ளே ஆளு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு கஷ்ட காலம் உள்ளே வந்திருமாம்! அதுக்காகதான் இந்த லைட்ஸ் ஆஃப்!

"லைட்ஸ் ஆன்..."னு கம்பீரமா குரல் கொடுக்கிற ஒரு டைரக்டர் ராவு காலத்துக்கு பயந்து இப்படி 'ஆஃப் காலமா' இருக்கறது எனக்கே பொறுக்காம "¬ட்டை ஆஃப் பண்ணிட்டு இருட்லே உட்கார்ந்தா எல்லாம் சரியாயிடுமா, அது எப்பிடிண்ணே...?"னு கேட்டேன். (இதான் மேண்டிலான்னு செந்தில் கேப்பாரே அப்பிடி) "சார்... எம்.ஏ படிச்சவங்கிற முறையிலேயும், சோதிடத்தை ஆராய்ச்சி பண்றவங்கிற முறையிலேயும் சொல்றேன்" (இந்த இரண்டு முறையிலேயும் இல்லாம சும்மா சொன்னாலே என் காதுல விழும்னு சொல்ல ஆசதான். ஆனாலும் ஆங்...னு கேட்டுகிட்டேன்) "ராவு காலம் ரொம்ப மோசமானது சார். அந்த நேரத்திலே என்ன பண்ணாலும் தப்பாயிரும். சிந்திச்சா கூட ஆபத்து"ன்னாரு. ஆழ்ந்து து£ங்கிற நேரத்தை தவிர, மற்ற நேரங்கள்ல சிந்திக்காம ஒரு மனுசனால எப்பிடி இருக்க முடியும்? இந்த சந்தேகத்தை அவருட்டேந்து வேலையை விட்டு நிக்கிற அன்னிக்காவது கேட்கணும்னு நினைச்சேன். முதுகு தோலு முக்கியம்ங்கறதால இந்த நிமிசம் வரைக்கும் மூச்! வேற யாராவது தலைவன எங்கியாவது பார்த்தா என் சார்பா மறக்காம கேட்ருங்கப்பு.

இப்பிடியாப்பட்ட டிஆரு, தான் நடிக்கும் பட பூஜைக்கு பூனைய குறுக்கே விட்ட மன்சூரோட கூட்டணி சேர்றாருன்னா எவ்வளவு பெரிய பின் விளைவுகள் ஏற்படும்னு நினைச்சாலே ஈரக்கொல நடுங்குது. மாருக்குள்ளே சடுகுடுங்குது. இவங்க ரெண்டு பேரும் ஒரே மேடையிலே ஏறி பிரச்சாரம் பண்ணினா எப்பிடியிருக்கும்? "ராவு காலம் போகட்டும்"னு அவரும், "லைட்டை கொளுத்தி வச்சா 'ராவு' போயி வெளிச்சம் வருமே?"ன்னு இவரும் குதர்க்கமா பேசி கூட்டணிக்கு கோடாலி போட்ற மாட்டாங்களா?

இப்பிடியே சிந்திச்சுட்டு இருந்த எனக்கு, ராஜேந்தருக்கு ஆதரவா சிம்பு பிரச்சாரம் பண்ண போனாரே, அப்போ ஒரு வருத்தம் வந்திச்சு. அப்படியே திருச்சிக்கு போயி, கூட்டணி கட்சி தலைவரான(?) மன்சூருக்கும் ஆதரவா பிரச்சாரம் பண்ணியிருக்கலாமே?

அட மறதி மன்னா. சிம்பு எப்பிடி மன்சூருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணுவாரு? உனக்குதான் அந்த விஷயம் தெரியுமேன்னுச்சு மூளை! அட, ஆமான்ல...

சிம்புவுக்கு அப்போ எட்டு வயசு இருக்கும். சபாஷ் பாபுன்னு ஒரு படத்தை எடுத்திட்டு இருந்தாரு டிஆர். சும்மாவே மழலை மேதை சிம்பு. அப்பவே அவரை ஆக்ஷன் ஸ்டராக்க முடிவு பண்ணிய டிஆர், "அடேய் இந்த படத்திலே சிம்பு ஒரு ஃபைட் பண்ணுராரு. அந்த சண்டையை ஜாக்கிசான் பார்த்தா கூட அசந்து போகணும்"னு மாஸ்டரிடம் சொல்லிட்டாரு. சபாஷ் பாபு யூனிட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே கெட்ட நேரம், இந்த படத்திலே வில்லன் நம்ம மன்சூருதான்!

அந்தரத்திலே பறந்து மன்சூரை தாக்க தயாராக வந்திட்டாரு சிம்பு. தலைய சிலுப்பிக்கிட்டு அப்பா மாதிரியே "வாடா என் மச்சி, வாழக்காய் பச்சி"ன்னு ஏதேதோ டயலாக் பேசிட்டு மன்சூரை தாக்கணும். அவரு பயங்கரமா அடிவாங்கி குப்புற விழுந்து குபீர்னு ரத்தம் கக்கணும். டைரக்டர் விளக்க, "அட போங்கய்யா... என் தன்மானம் கேட்கலே"ன்னு எழுந்திருச்சு போயிட்டாரு மன்சூர். "கூப்பிடுய்யா அந்தாள. ஏன் நடிக்க கூடாது?"ன்னு டிஆர் கேட்க, "அது எப்பிடிங்கய்யா எட்டு வயசு பையன், மாடு மாதிரி வளர்ந்திருக்கிற என்னை அடிச்சு குப்புற தள்ளுவாரு? என்னதான் அவரு ஹீரோன்னாலும், நான் திருப்பியே அடிக்காம எல்லாத்தையும் வாங்கிக்கனும்னா எதுக்கு மனுசனா நடிக்கணும்? பேசாம மாடா வேசம் போட்டுட்டு போறேன்"னு சொல்லிட்டு நடையை கட்டிட்டாரு.

ஷ¨ட்டிங்கே நிக்குது. மட்டேர் மட்டேர்னு மார்லே அடிச்சிகிட்ட டிஆர், "நம்ம வீட்லே திரும்புற எடத்திலே எல்லாம் அவன் போட்டோ கிடக்கும். வாய்ப்பு கொடுங்கய்யா, வாய்ப்பு கொடுங்கய்யான்னு வரும்போதெல்லாம் ஒரு போட்டோவோட வருவான். இப்போ பார்த்தியாடா சிம்பு"ன்னு அழ, எட்டு வயசு பையனுக்கு ஒன்னுமே புரியலே. சிம்புவும் திடுக்கிட்டு பார்க்க, தி.நகர் சாலையிலே எடுத்துக் கொண்டிருந்த அந்த ஷ¨ட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ஜனங்களும் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாங்க டிஆர் அழுவதை.

பிறகு யார் யாரோ போய் மன்சூரை கெஞ்சி கூட்டிட்டு வந்தாங்க. "நானும் அடிப்பேன். அதுக்கு சம்மதன்னா ஒளிப்பதிவு கருவிய வைங்க. இல்லைன்னா போறேன்"னு மன்சூரு பிடிவாதம் காட்ட, அப்பிடியே எடுத்தாரு டிஆரு. தன் பிள்ளை மன்சூரிடம் அடிவாங்குறத பொறுக்க முடியாம அவரு அழுதுகிட்டே கேமிரா பிடிச்சதை இப்போ நினைச்சாலும் நமக்கும் அழுகாச்சி வரும்.

இப்போ சொல்லுங்க, சிம்பு திருச்சிக்கு போயி மன்சூருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணியிருக்கலாம்னு நினைக்கிறீங்க?

18 comments:

Sridhar said...

//"லைட்டை கொளுத்தி வச்சா 'ராவு' போயி வெளிச்சம் வருமே?"ன்னு இவரும் குதர்க்கமா பேசி கூட்டணிக்கு கோடாலி போட்ற மாட்டாங்களா?//

அவங்க மறந்தாலும் நீங்க உடமாட்டீங்க.

//தன் பிள்ளை மன்சூரிடம் அடிவாங்குறத பொறுக்க முடியாம அவரு அழுதுகிட்டே கேமிரா பிடிச்சதை இப்போ நினைச்சாலும் நமக்கும் அழுகாச்சி வரும்//

அவங்க படம் எத பார்த்தாலும் ரத்த கண்ணீர் வரும்.

ஆனாலும் உங்களுக்கு பொறுமை அதிகம்.

கண்ணா.. said...

//"சார்... எம்.ஏ படிச்சவங்கிற முறையிலேயும், சோதிடத்தை ஆராய்ச்சி பண்றவங்கிற முறையிலேயும் சொல்றேன்" (இந்த இரண்டு முறையிலேயும் இல்லாம சும்மா சொன்னாலே என் காதுல விழும்னு சொல்ல ஆசதான். ஆனாலும் ஆங்...னு கேட்டுகிட்டேன்)//

நச்.....

இதே போல ஒரு பேட்டில டி ஆர் சொன்னாரு " சிம்பு பொறந்து நர்ஸ் தூக்கிட்டு வரும் போதே...காலை ரித்மிக்கா ஆட்டிகிட்டே இருந்தார்னு. அப்பவே தெரியும் அவன் சூப்பர் ஸ்டாருன்னு"

பயங்கர சிரிப்பு..:))

கேக்குறவன் கேனைன்னா....

கிரி said...

சுள்ளான்ல தனுஷ் சண்டை போட்டதை பார்த்துக்கூட நான் நொந்து போனதுண்டு

சிம்பு இப்ப பண்ணுற அலப்பறைய பார்த்தா ..எப்படி இப்படி எல்லாம்னு நமக்கு தலை சுத்துது ...

முரளிகண்ணன் said...

செமையா இருக்கு தலைவரே ஒவ்வொரு மேட்டரும்

Indy said...

Super, Super, Super !!!

butterfly Surya said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு தல..

butterfly Surya said...

நம்ம பதிவு ஒண்ணு தட்ஸ்தமிழ்.காமில் இன்று வெளி வந்துள்ளது.

சுட்டி:

http://thatstamil.oneindia.in/cj/surya/2009/0512-the-father-pedar.html

anthanan said...

ஒரு தேனீ மாதிரி தேடி தேடி படம் பார்க்கிற உங்க ஆர்வமும், புட்டு புட்டு வைக்கிற உங்க அறிவும் பார்க்கிறப்போ, நானெல்லாம் ஜுஜூபி. தட்ஸ் தமிழ் பதிவும் வழக்கம்போல் உங்க பேரை சொல்லுது. கீப் இட் வண்ணத்துப்பூச்சியாரே! ஸ்ரீதர் சாரு, கண்ணா, கிரி, ஜோ, முரளிக்கண்ணன், இன்டி, அப்புறம் கொஞ்ச நாளா காணாமல் போய்விட்ட நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றியும் வணக்கமும்

அன்புடன் அந்தணன்

TBCD said...

சும்மாவே உதார் விட்டுக்கொண்டியிருக்கும் பலர் மத்தியில் சிம்பு உண்மையிலே திறமையானவர் என்று சில பல முறை எண்ணுவதுண்டு..

உங்க கருத்து என்னவோ..??

butterfly Surya said...

போட்டோல நீங்க கை கட்டி அடக்கமா சிரிச்சாலும் அடக்க முடியாம எங்களையெல்லாம் நித்தம் சிரிக்க வைக்கிற உங்க எழுத்தும் நண்பர் உதய் அவர்களின் எழுத்து நடையும் தான் சார் எனக்கு இன்று வரை டானிக்...

உங்க பாராட்டு இன்னைக்கு எனக்கு டாஸ்மாக்....

நாளைக்கு கடை லீவா..???

ஒட்டு போட்டுட்டு வந்து வழக்கம் போல் பதிவை போடுங்க....

செந்தில்குமார் said...

//இவங்க ரெண்டு பேரும் ஒரே மேடையிலே ஏறி பிரச்சாரம் பண்ணினா எப்பிடியிருக்கும்?//

நெனச்சு பாத்தாலே அடிவயிறு கலங்குது... ரெண்டும் ரெண்டு எக்ஸ்ட்ரீம் !!

Anonymous said...

டி ஆர் மற்றும் மன்சூர் பற்றி இப்படி தரக்குறைவான பதிவை போட்டதற்கு உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்! இந்த தேர்தல் முடிவுகள் வரட்டும், நாங்கள் யார் என்று காட்டுகிறோம். நாற்பது சீட்டும் எங்களுக்கே!

இப்படிக்கு!
நிஜார் போட்ட பையன்
கோ ப சே
காகா கோகோ பீ பீ கட்சி

Anonymous said...

niraya thagavaloda nakkla nachnu iruku..Krish

ரிஷி (கடைசி பக்கம்) said...

:-))

I joined with your blog

So Hilarious

பாசகி said...

நல்லதொரு குடும்பம் :)))

Joe said...

//
(இந்த இரண்டு முறையிலேயும் இல்லாம சும்மா சொன்னாலே என் காதுல விழும்னு சொல்ல ஆசதான். ஆனாலும் ஆங்...னு கேட்டுகிட்டேன்)
//
அண்ணே, கவுண்டமணி இப்போ அதிகம் படங்களிலே நடிக்கிறதில்லை-ங்கிற குறையை நீங்க தீர்க்குறீங்க!

வாய்ப்பே இல்ல, சும்மா பின்னுறீங்க!

விஜயசாரதி said...

தமிழன் சிங்கம்யா..அவன் என்னதான் யோசிக்காம ஓட்டப் போட்டாலும் நம்ம மன்சூருக்கும் டிஆர்க்கும் போட்டு ஓட்ட வீணாக்க மாட்டான்.

உண்மையிலேயே இவங்க ரெண்டு பேரும் தேர்தல் களத்துல நிக்கறது காமெடி டைம். இப்ப நமக்கு, ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அவங்களுக்கு.

இதவிட பெரிய காமெடியான கார்த்திக் பத்தியும் அவர் தேர்தல் பிரச்சார (உங்களுக்கு புரிந்தவரை)த்தையும் ஒரு காமெடி பதிவா போட்ட...குஷியாயிருவேன்.

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் அந்தணன்,


// ராகு கால நேரத்திலே ரூமை சாத்திட்டு , லைட்டையும் ஆஃப் பண்ணிட்டு இருட்டிலே யாருகிட்டேயும் பேசாம உட்கார்ந்திருப்பாரு டி.ஆர். லைட் எறிஞ்சா உள்ளே ஆளு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு கஷ்ட காலம் உள்ளே வந்திருமாம்! அதுக்காகதான் இந்த லைட்ஸ் ஆஃப்! //

ஏற்கனவே ஒரு கஷ்ட காலம் உள்ளர குந்திகினு கும்மாளம் போட்டுகினு இருக்கும் போது வெளியில இருந்து இன்னொன்னு உள்ளற போகுமாண்ணா? நான் டி.ஆரை சொன்னேன். ! :-))) .

with care and love,

Muhammad Ismail .H, PHD,