Saturday, May 30, 2009

புகைச்சல் விட்ட, நகைச்சுவை திலகம்!


சந்தர்ப்பம் கிடைச்சா, இந்துத்வாவை சந்துல நுழைச்சு சந்தோஷப்பட நான் ஒன்றும் இராம.கோபாலன் இல்லே! ஆனா அவரையும் என்னையும் சந்திக்க வச்சாரு பத்மஸ்ரீ விவேக்! ஏன்? எதற்கு? எப்படி? என்னாச்சு?

இப்பிடி மொத்தமா கேள்விகள எடுத்து மூஞ்சுக்கு நேரா எறிஞ்சாலும், அந்த அவமானத்தை நினைக்கும்போது பதிலே சொல்ல முடியாதளவுக்கு மைனஸ் ஆகுது மனசு. அது ஒரு முத்திப் போன கத்திரி சீசன். அக்கினி வெயில்ல ஆளே பஞ்சராகிட்டிருக்காங்க அங்கங்கே! அந்த நேரத்திலே நானும் நண்பர் பாலுவும் ஒரு பைக்லே ஏறிகிட்டு (நாறிகிட்டுன்னும் படிக்கலாம், அவ்வளவு வேர்வை) விவேக்கை பார்க்க போனோம். "பிரசாத் ஸ்டுடியோவிலேதான் இருக்காரு. போனா பார்க்கலாமே"ன்னு புதை குழிக்கு வழி சொன்ன அந்த பொல்லாத 'கொலிக்ஸ்' கன்னத்திலே பொளிச்சுன்னு அறைஞ்சிருக்கணும். (வந்த பிறகாவது)

"நேரம் இருந்தா ஏதாவது எழுதிக்கொடுங்களேன்"னு 'குங்குமம்' எடிட்டர் சாருப்பிரபா கேட்டதாலே விவேக்கை சந்திக்க போனேன். அதுக்கு முன்னாடி குங்குமத்திலே என்ன நடந்ததுன்னே தெரியாம போனதால வந்த விளைவு அது. ஒரு படத்திலே மனோகராவில் வரும் நீதிமன்ற வசனத்தை அப்படியே ஸ்டைலா அடிச்சிருப்பாரு விவேக். அது சம்பந்தமா பேட்டியும் கொடுத்திருந்தாராம் குங்குமத்துக்கு. "சிவாஜியால் எனக்கு பெருமை"ன்னு விவேக் சொல்ல, "என்னால் சிவாஜிக்கு பெருமை"ன்னு மாத்தி எழுதிட்டாய்ங்க. சும்மா இல்லாம, 'என்னால் சிவாஜிக்கு பெருமை'ன்னு டைட்டிலும் வச்சுட்டு சன் டி.வியிலேயும் ஒரு நாளைக்கு முப்பது வாட்டி திருப்பி திருப்பி சொல்லவும் விவேக்கோட போனுக்கு ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் வந்து ஒரே காச்மூச்! அவ்வளவுதான்... உடம்பெல்லாம் பைல்ஸ் வந்த மாதிரி ஓன்ன்ன்ன்னு அலற ஆரம்பிச்சிட்டாரு விவேக். (தப்பில்லையே?)

எலியே எரவாணத்திலே சிக்கிக்கிட்டு தொங்குது, இதுலே கரப்பான் பூச்சி போயி வாலை நக்குனா என்னாவும்? என் நிலைமையும் அப்படிதான் இருந்திச்சு. விவேக்கிடம் போய் "குங்குமத்துக்காக ஒரு இன்டர்வியூ"ன்னு வாயை திறந்தேன். அவ்வளவுதான், அத்தனை ஆத்தாவும் மொத்தமா ஏறுனா மாதிரி மூஞ்சை வச்சிகிட்டு "எங்கேர்ந்து?"ன்னாரு. நான் திரும்பவும் "குங்குமம்"னு சொல்லவும், உதடு உண்டி வில்லு ஆயிருச்சு விவேக்குக்கு! வையாபுரி உடம்புலே ஓம்பூரிய ஒட்ட வைச்சா மாதிரி உடம்பை விறைச்சுக்கிட்டு அப்படியே எந்திருச்சாரு. வாயிலேர்ந்து சரோஜாதேவி புத்தகத்திலே வருமே, முக்கியமான 'மேட்டர்களோட' பேரு. அதுவா வந்து கொட்டுது. அவ்வளவும் என்னையில்லே, என்னைய அனுப்பியதா அவரு நினைச்சுக்கிட்டிருந்த சாருப்பிரபாவை! "அவன் பண்ணின வேலையாலே நான் சந்திச்ச பிரச்சனை கொஞ்சமா, நஞ்சமா? இவ்வளவும் பண்ணிட்டு ஆளு அனுப்புறானா, பேட்டிக்கு?
நான் நினைச்சா என்னாவும் தெரியுமா? தொலைச்சிருவேன்"னு பாய, நான் "சார் என்னைய அவரு அனுப்பலே"ன்னேன்.

அதுக்கு பிறகாவது என்னை உட்கார வைச்சி பேசியிருக்கலாம். நானும் பாலுவும் நின்னுகிட்டே இருந்தோம். பொதுவா பேட்டின்னு ரிப்போர்ட்டர்ஸ் போனா முதலில் உட்கார சொல்ற வழக்கம் எல்லா நடிகர் நடிகைகளுக்கும் உண்டு. சேர் இல்லேன்னா அவங்களும் எழுந்து நிப்பாங்க. சேர் வந்த பிறகு நம்மோடு சேர்ந்து உட்காருவாங்க. இப்படியே பழகிய எனக்கு விவேக் கொடுத்த மரியாதை, ரொம்ப கேவலமாக பட்டது. அப்படியே திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தா அவ்வளவு பேரும் எங்களையே பார்த்திட்டு இருந்தாங்க. "சார் பேட்டி வேணாம்னா விடுங்க. அதுக்குப்போயி எதுக்கு இவ்வளவு பேசுறீங்க? தைரியம் இருந்தா சாருபிரபாகிட்டே போயி பேசுங்களேன்"னேன். "இப்பதான் அவன் ஆபிசுக்கே நேரா போயி காதெல்லாம் நாறி போற மாதிரி திட்டிட்டு வர்றேன். பின்னாடியே ஆளு அனுப்புறானா?"ன்னாரு மறுபடியும்! (அட, இது வேறயா....? தெரியாம போச்சேடா சொக்கா...)

விருட்டுன்னு கோவிச்சுகிட்டு வெளியே வந்தோம் நானும் பாலுவும். (இப்போ பாலு தினமலர்லே இருக்கார். அப்போ அவரும் ரொம்ப கோவப்பட முடியாதபடி ஒரு இன்டர்நெட் பத்திரிகையிலே இருந்தார்) வண்டியிலே வரும்போது விவேக் மாதிரியே குரலை மாத்தி என் முகத்தை பார்த்து பாலு சொன்னாரு. "அண்ணே சொம்பு ரொம்ப நசுங்கியிருக்கே?"

"இல்ல பாலு, யாரு சொம்பு நசுங்குதுன்னு பாருங்க"ன்னு அப்போதைக்கு பதிலை சொன்னாலும், உள்ளுக்குள்ளே ஒரு காட்டுமிராண்டி கோவணத்தை அவுத்து போட்டுட்டு குய்யோ முறையோன்னு ஆடுறான். ராவெல்லாம் யோசிக்சு காலையிலே ஒரு முடிவுக்கு வந்தேன். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் வீட்டுக்கு அப்பாயின்ட்மென்ட்டே வாங்காம போயிட்டேன்.

"ஐயா, ஒரு பேட்டி?"

"உட்காருங்க தம்பி. பேரு என்னா?" பேச ஆரம்பிச்சாரு பெரியவரு.

எங்கெங்கோ தாவி சினிமாவிலே வந்து நின்னுச்சு மேட்டர். நமக்கும் அதுதானே டார்கெட்? "ஐயா, எல்லா படத்திலேயும் இந்து மதத்தை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறாரே விவேக், அவரை கண்டிச்சு போராட்டம் எதுவும் நடத்த மாட்டீங்களா?"ன்னு நான் கேட்க, அதுக்காகவே காத்திருந்தது காவி சிங்கம்!

"ஆமா, நெறய பேரு எங்கிட்டவும் சொன்னாங்க. நான் சினிமா பார்க்கிற பழக்கம் இல்லேன்னாலும் அவங்க சொல்றதை பார்த்தா அவன் ரொம்பதான் பேசுறான். இனிமேலாவது அவன் இந்து மதத்தை இழிவு படுத்தறதை நிறுத்தணும். இல்லைன்னா, அவன் எங்கெல்லாம் ஷ§ட்டிங் போறானோ, அங்கே எங்க அமைப்பு போயி செருப்பை வீசும்"னாரு. அந்த வார்த்தையை கேட்கும்போதே நெஞ்சிலே நீலகிரி தைலத்தை தடவிய மாதிரி கு­ளுகுளுன்னு இருந்திச்சு.

செருப்படி விஷயத்தை 'ஹைலைட்' பண்ணி ஒரு சினிமா பத்திரிகையில் பெரிய கவர் ஸ்டோரியாக எழுதி வெளியிட்டேன். அவ்வளவுதான்... அலறி அடித்துக் கொண்டு விகடன் அலுவலகத்திற்கு ஓடினார் விவேக். "என்னையும் இராம.கோபாலனையும் நீங்கதான் சந்திக்க வைக்கணும்" விவேக்கின் வேண்டுகோளை அப்படியே ஏற்று இருவரையும் சந்திக்க வைத்தது ஆ.வி. அந்த பேட்டியில்தான் முதன் முதலாக தன்னை ஆத்திகன் என்றும், வடபழனி கோவிலுக்கு வாரம் தவறாமல் போகிறவன் என்றும் ஒப்புக் கொண்டார் விவேக்.

விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு வந்ததும், அவரை பாராட்டி தமிழ்சினிமா.காம் இணைய இதழில் மனசார வாழ்த்தி தலையங்கம் எழுதியதும் நான்தான்.

அப்போ நம்ம கோவாச்சி...? அது அப்பவே போச்...!

21 comments:

Anonymous said...

thalai pichchu utarringa
piranavan

♫சோம்பேறி♫ said...

ர்ர்ர்ர்ரிப்போர்டராக்கும்.. :-)

இளந்தி said...

உங்கள் பதிவு ரொம்ப அருமை
தொடரட்டும் உங்கள் பணி

நட்புடன்
இளந்தி.....

http://kovilady.blogspot.com/ said...

உங்கள் பதிவு ரொம்ப அருமை
தொடரட்டும் உங்கள் பணி

நட்புடன்
இளந்தி.....

அன்புச்செல்வன் said...

//எங்கெங்கோ தாவி சினிமாவிலே வந்து நின்னுச்சு மேட்டர். நமக்கும் அதுதானே டார்கெட்? "ஐயா, எல்லா படத்திலேயும் இந்து மதத்தை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறாரே விவேக், அவரை கண்டிச்சு போராட்டம் எதுவும் நடத்த மாட்டீங்களா?"ன்னு நான் கேட்க, //

நல்லாத்தான் பத்த வைக்கிறீங்க... தொடரட்டும் உங்கள் பணி...
(நான் எழுத்துப் பணியைச் சொன்னேங்க...)

ISR Selvakumar said...

Super!

butterfly Surya said...

நிருபரா நீங்கள். ஆசிரியர் நீங்கள். உங்க கிட்ட பாடம் கத்துகணும்.

அதனால சொல்றேன். பத்திரிகை ஆரம்பிங்கன்னு..

கிரி said...

விவகாரமான ஆளா இருக்கீங்க!

நா.இரமேஷ் குமார் said...

அண்ணே... வண்ணத்துப்பூச்சியார் சொல்றதை வழிமொழிகிறேன்.

Sridhar said...

வண்ணத்துபூச்சியார்,நா.இரமேஷ் குமார் சொல்றதை வழிமொழிகிறேன்.

கண்ணா.. said...

//அன்புச்செல்வன் said...
//எங்கெங்கோ தாவி சினிமாவிலே வந்து நின்னுச்சு மேட்டர். நமக்கும் அதுதானே டார்கெட்? "ஐயா, எல்லா படத்திலேயும் இந்து மதத்தை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறாரே விவேக், அவரை கண்டிச்சு போராட்டம் எதுவும் நடத்த மாட்டீங்களா?"ன்னு நான் கேட்க, //

நல்லாத்தான் பத்த வைக்கிறீங்க... தொடரட்டும் உங்கள் பணி...
(நான் எழுத்துப் பணியைச் சொன்னேங்க...)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...........

பாசகி said...

ஜி இப்போதான் உங்க மறுபக்கம் தெரியுது :)

Joe said...

//
"இப்பதான் அவன் ஆபிசுக்கே நேரா போயி காதெல்லாம் நாறி போற மாதிரி திட்டிட்டு வர்றேன். பின்னாடியே ஆளு அனுப்புறானா?"ன்னாரு
//
நல்லா மாட்டிகிட்டு முழிச்சீங்க போங்க!

அடுத்து ராமகோபாலன் கிட்ட பத்த வைச்சீங்களே? நாரதர் தோத்தாரு போங்க!

கலையரசன் said...

//புதை குழிக்கு வழி சொன்ன அந்த பொல்லாத 'கொலிக்ஸ்' கன்னத்திலே பொளிச்சுன்னு அறைஞ்சிருக்கணும்.//
நீதாண்ணே.. பதிவுலக கவுண்டமணி!

//எலியே எரவாணத்திலே சிக்கிக்கிட்டு தொங்குது, இதுலே கரப்பான் பூச்சி போயி வாலை நக்குனா என்னாவும்?//
நீதாண்ணே.. பதிவுலக வடிவேலு!

//அப்போ நம்ம கோவாச்சி...? அது அப்பவே போயாச்சி...!//
நீதாண்ணே.. பதிவுலக டி.ராஜேந்தரு!


இப்படி பல பட்டம் கொடுக்கலாம் உங்களுக்கு..
ஆனா, பத்திரிகை ஆசிரியர் பட்டம்தான் கொடுபோன்னு
கங்கனம் கட்டிக்கிட்டு அலையராங்க நம்ம சகா.. சங்குங்க!
சூரியனுக்கு டார்ச் அடிக்கி உங்களுக்கே.. மெழுகுவத்தியா?

ஈ ரா said...

அந்தணன் சார்

குங்குமம் அப்ப பண்ணினது தப்புன்னாலும், விவேக் பண்ணினது ரொம்ப தப்பு....

நீங்க சோக்கா பத்தவச்சது ஹைலைட்னா, ஒப்பனா ஒத்துக்கிட்டது சூப்பர் ஹைலைட்...

அன்புடன்

ஈ ரா

உண்மைத்தமிழன் said...

இந்த வேலையெல்லாம் வேற செய்வீங்களா..?

முருகா..

அப்ப உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும்..!

RRSLM said...

விவேக்கின் கோபம் நியமானது தான தலைவரே! எந்த ஒரு மனசனுக்கும் வர கோபம் தான் அது. அதே சமயம் விவேக் ஹிந்து மதத்தை கிண்டல் பன்னுகின்றார் என்பதை விட, ஹிந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கையை கிண்டல் பண்ணுகின்றார் என்பதே சரி என்பது என் கூற்று

anthanan said...

மூணாவது பாராவின் கடைசியில் விவேக் கோவப்பட்டது தப்பில்லையே என்று எழுதியிருக்கேனே நண்பரே...? கிறிஸ்துவ, முஸ்லீம் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை கிண்டல் பண்ணி ஒரே ஒரு படத்தில் பேச தைரியம் இருக்கா விவேக்குக்கு? இதை சொல்வதால் நான் மதவாத சக்திகளுக்கு துணை போகிறவன் என்று எண்ணிவிட வேண்டாம் ஆர்ஆர்...

அந்தணன்

mathi - india said...

//மூணாவது பாராவின் கடைசியில் விவேக் கோவப்பட்டது தப்பில்லையே என்று எழுதியிருக்கேனே நண்பரே...? கிறிஸ்துவ, முஸ்லீம் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை கிண்டல் பண்ணி ஒரே ஒரு படத்தில் பேச தைரியம் இருக்கா விவேக்குக்கு? இதை சொல்வதால் நான் மதவாத சக்திகளுக்கு துணை போகிறவன் என்று எண்ணிவிட வேண்டாம் ஆர்ஆர்...

அந்தணன்//

அண்ணே , சன் டிவீயுடன் மோதல் வந்தபோது எனக்கு பின் என் தேவர் சமுதாயமே உள்ளது , என்னுடம் மோதவேண்டாம் என ஸ்டேட்”மெண்டல்” விட்ட விவேக் பேசிகிறாரா மூடநமிக்கை பற்றி

M Bharat Kumar said...

Annae

Padmashree pathi ezhuthina unakku oru Padma.....sorry.....Padmashree tharanum......

sowri said...

//மூணாவது பாராவின் கடைசியில் விவேக் கோவப்பட்டது தப்பில்லையே என்று எழுதியிருக்கேனே நண்பரே...? கிறிஸ்துவ, முஸ்லீம் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை கிண்டல் பண்ணி ஒரே ஒரு படத்தில் பேச தைரியம் இருக்கா விவேக்குக்கு? இதை சொல்வதால் நான் மதவாத சக்திகளுக்கு துணை போகிறவன் என்று எண்ணிவிட வேண்டாம் ஆர்ஆர்...

அந்தணன்//

Well said sir. If we act hindu belief, its called பகுத்தறிவு. If we speak about all religion its மதவாதம். நல்லா காட்றாங்க Emotion.

நகைச்சுவை திலகம் ... இது வேறயா !!!