Thursday, May 14, 2009

அஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும்!


விட்டா, அஜீத்துக்கு மன்றம் தெறக்கிறோம்... வர்றீயளான்னு யாராவது கேட்டாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லே. அப்படி நானும், சூரியனும் மாத்தி மாத்தி மருவாதி பண்ணிட்டு இருக்கோம் 'தல'ய்க்கு!

ஏன்? எதுக்கு?ன்னு ஓய்வு பெற்ற நீதிபதிய வச்சு விசாரிக்க சொல்லிறாதீங்கப்பு. சினிமாவுல மனுஷன பார்க்குறதே கஷ்டம். மனுசனாவும் இருந்துகிட்டு, நடிகனாவும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஆள பற்றி எழுதினா, படிக்கிற நடிகருங்களுக்கு 'பந்தா' பண்ணுற பழக்கம் விடுமே? அதுக்காகதான் இந்த அல்டிமேட் பதிவுகள்! ஊரு ஒலகத்துக்கெல்லாம் இவரு 'தல'யா இருந்தாலும், ஓராயிரம் பேருக்கு தல(£)ய்லாமா! கர்...புர்...னு சைட்லே கேட்கிற சவுண்டுக்கெல்லாம் நாங்க மசியறதா இல்லை மக்களே...

எலக்ஷன் அன்னைக்கு காலையிலே ஏழரை மணிக்கெல்லாம் வந்து க்யூவிலே நின்று ஓட்டு போட்டார் அஜீத். ஸ்டில்லை பார்த்தாலே தெரிஞ்சுருக்கும். கொஞ்சம் நீளமான க்யூதான். அங்கே நின்னவங்க "நீங்க நேரா போயி வோட்டு போடுங்க சார். எதுக்கு க்யூவிலே நிக்கிறீங்கன்னு கேட்ட பிறகும் பரவாயில்லே"ன்னு சொன்னாராம். அவரு அப்படிதான்!

நிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிமையும் உள்ளவரு. இப்போதான் அவரு ஸ்மார்ட்! நாலைஞ்சு படங்களுக்கு முன்னாடி, கட்டி வைச்ச மெத்த மாதிரி 'கனம்ம்ம்மா' இருந்த நேரம். அவரு தொப்பைய கிண்டல் அடிச்சு ஒரு ஹீரோ தனது படத்திலே ஒரு ஆட்டத்தையே வைச்சிருந்தாரு. இவருகிட்டே பேட்டின்னு போனவங்க எல்லாரும், "தொப்பைய கொறக்கலாமே?"ங்கிறதை தொடர் கேள்வியா கேட்டிருப்பாங்க போலிருக்கு. நான் போயிருந்த நேரமும் அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டு அடக்கமா உட்காந்திருந்தாரு ஒரு நிருபர். நான் கொஞ்சம் லேட்டா போனதால அவரு எனக்கு முன்னாடி என்ன கேட்டார்னே தெரியாம, "போன படத்தை விட இந்த படத்திலே கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கீங்க"ன்னு சொன்னேன்.

மழை பெஞ்சது தெரியாம, "தண்ணி லாரி புட்டுகிச்சா? ஒரே ஈரமா இருக்கே"ன்னு கேட்டா எப்படி பார்ப்பீங்க? அப்படி பார்த்தாரு அஜீத். கிண்டல் பண்றானோங்கிற கோபமும் இருந்திச்சு அந்த பார்வையிலே. "இப்போதான் இவரு தொப்பைய குறைங்கன்னாரு. பின்னாடியே நீங்க வந்து ஸ்மார்டுங்கிறீங்க"ன்னு சொல்லிட்டு என் கண்ணுக்குள்ளே பூந்து மனச நோண்ட ஆரம்பிச்சாரு.

"இவர விடுங்க. நீங்க இந்த படத்திலே அழகுதான்" என்றேன் விடாப்பிடியாக. இப்போ லேசா முகத்திலே சந்தோஷம் மின்ன, "இல்லே சார். எனக்கு மட்டும் ஆசையா, இப்படியிருக்கனும்னு? என்னோட முதுகு வலிக்காக ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுறேன். தினமும் மூணு. ஸ்டீராய்டு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும். அதை குறைக்கணும்னா எக்சர்சைஸ் பண்ணனும். என் முதுகு தண்டு பிரச்சனையினாலே அது முடியாது. தயவு செஞ்சு என்பிரச்சனைய புரிஞ்சுக்கோங்க" என்றார். நான் மீண்டும் விடாப்பிடியாக "இப்போ உங்களை அழகில்லேன்னு யாரு சார் சொன்னா? கொஞ்சம் தொப்பையை குறைங்கன்னு சொல்றதுக்கும், அழகில்லைன்னு சொல்றதுக்கும் நிறைய டிபரன்ஸ் இருக்கே? இப்பவும் சொல்றேன். இந்த படத்திலே நீங்க அழகுதான்"னு சொன்னேன். இந்த வார்த்தைகள் அவருக்கு குளுக்கோஸ் ஏத்தியிருக்கணும். "அப்பிடியா, தேங்ஸ்"ன்னாரு. இத சொல்லும்போது அவரு இன்னும் அழகா இருந்தாரு.

அந்த மீட்டிங் என்ன பண்ணுச்சோ, சில படங்களுக்கு பிறகு அவரை பார்க்கும்போது, மிஸ்டர் ஸ்மார்ட்டாக மாறியிருந்தாரு அஜீத். பார்த்தீங்களா, இப்படிதான் ட்ராக் மாறி எங்கெங்கோ போயி..., க்யூவிலே வெயிட் பண்ணிய விஷயத்துக்கு வர்றேன்.

நார்த் மெட்ராஸ்சை இப்போ நாத்த மெட்ராஸ்சுன்னு மாத்திரலாமான்னு கேட்டா, அங்கே உள்ள ஜனங்களே "பேர் பொருத்தம் பெஸ்ட்"டுன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு அழுக்கும், அலங்கோலமுமாக கிடக்கிற அந்த ஏரியாவுக்கு போயிருந்தார் அஜீத். பில்லா ரிலீசுக்கு முன்னாடின்னு நினைக்கிறேன். (தகவல் உபயம் நான் சொன்னேனே, நிழலு நிழலுன்னு ஒருத்தரு. அவரேதான்)

போனது ஒரு சாவு வீட்டுக்கு. நண்பரோட பழைய கார்லே இவரு போயி இறங்க, இந்த காருக்குள்ளே இவரான்னு ஆச்சர்யப்பட்ட ஜனங்க, ஆஹா, ஓஹோன்னு வாயாலேயே எஸ்எம்எஸ் அனுப்பி, அந்த ஏரியா முழுசும் கட்டுக்கடங்காத கூட்டம். எழவு வீட்லே உழவு மாட்ட விலை கேட்ட கதையா, ஆட்டோகிராஃப் கேட்டு பாதி பேரு, அடுத்த படம் என்னான்னு கேட்டு மீதி பேரு... ஒரே இம்சை. ஆனாலும் நிஜமான கவலையோடு உட்கார்ந்திருந்தாரு அஜீத்.

சம்பந்தப்பட்ட வீட்டு ஆளுங்களே, "சார் நீங்க போயிருங்க. இல்லேன்னா இவங்க இம்சை பண்ணுவாங்க"ன்னு சொன்னாங்க. என்ன செஞ்சாரு அஜீத்?

அடுத்த பதிவிலே சொல்றேனே? முக்கியமா அவரு நான் கடவுளுக்காக முடி வளர்த்ததையும், அதை எடுக்கறதுக்கு முன்னாடி நடந்த எமோஷனல் சம்பவத்தையும் சொல்லுறேன்... ப்ளீஸ் வெயிட்!

25 comments:

prabhu said...

thala thalai than, adutha pathivukaga waiting sir....

வினோத் கெளதம் said...

தல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..

கண்ணா.. said...

என்ன பாஸ்.. இப்பிடி சஸ்பென்ஸா முடிச்சிட்டீங்க....

அடுத்த பதிவுக்கு ஆவலா வெய்ட்டிங்...

மத்த வேலையெல்லாம் ஒதுக்கீட்டு சீக்கிரம் பதிவை போடவும்.. குவிக்...

♫சோம்பேறி♫ said...
This comment has been removed by the author.
♫சோம்பேறி♫ said...

அஜித் அழகு தான் அந்தனன். யார் இல்லனு சொன்னது? ஆனா படங்களைத் தேர்வு பண்றதுல கொஞ்சம் கவனம் தேவை. (என் கிட்ட கூட ஒரு சூப்பர் கதை இருக்கு. ஹூம்)

அப்புறம் log in பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நான் அனானியா வந்து கேட்ட விக்ரமாதித்யன் பற்றிய பதிவுக்கு நன்றி:-)

Selva Kumar said...

Sir, Ajith is so smart. All youngsters are alos smart like Surya, Vikram. Surya is the founder of AGARAM. Vikram once upon a time go to the registered office for the purchasing of land and give the correct land value and registered it.

They all are good.

But some people are making money from this and built Kalyana mahal, Shopping complex etc.,

Pls post a blog abt surya.

butterfly Surya said...

தேர்தல்ல க்யூல நின்னு ஒட்டு போட்ட போட்டாவை உதய் சாருக்கு அனுப்பினேன்.

அஜீத் அழகுதான் அதில் எந்த குறையுமில்லை. ஆனால் அமர்களம், ககொ ககொ தவிர தவிர சொல்லும்படி நடிப்பில்லை. நல்ல இயக்குநர் அமைந்தால் நிறைய முயற்ச்சிக்கலாம்.

ஒரு அழகான நல்ல நடிகரை மிஸ் பண்றோம்.

விரைவில் நல்ல நடிப்பை எதிர் பார்க்கிறோம்.

Sridhar said...

// சினிமாவுல மனுஷன பார்க்குறதே கஷ்டம் //

லட்சத்தில் ஒரு வார்த்தை.

// ப்ளீஸ் வெயிட்! //

சீக்கிரம் ப்ளீஸ்

செந்தில்குமார் said...

அய்யா... இப்படி சஸ்பென்ஸ்-ல முடிக்கலாமா... ??
அதுவும்.. நான் கடவுள் மேட்டர்னு சொல்லி .... காக்க வெச்சுட்டீங்களே.. சீக்கிரமா அந்த பதிவ போடுங்க.. வெயிட்டிங்..

Prabhu said...

வரிசையில ஓட்டு போட நின்ன ஸ்டில்ல பாத்தீங்களா, செம தோரண்யா இருக்காப்பல.

// vinoth gowtham said...

தல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..////

பயபுள்ள.... அஜித் மேட்டர்னா எங்கிருந்தாவது மோப்பம் பிடிச்சு வந்திருவாருய்யா....

abarnashankar,usa said...

anthanan
unga pathivu ellam arumai
america la irukkara engalukku unga pathiva padicha thai nattula irukkara feelings varuthu
i like yr articles and udhaya suriyan articles very much.
nan paakkara ellarttayum tamilish.com site ta refer panraen.
very nice.
regards
abarnashankar

Raj said...

ஆஹா...அந்த நான் கடவுள் மேட்டரை யாராவது வெளியே கொண்டு வர மாட்டார்களா என்று ஆவலா இருந்தேன்...சீக்கிரம் சொல்லுங்க பாஸு.

பாவம் அவருக்கும்தான் எவ்வலவு கஷ்டம்...அதக்கூட புரிஞ்சுக்காம அவர கிண்டல் பண்ணி ஒரு பாட்டு வச்ச நடிகர் எவ்வளவு கேவலமான ஜென்மமா இருப்பார்

SUBBU said...

தல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..

தல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..

தல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..

SUBBU said...

நிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிமையும் உள்ளவரு.

100%
100%

உன்மைய சொன்னா இங்க நிரைய பேரு கோவிச்சிக்குவாங்க :(

Anonymous said...

Ajith pathi pudhusa niraya therijukitom..aarumaiyana pathivu...But Thalaipa konjam decent a irundhirukkalam..."Thoppaiyum" avoid panni irukkalam...Krish

biskothupayal said...

புல் பாட்டில்ல காட்டிட்டு இன்னைக்கு ஒரு பெக்தான் சொன்னா எப்பிடி
சிக்கிரம் கையெல்லாம் நடுங்குது

கலையரசன் said...

அஜீத்தை நீங்க உடமாடீங்க போல...
ஏன் தலைவா? இது வர 4,5 பதிவு போட்டுடீங்க.போர் அடிக்குது!
இது அஜீத் ரசிகனுக்கு வேனுமுன்னா மகிழ்ச்சியா இருக்கும்,
ஆனா.. எல்லா பதிவர்களும் படிப்பது போல எல்லோர் பற்றியும் எழுதுங்கள்.

feros said...

aaha..
Super ...

P.K.K.BABU said...

THALA THALAYA MUNDHIRIKKA NERAYA NERAYA SUTTHUNGHO...

ஆர்வா said...

// வாயாலே எஸ்எம்எஸ் //
வித்தியாசமான வார்த்தையா இருந்துச்சு. நைஸ்

பாசகி said...

கலக்குங்கண்ணா!!! அப்புறம் பாத்து பத்திரமா இருங்க, 'அந்த நடிகரு' கட்சி வேற ஆரம்பிக்கறாராம்...

தலைவரை பத்தி எதுனா பதிவு போடலாமே!!!

M Bharat Kumar said...

thalai pattri silagikkum engal pathirikai ulaga Thalaiyaeeeeee.......Anthanan avargalae......Vaazhga nin thondu..........

ராகவன் said...

@கலையரசன்

அஜித் உதவுவதில் ரஜனியைவிட சிறந்தவர் என பல சினிமாகாரர்கள் (தொழிலாளிகள்)சொல்லி கேட்டிருக்கிறேன் ஓட்டுபதிவு அன்றுகூட ஆர்யாவும் விஷாலும் வரிசையில் நிற்காமல் ஓட்டுப் போட்டு ஜனங்களின் வயித்தெரிச்சலை வாங்கி கட்டிக் கொள்ளவில்லையா? தனது வீட்டு வேலைக்காரர் முகத்தில் விழித்துவிட்டு வெளியே செல்லாத நடிகர் இருக்கும் ஊரில் இந்த மாதிரியும் நடிகர் இருக்கின்றார் என்பதே சந்தோசம்தானே!

பின்குறிப்பு நான் அஜித் ரசிகன் அல்ல!

Giridharan V said...

"நல்லவங்கல ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விடமாட்டன்"

தலைவர் வாய்ல இருந்து வந்த வாக்கு அஜித்துக்கு பொருந்தும்.

அன்புடன்,
கிரிதரன்

Anonymous said...

தல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..

தல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..

தல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..