Friday, May 8, 2009

மீரா ஜாஸ்மினும், முரட்டு மோதலும்...!

மீராவுக்கும் ஜீராவுக்கும் ஓரெழுத்து வித்தியாசம்தான். ஆனாலும், மீராவை பார்க்கிறப்போல்லாம் எனக்கு 'ஜீரா' நினைப்பு வரும்! இனிப்பு பற்றி, ஒரு கணிப்பு வச்சுகிட்டு அளந்து அளந்து சாப்பிடுற முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் கூட, மீரா ஜாஸ்மின் திரையில் வந்தால் ஓவரா ரசிச்சு ஃபீவர்லே விழுவாய்ங்க. மறுநாளே 'சுகர்' டெஸ்ட் பண்ணுற அளவுக்கு சோர்ந்து போவாய்ங்க.

அப்படிப்பட்ட அல்டிமேட் இனிப்புக்கே கொஞ்ச நாளா கசப்பு மருந்து கொடுத்திட்டு இருக்கு மீடியா! "நான் ஒதுங்கி ஒதுங்கி போனாலும் விட மாட்டேங்கிறாங்களே"ன்னு மீரா வருந்தியதா நண்பர் ஒருத்தரு சொன்னாரு. அடப்பாவி அசுரனுங்களே... ஐஸ்கிரீமை வென்னீர்லே போட்டு ஆகப் போறதென்ன?

நான் முதன் முதலா 'ரன்' படத்தின் பாடல் காட்சியை பார்த்திட்டு வெளியே வந்தப்போ முன்னாடி நின்ன லிங்குசாமியிடம், "பாஸ§, எங்க புடிச்சீங்க அந்த பாஸந்திய..."ன்னு கேட்டேன். பூர்வீகம், ஊர்வீகத்தையெல்லாம் ஒரே மூச்சுலே ஒப்பிச்ச லிங்கு, "ஆளு எப்பிடி"ன்னாரு. ஆஹா...ன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி ஒரு பத்திரி¬யாளர் கூட்டமே 'மீரா பஜன்'ஸ் பாடியது கோரசாக!

சொர்க்கத்தின் கதவை சொரண்டி சொரண்டியே விரல் நகமெல்லாம் தேய்ஞ்சு போன ஒரு சாயங்கால வயசிலே நான் மீராவை நேரிலே பார்த்தேன். அதுக்கு பிறகு என்னோட வயசு புதுப்பிக்கப்பட்டு இருபதுக்கு போனேங்கறதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லீங்க, உண்மை! ஜுட் படத்திலே நடிக்க 'கமிட்' ஆயிருந்திச்சு பொண்ணு. அப்பா அம்மாவோட, அக்கம் பக்கத்து வீட்டாளுகளையும் கூட்டிட்டு ஷட்டிங்கிற்கு வந்து, கும்பலா கொல வாங்கிற வழக்கம் என்னிக்குமே இருந்ததில்லே மீராவுக்கு. மேக்கப் மேன், ஹேர் டிரஸ்சர், கார் டிரைவர்னு ஒரு 'மினி மீல்ஸ்' மாதிரி கச்சிதமானது அவங்க கூட்டணி. "லெப்ட்லே திரும்பு, ரைட்லே போ"ன்னு அவரோட மேனேஜர் சொல்றதுதான் அருள்வாக்கு அதுக்கு. ஒருமுறை குமுதம் சித்ராமணி வந்து, ஒரு ஸ்டில் எடுக்கறதுக்குள்ளே ஆட்டோ மீட்டர் மாதிரி சூடாயிட்டாரு. ஜனாதிபதிகிட்ட மட்டும்தான் பர்மிஷன் கேட்கலே. மற்றபடி அவரு இவருன்னு எவரு எவருகிட்டேயோ கேட்டு, ஓக்கே சொன்ன பிறகுதான் முன்னாடி வந்து கண்ணாடி மாதிரி பளிச்சுன்னு சிரிச்சுது. அப்படி ஒரு கட்டுப்பாடு. ஒழுக்கம்(ன்னு சொல்ல ஆசைதான். தெரியாத விஷயத்திலே தலைய கொடுப்பானேன்?)

அப்படிப்பட்ட கட்டுப்பாட்டு கவசத்தை கழற்ற¤ போட்டுட்டு, ஸ்ரீகாந்த் வீட்டுக்கே வந்து அவங்க குடும்பத்தோட அன்பா பழகுற அளவுக்கு ஃப்ரியா இருந்திச்சு. கேரளாவிலே இருந்து வரும்போது நேந்திரங்காய் சிப்ஸ் கொண்டு வரும். (அதிலே ஒரு பகுதியை நம்ம வீட்டுக்கும் கொடுப்பாரு அப்பா) நேரடியா இல்லேன்னாலும், மீராவின் கைபட்ட நேந்திரங்காயிக்கு அபார ருசி. அதிருக்கட்டும்... அப்படியாப்பட்ட பனிக்கட்டி மீராவே நடுநடுங்கிப் போச்சு ஒருநாளு.

தேவதைகள் கையிலே அருவாளை கொடுத்தா, ஒன்ணு அருவா பூவாகணும். இல்லேன்னா தேவதை காளியாகணும்! நான் சொல்லப் போற மேட்டர்லே ரெண்டாவது நடந்திருச்சு. மோகன் ஸ்டுடியோவிலே ஜுட் பட ஷ¨ட்டிங். அன்னைக்கு பார்த்து சண்டைக்காட்சி எடுத்திட்டு இருந்தாங்க. பெப்சி விஜயன்தான் ஸ்டன்ட் மாஸ்டர். பெரிய காய்கறி மார்கெட் செட். ஒரு பக்கம் மழை ஊத்திகிட்டு இருந்திச்சு. (செயற்கையாகதான்) காலையிலே இருந்து சாயங்காலம் வரைக்கும் தண்ணியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க மொத்த பேரும். அடிக்கிற மழையிலே ஃபைட் வச்சுருந்ததாலே குளிரும் கோவமுமா இருந்திச்சு பொண்ணு.

ஃபைட்டர்களில் ஒருவரை மீரா ஓடிப்போய் வண்டி கடையாணியால குத்தற மாதிரி ஷாட். பைட்டரோ முழு ஆட்டை முழுசா முழுங்கிட்டு, அப்புறம்னு அடுத்த பந்திக்கு வெயிட் பண்ணுற அளவுக்கு ரொம்ப சாஃப்ட்டா இருந்தாரு. இந்த டேக்குக்கு போறதுக்கு முன்னாடி ஏகப்பட்ட ரிகர்சல்ஸ். மழை ச்சோன்னு அடிக்க, ஓடிப்போய் ஏய்ய்ய்ய்ய்ய்ய்னு கத்திக்கிட்டே அவரை போய் குத்துற மாதிரி நின்னுச்சு மீரா. கடையாணியோட கடைசி முனை அவரு மேலே லேசா படணும். எல்லாத்தையும் கரெக்டா செஞ்ச மீரா, டேக்குன்னு கத்தினதும் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுருச்சு.

ஹேய்ய்ய்ய்ய்ய்னு கத்திக்கிட்டே ஓடிப்போய் அவரு மாருலே நச்சுக்குன்னு கடையாணியை எறக்கிடுச்சு. மழையிலே ஒன்ணும் தெரியலையா? அல்லது காட்சியில் இன்வால்வ் ஆயிடுச்சா, தெரியலே. சரியான குத்து. செம்மையா கீறிடுச்சு அவரு நெஞ்சை. அந்தாளுக்கு நிஜமாகவே கோவம் வந்து மீராவை புடிச்சு வேகமா தள்ளிவிட, போன அதே வேகத்திலே பின்னாடி விர்ர்ர்ருன்னு வந்து விழுந்தாரு மீரா. விழுந்ததிலே மண்டையிலே அடி.

எல்லாரும் ஓடிப்போய் து£க்கினாங்க. ரெயின் ஸ்டாப்! "ஸாரி, எமோஷனாலாயிட்டேன்"னாரு ஃபைட்டர். அவரு நெஞ்சுக்கு 'டிஞ்சரை' போட்டாலும், இரண்டு பேருக்குமே உள்ளுக்குள்ளே எரிச்சல். அதுக்கு பிறகும் பல சீன்களை எடுத்திட்டு இருந்தாங்க. 'ஷாட்' இல்லாத நேரத்திலே து£ரமா நின்னு இருவரும் ஒருவரை ஒருவர் முறைச்சுகிட்டேயிருந்தாங்க. பிறகு முயல் குட்டி மூடுக்கு வர ரெண்டு மூணு நாளு ஆச்சு.

வருடங்கள் ஓடிப்போச்சு. மீராவின் கோபம் இப்போதான் அதிகமாயிருக்கணும். கடையாணியும் மீடியாவும் ஒரே நேரத்திலே சிக்குனா கலவரம்தான் போலிருக்கு. ஆண்டவா, அந்த பொண்ணுக்கு சாந்தியையும் சமாதானத்தையும் கொடு (நன்றி அமீர்)

15 comments:

Sridhar said...

உங்களுக்கு சுகர் இருக்கரது ஏன்னு இப்போதான் தெரியுது.

ஐஸ்கிரீமை வென்னீர்லே போட்டு ஆகப் போறதென்ன?

சூப்பர்.

வீட்ல ஆளில்லே அப்படின்ன பிகரு சுகரா. வரட்டும் போட்டு்கொடுக்கறேன்

anthanan said...

ஸ்ரீதர் சார், ஆம்புலன்சை விட வேகமா இருக்கீங்களே, காயகல்பத்தை 'கல்ப்பா' அடிக்கிறீங்களோ?

அந்தணன்

எம்.பி.உதயசூரியன் said...

ஸ்ரீதர் சார்..அந்தணன் சார்..
'பிகரு சுகரு காயகல்பம்'! ஐலேஸ்சா...ஐலேஸ்சா...சூப்பர்!

செந்தில்குமார் said...

//தேவதைகள் கையிலே அருவாளை கொடுத்தா, ஒன்ணு அருவா பூவாகணும். இல்லேன்னா தேவதை காளியாகணும்! //

நல்ல கற்பனை !

வேகம் தொடரட்டும்... படிக்க ஆவலுடன் காத்திருக்கோம் !

ரொம்ப நல்லவன் said...

>>>ஒழுக்கம்(ன்னு சொல்ல ஆசைதான். தெரியாத விஷயத்திலே தலைய கொடுப்பானேன்?)
நல்லாதான போய்கிட்டிருந்துச்சு..ஏன் இந்த கொலவெறி?

நா.இரமேஷ் குமார் said...

//தேவதைகள் கையிலே அருவாளை கொடுத்தா, ஒன்ணு அருவா பூவாகணும். இல்லேன்னா தேவதை காளியாகணும்!//

பிரமாதம் அண்ணே...
பாவனா லவ்ஸைப் பத்தி எப்போ எழுத போறீங்க?

Bhuvanesh said...

அப்போ மீராகுள்ள ஒரு "வீரா" இருந்திருக்கு :)

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Anonymous said...

u such a nice narrator has the capablity of directing films.why did u only produced film?

anthanan said...

புத்தி வந்தபோது நண்பரில்லையே கதைதான். பணம் இருந்த போத புத்தியில்லை. புத்தி வந்தபோது பணம் இல்லை. எனக்கும் டைரக்ட் பண்ணனும்னு ஆசைதான், பார்க்கலாம்!

அந்தணன்

Anonymous said...

"சொர்க்கத்தின் கதவை சொரண்டி சொரண்டியே விரல் நகமெல்லாம் தேய்ஞ்சு போன ஒரு சாயங்கால வயசிலே நான் மீராவை நேரிலே பார்த்தேன்..."

-ரொம்ப நல்லா 'ஜொள்ளி'யிருக்கீங்க உசூ!

ஷங்கர்
தட்ஸ்தமிழ்

Anonymous said...

"சொர்க்கத்தின் கதவை சொரண்டி சொரண்டியே விரல் நகமெல்லாம் தேய்ஞ்சு போன ஒரு சாயங்கால வயசிலே நான் மீராவை நேரிலே பார்த்தேன்..."

-ரொம்ப நல்லா 'ஜொள்ளி'யிருக்கீங்க அந்தணன்!

ஷங்கர்
தட்ஸ்தமிழ்

... ரெண்டு பேரும் ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க... ஒரே நேரத்துல ரெண்டு பேர் ப்ளாக்கையும் படிச்சனா... அது வந்த சின்ன கன்ப்யூசனுங்னா...!

butterfly Surya said...

மீராவுக்கும் ஜீராவுக்கும் ஓரெழுத்து வித்தியாசம்தான். ////////

'சுகர்' டெஸ்ட் பண்ணுற அளவுக்கு சோர்ந்து போவாய்ங்க.
//////////

ஐஸ்கிரீமை வென்னீர்லே போட்டு ஆகப் போறதென்ன?
////////////

பாஸ§, எங்க புடிச்சீங்க அந்த பாஸந்திய...///////////

ஒரு பத்திரி¬யாளர் கூட்டமே 'மீரா பஜன்'ஸ் பாடியது கோரசாக!/////////

'மினி மீல்ஸ்' மாதிரி கச்சிதமானது அவங்க கூட்டணி///////

-------

எப்படி சார் இப்படியெல்லாம் எழுதறீங்க..

முயல் குட்டி துள்ளுது...

Anonymous said...

அந்தணன் சார், மீரா ஜாஸ்மின் நடிப்பு எனக்கும் என்னுடைய ஹி ஹி மனைவிக்கும் மிகவும் பிடிக்கும். அவர் நடித்த பல மலையாள படங்கள் என்னிடம் உண்டு subtitle இல்லேன்னா கஞ்சம் கஷ்டம் என்பது வேறு விடயம். அண்மையில் மீரா ஜாஸ்மினும் ஊர்வசியும் நடித்த "அச்சுவிண்ட அம்மே" படம் DVD யில் பார்த்தேன் கொன்னுட்டாங்க. அமரர் சுஜாதா அவர்களின் வார்த்தையில் சொல்லுவதாக இருந்தால் "குட்டி நின்னு விளையாடுது". நடிப்பிலேதான்

Mani, Australia

Joe said...

மீராவுக்கு யாரு மேல என்ன கோவமோ?

சரி நெஞ்சில... தானே காயம், சரி பண்ணிடலாம் விடுங்க!